NFTECHQ

Wednesday 13 August 2014

கைவிளக்கேந்திய காரிகை



 ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்த தினம்
 1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் ஏற்பட்ட கிரிமிய போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு இரவு நேரத்தில்கூட கையில் விளக்குடன் சென்று ஓய்வின்றி மருந்துவ உதவிகள் செய்தவர்.
இதனாலேயே கைவிளக்கேந்திய காரிகை என்று நைட்டிங்கேல் அழைக்கப்படுகிறார். செவிலிகளுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலில் துவங்கினார். பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம், அனைத்துத் செவிலிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் நைட்டிங்கேல்.
இவரின் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. விக்டோரியா மகாராணியிடமிருந்து செஞ்சிலுவை விருது பெற்ற நைட்டிங்கேல், 1907-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. செவிலியர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய நைட்டிங்கேல், 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் இதே நாளில் தான் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 13
மாயன் நாட்காட்டி தொடக்கம்
ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அமெரிக்க நாடுகளில் வாழ்ந்த மாயா இனத்தவர்கள், சோல்டன், சோலப், சோல்கிஜ் என்ற 3 வகை நாட்காட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவற்றுள்சோல்டன்எனப்படும் நீண்ட கால அளவு நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டுமொத்த அசைவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்த நாட்காட்டிக்காக, இவர்கள் பயன்படுத்திய அச்சு இயந்திரம் முழுவதுமாக ஒரு சுற்று சுற்ற 5125 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு 5 சுற்றுகள் முடிந்தால் பூமி அதன் இறுதிக் காலத்தை அடையும் என மாயன்கள் கணித்திருந்தனர்.
அதன்படி, 5-வது சுற்று, கி.மு. 3114-ம் ஆண்டில் இதே நாளில்தான் தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நாட்காட்டிபடிதான், 2012-ம் ஆண்டு உலகம் அழியும் என நம்பப்பட்டது.

No comments:

Post a Comment