NFTECHQ

Wednesday, 16 July 2014

அஞ்சல் அட்டை விற்பனையில் 7 ரூபாய் நஷ்டம்



''பாரம்பரிய தகவல் தொடர்பு சாதனமான அஞ்சல் அட்டை விற்பனை, படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு அஞ்சல் அட்டை விற்பனையில், அரசுக்கு, 7 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,'' என, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
லோக்சபாவில், நேற்று அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், அஞ்சல் அட்டை விற்பனை படிப்படியாக குறைந்துள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக, மொபைல் போன்கள் மற்றும் மின் அஞ்சல்களின் பயன்பாடு அதிகரித்ததே, அஞ்சல் அட்டைகள் விற்பனை குறைய காரணம். அஞ்சல் அட்டை ஒன்று, 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதனால், 2012 - 13ம் ஆண்டில், அரசுக்கு, அட்டை ஒன்றுக்கு, 6.68 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த ஆண்டில், 9.56 கோடி, அஞ்சல் அட்டைகள் அச்சிட்டதன் மூலம், மத்திய அரசுக்கு, 90.47 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2013 - 14ம் ஆண்டில், 10.44 கோடி அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டன. நடப்பு நிதியாண்டில், 8.13 கோடி அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment