NFTECHQ

Tuesday 1 March 2016

பட்ஜெட் 2016

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.
ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கான வரிச் சலுகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு.
ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3000 நிவாரண விலக்கு.
வாடகை வீட்டில் வசிப்போருக்கான வருமான வரிச் சலுகை உச்ச வரம்பு ரூ.24,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்வு.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடிவு.

தொலைத்தொடர்புத் துதுறக்கு ரூபாய் 18413.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நமது நிறுவனத்துக்கு 2200 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்தமைக்காக திருப்பித் தரப்படும்.

 

வறுமையில் வாடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி 30 சதத்திலிருந்து 29 சதமாகக் குறைக்கப்படும்.

 

வசதியுடன் வாழும் உழைக்கும் மக்கள் சேமிக்கும் EPF தொகையில் திரும்பப் பெறும் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டுமாம்.

 

வழக்கம் போல் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

காகித்ததில் சர்க்கரை என்று எழுதினால் இனிக்குமா?

 

ஆக முதலாளிகள் வழக்கம் போல் முன்னேற வழிவகை உண்டு.

 

சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மான்யங்க்கள் குறைப்பு. முதலாளிகளுக்கு இன்செண்டிவ் உண்டு.

 

பொதுத்துறை வங்கிகள் மேம்பாட்டுக்காக ரூ.25,000 கோடி ஒதுக்கீடு.

ஆனால் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில்

பெற்ற ஒரு லட்சத்து பதினேழாயிரம் கோடி கடன் தள்ளுபடி.

 

பட்ஜெட் தினத்தன்றே டீசல் விலை உயர்வு.

ஆக வழக்கம் போல் வலுத்தவன் வாழவும், வகையற்றவன் வாழ்வு நொடியவும் ஒரு சடங்கு  நிறைவேறியுள்ளது.



No comments:

Post a Comment