NFTECHQ

Sunday 31 March 2013

தினம் ஒரு கேள்வி - மூன்று

“போனஸ்  என்பது கொடுபடா ஊதியம்” என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும், நட்டத்தில் இயங்கினாலும் 13 வது மாத ஊதியம் என்ற அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு உண்டு. அது சி.ஐ.டி.யூ சங்கத்தின் வழிகாட்டுதல்படி  செயல்படுகிறது. அப்படிப்பட்ட சங்கம் போனஸ் வழங்கப்படுவதை லாபத்துடன் இணைந்து உடன்பாடு போட்டது. தன்னை இடதுசாரி, புரட்சிகர சங்கம் என பறைசாற்றிக் கொள்ளும் ஒரு சங்கத்தின் செயல்பாடு சரியானது தானா?  தோழர் குப்தா உற்பத்தியோடு இணைந்த போனஸ் உடன்பாடு கண்ட போது அவரை அவதூறு செய்தார்கள். ஆனால் அங்கீகார அதிகாரம் கிடைத்தவுடன் போனஸை லாபத்துடன் இணைத்து உடன்பாடு போட்டார்கள். இந்த ஒரு மாபெரும் தவறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்தபட்ச போனஸ் கூட பி.எஸ்.என்.எல்.ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பொதுத்துறை நிறுவன இலாக்கா பி.எஸ்.என்.எல். நிறுவனம் “மிகச் சிறப்பாக” செயல்படுவதாக சான்றளித்துள்ளது. போனஸை லாபத்துடன் இணைத்த காரணத்தால் நிர்வாகம் போனஸ் தர மறுக்கிறது. இதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இது சரியா?
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment