NFTECHQ

Tuesday, 13 December 2016

பி.எஸ்.என்.எல்

செல்லிடப்பேசி சேவைகள் பாதிப்பு கை கொடுத்த பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி சேவை

By DIN  |   Published on : 13th December 2016 03:42 AM  |
"வர்தா' புயல் காரணமாக, சென்னையில் திங்கள்கிழமை செல்லிடப்பேசி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.ஆனாலும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி பலருக்கு கை கொடுத்தது.
தரைவழி தொலைபேசியில் இருந்து மற்றொரு தரைவழி தொலைபேசிக்கு பேசி விவரங்களைத் தெரிவிக்கவும், மின்சார விநியோகம் இருந்த பகுதிகளில் இணையதள வழியே தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பி.எஸ்.என்.எல். சேவை பெரிதும் பயன்பட்டது.
கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டு மழை பெய்தாலும் செல்லிடப்பேசி சேவைகள் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், வர்தா புயல் காரணமாக சென்னையில் திங்கள்கிழமையன்று பெரும் சூறாவளி காற்று வீசியது.
புயல் கரையைக் கடந்த நேரத்தில் கடுமையாக காற்று வீசிய காரணத்தால், செல்லிடப்பேசி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.பிற்பகல் 3 மணியில் இருந்து தனியார் செல்லிடப்பேசி சேவைகள் முற்றாக முடங்கின.
கைகொடுத்த தரைவழி சேவை: தனியார் செல்லிடப்பேசி சேவைகள் முடங்கினாலும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவை தொடர்ந்து கொண்டே இருந்தது.
பி.எஸ்.என்.எல். இணைப்பு கொண்ட தரைவழி தொலைபேசியில் இருந்து மற்றொரு தரை வழி தொலைபேசிக்கு பேசவும், செல்லிடப்பேசிக்கு பேசவும் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இதனால், தரைவழி இணைப்பு கொண்ட தொலைபேசிகளுக்கு திங்கள்கிழமையன்று பெரும் வரவேற்பு இருந்தது.


நன்றி தினமணி

No comments:

Post a Comment