Sunday, 31 May 2015
ஈரோடு
ஈரோடு உட்பட நாட்டில் உள்ள 29 நகரங்களின்
தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்
வீட்டு வாடகைப்படி 20 சதமாக உயர வாய்ப்பு உள்ளது.
நமது மாவட்டச் சங்கத்தின் கோரிக்கையை
ஏற்று தீர்வு காண்ட நமது மத்திய சங்கத்துக்கும், மாநிலச் சங்கத்துக்கும் நன்றி.
Saturday, 30 May 2015
வாழ்த்துகிறோம் வாழிய பல்லாண்டு
31.05.2015 அன்று பணி ஓய்வு பெறும்
1.திரு.C.கிருஷ்ணன் SDE
2.திரு A.சுப்ரமணியன் JTO
3.தோழர் G.பச்சியண்ணன் SSS
4. தோழர் V.C.அருளாளன் SSS
5. தோழர் K.ராமசாமி TSO
6. தோழர் C.மாரிமுத்து SSS
7. தோழர் G.அண்ணாதுரை STS
8. தோழர் M.S. பழனிசாமி
9.தோழர் O.P. . பழனிசாமி TM
10.தோழர் M ராமலிங்கம் TM
11.தோழர் P. கணேசன் TM
12.தோழர் M பிரகாசம் TM
13.தோழர் K.தாந்தோணி கவுண்டன் TM
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் மகிழ்வுடனும்
நலமுடனும் பல்லாண்டு அமைய வாழ்த்துகிறோம்.
Thursday, 28 May 2015
கோவையும் சேலமும்
- 27-5-15 சேலம் மாவட்ட மாநாடு மிகப் பிரம்மாண்டமான வகையில் 4 மாத திட்டமிடுதலுடன் நடந்தேறியது. இளைஞர் குழாமும் அனுபவம் மிக்க
மூத்தவர்களும் கரம் கோர்த்து புதிய வரலாற்றை படைத்தனர். ஊரெங்கும்
செந்தோரணங்கள், நமது மாட்சிமை தாங்கிய தட்டிகள், தோழர் குப்தாவின் பேசும்படம்.. தோழமை மற்றும் நகர தொழிற்சங்க
தலைவர்கள் ,GM உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்தினர். தோழர்கள்
ஆர்.கே, சேது, காமராஜ், சென்னகேசவன், ராபர்ட்ஸ், நடராஜன், ராஜா, மணி, வெங்கட்ராமன்,ஸ்ரீதர், விஜய், எம்.எஸ்,பட்டாபி என தலைவர்கள் கருத்துரை, சிறப்புரையாற்றினர். மாநில சங்க சுற்றறிக்கைகள் 100 புத்தக வடிவில் சேலம் மாவட்ட தோழர்கள் கொணர்ந்து பயன் நிறைந்த
பணி ஒன்றை ஏராள பொருட்செலவில் செய்துள்ளனர். தோழர் ஆர்.கே வெளியிட, எம்.எஸ் பெற்றார். தோழர்கள் எஸ். சின்னசாமி, சி.பாலகுமார்,
எஸ். காமராஜ் மீண்டும் தலைவர், செயலர், பொருளர் பொறுப்புகளை சுமக்கின்றனர். 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கூடியதும், தோழமை ததும்ப உபசரிப்பு, அமைதியான
மாநாடு என்பதும் பாராட்டிற்குரியது. தோழர் பாலகுமார் மற்றும் பொறுப்பாளர்கள்
டீம் வெல்லட்டும்.எம்.எஸ்,
கஜேந்திரன், தேவராஜன், வெங்கட், ராஜா என்ற மூத்தோர் குழாம் துணைநின்று தோள் கொடுக்கட்டும்
- 8-5-15 The District
Conference of Coimbatore held on 7-5-15 elected the team of Officebearers
with comrades Roberts, Subbarayan, Semmal as President, Secy, Treasurer.
We wish the team every success. The conference was addressed by senior
leader RK, SSG, GJ,PK,Ashok, KMS of CPI, DGM and Pattabi. The matchless
services of Com SSG was appreciated by one and all on the occasion of the
felicitation. All wished him good health and requested to guide the
movement for a better tomorrow
கொடுமுடி கிளை மாநாடு
27.05.2015 அன்று
கொடுமுடி கிளை மாநாடு வழக்கத்திற்கே உரிய முறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்கள்
லோகனாதன், தியாகராஜன்,
பழனிசாமி
ஆகியோர் முறையே தலைவர்,
செயலர், பொருளர் பொறுப்ப்களுக்கு ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓய்வு
பெற்றாலும் மிகச் சிறப்பாக வழிகாட்டும் தோழர்
சுப்ரமணியம் (டெக்) தனது பணியை சிறப்பாகத் தொடர்கிறார்.
“தன் உயிர் உடலை
விட்டு பிரிந்த பிறகு NFTE கொடி
தனது உடம்பில் போர்த்தப்பட வேண்டும்” என்பது
அவரது வேண்டுகோள்.
இந்த
மாதம் பணி ஓய்வு பெறும் தோழர் பிரகாசம் (மாவட்ட உதவித் தலைவர்) அவர்களுக்கு பணி
நிறைவு பாராட்டு விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
தோழர்கள்
மாலி, யாசின், லாசர், குல்சார்,
மெளனகுருசாமி, ராஜேந்திரன்,நாகராஜன், நல்லுசாமி,
புண்ணியகோட்டி, ரங்கனாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் குலோத்துங்கன்
சிறப்பு மிகு தலைமயேற்றார்.
புதிய
நிர்வாகிகள் செயல்பாடு சிற்க்க வாழ்த்துக்கள்.
தோழர்
பிரகாசம் பல்லாண்டு நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
Wednesday, 27 May 2015
சுமுகமான தீர்வு
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாற்றல் கொள்கை
அமலாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அமலாக்கப்பட்டுள்ளது. NFTE-BSNLEU
சங்கங்க்கள் சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது.
குழு உறுப்பினர்கள்
1.தோழர் குமார் (தலைவர்)
2.தோழர் பரமேஸ்வரன் (BSNLEU)-ஒருங்க்கிணைப்பாளர்)
3. தோழர் பழனிவேலு (NFTE)
4.தோழர் மணியன் (BSNLEU)
5. தோழர் நாகராஜன் (NFTE)
6. தோழர் வேலுச்சாமி (BSNLEU)
7.தோழர் புண்ணியகோட்டி (NFTE)
8. தோழர் பழனிசாமி (BSNLEU)
விதிகளுக்குட்பட்ட விவாதங்கள்
இருந்தன.
முடிவுகள் ஒரு மனதாக அமைந்தன. நமது நிலைபாட்டை நிர்வாகமும் ஏற்றது.
எவருக்கும் சாதக பாதகமில்லாத வகையில் மாற்றல் கொள்கை
அமலாக்கப்பட்டு 26.05.2015 அன்று உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
2013ல் மாற்றலில் சென்ற 47 TM தோழர்கள் மீண்டும் அதே
ஊருக்கோ அல்லது அவர்கள் விருப்பத்திற்கேற்ப காலியிடம் உள்ள ஊருக்கோ மாற்றல்
பெற்றனர்.
47 தோழர்கள் நிர்வாக மாற்றலில் செல்ல
உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோட்டிலிருந்து மாற்றலில் செல்பவர்களுக்கு (24
தோழர்கள்) கவுன்சிலிங் முறை பின்பற்றப்பட்டது.
மற்ற 23 தோழர்கள்க்கு அந்த உட்கோட்டம் அல்லது
அருகாமையில் உள்ள உட்கோட்டத்துக்கு மாற்றல் உத்தரவிடப்பட்டது.
ஒத்துழைப்பு தந்த தோழரகளுக்கு நன்றி.
சுமுகமான தீர்வுக்கு உதவிய பொது மேலாளர், துணைப்பொது
மேலாளர், உதவிப் பொது மேலாளர் அவர்களுக்கு நன்றி.
Sunday, 17 May 2015
லோக்கல் கவுன்சில்
லோக்கல் கவுன்சில் கூட்ட முடிவுகள்
இதுவரை கையாளப்பட்ட முறையிலேயே இந்த ஆனண்டும்
மாற்றல் கொள்கை அமலாக்கப்படும்.
தற்போது உள்ள ஊழியர்கள் மற்றும் பணிகள் குறித்து நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்பு
இணைந்து ஒரு ஆய்வு (WORK STUDY ) நடத்தி அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும்.
நிலுவையில் உள்ள ஊழியர் களின் TA பில் பிரச்னை
விரைவில் தீர்க்கப்படும்.
ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கப்ப்பட்ட பேட்டரிகள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி மே மாதத்துக்குள் முடிக்கப்பபடும்ஒதுக்கப்பட்ட பேட்டரிகளின் தரம் குறித்தும்
விவாதிக்கப்பட்டது..
ஊழியர் குடியிருப்புகளில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் விரைவில் செய்து
முடிக்கப்படும். குறைகளைத் தெரிவிக்க குடியிருப்புகளில் பதிவேடு வைக்கப்படும்.
குறைகள் தெரிவிக்கப்பட்டால் மிகக் குறுகிய காலத்துக்குள் சரி செய்யப்படும். குறை
களையப்பட்டவுடன் பதிவேட்டில் குறை தெரிவித்தவரின் கருத்தும் பதிவு செய்ய வேண்டும்..
பதவி உயர்வு, சம்பள
நிர்ணயம் குறித்து தெரிவிக்கப்பட்ட பிரசனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு
விட்டன.
அனைத்து
தொலைபேசி நிலையங்களிலும் 30.05.2015க்குள் தரமான குடிநீர் வசதி செய்து
தரப்படும்.
பவர் ஷூ, செருப்பு மற்றும் டூல்ஸ்பேக்
30.05.2015க்குள் உரியவர்களுக்குத் தரப்படும்.
விரிவாக்கம் ஆகும் பகுதிகளில் கேபிள் பதிக்கும் பணி
தேவை அறிந்து மேற்கொள்ள ப்படும்.
சிம் கார்டு பிரச்னை தற்போது இல்லை. தேவைக்கேற்ப
பகிர்ந்து தரப்படும்.
ப்ரிபெய்டு சேவையில் கணக்கில் உள்ள தொகை காலக்கெடு
தேதி ஆகியவற்றை எளிய முறையில் அறிய உரிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தப்பட்டது.
பென்சன் செக்சன்,, மெடிக்கல் செக்சன் டெலிபோன்பவனில்
உள்ள பவர் செக்சன் வாடிக்கையாளர் சேவை மையம் போன்ற அத்தியாவசியமான பகுதிகளுக்கு
கூடுதல் ஊழியர் பணியில் அமர்த்தப்படுவர்.
டெலிபோன் பவனில் உள்ள இரண்டு வாடிக்கையாளர் சேவை
மையங்கள் இணைப்பு பற்றி பொதுமேலாளர் ஆய்வு செய்வார்.
பயிற்சிக் காலத்தில் வழங்க்கப்படும் ஸ்டைபண்ட்
அரியர்ஸ் மே 2015ல் பட்டுவாடா செய்ய உறுதியளிக்கப்பட்டது.
நமது நிறுவனத்திலிருந்து வெளியே செல்ல விரும்பும்
மொபைல் வடிக்கையாளர்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களை நம்முடன் தக்க
வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதிக வருவாய் தரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொலைபேசிக்
கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு நகரில் உள்ள கேபிள் டக்ட் பகுதியில் உள்ள
பிரைமரி கேபிள் பழுதுகள் சரி செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து
விவாதிக்கப்பட்டது. உரிய தேதிக்குள் சம்பளம் தருவதை உறுதி செய்திட
வலியுறுத்தப்பட்டது.
ரங்கசமுத்திரம் தொலைபேசி நிலையத்தில் AC யூனிட்
பழுது விரைவில் சரிசெய்யப்படும்.
சேவைப்பபதிவேடு சரிபார்க்கும் பணி முன்னுரிமை
அடிப்படையில் முடிக்கப்படும்.
கோபி பகுதியில் வில் சேவையில் உள்ள குறைகள்
களையப்படும்.
ERP ESS பற்றி ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி
தரப்படும்.
சில ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கும் பணி விரைந்து முடிக்கப்பபடும்.
ஈரோடு
மாவட்டத்துக்கென ஒரு கால் செண்டர் அமைக்க வலியுறுத்தினோம். அது
ஏற்கப்பட்டது.
ஈரோடு மாவவட்டத்தின் வருவாய், பணிக்கல்லாச்சாரம் போன்ற்வை
குறித்து பொது மேலாளர் பாராட்டு தெரிவித்தார். அவரது அணுகுமுறை சிறப்பாகவும்
பயனுள்ளதாகவும் அமைந்தது.
Wednesday, 13 May 2015
சத்தியமங்கலம் கிளை மாநாடு
12.05.2015 அன்று சத்தியமங்கலம் கிளை மாநாடு
மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருமண மண்டபத்தில் கிளை மாநாட்டை அற்புதமான
ஏற்பாடுகளுடன் அருமையாக நடத்திட்ட சத்த கிளைத் தோழர்களை
பாராட்டுகிறோம்.வாழ்த்துகிறோம்.
இயக்கம் விடுக்கும் போராட்ட அறைகூவல்களை
100 சதவிகிதம் நிறைவேற்றும் பெருமை மிக்க
கிளையின் மாநாடு.
கிளைத்தலைவர் தோழர் ராமகிரிஷ்ணன் தலைமை ஏற்றார்.தோழர்
நல்லுசாமியின் உண்ர்வுபூர்வமான முழக்கங்களுடன்
மரபின் படி தேசியக் கொடியை தோழர் குல்சார் அகமது
ஏற்றி வைத்தார். சங்கக் கொடியை தோழர் காசிலிங்கம் ஏற்றி வைத்தார்.
மாவ்ட்ட செயலர் தோழர் லாசர் சிறப்பான துவக்கவுரை
ஆற்றினார்.
கோட்ட அதிகாரி திரு அண்ணாதுரை,
துணைக்கோட்ட அதிகாரிகள் திரு பழனியப்பன், திரு
நாகராஜ், தோழர் முருகேசன் (BSNLEU) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
செழுமையான் ஆண்டறிக்கை, நேர்மையான வரவு செலவுக்
கணக்கு ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டன. தோழர்கள் காசிலிங்க்கம் (TM),
சுப்ரமணி (STSO),
ராமகிருஷ்ணன்(TM ) ஆகியோர முறையே தலைவர் செயலர்,பொருளர்
பதிவிகளுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிக்ளை வாழ்த்தியும் இரணடு நாட்கள்
வேலைநிறுத்த்ம் அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து குமார் உரையாற்றினார்.
அறிவு, ஆற்றல், திறமை, நேர்மை, பொறுமை இவற்றைத்
தன்னகத்தே கொண்ட தோழர் சுப்ரமணி மீண்டும் கிளைச்செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
கிளையின் செயல்பாடு சிறக்க மாவ்வட்டச் சங்கம்
மனதார வாழ்த்துகிறது.
Saturday, 9 May 2015
இம்சையடா சாமி
GPF குளறுபடி குறையும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது எவரெஸ்ட் சிகரம் என எழுந்து
நிற்கிறது.
ESS ல் விண்ணப்பித்து பிரிண்ட் எடுத்து அனுப்ப
வேண்டும் என்ற ஆணையால் விளையும் அவலங்கள் பற்றி சற்றும் சிந்திக்காமல்
உத்தரவிட்டுள்ளனர்.
ESS ல் கேசுவல் லீவ் விண்ணப்பிக்கிறோம். பிரிண்ட்
எடுக்கிறோமா?
இந்தியாவை டிஜிட்டல் ஆக்குவோம் என்பது ஆட்சியாளர்கள்
குரல். ஆனால் சில கோடி ரூபாய்கள் செலவழித்து ERP ESS.
இந்நிலையில் எதற்கையா பிரிண்ட்?
ஈரோடு மாவட்டத்தின் மலைபகுதியாம் தாளவாடி எரகனஹல்லி போன்ற
ஊர்களில் பணியாற்றும் TM தோழர்கள் ESS ல் விண்ணப்பம் செய்யவே வழியில்லை. பிரிண்ட்
எடுக்க சத்தியமங்கலம் வர வேண்டும். அங்கு பிரிண்டர்
வேலை செய்யும் என உறுதி உண்டா?
ஏன் தான் இப்படியோ?
ஊழியர்களின் மைன்ட் செட் மாற் வேண்டு என அறிவுரைகள்.
ஆனால் இந்த நவீன உலகில் என்று மடியும் பேப்பர் மோகம்?
என்று தணியும் இந்த GPF சோகம்?
எஸ்.எம்.எஸ் மூலம் மாற்றல் கேட்டு விண்ணப்பித்தல்
மற்றும்
எஸ்.எம்.எஸ் மூலம் கேட்ட மாற்றலை ரத்து செய்தல் என்ற
நிலையெல்லம் பார்த்து விட்டோம். ஆனால் ESS ல் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட்
கேட்கும் அணுகுமுறை அனேகமாக நமக்கண்றி வேறு யாருக்கும் இருக்காது என நினைக்கிறோம்.
காகிதப்பயன்பாட்டைக் குறைத்து இய்ற்கையைக் காப்போம் என்றெல்லாம் சிலர் அக்கறியோடு
சொன்னதைக் கேட்டிருக்கிறோம்.
என்று மாறுமோ?
Friday, 8 May 2015
ஒரு முகம் ஒரே முகம்
NFTE பேரியக்கத்தின்கோவை மாவட்ட மாநாடு.
நீண்ட நாள் கனவும்
நெடுங்கால இலட்சியமும்
நிறைவேறினால் ஒரு மனிதன் எப்படி
மகிழ்வானோ அபபடி ஒரு மகிழ்வு தமிழக NFTE இயக்கத்தின்
உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்.
இப்படிப்பட்ட மகிழ்ச்சியை மனநிறைவை உருவாக்கிய
தோழர்களை வணங்குகிறோம்.
புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
புதிய தலைமைக்கு வழிவிட்டு வழியமைத்த தோழர்களுக்கு
பாராட்டுக்கள்.
ஒரு முகமாய்
ஒரே முகமாய்
NFTE பேரியக்கம் எழுந்து நிற்க வேண்டும் என்பது
சொல்லால் இல்லாமல் செயலாகும் என்பதே கோவை மாவட்ட மாநாடு தந்திட்ட செய்தி.
Tuesday, 5 May 2015
மே ஐந்து
மே 5. மாமனிதன்
மார்க்ஸை இந்த்ப் புவிக்குத் தந்த
மகோன்னதமான நாள்.
புவியும், புவி வாழ் மக்களும் வளர்ச்சி பெற
இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும் தத்துவத்தைத் தந்த மார்க்ஸ் பிறந்த நாள் மே 5.
உழைப்பாளி
இல்லாமல் எதுவும் இல்லை. போராடாமல் உழைப்பாளி முன்னேற வழியும் இல்லை.
இன்று உலகம் போகும் போக்கைப் பார்த்தால், உலக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள்
படும் அல்லல்களிலிருந்து விடிவு பெற வழி தேடுவர். அப்போது மார்க்ஸ் மட்டுமே
உணரப்படுவார். மார்க்சியம் மட்டுமே விடியலைத் தரும்.
உறுதிமொழி ஒன்று
01.05.2015 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் BWA
ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்த் வகையில் வர வேண்டிய 6700 கோடியில் 800 கோடி ரூபாய் உடனடியாகத்
திருப்பித் தரப்படும் எனவும் மீதி 5900 கோடி ரூபாய் அடுத்த வருடம் பார்க்கலாம
எனவும் DOT செயலரால் உறுதிமொழி
அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும்…
Sunday, 3 May 2015
பேச்சு வார்த்தை
01.05.2015 அன்று DOT செயலருடன் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முழு விபரம் அறிந்தவுடன் இது குறித்து
நமது கருத்தை
அறிவிக்கல்லாம்
Subscribe to:
Posts (Atom)