NFTECHQ

Wednesday, 20 April 2016

நாகரீகமற்ற  அறிக்கை
SEWA BSNL அமைப்பைப் பற்றி ஒரு கிளைச் செயலரின் பக்குவம் கூட இல்லாத அளவுக்கு ஒரு அமைப்பின் அகில இந்திய இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

பதவி வரும்போது
பணிவு வர வேண்டும்  
துணிவும் வர வேண்டும் தோழா

பாதை மாறாமல்
பண்பு குறையாமல்
பழகிவர வேண்டும் தோழா

பாதையும் மாறி,
பயணமும் மாறி
பண்பும் மாறி
அநாகரீகத்தின் உச்சியில்
எழுதப்பட்ட அறிக்கை அது.

துணிவைக் காட்ட வேண்டிய இடத்தில் பணிவையும்
பணிவைக் காட்ட வேண்டிய இடத்தில் துணிவையும்
காட்டும் குணம் புரிகிறது

அந்த அறிக்கையின் விபரம் குறித்து  எழுதி நமது இணையதளத்தின் தரமான பண்பாட்டையும் நாகரீகத்தையும் குறைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை.

NFTE இயக்கத்தின் மீது அவதூறு கணைகள் ஆயிரக் கணக்கில் பாய்ந்துள்ளன.

SEWA BSNL மீது ஏன் இந்த கோபம்.
"கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை." என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இப்படிப்பட்ட அநாகரீக அறிக்கையா?

இப்படிப்பட்ட அநாகரீக அறிக்கையின்
விளைவுதான் அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் வி9ழா புறக்கணிப்போ?

12.06.2016க்குப் பின் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு 
செயல்படுவதே புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment