NFTECHQ

Saturday 7 November 2015

நவம்பர்-7

நவம்பர்7--1917 இந்த பூஉலகில் முதன் முதலாக பாட்டாளிகளின் ஆட்சி உருவான நாள்.மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் முதலாளித்துவ கொடுமைகளுக்கு சாவு மணி அடித்த நாள்!மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்பத்தையும், புதியசமுக அமைப்பையும் நவம்பர் புரட்சி ஏற்படுத்தியது
.சிறுபான்மையேயான சுரண்டல் கும்பலிடம் இருந்து ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை புரட்சியின் மூலம் வென்ற வீர வரலாறே நவம்பர் புரட்சி!உண்மையான ஜனநாயகத்தையும்-அசலான சுதந்திரத்தையும்-சமதர்ம சமூகத்தையும் மக்களுக்க வழங்கியது நவம்பர்புரட்சி!ஏற்ற இறக்கங்களும் வளைவு சுழிவும் கொண்ட திருகுசூழல் பாதையின் ஊடே மனிதகுல குல வரலாறு நகர்கிறது.பின்னடைவுகள் ஏற்ப்பட்டாலும் நவம்பர் புரட்சி வெளிச்சமே மக்கள் முன் உள்ள ஒரே பதை!தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற கொடும் பூதங்களை ஆட்சியாளர்கள் ஏவி விட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வருகின்றனர்.கனிமவளம்-மலைவளம்-நீர்வளம்-வனவளம்-எனஅனைத்தும் கார்ப்பரேட் முதலைகளின் லாபவெறிக்கு தீனி யாக்கபட்டுவிட்டது.பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை என்ற பெயரால் தரைவார்க்க படுகிறது.மதவெறி பாசிசம் கருத்துத்துரிமைக்கு வேட்டுவைக்கிறது.சாதி தீண்டாமை தலைவிரித்தாடுகிறது..
நவம்பர் புரட்சி ஒளியில் இந்தியாவில் சமதர்ம விடியலை காண போராடுவோம்!



No comments:

Post a Comment