NFTECHQ

Thursday 8 April 2021

 

தோழர் குப்தா

நூறாவது பிறந்த நாள்

இந்திய தொழிற்சங்க வரலாறு நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கது.

பல்வேறு போராட்டங்கள், அரசின் அடக்குமுறைகள்,கடுமையான பழிவாங்கல்கள்,சிறைவாசம், உயிரிழப்பு  என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தமக்கென ஒரு தனி மகத்துவத்தோடு தபால்  தந்தி துறையில் தனக்கென  ஒரு ஒப்பற்ற  வரலாற்றைப் படைத்தவர் தோழர் குப்தா.

தொலைத்தொடர்புத்துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க மாற்றங்களை துவங்கிய காலம். இதுஆட்குறைப்பை உருவாக்கும் என்ற பிரச்சாரமும் எழுந்தது. தோழர் குப்தாவின் புத்திசாலித்தனமான அணுகுமுறையால் ஆட்குறைப்பு என்ற பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது. இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. ஒரு வரலாறு.

அரசுத்துறை பொதுதுறையாக மாற்ற முயன்றது. இதற்கு தனது உடன்பாடின்மை

யைத் தெரிவித்தார் தோழர் குப்தா. ஒரு கட்டத்தில் பொதுத்துறையாக மாற்றுவது என அரசு முடிவெடுத்தது. போராட்ட அறைகூவல் விடுத்தார் தோழர் குப்தா. மூன்று நாட்கள் கடுமையான போராட்டம். அரசு பணிந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்த்மும், உத்தரவுகளும் உருவாயின. ஓய்வூதியம் உள்ளிட்ட அரசுத்துறையில் உள்ள அனைத்து உரிமைகளும் தொடரும் என அரசு உத்தரவிட்டது.

இது உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத வரலாறு.

தற்போதுள்ள ஆளுவோருக்கு தோழர் குப்தாவை சந்தித்து எதிர்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த வாய்ப்பு நிகழ்ந்திருந்தால் சில நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும்.

வரலாற்றுத் தலைவன் தோழர் குப்தாவின் நூறாவது பிறந்தநாளில் (ஏப்ரல்8)  அவரது நினவைப் போற்றுவோம்.

 

No comments:

Post a Comment