NFTECHQ

Tuesday 21 July 2020


இனி என்று காண்போம்
இனிய தோழனின் இன்முகத்தை

பாசக்கார  தோழன் பங்காரே
பழகுவதற்கு இனிய தோழன் பங்காரே
பற்றின் ஊற்றுக்கண் தோழன் பங்காரே
கட்டுப்பாட்டின் களஞ்சியமாம் தோழன் பங்காரே
விசுவாசத்தின் விளைநிலமாம் தோழன் பங்காரே
கொள்கையின் இமயமாம் தோழன் பங்காரே
அலுவலகப் பணியானாலும்
இயக்கங்களின்  பணியானாலும்
அர்ப்பணிப்போடு ஆற்றி முடிக்கும் அருமைத் தோழன் பங்காரே
கொல்லிமலை வாசத்தை ஏற்ற உன்னை
கொல்லிமலை மண் உன்னை
தனக்குள் இவ்வளவு அவசரமாக
தாங்கிக் கொள்ள விரும்பய்து ஏண்
அந்த மண்ணின் மீது உனக்கு அவ்வளவு பாசமா
அந்த மண்ணுக்கு உன் மீது அவ்வளவு பாசமா
மறையும் வயதை நீ அடைய வில்லையே
மரணம் இயற்கைதான்
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய வயதல்லாவா தோழன் பங்காரே
உன் பாசவலைக்குள் விழுந்த எங்களை இறுதியாக ஒரு முறை உன் இன்முகத்தை காண முடியாத சூழ்லில் மறைந்த தோழன் பங்காரே
இது ஒன்று மட்டுமே நீ அறியாமல் செய்த தவறு.
அந்தத் தவறு கூட இயற்கையின் தவறுதான்.
அன்புத்தோழனே
உன் மறைவுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக செவ்வணக்கத்துடன் கூடிய அஞ்சலி.
தோழன் பங்காருவின் குடும்பத்தாருக்கு அழ்ந்த இரங்கல்..

No comments:

Post a Comment