NFTECHQ

Thursday, 24 December 2015

நபிகள் வாக்கும்

நடைபெறும் மனிதமும்



நபிகள் சொன்ன ஐந்து முக்கியமான அம்சங்கள்
1.ஏழைகளிடம் அன்பும் இரக்கமும் காட்டி துன்புறுவோருக்கு உதவ வேண்டும்.

2.இறைவனையும் நபியையும் நம்ப வேண்டும், 

3.ஐந்து முறை தொழ வேண்டும், 

4.ரம்ஜான் நோன்பு இருக்க வேண்டும், 
5.முடிந்தால் ஹஜ் செல்ல வேண்டும்.

எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அவர் எதையும் சொல்லவில்லை 
என்பதே சத்தியம்.

யூனுஸ் என்னும் இந்துக் குழந்தை


முகமது யூனுஸ் என்னும் இளைய “மனிதன்” சமீபத்திய மழையில் தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வெள்ளத்தின் பிடியில் இருந்து காபாற்றியுள்ளான்.

அந்த இந்து மதப் பெண் சுகப்பிரசவத்தில் ஈன்ற தனது மகனுக்கு தன்னைக் காபாற்றிய “முகமது யூனூஸ்” நினைவாக
“யூனுஸ்”    என்று பெயர் சூட்டியுள்ளார்.

எல்லாவற்றையும் கடந்து மனிதம் வாழும்.

Tuesday, 22 December 2015

துணை நிற்போம்


பணி ஓய்வு பெற்றவர்களுக்கு
78.2 சத பஞ்சப்படி இணைப்ப்பு பலன்
கொடுப்பதை தாமதப்படுத்தும்
போக்கினைக் கண்டித்தும்
உடனே வழங்கக் கோரியும்
22.12.2015 அன்று
ஆர்ப்பாட்டம்
இது FORUM விடுத்த அழைப்பு
சிறப்புடன் நடத்துவோம்

Sunday, 20 December 2015

தொடரும் பயணம்

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு 16.12.2015 அன்று ஈரோடு எக்ஸ்டர்னல் பகுதியில் நமது உறுப்பினர்களைச் சந்தித்தார். தோழர்கள் புண்ணியகோட்டி, ஆனந்தன், கதிர்வேலு ஆகியோர் உடன் சென்றனர்.

17.12.2015 அன்று தோழர்கள் V.செல்வராஜன்,  அன்சர், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் தாராபுரம் பகுதியில் உள்ள நமது தோழர்களைச் சந்தித்தார்.

18.12.2015 அன்று மாவட்டச் செயலர் பழனிவேலு  மாவட்டப் பொருளர் தோழர் ராஜேந்திரன், மாவட்ட உதவிச் செயலர் தோழர் புண்ணியகோட்டி, ஆகியோருடன் காங்கயம், வெள்ளகோவில், கொடுமுடி பகுதியில் உள்ள நமது ஊழியர்களைச் சந்திக்கும் இயக்கத்தை மேற்கொண்டார்.

19.12.2015 அன்று தோழர் புண்ணியகோட்டி  அவர்களுடன் ஈரோடு ரூரல் பகுதியில் உள்ள நமது உறுப்பினர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உறுப்பினர்களைச் சந்திப்பது, நலம் விசாரிப்பது, அவர்கள் குறை கேட்பது என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்த சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.



இந்த சுற்றுப்பயணத்தில் தோழர் நாகராஜன் அவர்களின் உதவியும் உறுதுணையும் நன்றிகுகும் பாராட்டுக்கும் உரியது


இப்படிப்பட்ட சந்திப்பு உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியது.

ஒரு சில சிறிய பிரச்னைகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டன.

அவை அனைத்தும் விரைவில் தீர்வு காணப்படும்.

Sunday, 13 December 2015

சுற்றுப்பயணம்

நமது மாவட்டச் செயலர்

தோழர் பழனிவேலு

அவர்கள் நமது மாவட்டம் முழுமையும் உள்ள நமது தோழர்களைச் சந்திப்பது, பிரச்னைகளைக் கேடபது என  முடிவு செய்து சுற்றுப்பயணத்தைத் துவக்கியுள்ளர்,
சத்தியமங்கலம்,

பவானி பகுதிகளில் இப்பணியை முடித்துள்ளார். அவருடன் தோழர்கள் உடன் செல்கின்றனர். 


இப்பகுதிகளில் சுற்றுப்பயணத்துக்கு
             தோழர் நாகராஜன் 
அவருக்கு உற்ற துணையாகசெயல்பட்டார்


Friday, 11 December 2015

பாரதியும்


இருபதாம் நூற்றாண்டும்


இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இந்தியர்களின் பட்டியலைப் பலரும் போட்டிருக்கிறார்கள். காந்தி, நேரு, அம்பேத்கர், ஹோமி ஜஹாங்கீர் பாபா, ராமானுஜன், ரவீந்திரநாத் தாகூர், எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் என்று கலவையாகப் பலரைக் கொண்ட பட்டியல் அது. காந்தி, நேரு, அம்பேத்கர் போலப் பரவலாகப் பலரது வாழ்வில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இயல்பாகவே இடம்பிடித்து விடுகிறார்கள். எம்.எஸ்., சச்சின் போன்றவர்கள் தத்தமது துறைகளில் செலுத்திய பங்களிப்புக்காகவும் பொது வெளியில் ஏற்படுத்திய தாக்கத்துக்காகவும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் யாரும் பாரதியாரைச் சேர்த்ததில்லை. தனது துறை சார்ந்த பங்களிப்பு என்று பார்த்தால் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பலரைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புச் செலுத்தியவர் பாரதியார். 39 ஆண்டுகளே வாழ்ந்த அவர் சென்ற நூற்றாண்டில் தமிழில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களுக்குத் தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார்.
பாமரர்களுக்கான பாடல்கள், தேர்ந்த ரசிகர்களுக்கான நுட்பமான கவிதைகள் ஆகியவற்றில் அவரது சாதனைகள் அளப்பரியவை. யாப்பிலிருந்து விடுபட்டுக் கவிதைகளை உரைநடைத் தன்மையுடன் எழுதும் மரபின் முன்னோடி அவர்தான். பல்வேறு விதங்களில் புனைவுகளை எழுதிப்பார்த்த அவரது முயற்சிகள் நவீனத் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தன.
இதழியல் துறையில் முன்னோடிகளுக்கே உரிய பல காரியங்களை அவர் செய்திருக்கிறார். கருத்துப் படங்கள், நாட்டு நடப்புகள் குறித்த கூர்மையான பதிவுகள், உலக விவகாரங்கள் குறித்த அலசல்கள், துணிச்சலான விமர்சனங்கள், ஹைக்கூ உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துதல், பிற மொழிகளிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதல் எனப் பல விதங்களிலும் சீரிய முறையில் இயங்கியவர். ஒத்துழைக்கவோ ஊக்கம் தரவோ யாருமற்ற சூழலில் தனது உள்ளார்ந்த வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் பெருங்கனவுடனும் இவற்றையெல்லாம் செய்தவர். வறுமை பிடுங்கித் தின்னும் சூழலிலும் மகத்தான கனவுகளைச் சுமந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்.
தாகூரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால் அவரது புகழ், எல்லைகளைக் கடந்தது. ஆனால், பல விதங்களிலும் தாகூருக்கு இணையாகச் சொல்லக்கூடிய பாரதியின் ஆக்கங்களை அப்படிக் கொண்டுபோக நாம் மெனக்கெடவில்லை. இதனால், அவரது பெருமைகள் தமிழக எல்லைக்கு வெளியே அதிகம் தெரியவில்லை.
எனினும், மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கு அவர் செய்த ஈடிணையற்ற பங்களிப்பு நவீன உலகில் தமிழ் மொழியின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்காற்றியது. தமிழ் போன்றதொரு மொழிக்குச் செய்யும் தொண்டும் அதன் பரந்துபட்ட தாக்கங்களும் கூட்டாட்சித் தத்துவத்தைக் கைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் அதன் பன்முகப் பண்பாட்டுத் தளத்துக்கும் முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மகத்தான ஆளுமைகளில் பாரதிக்கான இடத்தை மறுக்கவே முடியாது.
இந்திய அளவிலான அறிவார்த்த உலகமும் பண்பாட்டுப் பொது மனமும் இதை ஏற்க வேண்டுமானால், இனியாவது நாம் பாரதியாரை, அவரது பன்முக ஆளுமையைச் சீரிய முறையில் இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். பாரதி இறந்து நூறாண்டுகள் நிறைவதற்கு இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் இதைச் செய்ய முடிந்தால் பாரதியின் பண்பாட்டு, மொழி வாரிசுகள் அவருக்குச் செய்யும் சிறந்த கைங்கர்யமாக அது அமையும்.
நன்றி த்மைழ் இந்து 11.12.2015

இன்று டிசம்பர் 11 பாரதி இந்தப் பூமியை முதலில் பார்த்த நாள்.
பாரத மாதா பாரதியை முதலில் பார்த்த நாள்
அறுபதுக்குப் பிறகும்

அரும்பெரும் பணி

தோழர் மாணிக்கம் அவர்களின் அரும்பெரும் தலைமையில்,
தோழர் ராஜசேகரன் அவர்களின் சீர்மிகு செயல்பாட்டில் சிறப்புடன் செயல்படும் ஈரோடு மாவட்ட ஓய்வூதியோர் சங்கம் கடலூர் மாவட்டத்தில் கதிக்லங்கி நிற்கும் மக்களுக்கு நாங்கள் உங்களோடு என்னும் உன்னத உணர்வோடு
ரூபாய் ஐம்பதாயிரம் (ரூ 50000) மதிப்பில் சமைக்கவும்,
உண்ணவும் உறங்கவும் தேவையான பொருள்களை உரியவர்களுக்கு உரிய முறையில் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இப்பணியில் ஈடுபட்ட ஈரம் நிறைந்த மனதுடையோருக்கு மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்

Tuesday, 8 December 2015

மனிதன்....

மனிதன்....

ஈரோடு மாவட்டம் கோபியில் பணிபுரியும் நமது    டெலிகாம் மெக்கானிக்
தோழர் K.K.செல்வராஜ்
அவர்கள் தான் வாங்கிய நவம்பர் மாதச் சம்பளமான ரூபாய் இருபத்து ஓராயிரம் ரூபாயை (ரூபாய் 21,000)
வாடும் மக்களின் துயர் உதவியாக வழங்க்கியுள்ளார்.

அந்தத் தோழரை மாவட்டச் சங்கம்  நன்றியுடன் பாராட்டுகிறது
இயற்கை தந்த
இனிய வரம்
            ஆனால்.......

இயற்கை மக்களுக்கு மழையை வரமாகத் தந்தது.
ஆனால் அதை மகிழ்வுடன் ஏற்க இயலாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

மக்களின் இன்னல்களைத் தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

குறுகிய காலத்தில்,வரலாறு கானாத மழை. ஆகவே என்ன செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் மக்கள் படும் துயரங்களைப் பார்க்கும் போதும், கேட்கும்போதும் கண்களில் நீர்மழை.

அனைத்தையும் இழந்த மக்கள் இனி வாழ்க்கையை புதிதாகத் துவங்க வேண்டிய பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த அனைத்தையும் ஒரு சில மணித்துளிகளில் இழந்து வாடும் மக்களின் சோகம் ந்ம் மனதை கலங்கடிக்கிறது.


பாதிப்பில்லாத பகுதிகளில் வாழும் நமது தோழர்கள் தங்கள் மனதை விசாலமாக்கி ஏதேனும் ஒரு வகையில் அந்த மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

Monday, 7 December 2015

MNP நிலை நவம்பர் 2015


1.கோவை     +816
2.கடலூர்       +93
3.குடந்தை     +76
4.தர்மபுரி       +543
5.ஈரோடு       +411
   6.காரைக்குடி   --141
7.மதுரை        +14
         8.நாகர்கோயில் +881
9.நீலகிரி        +96
10.புதுவை       +71
11.சேலம்        +51
12.தஞ்சை       +38
13.திருச்சி       -12
       14. தூத்துக்குடி   +176
    15.நெல்லை     +767
16.விருதுநகர்   -6
  17.வேலூர்      +204
தமிழகம்        +4078

Sunday, 6 December 2015

டிசம்பர் 6

அம்பேத்கரின்  நினைவு தினம்-125



அம்பேத்கர்  அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டார். சாதியும் தீண்டாமையும் இந்திய நாட்டில் மட்டும் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி நடத்தினார். ஒருவரைத் தொடர்ந்து ஏழையாக வைத்திருக்கவும், அவரிடம் மிகக் குறைவான சம்பளத்தைக் கொடுத்து அதிகமான வேலைகளை வாங்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் சாதி என்ற அமைப்பு. தீண்டப்படாத மக்கள் தங்களது உரிமைகளை இழந்து நிற்கிறார்கள். எனவே, இது ஒரு அரசியல் பிரச்சினை என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் ரீதியில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவும் முயன்றார். அதன் விளைவாக தீண்டப்படாத நிலையிலிருந்த மக்கள் நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உறுப்பினர் ஆவதற்கு வழிசெய்தார்.

அம்பேத்கரின்  நினைவு தினத்தில்  அவரது கனவுகள் நிறைவேற சபதமேற்போம்.


பவானி 20 சத வீட்டு வாடகைப்படி


பொது மேலாலருக்கு நமது வேண்டுகோள் கடிதம்TO



TO

THE GENERAL MANAGER
BSNL  ERODE

Respected Sir,

Sub: Request for sanction of 20% HRA for left out stations like Bhavani- Reg

As per the 2011 census 20% HRA is sanactioned by the Government of India and the same has been extended to the concerned staff of BSNL.
The same has been granted to the staff working in Erode urban area  from 01.04.2015.

We learn that the Postal staff working in Bhavani have been granted 20% HRA. The staff working in our STR section of Bhavani also have been granted 20% HRA from 01.04.2015.

A request has already been made by our District Union to DGM(FINANCE) and AGM (ADMN) quoting the orders of Postal Authorities and Pay Slip of our STR staff working in Bhavani. They agrred to look into the matter.
20% HRA is allowed to the stations based on the population where it exceeds 5 lakhs.

ERODE (UA) has been sanctioned 20% HRA based on the population of following areas as per 2011 census.(A copy of the order issued by Government of India is enclosed herewirh)

ERODE MC                                    1,57,101
BHAVANI MUNICIPALITY                    39,225
BP AGRAHARAM TOWN PANCHAYAT        24,798
KASIPALAYAM MUNICIPALITY                73,425
METTUNASUVAMPALAYAM CENSUS TOWN   17,240
PERIYASEMUR MUNICIPALITY                  55,282
SURAMAPTTY MUNICIPALITY                   41,782
SURIYAMPALAYAM TOWN PANCHAYAT        28,585
VEERAPPANCHATRAM MUNICIPALITY           84,453

TOTAL POPULATION                              5,21,891

ERODE UA has been decided for 20% HRA only taking into account of the above areas. Hence, our staff working in Bhavani and Kalingarayanpalayam are eligible for 20% HRA as per the orders issued by Government of India.

We request you kindly look into the matter and sanction 20% HRA for the satff working in BHAVANI and KALINGARAYANPALAYAM
from 01.04.2015.

WE also request you to kindly arrange for the same along with salary for the month of DECEMBER 2015.
We request you to kindly do the needful.

Thanking you

Yours faithfully,

(N.PALANIVELU)
DISTRICT SECRETARY
Copy to
1.Deputy General Manager (Finance) O/O GMT BSNL ERODe for kind information. 
2.Assistant General Manager (Admn) O/O GMT BSNL ERODe for kind information
3.Accounts Officer (DRAWAL) ager (Admn) O/O GMT BSNL ERODe for kind information
Enclosure: Copy of the orders issued by Government of India with respect to our request.




Saturday, 5 December 2015

பவானிக்குக் கிடைக்குமா?

வானியில் பணிப்ரியும் நமது ஊழியர்களுக்கு 20 சதம் வீட்டு வாடகைப்படி தருவது குறித்து நிர்வாகத்துடன் நமது மாவட்டச் சங்கத்தின் சார்பாக விவாதித்தோம்.

இதற்கான வாய்ப்புகளையும் உத்தரவுகளையும் நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

விதிகளில் சாதகமான ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தாலும் அந்த 20 சத வீட்டு வாடகைபடியைப் பெற்றுத் தருவோம். 
எங்க்கேயும் கொள்ளை

எப்போதும் கொள்ளை

மழைநீர் சூழ்ந்து மக்கள் சொல்லொணாத் துயரில் அழ்ந்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுத் துறை, மத்திய மாநில பொத்த்துறை ஊழியர்கள் தங்கள் குடுமபத்தை மறந்து, சொந்த நலனை மறந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்கள் உயிரைத் துச்சமென மதித்து மக்களை மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.

இவர்கள் குறைந்த பட்ச சம்பளத்தைப் பெறும் அடிமட்ட ஊழியர்கள்.

இப்ப்டிப்பட்ட பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கு கூடுதலாக
சம்பளம்  தருவதை சுமை என்று தினமணி போன்ற நல்ல பத்திரிக்கை கூட தலையங்க்கம் எழுதியது.

ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு லிட்டர் பாலை ரூபாய் 100, 150 எனவும் ஒரு லிட்டர் தண்ணீரை ரூபாய் 100 எனவும் விற்று சோகமான சூழ்நிலையில் கூட துன்பத்தில் வாடும் மக்களிடம் கொள்ளை அடிக்கும் கயவர்களை என்ன் செய்வதூ?