NFTECHQ

Monday 1 August 2016

அறிவிக்கப்படாத முடிவுகளும்
தெளிவுக்கு வராத குழப்பங்க்களும்.
22/05/2016 அன்று   2013-14ம்  ஆண்டிற்கான  
JTO காலியிடங்களுக்கு இலாக்காத்தேர்வு நடத்தப்பட்டது
08/07/2016 அன்று முடிவுகள் முழுமையான  முறையில் இல்லாமல் அரைகுறையாக வெளியிடப்பட்டது

விசாரித்த்போது அது முடிவல்ல. அது
Inter Communicationஎன்று
சொல்லப்பட்டது.

2008ம் ஆண்டு TTA  நியமனம் பெற்ற தோழர்களின் 
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன
இதன் பின் மொத்த முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன

இந்த முடிவுகளை முறையாக அறிவிக்கும் முன்னரே 
2014-15ம் ஆண்டிற்கான JTO காலியிடங்களுக்கு  28/08/2016 அன்று தேர்வெழுத  விண்ணப்பங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டன. 31/07/2016 அன்று பதிவு செய்யக் கடைசி நாள்
ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வின் முடிவுகளைஅறிவிக்காமல் 
அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவது முற்றிலும் அபத்தமாகும்
தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோழர்கள் வரக்கூடிய தேர்வை எழுதுவதா? வேண்டாமா ? என்ற குழப்பத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

ஏற்கனவே நடந்த தேர்வு முடிவுகளை அறிவிக்காதநிலையில் 
28/08/2016 நடக்கவுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை தள்ளி வைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை
JTO பதவிகளுக்கான தேர்வு மட்டும் நடக்கும்
வேறு எதுவும் நடக்காது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
குழப்பத்தின் உச்சமாக உள்ளது.

இலாக்கா உடனடியாக நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை    ஒட்டு மொத்தமாக உடனடியாக  அறிவிக்க வேண்டும்.   
நடக்கப் போகும் தேர்வுக்கான 
விண்ணப்ப தேதியை தள்ளி வைக்க வேண்டும்.

இதுவே இளம் தோழர்களின் எதிர்பார்ப்பு... கோரிக்கை...
இனி வரும் காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்

இளைய தோழர்களை இவ்வாறு குழப்புவது நமது நிறுவனத்தின் எதிர்கால நலனுக்கு நல்லதா?

No comments:

Post a Comment