NFTECHQ

Wednesday, 24 December 2014

இனிய நல்வாழ்த்துக்கள்

இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும்  உள்ளம் நிறைந்த இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்:
ஜொலிக்கும் தேவாலயங்ககளைப் போல்
இந்தப் புவியும் புவியில் வாழும் மக்களின் வாழ்வும் ஜொளிக்கட்டும்.

அன்பையும் சமாதானத்தையும் உணர்த்தும் இந்த்த் திருநாள் அனைவருக்கும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

டிசம்பர் 23-24

பி.கக்கன்
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த பி.கக்கன் மறைந்த தினம் டிசம்பர் 23.
இளம் வயது முதலே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன், 1939 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத் தந்தார். நாட்டு விடுதலைக்குப்பின் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமைச்சராக இருந்தபோது மதுரை வேளாண்மைக் கல்லூரியை தோற்றுவிதத்ததோடு , வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களையும் நிறைவேற்றினார். அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக வாகனம் ஏதும் இல்லாமல் அரசு பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததும், நோய் வாய்ப்பட்டு போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததும் அவரின் தூய்மையான அரசியல் வாழ்கைக்கு, எடுத்துக்காட்டாகும்.
பெரியார்'
'தந்தை பெரியார்' மறைந்த தினம் டிசம்பர் 24. ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்கு விடை தேடத் தொடங்கினார். 1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் 'மூடப்பழக்க வழக்கங்களை மக்களிடத்திலிருந்து அகற்றுவதை' நோக்கமாக கொண்டு செயல்பட்டது. திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகவே இருந்தது. எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24, இதே நாளில் தான் இயற்கை எய்தினார். 
எம்.ஜி.ஆர்
புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் டிசம்பர் 24. தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. 135 திரைப்படங்களில் நடித்த இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தன்னிகரற்ற ஜாம்பவனாக திகழ்ந்தார். 1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் அவ்விருதை ஏற்க மறுத்துவிட்டார். 1977 ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முதலமைச்சர் பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இயக்கிய சிகரத்தின் இமைகள் மூடின



இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மாறைந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற கதாநாயகர்கள் கலையுலகில் கோலோச்சிய காலத்தில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
சமூக அவலங்க்களையும்

சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் தைரியத்துடன் எடுத்து வைத்த துணிச்சல்காரர்.
அவள் ஒரு தொடர்கதை,அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் இதற்கு உதாரணம். வறுமை, வேலையின்மை இவற்றைப் படம் பிடித்தவர்.
தண்ணீர் தண்ணீர் படம் உலகம் முழுமைக்கும்
இன்றைக்கும் பொருந்தும் காவியம்.

தான் உருவாகி  முன்னேறுவது என்பதைத் தாண்டி மற்றவர்களை உருவாக்குவது, மற்றவர்களையும் முன்னேற்றுவது என்ற உயரிய கொள்கைக்கு இலக்கணம் படைத்தவர்.

பால்ச்சந்தர் புகழ் பல்லாண்டு வாழும்

Saturday, 20 December 2014

ERP அமலாக்கம்

BSNL நிறுவனத்தின் தமிழக தொலைத்தொடர்பு வட்டத்தில் ERP முறை அமல்படுத்தும் திட்டம் 19.12.2014 அன்று அமலுக்கு வந்துள்ளது.
இதற்காக உழைத்திட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
இந்த திட்டம் அமலாக்கப்பட்டது நல்லது என்பதே நமது கருத்து.

எனினும் நிறுவனத்தின் வள்ர்ச்சிக்கும் சேவை மேம்பாட்டுக்கும் விரைவான முடிவெடுத்தலும் அதை விரைந்து அமலாக்குவதும் காலத்தின் கட்டாயம்.

மாறாத 60

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்த் 58 ஆகக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Thursday, 18 December 2014

பேசலாம் வாங்க



30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 27.11.2014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் உட்பட பலகட்ட போராட்டங்கள் நடத்தினோம்.
இது குறித்து 22.12.2014 அன்று பேச்சு வார்த்தை நடத்த JAC அமைப்பிற்கு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
நல்லது நடக்கும் என நம்புவோம்.

மீண்டும் மலருகிறது அமெரிக்க-க்யூப உறவு

அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன.

கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான ஆலன் கிராஸ் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதான செய்தியை அறிவித்தது.
இது தொடர்பிலான முறைப்படியான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், க்யூபத் தலைவர் ரவுல் காஸ்ட்ரோவும் வெளியிட்டனர்.
முறிந்து போயிருந்த அமெரிக்க-க்யூப உறவுகளை சீர் செய்வதில் ஒரு பெரிய தடைக்கல்லாக கிராஸ் தடுத்து வைக்கப்பட்டிருந்தது இருந்து வந்தது.
கிராஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமது நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று க்யூப நாட்டுப் பிரஜைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட செயற்கைகோள் தொழில்நுட்பத்தை தமது நாட்டுக்குள் கொண்டு
வந்தார் என்று குற்றஞ்சாட்டி அவரை ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் அதிகாரிகள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
விடுவிக்கப்பட்டுள்ள ஆலன் கிராஸ் அமெரிக்கா திரும்புகிறார்.
இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, க்யூபாவின் தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகம் அடுத்த சில  மாதங்களில் திறக்கப்படும் என்று வாஷிங்டன் அறிவித்துள்ளது.
க்யூபாவின் முன்னாள் அதிபரும், அமெரிக்காவுக்கு கடும் சவால்களை விடுத்து வந்தவர் பிடல் காஸ்ட்ரோ
அதேபோல பயணம் மற்றும் வர்த்தகத் தடைகளும் தளர்த்தப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனநாயகத்தைக் கொண்டு வரும் நோக்கில் பல ஆண்டுகளாக, கம்யூனிஸ நாடான க்யூபாவைத் தனிமைப்படுத்தி வைக்கும் தனது லட்சியம் எதிர்பார்க்கப்பட்ட பலனை அளிப்பதில் தோல்வியடைந்து விட்டது என்பதையும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

Wednesday, 17 December 2014

டாக்டர் ஸ்டாலின் குணசேகரன்



கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனுக்கு
கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெளியிட்ட விடுதலை வேள்வியில் தமிழகம்என்ற இரண்டு பாகங்கள் கொண்ட சிறப்புமிக்க நூலுக்காகவும்
கடந்த பத்து ஆண்டுகளாக தேசியத் தரத்துடன் கூடிய ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடர்ந்து நடத்திப் புத்தக வாசிப்புப்
பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியதற்காகவும்
முப்பத்தி மூன்றாண்டுகளாக பாரதி விழாவை இடைவிடாது நடத்துவதோடு அவ்விழாவை சமூக வளர்ச்சிக்கு வித்திடும் விழாவாக வித்தியாசமாக நடத்திவருவதற்காகவும் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வி நிலையங்களில் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் ஏராளமான கட்டுரைகள் எழுதியதோடு சில நூல்களையும் எழுதி எழுத்துத் துறையில் பங்களிப்புச்
செலுத்தியதற்காகவும் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி கல்வியின்பால்
ஆசிரியர்களுக்கு மேலும் ஈடுபாட்டை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் இத்தோடு இவரின் தொடர்ந்த வேறு பல சமூக சேவைகளை அங்கீகரித்தும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

நமது சங்கத்தின் மாநில, மாவட்ட மாநாடுகளில் பங்கேற்று
தேசம் மற்றும் தேச விடுதலை
குறித்து உணர்வும் அறிவும் கலந்த எழுச்சி உரை ஆற்றி மாநட்டுக்கு செழுமை சேர்த்த தோழனுக்கு நமது வாழ்த்துக்கள்.
தோழனின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

Monday, 15 December 2014

பணியாளர்கள்

பணியாளர்கள் ஏன் உழைக்கிறார்கள்? அனைவரும் பணத்திற்காக மட்டும் வேலை செய்வது இல்லை. பெருவாரியானவர்கள் பணத்தையும் தாண்டி ஒரு அர்த்தத்தை தேடி வேலை செய்கிறார்கள். ஏன் வேலை செய்கின்றோம் என்பதற்கு நாம் செய்ய கூடிய வேலையின் மூலமாக ஒரு சில காரணிகளை அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறு அறிந்து கொள்ளக் கூடிய காரணிகள் அர்ப்பணிப்பு, இணைப்புகள், நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் என்பன ஆகும். உழைப்பின் அர்த்தத்தைத் தோண்டிப் பார்த்தால் கடினமான நேரங்களில் எதிர்த்து எழுந்தும், சுமூகமான நல்ல நேரங்களில் இயைந்து பணியில் ஈடுபடுவதும் என்ற விடைகள் கிடைக்கும்.
பெரும் வளம் உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுடைய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் இணைத்து நிறுவனத்தோடு வளரவும், வேலையில் ஒரு அர்த்தத்தையும், மனித நேயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மாற்றி யோசிக்கும் திறன், நம்பிக்கை, எதிர்த்து எழுதல், உறுதியாக இருத்தல், வளம் சூழ இருத்தல் மற்றும் தலைமைப் பண்புகள் போன்றவை பெருவளமுள்ள நிறுவனங்களில் காணப்படும்.
வேலையில் அர்த்தத்தை கண்டவர்கள் திறமையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருப்பார்கள். இது போன்று இருப்பவர்கள் வாடிக்கையாளரிடமும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பார்கள். பெருவள நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கொண்டு வரும் மாற்றங்களையும், புதுமைகளையும் பொறுத்தே வெற்றியை நோக்கி செல்கின்றன. அவ்வாறு தலைமை பண்பும் அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாத நிறுவனங்களில் பணியாளர்கள் தனித்து விடப்படுகிறார்கள். அதன் விளைவாக பெருவள நிறுவனங்களாக மாறுவது தடைபட்டுப் போகிறது. சமுதாயக் கடைமைகளையும், நிறுவன கோட்பாடுகளையும், தனிநபர் ஊக்குவிப்பையும் ஒன்றுபடுத்தினால் நிறுவனம் வேறு, தான் வேறு என்ற சூழலிருந்து வெளிவரலாம்.
அதிக உற்பத்தித் திறன் கொண்ட குழுக்களை அமைப்பதன் மூலம் உற்பத்தி மேம்படும், அதன் விளைவாக நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஒருவரை ஒருவர் இணைத்துக் கொள்ளும் பண்பாடும், பயன்பாடும் உள்ள குழுக்களாக அவர்களை உருவமைத்தல் வேண்டும்.
பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தி அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வலுவாக்கி அவர்களின் பங்களிப்பை பெறுதல் முக்கியமானது. வளர்ச்சி. புதிதாக அறிதல், எதிர்த்து எழுதல் ஆகியவைகளை நிறுவன கலாச்சாரமாக உருவமைத்தல்
வேண்டும்.
மரியாதை அளித்து மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து வேறுபாடுகளை உயரிய பண்போடு ஏற்றுக்கொள்ளுதல். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு பணியாளர்களிடம் மகிழ்ச்சியையும், அவர்களை பற்றிய புரிந்துணர்வையும் ஊக்குவித்தல் அவசியம். பெருவள நிறுவனங்கள் கீழ்காணும் காரணிகளை அடைவதில் முனைப்பு காட்டுக்கின்றன.
* திறன்களை மேம்படுத்தி நிறுவனத்தை வலிமைப்படுத்துதல். சமுதாய, பொருளாதார பொறுப்புகளை உணர்ந்து நிறுவனத்தின் கொள்கை கோட்பாட்டையும் தனிமனித ஊக்கத்தையும் இணைத்தல்.
* அதிக உற்பத்தி திறன் மிக்க குழுக்களை உண்டாக்குவதை காட்டிலும் அதிக உணர்வுபூர்வமான குழுக்களை உருவாக்குதல்.
* நேர்மறையான சுற்றுபுறச் சூழ்நிலை யையும் நிறுவன பழக்கவழக்கங்களையும் கொண்டு நிறுவனத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஒருங்கிணைத்தல். தொழிலாளர்களின் திறமைகளையும், அர்ப்பணிப்பையும் தாண்டி அவர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொள்ளுதல்.

* நிறுவனங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு வளர்ச்சி, புதிதாக கற்றறிதல் மற்றும் எதிர்த்து எழும் திறமைகளை வளர்த்தல். வெளிப்படையான சமூக வேறுபாடுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல் உள்ளார்ந்த தனிமனித வேற்றுமைகளைக் களைந்து, மற்றவர்களை பற்றிய உணர்வு பூர்வமான சிந்தனைகளை வளர்த்து நிறுவனத்தின் வளர்ச்சியை நோக்கி ஒருமுகப்படுத்தி ஊக்குவித்தல்.

Thursday, 11 December 2014

*124*2#

BSNL பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் *124*2# என்று கால் செய்தால்
பயன்பாட்டில் உள்ள
வாய்ஸ் ரேட்கட்டர்,
எஸ் எம் எஸ் ரேட்கட்டர்,
டேட்டா பிளான் விபரங்களை அறியலாம்.

STVENQ என 123 க்கு எஸ் எம் எஸ் அனுப்பியும் இந்த விபரங்க்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாழும் கவிஞ்ன்



பாரதியார் பிறந்தநாள் டிசம்பர்-11, 1882

பாரதி- இந்த
பெயரைக் கேட்டவுடன் இன்றும் உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.
தமிழ் மொழி அவரிடம் தாண்டவமாடியது. தேசம், தேச விடுதலை, பெண் விடுதலை என்பது பற்றி அவரது
கவிதைகளும்
கட்டுரைகளும் என்றும் பொருந்தும் சாகா வரம் பெற்றவை.
மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் கடைசியாக ஈரோடு நகரில் அவர் ஆற்றிய உரையே அவரது கடைசி உரையாக அமைந்தது.
அந்த மகாகவிக்கு என்றும் மரணம் இல்லை.

Wednesday, 10 December 2014

ஆர்ப்பாட்டம்



டிசம்பர் 11 2014

கோரிக்கைகள்

காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு 
டவ்ர் கார்ப்பரேசன் ஏற்படுத்தாதே..
கிராமப்புறங்களில்  சேவை வழங்குவதற்கான நிவாரணம் வழங்கு..
BSNL
வளர்ச்சிக்கான உரிய கருவிகளை
வழங்கு..
அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..
BSNL - MTNL
இணைப்பை நிறுத்து..
SPECTRUM
கட்டணத்தை திருப்பி வழங்கு
ஓய்வு பெறும்போது வாங்கும் சம்பள அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை நிர்ணயம் செய்..
அலைவரிசை ஒதுக்கீட்டை  BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI  முடிவை ரத்து செய்..
ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை ஏற்காதே
BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
4G
தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே திருப்பிக் கொடு
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
மத்திய மாநில பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாய சேவையாக்கு..
ITI
நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை  கட்டயமாக்காதே...

இரங்கல்

தமிழ் மாநில அமைப்புச்செயலர் 
தோழர் விஜயரங்கன்  
அவர்களின் மனைவி
09/12/2014  அன்று காலமானார்
என்பதை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைகிறோம்.
துணையை இழந்துள்ள
நமது  தோழருக்கு நமது ஆழ்ந்த
இரங்கலைக் கணிக்கையாக்குகிறோம்.

Tuesday, 9 December 2014

மாற்றம் எதற்கு?



தொழில் நுட்ப மேம்பாடு என்பது ஏற்கெனவே இருந்த வசதிகளை எளிதாக்கும் என்பது அறிவியல்.
ஆனால் *124# என்ற மாற்றம் வாடிக்கையாளர்களை சொல்லொணாத சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்த மாற்றம் ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச் செல்லுமா என்பது சந்தேகமே.

சபாஷ்

தமிழக காவல்தூறையில் பணியாற்றுவோருக்கு BSNL நிறுவனம் CUG திட்டத்தில் லட்சக்கணக்கான ப்ரிபெய்டு மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.
ஒரு ஆண்டுக்கு கட்டணம் ரூ 264. ஒரு மாத கட்டணம் ரூ 22.02. CUG திட்டத்துகுள் உள்ள லடசக்கணக்கான காவல்தூறியினர் அவர்களுக்குள் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
CUG திட்டத்துக்கு வெளியே BSNL அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசா கட்டணம்.
மற்ற நிறுவன அழைப்புகளுக்கு
நிமிடத்திற்கு 30 பைசா கட்டனம்.
BSNL நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும் இப்படி ஒரு வணிகத்தைச் செய்ய முன்வராது.

Friday, 5 December 2014

நீதியின் திருமகன் புகழ் நிலைத்து வாழும்

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் 04.12.2014 அன்று தனது நூறாவது வயதில் தன் உடல் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
சாமானிய ஏழைகளுக்கும் சட்டம், நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதே அவரின் நோக்கம். வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல நடவடிவங்களைக் கடந்து வந்தவர். அன்றைய பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடி வந்தார். இதனால் ஒரு சமயம் நீதிபதி ஒருவர் அவரைத் தனியே அழைத்து “கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆஜராகி ஏன் பெயரைக் கெடுத்துக்கொள்கிறீர்கள், உங்களை போலீஸார் உளவு பார்ப்பார்கள்” என்று எச்சரிக்கையும் செய்தார். நாடு விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், காவல் துறையினர் கோபத்துடன் இருந்தனர். தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தில் 1948 மே மாதத்தில் காவல் துறை அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.
பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்த லில் போட்டியிட்டபோது, கிருஷ்ணய்யர் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப் புறமாகத் திருப்பி விட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன் பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது. கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி.ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர். காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு கிருஷ்ணய்யர் திட்டமிட்டார். ‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1959-ல் அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது செங்கோல் ஏந்தி 'உஸ்’ என்று ஒலி எழுப்பி, ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேய நீதிபதிகள், இந்தியர்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காகப் பின்பற்றிய அந்த வழக்கம் ஜனநாயக சமூகத்துக்கு ஏற்றதல்ல என்று கிருஷ்ணய்யர் அதை மறுத்தார்.
1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் அவருடைய தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. வெறும் சட்டவாதமாக மட்டும் வழக்குகளைப் பார்க்காமல் அவற்றின் பின்னால் உள்ள சமூக, அரசியல், ஜனநாயகப் பிரச்சினைகளை அவர் தனது தீர்ப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார். உச்ச நீதிமன்றத்தில் அவர் வழங்கிய பல தீர்ப்புகள் ஏழைகளுக்கு அனுசரணையாக இருந்தன. இக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாமானிய மக்கள் எழுதிய கடிதங்கள் கூட சில சமயம் வழக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. மரண தண்டனையை அவர் முற்றிலுமாக எதிர்த்தார். அதை, தண்டனை வடிவமாகக் கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார். மேலும், இலவசச் சட்ட உதவி முறைக்கு அவர் உயிர்கொடுத்தார். 1980 நவம்பர் 14 வரை உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்பும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும், முகம் அறியாத அனைவருக்காகவும் அவர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.
மூத்த தலைமுறையினர், முக்கியமாகச் செய்ய வேண்டிய அரும் பணி இது. அவரை நினைவுகொள்வோம்.
உலகிலேயே மிகச் சிறந்த முதல் 10 நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் இடம் பெற்றுள்ளார் என்பது நமக்குப் பெருமை.

இன்றைய நிதிபதிகள் கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்புகளில் ஒன்றை தினமும் படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ந்மது நாட்டில் நீதியின் வெளிச்சம் மேலும் பிரகாசிக்கும்.

Thursday, 4 December 2014

அபாயம்

ஒரு மனித உடல் இயங்க இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றவை சரியாக இயங்க வேண்டும்.
BNSL நிறுவனத்தின் தொலைபேசி நிலையங்களும், மொபைல் டவர்களும் இயங்க பவர் பிளான்ட், பேட்டரி மற்றும் என்ஜின் ஆகியன நல்ல முறையில் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும்.
உண்மையான் யதார்த்த நிலை மிகவும் கவலை தருவதாக உள்ளது.
பல தொலைபேசி நிலையங்களிலும், மொபைல் டவர்களிலும் பவர்பிளாண்ட், பேட்டரி, என்சின் போன்றவை காலாவதியாகி இயக்கமற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறோம்.
உரிய நடவடிக்கைகள் மூலம் இவை சரி செய்யப்படவில்லையெனில் BSNL சேவையின்
மூச்சு நின்னு போச்சு என்ற நிலை உருவாகிவிடுனோ என்ற் கவலை உருவாகியுள்ளது.
கேட்டாலும் கிடைப்பதில்லை என்ற நிலை உள்ளதாக நமக்கு தகவல் சொள்ளப்படுகிறது.
மாநில, மத்திய JAC அமைப்புகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே நம் விழைவு.




Wednesday, 3 December 2014

வாழ்த்துக்கள்



ஈரோடு மாவட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்

தோழர் G.பூபதி
தோழர் V.கன்னுசாமி
தோழர் M.நாகராஜன்
தோழியர் N.தெய்வானை

தோழியர் V.ஜெயம்மாள்

அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்