NFTECHQ

Wednesday 8 November 2017

வெற்றி பெற்றே தீரும்
இன்று இந்தியாவின் திட்டமிடல் கொள்கையும் அதன் அமைப்புமுறையும் மாறிப் போனதையும்கூட நாம் சோஷலிஸப் பயணத்திலிருந்து விலகி நடப்பதன் அடையாளமே.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் வழியாக இன்று தன்னை வலிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இது சோஷலிஸத்தின் வீழ்ச்சியோ, முதலாளித்துவமே இறுதியில் வெற்றி பெறும் என்ற பேராசைக் கனவின் அறிகுறியோ அல்ல. வரலாறு நெடுகிலும் முதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டே தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும்.


No comments:

Post a Comment