NFTECHQ

Saturday 3 February 2018

சத்தியாக்கிரகம்

காந்திஜி அறிமுகப்படுத்தியப் போராட்ட வடிவங்கள் ஒத்துழையாமை,செய் அல்லது செத்துமடி,வரிகொடா இயக்கம்,உண்ணாவிரதம்,சத்தியாக்கிரகம் என்பன.

முன்னவை மூன்றும் அரசியல் தளத்தில் இருந்து எழந்தவை.பின்னவை இரண்டும் ஆன்மீகத் தளத்தில்
இருந்து முன் வைக்கப்பட்டவை.
அரசியல் வடிவங்கள் காந்திஜிக்கு முன்பும்,கட்டப்பொம்மன் உட்படகுறுநில மன்னர்கள் முயற்சித்தவை.

லெனின் கூட ருஷ்யாவின் அந்நியப் படையெடுப்பு நடந்த போழ்து தன்தேசத்து மன்னன் ஜாருக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று றைகூவல் விடுத்தார்.அது புரட்சிக்கு வழி கோலியது.

உண்ணாவிரதம்,சத்தியாக்கிரக- வடிவங்கள் காந்திஜி மீது உலகப் பார்வையை ஈர்த்தவை.காந்திஜி ஒரு தூய இந்துவின் வாழ் நெறிகளை ஓம்பினார்.பிற மதத்தினர் மீது காழ்ப்பு இன்றி அக்கறைச் செலுத்தினார்.

தூய இந்துவின் கடமை பிறரை நேசிப்பது என்பதே இந்து தத்துவமும் அதன் தரும்மும் போதிப்பவை.எல்லா மத தத்துவங்களின் சேர்கூடு அது.

பாரதிய ஜனதாக் கட்சி தனது வசிய சக்தியால், தான் ஒவ்வாமைக் கொண்டிருந்த தேசத் தலைவர்களைக் கூட, தன்னுக்குள் காந்தப் புலனாய் இழுத்துக் கொள்ளும் தகிடு தத்தங்களைச் செய்கிறது.

காந்திஜி,அம்பேத்கர்,பகத்சிங்,வாஞ்சி எனப் பலரைச் சுடலாம்.

இந்திய இடதுசாரிகள் தங்கள் சொந்தக் குழந்தைகளை ஆராதிக்க வல்லவர்கள்.அடுத்த வீட்டுக் குழந்தை அழகாய் இருந்தாலும் தூக்கிக் கொஞ்ச தயங்குபவர்கள்.இது பலவீனம் தான்.

இடதுசாரி தொழிற்சங்கங்கள் காந்திஜியின் உண்ணாவிரதத்தை சுவீகரித்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம்.
சத்தியாக்கிரகம் என்பது ஒரு உயர்ந்த ஆழ்நிலைத் தியானம்.இதன் மெய்யைப் புரிந்து கொள்வது கடினம்.குண்டலினி யோகப் பயிற்சியைப் போன்றது.சகிப்புத் தன்மையின் உச்சம் அது.இயேசுவின் மறு கண்ணத்தைக் காட்டு என்பதானது.பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிப் போட்டது இது.

தொழிற்சங்கங்கள் எந்த அர்த்தத்தில் இந்த வடிவத்தைக் கையாள்வது?எதையாவது புதுசா செய்யனும் என்று மூளை உபத்திரவத்தால் முயல்பவர்கள் காந்திஜி ஆக முடியுமா? தொழிற்சங்கங்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தும் போது இவ்வடிவம் சாத்தியப்படுமா? தேசத்தின் இறையாண்மையைக் காத்திட காந்திஜி முன் வைத்த இந்த வடிவம்' வன்கொடுமைகளைத் தாங்கிக் கொள்.உயிரேப் போனாலும் திருப்பித் தாக்காதே.கழிவிரக்கம் மூலம் தேச மக்களைக் கிளர்ந்தெழச் செய்' என்பதை வலியுறுத்தியது.
பரசுராமரின் தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக கர்ணன் விஷவண்டுவின் குடைச்சலைத் தாங்கிக் கொண்டது போல.
நாம் எந்த வலியைச் சகித்துக் கொண்டோம்?

நன்றி தோழர் ஜெயராமன், சம்மேளனச் செயலர்

No comments:

Post a Comment