NFTECHQ

Monday 4 March 2019


மயான அமைதி மாயுமா?

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என நாட்கள் மட்டுமே நகர்கின்றன.

நாளெல்லாம் உழைத்த உழைப்புக்கு ஊதியத்தை
இன்னும் ஊழியர்கள் பெறவில்லையே என்ற கவலை, வருத்தம், ஆதங்கம் இவை கூட தென்படவில்லையே.

நிறுவமத்தின் தலைவர் சம்பளம் பெற்று விட்டார். தொழிற்சங்கத்த் தலைவர்கள் ஓ..ய்..வூ..தியம் பெற்று விட்டனர். தொழிற்சங்கத்த் தலைவர்களுக்கு  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பலவேறு அதிமுக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே நேரம் போதவில்லை. இந்நிலையில்  ஊழியர்களுக்கு சம்பளம் வராதது பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்யச் சொல்லிவிட்டார்கள்.

அபாவித் தொழிலாளர்களும் அதைச் செய்து விட்டார்கள்.

அநீதி கண்டு ஆர்ப்பரித்து அதிகாரிகளின் அறைகளில் புகுந்து அநீதி களைந்த காலம் நினைவில்லையா?

ஊழியர் உரிமை காத்திட தங்கள் உடலை வருத்தி உண்ணாநோன்பிருந்து உரிமைகள் காத்திட்ட தலைவர்களின் தியாக வரலாறுகள் நினைவில்லையா?

"கலங்காதிரு மனமே" என்று ஒருவரி கூட சொல்ல இயலாத தலைவர்கள்.

உழைத்த உழைப்புக்கு  ஊதியம் தராமல் ஊழியர்களை உதாசீனப்படுத்தி ஊழியர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு மருந்து தடவ தலைவர்கள் தவறியது ஏன்?

இந்த மயான அமைதி கலைடயுமா?

ஊழியர்களின் கவலை தீருமா?           

No comments:

Post a Comment