NFTECHQ

Monday 17 October 2016

உலக வறுமை

ஒழிப்பு நாள்!


ஒவ்வொரு ஆண்டும் உலக வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17ஆம் நாள் உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசி, பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
இந்நாள், முதன்முதலாக 1987ஆம் ஆண்டு பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் ஆகியவற்றுக்கு பலியானோரின் நினைவாக சுமார் பத்தாயிரம் மக்கள்டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடினர். இவர்கள் உலகளாவிய ரீதியில் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தனர்.
சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் இல்லாதவர்களே வறுமைகோட்டின் கீழ் உள்ளவர்கள் ஆவர். இவ்வுலகில் பெரும்பாலானோர் நோய்களால் பாதிப்படைந்து மரணிப்பதை விட, வறுமையால் தான் இறக்கிறார்கள். உலகில் 87 கோடி பேர் போதிய உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 கோடி பேருக்குச் சுத்தமான குடிநீர் வசதி கிடைப்பதில்லை. இதில், 40 கோடி பேர் சிறுவர்கள். 160 கோடி பேரின் ஒருநாள் வருமானம் ரூபாய் 150-க்கு கீழ் உள்ளது. அதே போல 14 சதவிகிதம் பேரின் ஒருநாள் வருமானம் ரூபாய் 75-க்கும் கீழ் உள்ளது.
இதில் இந்தியாவை கணக்கிடுகையில், வறுமையில் வாடுபவர்கள் அதிகம் உள்ளோர் நாடுகள் பட்டியலில் இந்தியா 97ஆவது இடத்தில் உள்ளது
2016ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பட்டினிப் பட்டியலை, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இதற்காக ஆசியாவிலுள்ள 118 நாடுகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில், இந்தியா 97ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு 83ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது 97ஆவது இடத்துக்கு வந்து சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் வறுமையால் குழந்தைகள், பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, அனைத்து மக்களிடமும் வறுமைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என .நா. தெரிவித்துள்ளது. பிரச்னைக்குத் தீர்வாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சிக்கனமும் சேமிப்பும் இருக்க வேண்டும் என .நா. வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment