NFTECHQ

Sunday 15 September 2019


NFTE BSNL வெற்றி உறுதி
தோழர்களே..தோழியரே !வணக்கம்.. நாளை 16.09.2019 நாடெங்கும் நடைபெற உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான முதன்மைச்சங்க அங்கீகாரத் தேர்தல் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமையும்..
தபால்தந்தி..தொலைத்தொடர்புத்துறை ... BSNL என பல மாற்றங்கள் கட்டமைப்பு முறையில் தொடர்ந்து வந்த போது..அனைத்து ஊழியர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிகளை குவித்து பாராம்பரியம் காத்து வரும் ஒரே சங்கம் என்எப்டிஇ ...தியாகத்தின் பிறப்பிடமாக ..ஒற்றுமையின் உறைவிடமாக ..சாதனைகளை சரித்திரமாக கொண்ட சங்கம்.
ஊதிய உயர்வு.. போனஸ்..பலகட்ட பதவிஉயர்வு ..வேலை பாதுகாப்பு... மருத்துவ அலவன்ஸ்..கருணை அடிப்படையில் வேலை...மஸ்தூர் நிரந்தரம்..கேடர்சீரமைப்பில் முன்னேற்றம்...எல்லாவற்றிற்கும் மேலாக பொதுத்துறை யாக மாற்றப்பட்ட போதும் மத்திய அரசு தொகுப்பு நிதியிலிருந்து நேரடியாக ஓய்வூதியம் ...என எண்ணிலடங்கா சாதனைகளை போராடி பெற்றுத்தந்த ஒரே சங்கம் NFTE.
ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி...ஊழியர்களை ஏமாற்றி ...அங்கீகார சலுகைகள் அனைத்தையும் அனுபவித்து வந்த BSNLEU சங்கம் என்ன சாதித்தது..?
நல்ல இலாபத்தில் இயங்கி 40000 கோடி ரிசர்வ் சேமிப்பாக கொண்ட நிறுவனத்தின் மீது தொடர்ந்த தாக்குதல்களை எதிர்கொண்டு போராடாமல் வெறும் வார்த்தை ஜாலங்களால் வேடிக்கை பார்த்து அனைத்து உரிமைகளும் சலுகைகளையும் பறிபோக அனுமதித்த அவலநிலை...இன்று இழந்தவற்றை மீட்டு எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டிய தருணத்தில் ...செய்த வேலைக்கு சம்பளம் பெற்றுத்தர முடியாமல் திணறும் சங்கத்திற்கு மீண்டும் வாக்களித்து புதைகுழிக்கு போவதா ...அல்லது நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டு ஊழியர்களையும் நிறுவனத்தையும் காக்கும் வல்லமை படைத்த என்எப்டிஇ சங்கத்திற்கு இந்த முறையாவது முதன்மைச்சங்க வாய்ப்பு அளித்து தங்களை தற்காத்துக் கொள்வதா என முடிவு செய்யும் நாள் ...16.09.2019...
நிச்சயம் நமது தோழர்கள் நிகழ்கால நிலைமையில் NFTE BSNL சங்கம் மட்டுமே தங்களது பாதுகாப்பு கேடயம் என்பதை உணர்ந்து உயிர்நாடியும் தாய் சங்கமுமான NFTE சங்கத்திற்கு வாக்குச்சீட்டின் வரிசை எண் 15 ல் தங்களது மேலான வாக்குகளை பதிவு செய்து ஆதரவளிப்பார்கள்...வெற்றிபெறச் செய்வார்கள் என எனது உறுதியான நம்பிக்கையை தெரிவித்து ...எனது வெற்றி வாழ்த்துகளை முன்னதாக தெரிவிக்கின்றேன்...வாழ்க NFTE BSNL.வெல்க BSNL நிறுவனம்

நன்றி தோழர் ராஜமாணிக்கம்

No comments:

Post a Comment