NFTECHQ

Saturday 18 June 2016



ஜூன் 18: விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் பிறந்த தினம் இன்று
எளிமைக்கும் நேர்மைக்கும் இன்றுவரை உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஒருவர் கக்கன். சில சமயங்களில் பட்டமும் பதவியும் 'வேண்டும், வேண்டும்' என்று அலைகிறவர்களுக்கு அது கிடைப்பதில்லை. 'வேண்டாம், வேண்டாம்' என்று அலறுகிறவர்களை அவை தேடி வரும் அப்படி ஒருவர் தான் கக்கன். ஹரிஜன மாநாடு ஒன்றில், "ஹரிஜன் ஒருவரை மந்திரியாக நியமிக்க வேண்டும்'' என்ற தீர்மானம் வந்தபோது, அதை இவர் எதிர்த்தார். "சாதி அடிப்படையில் பதவி கோருவது முறையல்ல'' என்று அப்போதே வலியுறுத்தியவர்.
அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை கக்கன்.

இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று எதுவும் சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

No comments:

Post a Comment