மேதின
வாழ்த்துக்கள்
01.05.2016
அனைவருக்கும்
மே தின வாழ்த்துக்கள்
உழைப்பையும்,
ஓய்வையும்
உறக்கத்தையும்
உறுதி செய்திட்ட
தியாகத் தலைவர்களுக்கு
நன்றி சொல்வோம்.
2017 ஆம் ஆண்டின் மேதினம்
நம்மைப் போன்ற
BSNL ஊழியர்களுக்கு
மகிழ்வான தினமாக அமைய
2016 மே மாதம் 10 ஆம்
நாளன்று
வரிசை எண் 16ல்
ஒற்றுமையின் சின்னமாம்
இணைந்தகரங்களில்
வாக்களித்து
வருங்காலத்தை
வளமுள்ளதாக்குவோம்.
இருப்பதைக்
காத்திடுவோம்
இழந்த்தை மீட்டிடுவோம்.
|
Saturday, 30 April 2016
வாழிய பல்லாண்டு
30.04.2016 அன்று பணி
ஓய்வு பெறும்
1. திரு N.சுப்ரமணியன் SDE
2.தோழர் P.பழனியப்பன் SSSO
3. தோழர் M. வெற்றிவேல் STS
4. தோழர் S.சதாசிவம்-I TM
5. தோழர் S.சதாசிவம்-Ii TM
6. S.பெருமாள் TM
7. தோழர் S. சுப்ரமணியன் TM
8. தோழர் P.பாபு TM
9. தோழர் K.கோவிந்தன் TM
10. தோழர் P.மாரியப்பன் TM
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.
SEWA-NFTE-TEPU
ஏழாவது உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தல்
பிரச்சாரக் கூட்டம்
02.05.2016
மாலை 4.30 மணி
டெலிபோன் பவன் வளாகம்
சிறப்புரை
தோழர்
T.முத்துக்கிருஷ்ணன்
தோழர்
C.K.மதிவாணன்
தோழர்
பூசப்பன்
மாநில உதவிச் செயலர் TEPU
அனைவரும் வருக
என
அன்புடன் அழைக்கும்
ஷாஜகான்
மாவட்டச் செயலர் TEPU
சதாசிவம்
மாவட்டச் செயலர் SEWA
பழனிவேலு
மாவட்டச் செயலர் NFTE
|
Thursday, 28 April 2016
பயனுள்ள
கூட்டங்கள்
27.04.2016 அன்று
ஈரோடு எக்ஸ்டர்னல் அலுவலகம்,
பொதுமேலாளர் அலுவலம்,
பவானி தொலைபேசி நிலையம்
என மூன்று இடங்களில்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
சிறப்புடன் நடைபெற்றன.
ஊழியர் பங்கேற்பும் சிறப்பாக இருந்தது
தோழர்கள்
பட்டாபி,
கிருஷ்ணன்,
தமிழ்மணி
சதாசிவம்,
காசிராஜன்
ரவிச்சந்திரன்
ஆகிய தலைவர்கள்
"NFTE இயக்கம் வெற்றி பெற வேண்டியதன்
அவசியம்"
மற்றும்
"எதிர்கால சவால்களும் அவற்றைச் சந்திக்து வெற்றி காணவும் அதற்கு ஒற்றுமையின்
அவசியம்"
குறித்தும் ஆற்றிய உரைகள் பயனளிப்பதாகவும்
மே 10 அன்று நல்ல பலனை விளைவிப்பதாகவும் அமைந்த்ன.
நிகழ்வுகள் அனைத்தும்
சிறக்க உதவிட்ட தோழர்கள்
அனைவருக்கும் நன்றி.
Sunday, 24 April 2016
Thursday, 21 April 2016
இழப்பின் அளவு
26000 கோடி ரூபாய்
BSNLEU அங்கீகாரத்தில்
இருந்த காலத்தில்
ஊழியர்களுக்கு ஏற்பட்ட
இழப்பு ரூபாய் 26000 கோடி.
இழப்பின் விபரம்
போனஸ் இழப்பு
1860 கோடி ரூபாய்
மெ2டிக்கல் அலவண்ஸ் இழப்பு
8200 கோடி ரூபாய்
78.2 சத பஞ்சப்படி இணைப்பு மூலம் கிடைக்க வேண்டிய அரியர்ஸ் இழப்பு
6100 கோடி ரூபாய்
பயணப்படி போன்ற அலவண்ஸ்கள்
மாற்றம் செய்யாத்தால் இழப்பு
7500 கோடி ரூபாய்
விடுப்புக் கால 10 நாள் சம்பளம்
பெற இயலாத்தால்
350 கோடி ரூபாய்
தேக்க நிலை ஆண்டுயர்வுத் தொகை மற்றும் 01.01.2007க்குப் பின் பணி நியமணம்
பெற்ரவர்கள் சம்பள இழப்பு மூலம்
1100 கோடி ரூபாய்
78.2 அகவிலைப்படி இணைப்பில் வீட்டு வாடகைப்படி கிடைக்காததால் இழப்பு
1250 கோடி ரூபாய்
கோடி ரூபாய்
இத்தனையும் இழந்தோம்.
இனியும் இழக்கலாமா?
சிந்திப்பீர்
இனி வரும் காலமாவது
இழபுகள் இல்லாத காலமாகட்டும்.
10.05.2016 அன்று
வரிசை எண் 16ல்
நாம் அளிக்கும் வாக்கால்
இணைந்த கைகள் உயரட்டும்
இழப்புகள் நம்மை விட்டு அகலட்டும்
Wednesday, 20 April 2016
NFTE BSNL TEPU
SEWA BSNL
ஈரோடு மாவட்டம்
தலைவர்கள் உரையாற்றும்
தேர்தல் சிறப்புக்
கூட்டம்
நாள் 27.04.2016
காலை 0930 மணி
ஈரோடு எக்ஸ்டர்னல் அலுவலகம்
மதியம் 1 மணி
ஈரோடு பொதுமேலாளர் அலுவலகம்
மாலை 3.30 மணி
பவானி தொலைபேசி நிலையம்
|
சிறப்புரை
தோழர் சுப்புராமன்
அகில இந்திய பொதுச்
செயலர் TEPU
தோழர் முத்துகிருஷ்ணன்
மாநிலச் செயலர் SEWA
BSNL
தோழர் கிருஷ்ணன்
மாநிலச் செயலர் TEPU
தோழர் அசோகராஜன்
மாநிலப் பொருளர் NFTE
தோழர் பட்டாபி
மாநிலச் செயலர் NFTE
அனைவரும் வருக
நாகரீகமற்ற அறிக்கை
SEWA BSNL அமைப்பைப் பற்றி ஒரு கிளைச்
செயலரின் பக்குவம் கூட இல்லாத அளவுக்கு ஒரு அமைப்பின் அகில இந்திய இணையதளத்தில்
ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
பதவி வரும்போது
பணிவு வர வேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா
பாதை மாறாமல்
பண்பு குறையாமல்
பழகிவர வேண்டும் தோழா
பாதையும் மாறி,
பயணமும் மாறி
பண்பும் மாறி
அநாகரீகத்தின் உச்சியில்
எழுதப்பட்ட அறிக்கை அது.
துணிவைக் காட்ட வேண்டிய இடத்தில்
பணிவையும்
பணிவைக் காட்ட வேண்டிய இடத்தில் துணிவையும்
காட்டும் குணம் புரிகிறது
அந்த அறிக்கையின் விபரம்
குறித்து எழுதி நமது இணையதளத்தின் தரமான
பண்பாட்டையும் நாகரீகத்தையும் குறைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை.
NFTE இயக்கத்தின் மீது அவதூறு கணைகள்
ஆயிரக் கணக்கில் பாய்ந்துள்ளன.
SEWA BSNL மீது ஏன் இந்த கோபம்.
"கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற வில்லை." என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இப்படிப்பட்ட அநாகரீக
அறிக்கையா?
இப்படிப்பட்ட அநாகரீக அறிக்கையின்
விளைவுதான் அண்ணல் அம்பேத்கரின்
125வது பிறந்த நாள் வி9ழா புறக்கணிப்போ?
12.06.2016க்குப் பின் அனைவரும்
இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு
செயல்படுவதே புத்திசாலித்தனம்.
கை விரலில் மை
16.05.2016 தமிழகத்தில் சட்டசபைத்
தேர்தல்.
அத் தேர்தலில் இடது கையின்
ஆட்காட்டி விரலில் மை வைப்பார்கள்.
10.05.2016 அன்று
நமது இயக்கம் களம் காணும்
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்.
இந்தத் தேர்தலில்
இடது கையின் நடு விரலில்
மை வைக்கப்படும்.
நடு விரல் இல்லாதோருக்கு
இடது கை பெரு விரலில்
மை வைக்கப்படும்.
எந்தக் கையில்
எந்த விரலில்
மை வைத்தாலும்
2016 ஆம் அண்டு
மே மாதம் 10 ஆம் நாள்
நமது நம்பிக்கையின்
இணைந்த கரங்க்களில்
வாக்களிப்போம்.
நமது எதிர்காலம்
உரிமைகளும் சலுகைகளும்
உதிராத காலமாக அமைய
இணைந்த கரங்க்களால்
மட்டுமே முடியும்.
Tuesday, 19 April 2016
மாற்றியதும்
BSNLEU
ஏமாற்றியதும்
BSNLEU
1979 முதல் உற்பத்தியுடன்
இணைந்த
போனஸ் பெற்று வந்தோம்.
BSNLEU இழைத்த
மாபெரும் வரலாற்றுப் பிழையால் போனஸ் இலாபத்துடன் இணைக்கப்பட்டது.
இதன் விளைவாகவே கடந்த
ஏழு ஆண்டுகளாக போனஸை பூஜ்ஜியம் ஆக்கியது BSNLEU.
10000 உறுதி என்று
பசப்பு வார்த்தைகளைக்
கூறி
அதில் 1 என்ற எண்ணை
எடுத்து விட்டு
0 என்று மாற்றியது
BSNLEU
பூஜ்ஜியமான போனஸோடு
ராஜ்ஜியத்தை நடத்திவிட்டு
பின்னாலிருந்த பூஜ்ஜியத்தை
முன்னால் கொண்டு வந்து
ஊழியர்களை வஞ்சித்தது BSNLEU.
முன்னால் கொண்டு வந்து
ஊழியர்களை வஞ்சித்தது BSNLEU.
"உங்க தகுதிக்கும்
நீங்க செய்யர வேலைக்கும்
வாங்கர சம்பள்மே அதிகம்.
இதுல போனஸ் வேற வேணுமா?
அடுத்த மாசம் சம்பளம்
வருதா பாருங்க"ன்னு
மகாபாரத அர்ஜுனனின்
மகன் பெயர் கொண்டவர்
மேடையில் முழங்கியது
நினைவில்லையா?
இதை மூடி மறைத்து
ஊழியர்களை ஏமாற்றி
வாக்குகளைப் பெற
நமது NFTE இயக்கத்தைப் பற்றி
அவதூறு செய்ய
தகுதியற்ற இயக்கம்
BSNLEU.
அனைத்தையும் மாற்றி
அனைவரையும் ஏமாற்றிய
BSNLEU இயக்கத்துக்கு
இனியும் வாக்களிக்கலாமா?
இனியும் வாக்களிக்கலாமா?
சிந்திப்பீர்
இனியும் ஏமாறாமல்
இருக்க
இணைந்த கரங்களில்
வாக்களிப்போம்.
Sunday, 17 April 2016
இப்படியும் ஒரு திருட்டு
கேள்வி
உங்கள் பெயர் என்ன?
பதில் தரப்படுகிறது.
உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தேர்தலில் (மே 16) ஓட்டு போடப்
போகிறீர்கள்?
பதில் ஐந்து பேர்.
உங்கள் வங்கிக் கணக்கு எஎன ?
எந்த வங்கியில் கண்க்கு
உள்ளது?
பதில் எதற்காக இந்தக் கேள்வி?
ஒரு ஓட்டுக்கு ரூபாய் 3000 வீதம் மொத்தம் 15000 ரூபாய் உங்கள்
வங்கிக் கணக்கில் போடுவத்ற்காகத்தான் கேட்கிறோம் என்று பதில் வருகிறது.
ஆர்வத்தோடு வங்கிக் கணக்கு விபரங்களை தருகிறார்.
உடனே ஒரு கேள்வி.
உங்கள் ஏடிஎம் கார்டின்
ரகசிய எண் என்ன?
அது எதற்கு எங்கிறார் அவர்.
அப்போதுதான் பணம் போட முடியும் என்பது பதில்.
ஏடிஎம் ரகசிய எண்னையும் கொடுத்து விடுகிறார் அவர்.
பத்து நிமிடத்தில் பணம் போடப்பட்டு விடும் என்று சொல்லப்படுகிறது.
15 நிமிடம் கழித்து அவர் ஏடிம் கார்டைப் பயன்படுத்தி 150000
ரூபாயை எடுத்து விடலாம் என முயற்சி செய்கிறார்.
அதிர்ச்சியால் உறைந்து போகிறார்.
ஏனெனில் அவர் கனக்கில் ஏற்கெனவே இருந்த 18000 ரூபாயைக் கானோம்.
போடப்பட்டுவதாகச் சொன்ன 15000 ரூபாயும் இல்லை.
ஏமாறுபவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
எந்த ஒரு தேர்தலிலும் பொய் சொல்பவர்களை நம்பாதீர்கள்.
Saturday, 16 April 2016
அண்ணல் அம்பேத்கார்
பிறந்த
தின விழா
இந்திய அரசியல் சட்டத்தின் பிதாமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களின்
125வது பிறந்த தின விழா ஈரோடு பொதுமேலாலர்
அலுவலகத்தில்
சிறப்புடன் நடைபெற்றது.
sEWA BSNL ஈரோடு மாவட்டத்தலைவர் தோழர் பழனிசாமி தலைமையேற்றார்.
பொதுமேலாளர் நல்லதொரு சிறப்புரையாற்றினார்.
துணைப்பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர் (நிர்வாகம்), AIBSNLEA அமைப்பின் தோழர்கள் தண்டபாணி, பெரியசாமி,
AIBSNLOA அமைப்பின் தோழர் தனுஷ்கோடி, SNEA அமைப்பின் தோழர் ராஜு, TEPU இயக்கத்தின் தோழர் காசிராஜன், BSNLAU அமைப்பின் தோழர் சுந்தர் நமது இயக்கத்தின் குமார்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
sEWA BSNL அமைப்பின் மாவட்டச் செயலர்
மாவட்டச் செயலர் தோழர்
சதாசிவம் நல்லதொரு நிறைவுரையாற்றினார்.
சிறப்பான ஏற்பாடுகளுடன் விழாவை நடத்திட்ட SEWA BSNL தோழர்களுக்கு
பாராட்டுக்கள்.
வராமலே போன
வாரத்தில் ஐந்து
நாள்
வேலை
நாங்கள் வெற்றி பெற்றால் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பதை
வரமாகப்
பெற்றுத் தருவோம் என்றது BSNLEU.
இது மிகவும் நல்லதாயிற்றேஎன்ற நமபிக்கையிலும், எதிர்பார்ப்பிலும்
ஊழியர்களும் வாக்களித்தனர்.
2004 முதல் 2016 வரை 12 ஆண்டுகள் முடிந்தன.
ஊழியர்களும் நபிக்கையுடன்
தொடர்ந்து வாக்களித்தனர்.
ஆனால்,
வாரம் ஏழு நாட்கள் என்ற அடிப்படை மாறவில்லை.
வாரத்தில் ஐந்து நாள் வேலையும் வரவில்லை.
“கார்ப்பரேட் அலுவலக்த்தில்
பணிபுரிவோருக்கு மட்டும் வாரத்தில் 5 நாள் வேலை. மற்றவர்களுக்கு ஏன் கிடையாது?
என்று ஒரு கிடுக்கிப்பிடியைப் போட்டது BSNLEU.
“தற்போது கார்ப்பரேட் அலுவலகம் சஞ்சார் பவன்
எனப்படும் DOT அலுவலத்தில்
செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதி
பாதுகாப்பான பகுதி என்பதால்அது 5 நாள் இயங்குகிறது.
விரைவில் கார்ப்பரேட் அலுவலக்ம் புதிய அலுவலகத்திற்கு
மாற்றப்படும்.
அதன்பின் வாரத்தில்
6 நாள் வேலை அமலாக்கப்படும்” என்று
நிர்வாகம் கூறியது.
நீண்ட நாள் கழித்து நான்காம் சனிக்கிழமையாவது விடுமுறை தாருங்கள்
என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் மறுக்கப்பட்டது.
இதற்காக் எவ்விதமான இயக்கமும் நடத்தாமல் அமைதியாக் இருந்தது
BSNLEU.
வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளனர்.
“போராட்டம் இன்றி யாராட்டமும் செல்லாது” என்பது
வெற்று முழக்கம் மட்டும்தான்.
சாதனைகள் பல படைத்தோம் என்று சொல்லும் BSNLEU
ஐந்து நாள் வேலை என்று சொன்ன வாக்குறூதி பற்றி வாய்
திறப்பதே இல்லை.
இது மட்டுமல்ல இப்படி காணாமல் போன வாக்குறுதிகள் பட்டியல்
தொடரும்.
Friday, 15 April 2016
அண்ணல்
அம்பேத்கர்
ஏப்ரல்
14.
அண்ணல்
அம்பேத்கர்
அவர்களின்
125வது பிறந்த தினம்.
அவர்
இந்த நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்.
நமது
நாட்டின் அரசியல் சட்டத்தின் பிதாமகன்.
ஒடுக்கப்பட்ட
மக்களின் முன்னேற்றத்திற்கு ஓயாது
உழைத்த தலைவர்.
ஜனநாயக
தீபம் ஒளிர்வதற்குக் காரணியாக அமைந்த தலைவர்.
அவரது
கனவுகள் அனைத்தும் நனவாக உழைத்திடுவோம்.
உயர்ந்திடுவோம்.
Wednesday, 13 April 2016
எதற்கு
ஒத்துழையாமை
இயக்கம்?
நிர்வாகத்துக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பை 08.04.2016 முதல் வாபஸ் பெற்றுக்
கொள்வதாக BSNLEU அறிவித்துள்ளது.
எதற்கு இந்த அறிவிப்பு?
புன்முறுவலுடன் பணியாற்றுவது வாபஸா?
ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஈடுபடும் முயற்சி
வாபஸா?
நிர்வாகம் நடத்தும் தேர்தலைப் புறக்கணித்து ஒத்துழையாமை
இயக்கமா?
எத்தனையோ ஒத்துழையாமை இயக்கங்கள் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம்.
சிலவற்றில் நாமும் பங்கு பெற்றிருக்கிறோம்.
ஆனால் BSNLEU சங்கத்தின் அறிவிப்பு புரியாத புதிர்.
Subscribe to:
Posts (Atom)