NFTECHQ

Tuesday, 7 February 2017

JE கேடரில் மாற்றல்

JE கேடரில் ஊழியர்களுக்கு இட மாற்றல் செய்ய வேண்டும் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்படது.

ஊழியர் மாற்றல் கொள்கையி அடிப்படையிலும், இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் அஅடிப்படையிலேயே JE கேடர் மாற்றல்களும் அமைய வேண்டும் என நமது மாவட்டச் சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Wednesday, 1 February 2017

இன்று தேசிய பாம்புகள் தினம்




ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி தேசிய பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள விஷத்தன்மை உள்ள வாயுக்களை பாம்புகள் உள் வாங்கிக் கொள்கின்றன. அதனால்தான் சில பாம்புகள் விஷத்தன்மை மிக்கதாக உள்ளன.
ஒருவேளை பாம்புகள் இல்ல்லாவிட்டால் காற்றில் உள்ள விஷ வாயுக்களை மனிதர்கள்தான் உள்வாங்க வேண்டியிருக்கும்.
பாம்புகள் சாதாரணமாக மனிதர்களைத் தீண்டாது. அவற்றை யாரேனும் தீண்டினால் அவை எதிர்வினையாற்றும்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குணம் மனிதர்கள் பலருக்கே இல்லாத போது பாம்புகளிடம் அக்குணத்தை எதிர்பார்க்க முடியுமா?

பாம்பைப் பற்றிப் படிக்கும் போது அது மனிதகுலட்த்துக்குச் செய்யும் நன்மைகள் ஏராளம்.

ஆகவே பாம்புகளைப் பாதுகாப்பது அவசியம்.

ஐடியா, வோடபோன் கூட்டணி:
இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்திட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பல நாட்களாகச் செய்திகள் வருகிறது. இந்த

இரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும் என்பதால் முதல் இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனமும் சரி, புதிதாய் களமிறங்கியுள்ள ஜியோவும் சரி கடுப்பில் இருந்த நிலையில் இச்செய்திகள் உண்மையாகியுள்ளது. உண்மையை உடைத்த வோடபோன் இரு நிறுவனங்கள் இணைப்பிற்காக வோடபோன் இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளிப்படையாக அறிவித்து வோடபோன் உண்மையை உடைத்தது. இந்த இணைப்பின் மூலம் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வோடபோன் பெற உள்ளது.

இணைப்பு வோடபோன் இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் மத்தியிலான பேச்சுவராத்தையில், வோடாபோன் இந்தியா (இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் இதன் 42 சதவீத முதலீடு இதில் சேர்க்கப்படாது) நிறுவனத்தை முழுமையாக ஐடியா செல்லுலார் பங்குகள் வாயிலாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக வோடபோன் இந்தியா ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகளைப் பெற உள்ளது.  தற்போதைய நிலையில், ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் ஜியோ 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள நிலையில் வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது. ஜியோ.. இந்திய

டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக அளவுகளின் படி 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைவதன் மூலம் டெலிகாம் சந்தையில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோவின் வர்த்தக வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகளவில் குறையவாய்புள்ளது. ஏர்டெல் வோடபோன் மற்றும் ஐடியா கூட்டணி நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்கும், ஜியோவின் விரைவான வளர்ச்சி மற்றும் ஏர்செல் இணைப்பின் மூலம் ஜியோ கூட்டணி 2வது இடத்தைப் பிடிக்க உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 3வது இடத்திற்குச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய திருப்பம்: வோடபோன் மற்றும் ஐடியா கூட்டணி இந்திய டெலிகாம் சந்தையில் புதிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது. இன்றைய நிலையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவில்லை என்றால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது. இதுவே சிறப்பான சேவை அளிக்க முக்கியக் காரணமாக அமையும். 


Tuesday, 31 January 2017

பொருளாதார ஆய்வறிக்கை

இந்த 3 விஷயங்களும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும்! - பொருளாதார ஆய்வறிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மூன்று காரணிகள் பாதிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அந்த மூன்று காரணிகள்...

1. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் உள்ள நடை முறை சிக்கல். சிவில் விமானத் துறை, வங்கித் துறை, உரத் தொழில் போன்றவற்றில் மேலும் தனியார்மயம் தேவை.

2. அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், கல்வி போன்றவற்றை அளிப்பதில் மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டாதது. ஊழல், அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மை, வேண்டியவர்களுக்கு மட்டும் வேலைகளைச் செய்து கொடுப்பது போன்றவை பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

3. ஏழைகளுக்கான அரசின் மறு பகிர்வு முறை சுத்த மோசம். யாருக்காக திட்டங்கள் தீட்டப்படுகின்றனவோ, அவர்களுக்கு சரியாக அவற்றின் பலன்கள் போவதில்லை. இந்தக் குறையை சரி செய்ய அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

           வாழிய பல்லாண்டு

இன்று பணி ஓய்வு பெறும்

1 .திரு S.பாலசுப்ரமணியன் PA TO GM
2. திரு H.நாகராஜன் SDE
3.திருV.வெங்க்கடகிருஷ்ணன் JTO
4.தோழர் G.ரத்னசாமி TT
5.தோழர் K.சொங்க்கப்பன் TT

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம்

சார்பாக வாழ்த்துகிறோம். 
BSNL தகவல்

ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை BSNL  நிறுவனத்தின் சேவைகள் மூலமான வருமானம் ரூபாய் 19379.6 கோடி.

ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2015 வரை இந்த வருமானம் 18314.9 கோடி ரூபாய்.

வருமானம் 5.8 சதம் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை BSNL  நிறுவனத்தின் நட்டம் ரூபாய் 4890 கோடி.
ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2015 வரை
நட்டம் 6121  கோடி ரூபாய்.

வழக்கமாக ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் வருமானம் கணிசமாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு வருமானமும் கூடும். நட்டமும் கடந்த சில ஆணாடுகளை விட குறையும்.


இந்த தகவல்களை நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.





வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

நாள்  07.02.2017

கோரிக்கைகள்

1. வங்கிகளுக்கு போதுமான அளவுக்கு
நிதி ஒதுக்கீடு செய்
2. ATM களில் போதுமான அளவுக்கு நிதி   இருப்புக்கு நிதி ஒதுக்கு.
3. பொதுமக்கள் பனம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள உச்சவர்மபை நீக்கு.


மக்களின் துயர் துடைத்து நலன் காக்கும் இந்தபோராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.

Monday, 30 January 2017

ஜனவரி 30
மகாத்மா

நினைவு தினம்

அகிம்சை மற்றும்
அறவழி  மூலம் போராட முடியும் என்பதை உலகுக்குச் சொன்ன  உத்தமரின் நினைவு தினம் இன்று.

அவர் பிரிந்து 69 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் வழியில் போராடி வெல்ல முடியும் என்று  தமிழக மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

அவர் வழி என்றும் நிலைக்கும்

Sunday, 29 January 2017

NFTCL
தேசிய தொலைத்தொடர்பு
ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தின்

தமிழ் மாநில மாநாடு
பிப்ரவர் 11, 12 தேதிகளில்...
காரைக்குடியில்...
ஒப்பந்த ஊழியர் வாழ்வில்..
மாற்றத்தையும்
ஏற்றத்த்யும் உருவாக்க
திட்டமிடும் மாநாடு
வெல்லட்டும்.
ஈரோட்டின் பங்கும்
இந்த மாநில மாநாட்டில்

இருக்கும்.

Friday, 27 January 2017

பேஸ்புக், ட்விட்டருக்கு மாற்றாக புதியதோர் இணையம் செய்வோம்! 


தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத் தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி Facebook - Twitter போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன.

அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் 'sino weibo' என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.

 மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று

அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்.
எதிர்பார்ப்புகளோடு...
கபிலன் வைரமுத்து

Wednesday, 25 January 2017

அனைவருக்கும்
குடியரசு தின

வாழ்த்துக்கள்


அளப்பரிய பெருமை மிகுந்த
இந்திய பண்பாடு
இந்திய கலாச்சாரம்
இந்திய நாகரீகம்
ஏழை எளிய சாதரண மக்களின் உரிமை
இவை அனைத்தையும் காத்திட
உருவான
குடியரசு நிலைத்து நீடிக்கட்டும்.

நிம்மதியான வாழ்வு
மக்களுக்குக் கிடைக்கட்டும்.

இவை காக்கப்படும் என்ற நம்பிக்கையை தமிழக மனவர்களும் இளைஞர்களும்
தந்திருக்கிறார்கள்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
போராட்டங்க்களும்

படிப்பினைகளும்

ஒரு போராட்டத்தை திட்ட்மிட்டோ
திட்டமிடாமலோ துவக்குவது எளிது.

அந்தப் போராட்ட்டத்தை எப்போது எப்படி முடிப்பது என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இதற்கான படிப்பினையை  தோழர் குப்தா நமக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்போது அடையாளப் போராட்டங்களையே நாம் நடத்தி வருகிறோம். தோழர் குப்தா காலத்தில் நீண்ட நெடிய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு போராடத்தையும் எப்போது எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடித்தவர் அவர்.

இது குறித்து சிலர் விமர்சனம் செய்தது உண்டு. ஆனாலும் இப்போது பாரபட்சமின்றி சிந்திதுப் பார்த்தால் அந்தப் போராட்டங்க்கள் அனைத்துமே நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன. அவற்றை ஊழியர்களும் ஓய்வு பெற்றவர்களும் அனுபவித்து வருகின்றனர்.

எந்த ஒரு போராட்டத்தையும் அரசு நசுக்க்கிவிடாமல் உடன்பாட்டொடு முடிக்கும்
வல்லமை பெற்ரவர் தோழர் குப்தா.

ஒரு போராட்டத்தை முடிப்பதில் போராடுவோருக்கும் பங்கு உண்டு. ஆள்வோருக்கும் பங்கு உண்டு.

1974ல் ரயில்வே ஊழியர் போராட்டம் அரசால் சிதைக்கப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட
போராட்டமாக அமைந்தது.

மாணவர் இளைஞர் போராட்டத்தைச் சிறப்பாக முடித்து வைத்து அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நல்ல பெயர பெறும் வாய்ப்பை அரசு தவறி விட்டது.

மாறாக போராட்டத்தை அமைதியாக முடித்து மாணவர்கள் பெருமை பெறுவதை அரசு விரும்பவில்லை.

ஒரு அமைதியான அறவழிப் போராடத்தைஅதிகாரத்தை வைத்து முறியடிப்பது என்ற அரசின் முடிவால் மாணவர்களுக்கு இழப்பில்லை.

ஜல்லிக்கட்டைச் சட்டம் போட்டு மீண்டும் கொண்டு வந்துவிட்டோம் என்று அரசு பெருமை கொண்டால் அந்தப் பெருமை மானவர்களால் கிடைத்தது என்பதே நிதர்சனமான சத்தியம்.

அண்ணாவின்   பெயரைக் கொண்ட கட்சியின் அரசு அண்ணாவின் வழியை ஏன் பின்பற்றவில்லை?

அதிகார உணர்வா?
மாணவர்களின் பெருமையைப் பறிப்பதா?
அல்லது நிர்ப்பந்தமா என்பது ஆள்வோருக்கே தெரியும்.

ஆகப்பெரிய கட்சியாக இருந்த காங்க்கிரஸையே 50 ஆண்டு காலமாக ஆட்சியிலிருந்து விலக்கி வைத்தது மானவர் சக்தி.

இந்த மாணவர் சக்தியின் விளைவைப் புரிந்து கொண்டு பாடம் கற்க வேண்டியவர்கள் தமிழக அரசிய்லவாதிகள்.

தொழிற்சங்கங்க்களும் இந்த்ப் மாணவர் போராட்டங்களிலிருந்து
பாடம் கற்க வேண்டியது அவசியம்.
ஜனவரி 25
மொழிப்போர்
தியாகிகள் தினம்

இன்று மொழிப்போர் தியாகிகள் தி1930 முதல்  1965-வரை
நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், தமது இன்னுயிரை ஈந்தவர்களுக்கும் காவல் துறையாலும் இந்தியத் துணை ராணுவத்தாலும் கொல்லப்பட்டவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் நாள்.

தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை
1965 மாணவர்கள் போராட்டம்தான் மாற்றியமைத்தது.

மொழிப்போர் தியாகிகள் பற்றி ஒரு வரி கூட இல்லாத பாடப்புத்தகங்கள்தான் இன்றைக்கு மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. அவ்வள்வுதான் தமிழ் மொழி மீதான அக்கறையோ?

காலங்க்கள் மாறலாம்.
களங்கள் மாறுவதில்லை.

கொலைக்களத்தில் 
கொள்கைகள்

விதிகள், நெறிமுறைகள்,கொள்கைகள் என் அனைத்தையும் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு புத்திமதிகள் சொல்லப்படுகின்றன. ஊழியர் சங்கங்களுக்கும் இந்த புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

ஆனால் அதிகாரிகளுக்கு இது பொருந்தாது என்னும் நிலைபாடு தலைதூக்கியுள்ளது.

மாற்றல் கொள்கையில் அதிகாரியோ ஊழியரோ ஒரு ஊரில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் இருந்தால்தான் விருப்பமாற்றலுக்கு விண்னப்பிக்க முடியும் என்பது மாற்றல் கொள்கை. சமீபத்தில் கூட கார்ப்பரேட் அலுவலகம் இதை வலொயுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களைப் பொறுத்தவரை இந்த விதியில் காட்டப்படும் கறார்த்தன்மை அதிகாரிகளுக்குக் கிடையாதா?

கொள்கையை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே அந்தக் கொள்கையை கொலைக்களத்துக்கு அனுப்பும் விபரீதங்கள்  அரங்கேறுகின்றன.

ஊழியர் சங்கங்க்கள் இதில் கவனம்
செலுத்த வேண்டிய அவசரம் உள்ளது.

Tuesday, 24 January 2017

போராட்டங்களும்
போதனைகளும்
ஒவ்வொரு போராட்டமும் மூன்று விளைவுகளை உருவாக்கும்.
1. வெற்றி
2. தோல்வி
3. படிப்பினை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தோல்வி என்று சொல்வதற்கு இம்மியளவும் காரணம் இல்லை.

இந்தப் போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கிடைத்திட்ட வெற்றி என பெருமிதம் கொள்வதில் இருவேறு கருத்துக்கள் இருக்க நியாமில்லை.

மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் உரிமைக்காகவும், நியாய்த்திற்காகவும் அறவழியில் அமைதியாகப் போராடும் என்பதை உலகுக்குகு உரக்கச் சொலியிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் நடத்திய மொழிப்போர் வரலாற்றை கேட்டிருக்கிறோம். படிதிருக்கிறோம்.
"1968 மொழிப் போராட்டத்தின்போது, அன்றைய முதல்வர் அண்ணா மாணவர்களுடன் ஐந்து இரவுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது நினைவுக்கு வருகிறது." என்று 24.01.2017 இந்து தமிழ் நாளிதழில் திரு சமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஏன் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்கக் கூடாது?         அப்படி நடந்திருந்தால் ஆளுவோருக்கும் பெருமை கிடைத்திருக்கும். ஒரு வேளை ஆளுவோர் போராட்டத்தை அவ்வாறு முடிக்க விரும்பாமல் வேறு வழியில் முடிக்கத் திட்டமிட்டார்களோ என்னவோ?

ஆனால் ஒன்று நிச்சயம். இந்தப் போராட்டம் நிச்சயமாக வரும் காலத்தில் தமிழகத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் மகோன்னதமானது. இந்தப் போராட்ட காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்குக் கிடைத்த பெருமை.

-தொடரும்-
வாழ்த்தி
வரவேற்கிறோம்

ஈரோடு மாவட்டத்த்தில்
ஜனவரி 2017ல்
3 தோழிய்ர்கள்
14 தோழர்கள் என
17 பேர் நமது NFTE இயக்கத்தில்
இணைந்துள்ளனர்.

தாய்ச் சங்கத்தில்
இணைந்த
அனைவரையும்
வாழ்த்தி
வரவேற்கிறோம்.

Friday, 20 January 2017

ஈரோடு மாவட்டத்தில்..

20.01.2017 அன்று
சங்க வேற்பாடு இன்றி...
சங்கத்தின் பதாகைகள் இல்லாமல்....
பி.எஸ்.என்.எல் பதாகையை மட்டும் கையில் ஏந்தி
ஈரோடு மாவட்டம் முழுமையும்
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் என்ற அடிப்படையில் ஊர்வலமாகச் சென்று போராடும்

மானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எழுந்தது காண்

இளைஞர் படை

ஜல்லிக்கட்டு போராட்டக்களம் மனதுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் உருவாக்கியுள்ளது.

ஆள்வோரின் அக்கறையற்ற அவலநிலையால் சாதாரண ஏழை எளிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிமிகு போராட்டம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு  போராட்டம் எனத் துவங்கி  அவர்கள் மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேசுகின்றனர்.

விவசாயம், குடிநீர்ப் பிரச்னை, அந்நிய நாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள்  , உலகமயமாக்கலின் சதி, பணமதிப்பு நீக்கம் என பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர்கள் தெளிவாகப் பேசுகின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும்ஆள்வோருக்கு  இது ஒரு எச்சரிக்கை தரும் போராட்டமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்திற்கு இது பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.