NFTECHQ

Tuesday 5 November 2019


BSNL வி.ஆர்.எஸ். பற்றி விடை தேடும்
சில வினாக்கள்


ஆக்கம் ; தோழர் பட்டாபி
தமிழாக்கம் : தோழர் நீலகண்டன்,   கடலூர்


கேள்வி 1 விருப்ப ஓய்வுத் திட்டம் (விஆர்எஸ்) பற்றிய எண்ணம் BSNL–ல் (மேகமற்ற நிர்மலமான நீல வானத்தில் தோன்றும் இடி மின்னல் போன்று) திடீரென தோன்றிய ஒன்றா?

பதில்: இல்லை, நிர்வாகத்தின் அதிகாரச் சுற்றுவட்டாரத்தில் காங்கிரஸ் அரசு தொடங்கி இன்றைய பா... அரசு வரை நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு யோசனையே. அந்த அரசுகளின் பல்வேறு கமிட்டிகளின் சிபார்சுகளே அதற்கு அடிப்படை; பிட்ரோடா கமிட்டி தொடங்கி, பொதுத்துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு போர்டு (BRPSE) சிபார்சுகள், டெலாயிட்டி குழு, BSNL -ன் உட்கருவானகோர்கமிட்டி என வளர்ந்து இறுதியாகஇந்திய மேலாண்மை நிறுவனம்’ (ஐஐஎம்)அகமதாபாத் சிபார்சுகளே அடிப்படை. ஊழியர்களுக்கான நிறுவனத்தின் சம்பளம் படி முதலான செலவுகளைக் குறைக்கும் நோக்கில் விஆர்எஸ் யோசனை, மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசு விஆர்எஸ் செலவிற்கு நிதி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால், விஆர்எஸ் அமலாகும் திட்டமாகி உள்ளது.

கேள்வி2• மத்திய அமைச்சரவை முடிவுகள், பத்திரிக்கை செய்தித் தொடர்பு அமைப்பு (PIB) மூலம் வெளியிடப்பட்ட தொனிக்கும், தொலைத் தொடர்பு துறை (DOT) வெளியிட்ட அலுவலக உத்தரவின் தொனிக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு உள்ளதா?

பதில்: ஆம், துறையின் உத்தரவில் விஆர்எஸ் முன்னுரிமை பெற்ற முதல் அம்சமாகிறது; செய்தித் தொடர்பு அமைப்பின் பத்திரிக்கை குறிப்பில் நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை வழங்குவது முதல் அம்சமாக இருந்தது.

கேள்வி 3• விஆர்எஸ் திட்டம் தடுத்து நிறுத்த முடியுமா?

பதில்: ஒருக்கால், அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும்அரசு வழங்க முன்வரும் விஆர்எஸ் கூடுதல் பயன்களை ஒத்துழையாமை இயக்கம் போலஒரே குரலில் ஒன்றுபட்டு மறுத்தால் அன்றி, விஆர்எஸ் திட்டம் கிட்டத்தட்ட தடுத்து நிறுத்த முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

கேள்வி 4• விஆர்எஸ் திட்டத்தை அப்படியே ஒட்டுமொத்தமாக ஏற்பது அல்லது நிராகரிப்பது என தொழிற்சங்க அமைப்புகள் வழிகாட்டுதல் தர முடியுமா?

பதில்: ஒரே அளவு, அனைவருக்கும் நன்கு பொருந்தும் படியானஒரு பார்முலாவைத் தருவது என்பது சாத்தியமில்லை. தொழிற்சங்க அமைப்புகள் பல்வேறு தொழில் பிரிவுகளில் தங்களுக்கு, தங்கள் பகுதியில் ஏற்பட்ட அனுபவங்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், விஆர்எஸ் திட்டத்தின் அனைத்து விபரங்களையும் நன்கு படித்து, அறிந்து, புரிந்து தெரிந்து கொண்ட பிறகு தனிநபராகத் தனது முடிவிற்கு தானே பொறுப்பு ஏற்று -- ஊழியர்கள் தனித்தனியாகவிஆர்எஸ் திட்டத்திற்குத் தனது ஒப்புதலை வழங்கவோ அல்லது விஆர் திட்டத்தை ஏற்பதில்லை என மறுத்துவிடும் முடிவையோ மேற்கொள்ளலாம். தனிப்பட்ட ஊழியரைப் பொறுத்து அவருக்கான நல்லதுகெட்டதுகளை அவர் புரிந்து கொள்ளும் வகையில் விஆர்எஸ் திட்டத்தின் விவரங்களை விளக்குவதில் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம்.

கேள்வி 5• விஆர்எஸ் திட்டதிற்கு விருப்பம் தெரிவித்த ஊழியர்களின் குறைதீர் முறையீடுகளுக்குத் தொழிற்சங்கங்கள் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமா?

பதில்:நிச்சயம், உறுதியாகச் செய்ய வேண்டும். அத்தகைய ஊழியர்கள் சந்திக்க நேரும் குறைகளைத் தீர்வு காண முயற்சிக்க வேண்டியது சங்கத்தின் கடமையே.

கேள்வி 6• இந்த விஆர்எஸ் திட்டத்தின் படி விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு அளிக்க உள்ள கூடுதல் பணப்பயனானஎக்ஸ்க்ரேஷியாகணக்கீட்டில்குஜராத் மாடல்முறையாகப் பின்பற்றப்படுகிறதா?

பதில்: இதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை. ’குஜராத் மாடல்படிஎக்ஸ்க்ரேஷியாகணக்கிடுப்படுகிறது. ஆனால், ’பொதுத்துறை நிறுவனங்களுக்கான இலாக்கா’ (டிபிஇ) வழிகாட்டுதல்கள் எக்ஸ்க்ரேஷியா பணப்பயன் தொகையை உச்சவரம்பு கட்டுவதில் பின்பற்றப்படவில்லை. இதனால் நமக்குத் தகுதியுள்ளஎக்ஸ்க்ரேஷியாதொகையானதுகுஜராத் மாடல்உறுதியளிக்கும் தொகையைவிட இறுதியில் குறைவான தொகையாகிறது. திட்டத்தை வடிவமைத்தவர்கள் மிகச் சாதுரியமாகஎக்ஸ்க்ரேஷியாதொகையையும் துவக்க ஆண்டுகளில் வழங்க உள்ள ஓய்வூதியத்தையும் இணைத்து மொத்தத் தொகையைச் சரிகட்டி கணக்கிட்டு உச்சவரம்பிடுகின்றனர்.

கேள்வி 7• தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்கள் எதனையும் பின்பற்றி 125 சதவீதம் என்ற கோட்பாடு அமைந்துள்ளதா?

பதில்:இல்லை. எக்ஸ்க்ரேஷியா கணக்கீட்டோடு ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகையை இணைத்து உச்சவரம்பிடுவது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை மீறுவதாகும். அத்தகைய ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகை கணக்கீடு என்பது கமுடேஷன் தவிர வேறு எதற்குமான கோட்பாடாகப் பின்பற்றப்படுவதில்லை. எக்ஸ்க்ரேஷியா அளிப்பது என்பது ஒருமுறை சிறப்பாக முழுமையாக வழங்கப்படும் தொகையாகும். ஆனால் ஓய்வூதியப் பட்டுவாடா என்பது மாதம் தோறும் அளிக்கப்படும் கோட்பாடாகும்

கேள்வி 8• விஆர்எஸ் விருப்பம் தெரிவித்தவர்கள் ஓய்வூதியம் பெறுவார்களா?

பதில்:ஆம். ஆனால் அந்த ஒரு ஊழியர் 60 வயது அடையும் வரை அவர் பணியில் இருந்த கடைசி நாள் ஊதியத்தின் 50 சதவீதத்தை (அதாவது, கமுடேஷன் இல்லாமல்) ஓய்வூதியமாகப் பெறுவார். 60 வயதிற்குப் பிறகுகம்ய்டேஷன் வசதியைப் பெறுவதைப் பொறுத்துஅதன்படி ஓய்வூதியம் அமையும்.

கேள்வி 9• கமுடேஷனை (60 வயதுவரை மறுத்து) தாமதப்படுத்துவதற்கு வழிகாட்டுநெறி உள்ளதா?

பதில்:இல்லை. அது தற்போதைய நடைமுறை வழிகாட்டுதல்களை மீறுவதாகும். ஒருவர் ஓராண்டு மட்டுமே கமுடேஷனைத் தள்ளிப்போட முடியும்.

கேள்வி 9 () • ஓய்வுபெற்றவர் கமுடேஷனுக்கு விருப்பம் தெரிவிக்கும் முன் இறந்து விட்டால், அவரது குடும்பத்திற்கு 40 சதவீதக் கம்யூடேஷன் பலன்கள் வழங்கப்படுமா?

பதில்: கமுடேஷன் வசதி என்பது முழுமையான ஒரு உரிமை ஆகாதபடியால், அத்தகைய தருணங்களில் அந்தக் குடும்பத்தினருக்குக் கமுடேஷன் பலன்கைளை வழங்க இயலாது.

கேள்வி10• கருணைக் கொடையானகிராஜுவிடியை மறுக்கவோ தாமதிக்கவோ முடியுமா?

பதில்:ஆம், முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசுச் செயலாளர் மட்டத்திலான அதிகாரியின் ஒப்புதல் வேண்டும்; மேலும் தாமதிக்கப்படும் காலத்திற்கு ஜிபிஎப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தின்படி வட்டியும் வழங்கப்பட வேண்டும். அத்தகையதாமதம் ஏற்படக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே நடைமுறையில் உள்ள வழிகாட்டுதலாகும்.

கேள்வி 11• இந்திய அரசிற்கு வழிகாட்டுநெறிகள் / கமுடேஷன், கிராஜுவிட்டி விதிகள் முதலியவற்றைளை மாற்றியமைக்கும் உரிமை உண்டா?

பதில்:ஆம், உண்டு. ஆனால் அத்தகைய மாற்றங்களை அமல்படுத்தும் முன், அது பற்றிய அறிவிக்கைகளைப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிப்புச் செய்ய வேண்டும்.

கேள்வி 12 • 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்வது கட்டாயமா?

பதில்:இல்லை, கட்டாயமில்லை. விஆர்எஸ்ல் செல்வது ஊழியரின் தனிப்பட்ட சுயவிருப்பத்தையும் (திட்டம் பற்றிய புரிதலில் அவரது) அறிவாற்றலையும் பொருத்தது.

கேள்வி 13• எக்ஸ்க்ரேஷியா தொகை இந்திய அரசு / டிஓடி இலாக்காவால் வழங்கப்படுவதா?

பதில்:இல்லை. இந்திய அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்று எக்ஸ்க்ரேஷியாவை BSNL நிறுவனமே இரண்டு தவணைகளில் வழங்கும். இதனை நடைமுறைப்படுத்த டிஓடி இலாக்கா நிதியமைச்சகத்திடம் தேவையான தொகையை நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் ஒதுக்கீடாகவும் அதற்கு அடுத்த ஆண்டின் நிதி ஒதுக்கீடாகவும் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அமைச்சரகத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பலத்தில், எக்ஸ்க்ரீஷியா தொகை என்பது உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒன்றாகும்.

கேள்வி 14 • தற்போது நிறுவனத்தில் காணப்படும் வளர்ச்சிப் போக்கு சூழ்நிலையில் விஆர்எஸ் திட்டம் ஊழியர்களுக்கு நன்மையான ஒன்றா?

பதில்:இதற்கான பதில் ஆம், நல்லது; மற்றும் இல்லை, மோசமான ஒன்று என்றுதான் கூற முடியும். எந்த வகையில் நல்லது என்றால், விஆர்எஸ்-ல் சென்ற பிறகு BSNL நிறுவனம் பற்றிய நாளுக்கு நாள் சந்திக்கும் அன்றாடக் கவலைகள், நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை முதலியவை பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்பது மட்டுமல்ல; அவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் [தோழர் குப்தாவின் புண்ணியத்தால் –(மொழிபெயர்ப்பாளர் கருத்தாகச் சேர்த்தது) ] 37- விதியின்படி உறுதியளிக்கப்பட்ட ஒன்றாகிறது.
எந்தவகையில் மோசமான ஒன்றாகிறது எனில், அவர்கள் ஓர் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு அதன் காரணமாக, தாங்கள் இயல்பாக ஓய்வு பெற வேண்டிய வயதை எட்டும் முன் -- சில பல ஆண்டுகளுக்கு முன்னரே -- பணியிலிருந்து விலகும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதாம். எந்த நிறுவனத்தைத் தங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமாக இவ்வளவு நீண்ட காலம் நேசித்தார்களோ அந்த நிறுவனத்தை விட்டு விலக நேரிட்டு விட்டதே என்பது மட்டுமல்ல, அது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிப் பாதுகாப்பு உத்தரவாதத்தின் மீது நடத்தப்பட்ட ஒருவகை வன்முறைத் தாக்குதலும் ஆகிறது.

கேள்வி 15 • விஆர்எஸ் திட்டம் BSNL நிறுவனத்திற்கு நன்மை தருமா?

பதில்:மீண்டும் இதற்கான பதில் நல்லதும் கெட்டதும் என்பதே. எந்த வகையில் நல்லது என்றால், நட்டம் அடைந்து வரும் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கான அதிகப்படியான செலவுத் தொகை சுமையிலிருந்து ஓரளவு விடுவிக்கப்படுகிறது. விஆர்எஸ் குறி வைக்கப்பட்டவர்களில் 40 சதமானவர்கள் விருப்ப ஓய்வில் சென்றாலும் அந்த அளவு நிறுவனத்தின் செலவு குறைந்து, நிவாரணம் பெற்றதாகிறது.
எந்தவகையில் மோசமான ஒன்றாகிறது எனில், போட்டிச் சூழ்நிலையில் நிறுவனத்திற்கு அடிப்படை ஆதார முன்தேவையான திறன்மிக்க, சிறப்பான மனித ஆற்றல் நிறுவனத்திடமிருந்து பறிக்கப்பட்டு நிறுவனம் (உற்சாகத்தோடுப் போட்டியிட இயலாத முடமாக) அநாதையாக்கப்படுகிறது. இதனால் (நிரந்தரப் பணியாளர்கள் குறைக்கப்பட்ட நிலையில்) நிறுவனத்தின் பணிகள் ஒப்பந்த முறையில் வெளி ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படும் (சுரண்டல் அவுட்- சோர்சிங்) அபாயம் சூழும் நிலை அதிகரிக்கும்.

கேள்வி 16• அப்சார்ப்டு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வகை செய்யும் 37- விதியின் நிபந்தனைகள் விஆர்எஸ் விருப்பம் தெரிவித்தவர்களுக்குப் பொருந்துமா?

பதில்: ஆம். ஆனால் அரசு / BSNL நிறுவனம், விஆர்எஸ் விருப்பம் தெரிவிப்பவர்கள் விருப்ப ஓய்வில் செல்ல சட்டப் பிரிவு 37 – விதியின் கீழ் உள்ள துணைவிதி 11 – வின்படி அனுமதிக்கப்படுகிறார்களா அல்லது 37- விதியின் 8வது துணைவிதியின் படி அனுமதிக்கப்படுகிறார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
டிபிஇ வழிகாட்டல்படியும், ’பணியாளர் மற்றும் பணியாளர் பயிற்சி இலாக்கா’ (DOPT)- ன் மத்திய அரசு ஊழியர்களுக்கானச் சிறப்பு விஆர்எஸ் திட்டத்தின் வழிகாட்டல்படியும் விஆர்எஸ் விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுத்தொகை நிவாரணம் என்பது அவர்களின் ஓய்வுக் கால இறுதிப் பலன்களைத் தவிரவும் கூடுதலாகத் தரப்படும் ஒன்றாகும்.

கேள்வி 17 • விஆர்எஸ் விருப்பம் தெரிவித்தவர்கள் ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் பெறத் தகுதியானவர்களா?

பதில்:ஆம், அவர்களுக்கு அந்தத் தகுதி உண்டு. ஆனால் அதற்கான உத்தரவாத உறுதியைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்றுவிடுவது நல்லது. 2018 ஜூலை 20ம் தேதியிட்ட டிபிஇ உத்தரவின்படி,”ஊதிய மாற்றம் போன்றவை காரணமாக ஊதிய நிலுவைத் தொகையானது, தகுதிப்பாட்டின்படியான தொகையைக் கணக்கிடுவதில், சேர்க்கப்பட மாட்டாதுஎனத் தெரிவிக்கிறது. இதற்கு முந்தைய டிபிஇ வழிகாட்டு நெறிகளிலும் இவ்வாறே காணப்படுகிறது. இதன்படி, ஊதிய மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் – (எதிர்காலத்தில் நிலுவையாக) கூடுதல் எக்ஸ்க்ரேஷியா இல்லை என்று பொருள்படுகிறது.

கேள்வி 18. 60 வயதில் அல்லது 2024 – 25ம் ஆண்டில் கமுடேஷன் வசதியைப் பெற வேண்டும் என்பது கட்டாயமா?

பதில்:தேவையில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் பொருத்தமான அதற்கான மனுவைத் தரவேண்டும், இல்லையெனில் விஆர்எஸ் திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற்ற நாளில் நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து அவர்கள் பெறலாம்.

கேள்வி 19• விஆர்எஸ் திட்டம் அமலானதற்குப் பிறகான காலத்தில் சேவையில் தொடரும் ஊழியர்களின் நிலைமை கடுமையானதாக ஆகுமா?

பதில்:அரசு / டிஓடி / BSNL நிறுவன நிர்வாகங்களின் பேச்சு அது போன்ற ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இன்றைய தேதியில் சேவை நிலைமைகளில் -- மாற்றல் விதிமுறைகளிலோ அல்லது ஒழுங்குமுறை சிடிஏ விதிகளிலோஅவ்வாறு எதுவும் சொல்லப்பட வில்லை.

20• விஆர்எஸ் திட்டத்திற்குப் பிறகு ஆளெடுப்பு போன்ற புதிய மனித ஆற்றல் திட்டங்கள் ஏதேனும் வருமா?
பதில்:பணிச்சுமையை நியாயமாகப் பகிர்வதற்கான அத்தகைய வாய்ப்புகள் வரக்கூடும்; மனித சக்தியை மறுப் பகிர்மானம் செய்ய அவர்கள் முயலலாம். நிறுவனத்தின் கட்டமைப்புகூட மாற்றியமைக்கப்படலாம்.

கேள்வி 21• விஆர்எஸ் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊழியர்களுக்கான செலவு குறைவதாலும், 4-ஜி சந்தை வாய்ப்பு வருதாலும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மீண்டும் நிலைநாட்டப்படுமா?

பதில்:நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அத்தகைய எந்த உத்தரவாதத்தையும் தருவது மிகவும் கஷ்டமானது. வருவாய் பெருக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே அத்தகைய உத்தரவாதத்திற்கு வாய்ப்பு.

கேள்வி 22• டிஓடியின் 29-10-19 தேதியிட்ட உத்தரவு தற்போதைய ஓய்வு பெறும் வயது 60 எனக் குறிப்பிட்டுச் சொல்ல என்ன காரணம்?  

பதில்:ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் திட்டம் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளதா?
அதற்கான நோக்கம் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. அமைச்சரவைக் குறிப்பிற்காகத் தயாரிக்கப்பட்ட முந்தைய வரைவு அறிக்கையில் 58 வயது யோசனை முன்வைக்கப்பட்டது; ஆனால் தற்போது அது பற்றிய ஆதாரமான பிரகடனம் ஏதுமில்லை. 22-10-19 தேதியிட்ட அமைச்சரவைக் குறிப்பில் அதற்கான எந்த ஒப்புதலும் கோரப்பட்டதா அல்லது ஏதேனும் முடிவு தரப்பட்டதா என்பது பற்றி வெளிப்படையாகத் தெரியவில்லை.

கேள்வி 23• விஆர்எஸ் திட்ட அமலாக்கத்திற்குப் பிறகு அதனால் ஏற்படும் காலியிடங்கள் நீக்கப்பட்டவை ஆகுமா?

பதில்:ஏற்கெனவே இந்திய அரசு அக்டோபர் 2000த்தில் BSNL நிறுவனத்தில் இணைய ஊழியர்கள் BSNL க்கு மாற்றப்பட்டபோதே அந்த இடங்கள் நீக்கப்பட்டு விட்டன. SrTOA P போன்ற நான்-எக்ஸிக்யூடிவ் ஊழியர்கள் ஓய்வுபெற ஓய்வு பெற 2003லேயே பதவி இடங்கள் நீக்கப்பட்டுவிட்டன. அது போன்றே 2011ல் 19 கேடர்கள் உயிர்ப்பிக்கப்படாத கேடர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான பணியிடங்களும் நீக்கப்பட்டன. இப்போதும் விஆர்எஸ் விருப்பம் தெரிவித்தவர்களின் பணியிடங்களும் நீக்கப்பட (அபாலிஷ் செய்யப்பட) உள்ளன

கேள்வி 24• 80ஆயிரம் / 90ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விஆர்எஸ் விருப்பம் தெரிவிப்பார்கள் என்பது சாத்தியமா?

பதில்:அவ்வாறெனில், அது அதிகப்படியான எதிர்பார்ப்புதான். ஊழியர்களின் சந்தேகங்களுக்கு போதுமான அளவில் விளக்கம் அளித்துத் தெளிவு ஏற்படுத்தினால் ஒழிய, இத்திட்டம் அமலாக்கப்படுவது கடினமான ஒன்றாகும். ஒருக்கால் 40ஆயிரம் ஊழியர்கள் விஆர்எஸ் திட்டத்தைப் பயன்படுத்த முன்வந்தால் கூட, அது இந்தத் திட்டத்தை வடிவமைத்து முன்மொழிந்த அதன் மேலாண்மை விற்பனையாளர்களுக்கு ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படும்.

கேள்வி 25• வரிச் சலுகை உண்டா?

பதில்:எக்ஸ்க்ரேஷியா தொகைக்கு வருமான வரி விலக்கு ரூபாய் 5 லட்சம் வரை உண்டு

கேள்வி 26• ஊதிய மாற்றம் அறிவிக்கப்ட்டுள்ள புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியா?

பதில்:ஊழியர்களுக்கான 8வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக 24—11—2017 தேதியிட்ட டிபிஇ வழிகாட்டலில் பாரா 2 iii கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறது: “மத்திய அரசால் மறுசீரமைப்பு / புத்தாக்கத் திட்டம் ஒப்புதல் தரப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களைப் பொருத்த அளவில் ஊதிய மாற்றம் என்பது ஒப்புதல் அளிக்கப்பட்ட மறுசீரமைப்பு / புத்தாக்கத் திட்டத்தின் ஷரத்துக்கள்படி மட்டுமே செய்யப்படும்”.
BSNL
நிறுவனத்திற்கானப் புத்தாக்கத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியபோது டிபிஇ-ன் இந்த வழிகாட்டு உத்தரவு கவனத்தில்/ கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. 3வது ஊதிய மாற்றத்தைப் பரிசீலிக்கும்படி டிஓடிக்குச் சாதகமான விமர்சனக் குறிப்பு சிலவற்றை டிபிஇ அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அமைச்சரவையின் புத்தாக்கத் திட்டத்தைக் குறித்து அறிவித்து டிஓடி வெளியிட்ட அலுவல உத்தரவு இது குறித்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்துள்ளது.

கேள்வி 27• அதிகப்படியான எண்ணிக்கையில் ஊழியர்கள் விஆர்எஸ் விருப்ப ஓய்வில் செல்வது சமூகப் பிரச்சனை எதனையும் ஏற்படுத்துமா?

பதில்:ஆம் உண்மைதான். விஆர்எஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வுகள் வெளிப்படுத்தும் செய்திகள் எண்ணிறந்தவைகளாக ஏராளமாக உள்ளன. அனுபவங்கள் வேறுபடுகின்றன. பணியாற்றும் திறனுள்ள மனிதர்கள்சோம்பேறிகளாக, உபயோகமற்ற செயல்பாடற்றவர்களாக ஆக்கப்படுவது அதற்கே உரிய சமூக எதிர் விளைவுகள் நிச்சியம் உண்டாக்கும். (செயலற்ற மனம், பிசாசின் பட்டறை An idle mind is Devil’s Workshop என்பது ஆன்றோர் மொழி)
. BSNL நிர்வாகம் விஆர்எஸ் உத்தரவுகளை வெளியிட்ட பிறகு மேலும் கேள்விகள் எழக்கூடும். அமைச்சரவைக் குறிப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட அதன் நகல் கிடைத்த பிறகு மேலும் தெளிவு பிறக்கலாம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்காலத்தை எதிர்கொள்வோம்!

No comments:

Post a Comment