NFTECHQ

Saturday, 10 February 2018

அநீதி
2017 ஆம் ஆண்டுக்கான "சஞ்சார் சேவா  பதக்" விருது பெற்றவர்கள் பட்டியலை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
BSNL நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவோர் டெலிகாம் டெக்னிசியன் கேடரில் உள்ளவர்கள். அதிகமான உடல் உழைப்பு தருபவர்களும் அவர்களே.
ஆனால் அந்த கேடர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது மட்டுமல்ல. கண்டிக்கத்தக்கது.
பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் பல்வேறு பணிகளைச் சிறப்பாக ஆற்றிடும் டெலிகாம் டெக்னிசியன் தோழர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களைத் தவிர்ப்பது என்பது தவறானது.

இனியாவது இந்தத் தவறைத் திருத்திக் கொள்ள நிர்வாகம் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment