NFTECHQ

Monday, 16 January 2017

குவியும் சொத்து
இந்தியாவில் உள்ள 57 பணக்காரர்களிடம் மட்டும், நாட்டில் உள்ள மொத்த சொத்தில் 70 சதவீதம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பின் கீழ் இயங்கும் ஆக்ஸ்பம் (Oxfam) என்ற அமைப்பு வெளியிட்டுட்டுள்ள ஆய்வில், இந்தியாவில் ஒரு சதவீதம் செல்வந்தர்களிடம் நாட்டில் உள்ள மொத்தம் செல்வத்தில் 58 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் முகேஷ் அம்பானி, திலிப் சங்கவி, அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 செல்வந்தர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள மொத்த சொத்த மதிப்பு 248 பில்லியன் டாலர். மேலும் அடுத்த 20 ஆண்டுகளில், 500 பேரிடம் 2.1 ட்ரில்லயன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும். இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.


இதனால் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஏழைகள், மேலும் ஏழைகளாக மாறுவார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா, இந்தோனேசியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள 10 சதவீதம் பணக்காரர்களின் வருமானம் 15 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் 10 சதவீத ஏழைகளின் வருமானம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. 

Friday, 13 January 2017

னைவருக்கும்
இனிய
பொங்கல்

நல்வாழ்த்துக்கள்



விதை விதைப்பவனுக்கும்
விதை விதைப்பவனை நம்பி வாழ்பவனுக்கும்
விண்
மழையையும்
மகிழ்வையும்
தரட்டும் என
வேண்டுவோம்.

மத்திய சங்கச் செய்திகள்
2014-15 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் போனஸ் ரூபாய் 3000 வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

2014-15 ஆம் ஆண்டுக்கான  போனஸ் ரூபாய் 3000  TERM CELL பகுதியில் பணிபுரிவோருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

BSNL நிறுவனத்தின்  "இன்ஸ்பெக்ஷன் குவார்ட்டர்ஸ்களை" நல்ல முறையில் பராமரிப்பதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நிதி, சிவில், எலக்ட்ரிகல் சம்பந்தமான அதிகாரிகளை உள்ள்டக்கிய ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம் தலைமைப் பொது மேலாலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் "இன்ஸ்பெக்ஷன் குவார்ட்டர்ஸ்களை"
யாருக்கும் சொல்லாமல்
திடீரென "இன்ஸ்பெக்ஷன்"

செய்ய வேண்டும் எனவும் உத்தரவு 

மகிழ்ச்சியும்

ஆதங்கமும்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுமையும் மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடனும் கோபத்துடனும் போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் காக்கவும், மண்ணின் மாட்டுக்காளைகளைக் காக்கவும் அவர்கள் எழுச்சியுடன் போராடு வதைக் காணும்போது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

மண்ணின் அடையாளம் மரித்துப் போகாமல் காக்க அவர்களின் உணர்வு பூர்வமான போராட்டம் உள்ள்த்தில் உவகையை  ஊற்றாகப் பெருக வைக்கிறது.

ஆனாலும்....


இப்படிப்பட்ட கோபம் அவர்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கோபம பொங்கி எழவில்லையே என
எண்ணும் போது மனம் வருந்துகிறது.

மருத்துவக் கல்விக்கு இந்த ஆண்டு முதலும் பொறியியல் கல்விக்கு அடுத்த ஆண்டு முதலும் பொதுநுழைவுத் தேர்வு என்பது பெரு நகரம் முதல் சிறு கிராமம வரை சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்களின் வாய்ப்பு பறி போய் விடுமே என்ற பதைபதைப்பும்கவலையும் அவர்களுக்கு ஏற்படாததும், அதற்காக போராடாததும் வருத்தமளிக்கிறது.

மாண்வச் செல்வங்களின் பெற்றோர் பணமதிப்பு நீக்கத்தால் படும் அவதி குறித்து அக்கறையுடன் ஆர்ப்பரித்து அவர்கள் போராடாமல் இருப்பது ஏமாற்ரத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

இருப்பினும் அவர்களின் போராட்டம் ஒரு வகையில் மகிழ்ச்சியே.

ஏனெனில் அநீதி கண்டு அவர்கள் இனி வரும் காலத்தில் போராடுவர்கள் என்பது நம் நம்பிக்கை.

Thursday, 12 January 2017

ஜனவரி 12
விவேகானந்தர் பிறந்த தினம்

இளையோர் தினம்


"கீழ்ப்படியக் கற்றுக் கொள்.
கட்டளையிடும் பதவி தானாக
வந்து உன்னை அடையும்"

"உன்னால் சாதிக்க முடியாத
காரியம் என்று ஒன்று இருப்பதாக
நினைக்காதே"  -விவேகானந்தர்

மதம், இனம், நாடு, மொழிகளைத்களைத் தாண்டி மனிதர்களை நேசிக்க முடியுமென்று உணர்த்தி வாழ்ந்த மனிதர். 

Wednesday, 11 January 2017

மோடி அறிவிப்பு தெரியாதாம்...

ரூ.5 லட்சம் பழைய நோட்டு

 வைத்திருந்த பாட்டி




கேரளாவைச் சேர்ந்த சதி என்ற 75வயது பாட்டி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை காலதாமதாக தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் சதி(75) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டில் மின்சாரம், ரெடியோ என எந்த பொருட்களும் இல்லை. அவருக்கு தேவையான பொருட்களை வாங்க எப்போதவதுதான் வெளியே செல்வார். எல்லா நேரங்களிலும் வீட்டிலேதான் இருப்பார். 

அண்மையில் காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடைக்காரரிடம் 500 ரூபாய் நோட்டை நீட்டியுள்ளார். கடைக்காரர் ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த பாட்டி, ரூபாய் நோட்டு புதுசா தானே இருக்கு, கிழியவும் இல்லை ஏன் செல்லாது? என்று கேட்டுள்ளார்.

கடைக்காரர் மூலம் மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பற்றி தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாட்டி தான் வீட்டில் வைத்திருந்த பணத்தை அவசரமாக வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால்கெடு முடிந்துவிட்டதால் வங்கி அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை மாற்ற மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதனால் வங்கி வாசலில் நின்றுக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள், அவர் எங்கள் வங்கியில் தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அவர் எடுத்து வந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சதி பாட்டி குறித்து அக்கம்பக்கம் வசிப்பவர்கள் கூறியதாவது:-

அவர் எப்போதும் வீட்டிலேயே தான் இருப்பார். அவர் வீட்டு அருகில் எங்களை நிற்க விட மாட்டார். இவ்வளவு கால வருடங்களில் எங்களிடம் இரண்டு அல்லது மூன்று முறை தான் பேசியிருப்பார். ரூபாய் நோட்டு விவகாரம் அவருக்கு தெரியும் என்று நினைத்தோம். இதுகுறித்து அவரிடம் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு தொகை பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பார் என்று எங்களுக்கு தேரியாது, என்றனர்.

அவரின் நிலைமை அறிந்த ஊர் பஞ்சாயத்து கமிட்டி, ரிசர்வ் வங்கியை நாட உதவி செய்து வருகிறது. யாரையும் எளிதில் நம்பாத பாட்டி, இந்த உதவியையும் வேண்டாம் என்று மறுத்துள்ளார். 
இரண்டாயிரம் ரூபாய்

01.01.2017 முதல் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். இதற்கான கோரிக்கையை பிப்ரவரி 13,14 தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள் நமது இயக்கத்தின் மத்திய செயற்குழுவில் முன்வைத்து அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்"  

தோழர் மதிவாணன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
ஜனவரி 11
லால் பகதூர் சாஸ்திரி

பிறந்த தினம்


"ஒரு ஆட்சி என்பது அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் நமது இலட்சியங்க்களையும் குறிக்கோள்களையும் அடைய முடியும்.

மக்களே இறுதித் தீர்ப்பளிக்கும் சக்தி படைத்தவர்கள்"-லால் பகதூர் சாஸ்திரி

Saturday, 7 January 2017

தோழர் ஞானையா 97


தோழர் ஞானையா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
அந்தத் தோழருக்கு நமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர். NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆழந்த அறிவாற்றலுடன் நிறைய, பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.


97 வயது. வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருப்பினும் சிந்தனையில் இன்னும் இளைஞனாக விளங்குகிறார். சிறந்த அரசியமல் மற்றும் சமூகச் சிந்தனையாளரான அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

Thursday, 5 January 2017

மலையென வளரும்

          மாமனிதனின் புகழ்




குன்றாத புகழுக்குச் சொந்தக்காரர் குப்தா.

தொலைத்தொடர்பு ஊழியர்களுக்குத் தொண்டால் பொழுதளந்த தோழன் குப்தா.

சமூக சிந்தனையோடு சாதனைகள் படைத்திட்ட பாட்டாளி வர்ககத்த் தோழன் குப்தா.

லட்சக்கணக்கான தோழர்களுக்கு சமூகத்தில் ஏற்றம் தந்து வாழ்வினில் மறுமலர்ச்சியை உருவாக்கிய தோழன் குப்தா..

ஓய்வீதியம் என்றாலே ஓ.பி. குப்தா மட்டுமே நினைவுக்கு வரும் வகையில் சாதனை நிகழ்த்திய தோழன்.


தோழன் குப்தா தொழிலாளி நலன் குறித்து சிந்திப்பதை இயற்கை சிதைத்த நாள் இன்று
காணாமல் போன
காந்தியடிகள்
மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டம். ஒரு கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தி  படம் இல்லை.

 சிலர் கவனித்து பதறிப்போய்விசாரித்துள்ளனர்.

வங்கி அதிகாரி "நல்ல நோட்டுதான். அச்சாகும் போது தவறு நேர்ந்திருக்கும்" என்று சொல்லி வேறு நோட்டுக்களை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

புதிய நோட்டையும் மாற்ற வேண்டிய நிலை குறித்து
வேதனைப்பட்டனர்.

இப்படியாக எத்தனை  நோட்டுகள்

சரிபார்ப்பையும் மீறி ரிசர்வ் வங்கியில் இருந்து வெளிவந்திருக்கிறதோ தெரியவில்லை.
துவக்கமே துன்பமா?

2017 துவ்க்கத்தின் முதல் நாளிலிருந்தே தினம்தோறும் விவ்சாயிகளின் மரணம் குறித்த செய்திகள்.

ஒவ்வொரு நாளும் 5,6,7,8 என விவசாயிகளின் மரணச் செய்தி வருகிறது.
மாநிலம் முழுமையும் இந்த் நிலை. இருப்பினும் திருவாரூர் நாகை மாவட்டங்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம்.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் இதயம்  வடிய பயிர் கண்டு நின்று போனது. வாடிய பயிர் கண்டு வாழ்வின் இருள் பற்றிய அச்சத்தின் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டோரும் உண்டு.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய" வள்ளலார் வாழ்ந்த மண் இது.

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்ற குறள் தந்த வள்ளுவனைத் தந்த மண் இது.

இந்த் மண்ணிலா இப்படிப்பட்ட சோகங்கள்.

இந்நிலை நீடித்தால்
இயற்கையும் வஞ்சித்தால்
பெரும்பான்மை மக்கள் வணங்கும் கடவுள்களுக்கே கூட பால், பழம், வெற்றிலை, பொங்கல் மற்றும் பிர்சாதங்கள்  கிடைகாமல் போகலாம்.

அந்நிலையில் கூட ஆள்வோர்
கடவுள்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
அந்நிய முதலீட்டையும், அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து மட்டுமே சிந்திப்பார்கள்.

ஒன்றுபட்டிருந்த விவச்சயிகள் அமைப்பும் பல கூறுகளாகப்  பிரிந்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அமைப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

ஆள்வோர்களிடத்தில் அக்கறையில்லை.

எதிர்க்கட்சிகளும்  சடங்க்குக்காக போராட்டங்களை நடத்துகிறன்றன.

இவற்றையெல்லம் கண்டு இயற்கை கருணை காட்டினால் மட்டுமே விடியல் வருமோ? 

Tuesday, 3 January 2017

இரங்கல்

தோழர் N.ரவி
டெலிகாம் டெக்னீசியன்
இன்று (02.01.2017) உடல்நலக் குறைவால் காலமானார்
என்பதை வருத்த்த்துடன் தெரிவிக்கிறோம்.
அவர் சிறுவலூரில் பணியாற்றி வந்தார்.
2016ல் பவானியிலிருந்து சிறுவலூருக்கு மாற்றல் கொள்கையின் கீழ் மாற்றலில் சென்றார்.
அவருக்கு வயது 51.
அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.
வரது குடும்பத்தாருக்கு நமது

ஆழ்ந்த இரங்க்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, 2 January 2017

பொற்காலம்??
"நவம்பர் 8 முதல் கடந்த 50 நாட்கள் வங்கிகளுக்குப் பொற்காலம். சுதந்திரத்திற்குப் பிறகு இது வரை இவ்வளவு பணம் வங்கிகளுக்கு வந்ததில்லை. இது வங்கிகளுக்குப் பொற்காலம்" என்கிறார் பிரதமர்.

பொற்காலம் என்பதன் பொருள் பற்றி ஒரு ஆய்வு தேவைப்படுகிறது.

08.11.2016 அன்று வங்கிகளில் இருப்பில் இருந்த பணமும்,
புழக்கத்தில் இருந்து வங்கிகளுக்கு வந்த  500, 1000 ரூபாய் தாள்களையும் கணக்கில் சேர்த்தால் ரிசர்வ் வங்கியின் கணக்கு சரியாகப் பொருந்தி விட்டது.

கறுப்புப் பணமும் காணவில்லை.

கள்ளப்பணமும் காணவில்லை.

எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தால் இறந்த ஒரு  16 வயது இந்திய தேசத்தின் இளையமகனின் இறுதி ஊர்வலத்தின் (02.01.2017ல்) போது கூட துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாம்.

லஞ்சம், ஊழல் காணாமல் போனதா?

எஞ்சி நின்றது மக்களின் துயரமும், துன்ப்மும் நூற்றுக்கணக்கான உயிர் இழப்புக்களும் மட்டுமே.

இவைதான் பொற்காலத்தின் அடையாளங்கள் என்றால் இது பொற்காலமே.

Saturday, 31 December 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு

31.12.2016 அன்று பணி ஓய்வு பெற்ற
தோழர் J.ராஜமனோகரன் TT
நலமும்  மகிழ்வும் பெற்று

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
நேர்மையற்றவர்கள்
இன்று ஓய்வூதியம் பெறும் நாள்.
சென்ற மாதம் ரூ.8000/- ஓய்வூதியம் வழங்கிய
ஈரோடு தலைமை அஞ்சல் நிர்வாகம்
இன்று வெறும் ரூ.2000/- மட்டும் தர முடியும் என்றது.

ஓய்வூதியர்கள் திரண்டு சாலை மறியலுக்கு புறப்பட்டனர். செய்தி அறிந்து காவல்துறை தலையிட்டது. அஞ்சல், வங்கி நிர்வாகிகளுடன் பேசினர். வங்கி நிர்வாகம் கூடுதல் நிதி அளிக்க சம்மதித்தது. அஞ்சல் நிர்வாகம் ரூ.5000/- ஒப்புக்கொண்டு வழங்கியது.

மிக மூத்தவர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்கப்படவில்லை.


 நாடு மிக நன்றாக இருப்பதாக பேட்டி அளிப்பவர்கள் நேர்மை இல்லாதவர்கள்.

Friday, 30 December 2016

குறைகிறது
01.01.2017 முதல்
விலைவாசிப்படி
0.8 சதம் குறையும்

என்பது கனக்கீடு.
போராட்டங்கள் சடங்காகிறதா?

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என 08.11.2016 அன்று அறிவிக்கப்பட்டது.

மக்கள் அல்லலுற்றனர்.

நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொந்தப் பணத்தைப் பெற மக்கள்
மாளாத் துயருக்கு ஆளாகினர்.

வங்கிகளில் வரிசையில் நின்ற போதே நூற்றுக்கனக்கான இந்திய
மக்கள் இன்னுயிரை இழந்தனர்.

லடசக் கணக்க்கில் தொழிலாளர்கள்
வேலை இழந்தனர்.

மாதச் சம்பள்ம் ,ஓய்வூதியம் பெறுவோரையும் இப்பிரச்னை விட்டு வைக்கவில்லை.

அவர்களுக்கு நவம்பர் மாதம் பத்தாயிரம் ரூபாய் முன்பனமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பி.எஸ்.என். எல் ஊழியர்களுக்கு
அதுவும் இல்லை என ஆனது.

08.11.2016 இந்தக் கொடுமைகளுக்கான
அறிவிப்பு வந்தது.

ஆனால் 44 நாட்கள் கழித்து நமது தமிழ் மாநில அமைப்பு 22.11.2016 அன்று
ஒரு ஆர்ப்பாட்ட அறைகூவல் விடுத்தது.

போராட்டங்கள் காலத்தே நடத்தினால்
அதற்கு ஈர்ப்பு இருக்கும்.

இப்படிப்பட்ட காலம் கடந்த இயக்கங்கள் உணர்த்துவது என்ன?

போராட்டங்கள் சட்ங்குகளாகிப் போனதோ என்பதுதான்.

அதுவும் நமது அமைப்பிலா?

இதை  விமர்சனம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஆதங்கம் என்று எடுத்துக் கொள்வதா?
அவரவர் மனதை பொறுத்தது அது.


இதில் ஏதேனும் ஒன்று மனதில் எழுவது நல்லது.
மாவட்டச் செயற்குழு


29.12.2016 அன்று அந்தியூரில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத் துவக்கி வைத்தார்.

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படு பொருள் பற்றி எடுத்துரைத்து இன்றைய சூழல் குறித்து உரையாற்றினார்.

மாவட்ட மாநாட்டுக்குப் பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு. இதில் இதுநாள் வரையான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக் கணக்கை முன்னாள் பொருளாளர் தோழர் ராஜேந்திரன்   பொருளர் தோழர் மெளனகுருசாமியிடம் வழங்கினார்.

கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் ஊழியர் பிரச்னைகள் மற்றும் அமைப்பின் வளர்ர்ச்சி குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் மருத்துவச் சிகிச்சை குறித்த பிரச்னைதான் பிரதானமாக இருந்தது.

கேபிள், ட்ராப் வயர், இன்ஸ்ட்ரூமெண்ட் பற்றாக்குறை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

ஹங்க்கமா பிரச்னையால் தொலைபேசி இணைப்புகள் சரண்டர் ஆகும் நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

பிரச்னைகளை உரிய மட்டத்தில் விவாதித்து தீர்வு காண  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்டச் செயலர் தனது தொகுப்ப்ரையில் தெரிவித்தார்.

செயற்குழுவைச் சிறப்பாக நடத்த உதவிட்ட அந்தியூர் தோழர்களுக்கு பாராட்டுக்கள்
அந்தியூர் கிளை மாநாடு
29.12.2016 அன்று அந்தியூர் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கீழ்க்கண்டோர் ப்திய நிர்வாகிகளாக  ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்
தோழர் நாகராஜன் TT

உதவித் தலைவர்
தோழர் நல்லசாமி TT

செயலர்
தோழர் செல்வராஜ் TT

உதவிச்செயலர்
தோழர் சந்தானம் TT

பொருளர்
தோழர் அசோகன் TT

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

அந்தியூர் துணைக்கோட்டப் பொறியாளரும்

SNEA மாவட்டச் செயலருமான திரு.துரை அவர்கள் கிளை மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர் செல்வராஜன்,(AITUC) தோழர் நல்லுசாமி ஆகியோர் உரையாற்றினர்.

Wednesday, 28 December 2016

மாவட்டச் செயற்குழு
அந்தியூர் கிளை மாநாடு

நாள்  29.12.02016

இடம் அந்தியூர் தொலைபேசி நிலையம்

அனைவருனம் வருக

Monday, 26 December 2016

அமைக்கப்பட்டது

ஊதிய மாற்றக்குழு

நமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் குறித்த பேச்சு வார்த்தைக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்ற்கான உத்த்ரவு  26.12.2016
அன்று  வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகத்தரப்பு உறுப்பினர்கள்
1. திருமதி அனுராதா பண்டா PGM (FP)- தலைவர்
2. திருமதி மது அரோரா GM (Estt) உறுப்பினர்
3. திருமதி R.D.சரண் GM(EF) உறுப்பினர்
4.திரு A.M. குப்தா GM (SR) உறுப்பினர்
5. A.K.சின்ஹா DGM (SR)  செயலர்

குழு அமைக்கப்பட்டாலும், DPE அமைப்பின் வழிகாட்டுதல்  வந்த பின்னரே குழுவின் பணிகள் துவங்கும் என் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கம்  சார்பில் பங்கு பெறும் உறுப்பினர்கள் பெயர் இல்லாமலேயே இந்த் உத்தரவு பெளியிடப்பட்டுள்ளது.

உரிய அதிகாரியின் அனுமதி பெற்று தேவைப்பட்டால் பேறு யாரையேனும் குழுவின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 25 December 2016

குற்றமும்

தண்டனையும்

நாட்ட்டையும்,
நாட்டின் வளங்களையும்,
அதிகாரத்தைப்
பயன்படுத்தி அள்ளி அள்ளிக்
கொள்ளையடிப்போர் பலர்.

அவர் தம் பெரிய மற்றும் சின்ன வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனைகள்
நடப்பது வழக்கம்மான ஒன்று.

வருமானவரித்துறை,
மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் மிக நுணுக்கமாக தங்கள் நுண்ணறிவைப் பயன்படுத்தி
கயவர்களின் இடங்களில்
சோதனை செய்கின்றனர்.
இது மிகவும் சரியான,
தேவையான நடவடிக்கையே.

ஆனால்.....
சாதாரண ஊழியர்கள் தவறு செய்தால்
தண்டனைகள் பாய்கின்றன.

மிகப்பெரிய, மிகச்சிறிய அதிகாரிகள்
குற்றம் புரிந்தால்,
சோதனைகள் நடந்தால் பரபரப்பான செய்திகள்
ஏராளமாக உலா வருகின்றன.

அதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ யாம் அறியோம்.

மழையில் நனைந்த பட்டாசின் கதையாகி விடுகிறது.

தனியாகவோ, கூட்டாகவோ ஏதோ
செய்து தப்பித்து விடுகிர்கள்.

நமது நிறுவனத்தில் கூட இப்படிப்பட்ட
நிகழ்வுகளைப் பார்த்து இருக்கிறோம்.

தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற நிலை என்பது உறுதியானால் மட்டுமே குற்றங்கள்
இல்லாத நிலை உருவாகும்.

இல்லையெனில் சில நாட்களுக்கு ஊடகங்களில் பரபர செய்திகள் கிடைப்பது மட்டுமே மிஞ்சும்.

அது மட்டுமல்ல மக்கள் வைத்திருக்கும்
கொஞ்ச நம்பிக்கையும் நாசமாய்ப் போகும்.
                கீழ்வெண்மணி


எரிந்த நெருப்பின்
அணையாத கங்குகளாக,
தியாக சின்னங்களாக
கீழ் வெண்மணியில் நிலைத்து
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கூலி உயர்வு கேட்டு மரித்த போராளிகள்.
அவர்கள் உயிர் நீத்த

48வது ஆண்டு தினம் இன்று.

Saturday, 24 December 2016

இனிய
கிருஸ்துமஸ்

வாழ்த்துக்கள்