NFTECHQ

Friday 18 September 2015

பெரியார் 

சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான சாதி அமைப்புதான், பெரியாரின் முதன்மையான இலக்கு.

வளர்ச்சி நோக்கிய மானுடப் பற்று என்பதைத் தவிர, தனக்கு வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று திட்டவட்டமாகப் பறைசாற்றிய பெரியார், சமூக சுயமரியாதைக்காகத் தனது சொந்த சுயமரியாதையைப் பலியிட்டுக்கொண்டார். “மற்றவர்களால் செய்ய முடியாததை என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடிகிறது என்றால், நான் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை. உங்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லைஎன்று கூறிய பெரியார், “தனி மனிதர்களைப் பெருமைப்படுத்தியதால், அவர்களுடைய தவறான கொள்கைகள் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றுவிடுகிறது. என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டால், என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படும்என்றார். அதையும் கடந்து, “என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டுமென்று கருதியிருந்தாலும், நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனாவேன்என்று தன்னையும் புகழ் பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.
செப்டம்பர் 17
பெரியாரின் 137வது பிறந்த நாள்.
இறுதி மூச்சு வரை தனது கொள்கையில் உறுதியோடு வாழ்ந்தவர் ஈரோட்டு மண்ணின் பெரியார் 

No comments:

Post a Comment