NFTECHQ

Thursday, 1 December 2016

இன்குலாப்

இன்குலாப் ஜிந்தாபாத்

இச் சொற்களைக் கேட்கும்போதும்

உச்சரிக்கும் போதும்

நமது உடலில் ஏற்படும்

சிலிர்ப்பு தனித்தன்மை பெற்றது.


அந்தச் சொல்லையே தன் பெயராகக் கொண்ட முற்போக்குக் கவிஞர் இன்குலாப் இன்று  காலமானார்.

கவிஞர்,
பேராசிரியர்,
பொதுவுடமைச் சிந்தனையாளர்,
எழுத்தாளர்
என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழந்தவர் இன்குலாப்.
இவரின் இயற்பெயர் சாகுல் அமீது. புரட்சி என்ற பொருள்தரும் இன்குலாப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், போராட்டங்களை மையப்படுத்தியே இவரது படைப்புகள் இருந்தன.
அவரது மறைவுக்கு நமது அஞ்சலி

No comments:

Post a Comment