NFTECHQ

Friday, 15 June 2018


12.06.2018
National Council Meeting
Chairperson, Director (SR)
Expressing hearty welcome to all she told her unhappiness for not holding meeting as per schedule. In two years only two meetings could take place. In present situation it is difficult for the BSNL to become model employer. Revenue is declining and there is huge deficit and an alarming situation has developed. Management and employees are close to each other during this turbulent period. The employees are sensitized. The revenue in last year has been worst. The employees have to defer their many aspirations. She promised for 3rd PRC. The DOT is processing for Cabinet note regarding relaxation in affordability clause. She expected wage revision by year end but Company’s finance should not go down further. Reasonableness has to be there even after relaxation. With the cooperation of all operation of Tower Company is deferred but cant dilate if it is good or bad.

Thursday, 14 June 2018


ஜூன் 14
சே குவேரா பிறந்த நாள்
இன்று சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த நாள்.

 “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்
உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள். ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் விடுதலை வீரர்கள் அனைவரும்
தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகத்தான் போராடினார்கள் ! ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடி அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு தனக்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து மற்றுமோர்

தேசத்திற்காக போராட சென்று துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன். சே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கெதிராகவும் அடிமை மக்களின் விடியலுக்காகவும் போராடியவர் - இன்று உலகத்தின் இளைஞர்கள் அனைவராலும் புரட்சி என்கிற வார்த்தைக்கு ஒரே அடையாளமாக அறியப்படும் தோழர் சே குவேரா

Tuesday, 12 June 2018


தோழர் விச்சாரே நினைவு தினம்
ஜூன் 12
NFTE இயக்கத்தின்
மராட்டிய
மாநிலச் செயலராக,
இயக்கத்தின் பொதுச் செயலராக,
எளிமையின் இலக்கணமாக,
நேர்மையின் இருப்பிடமாக,
இயக்கதின் வெற்றிக்கு மணிமகுடம் பதித்திட்ட
வரலாற்று நாயகன்
தோழர் விச்சாரே நினைவு தினம் இன்று.

Monday, 11 June 2018


கடை விரித்தார் கொள்வாரில்லை

ஏர் இண்டியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என மத்திய அரசு முடிவு செய்தது. முடிவை அமலாக்கும் ஸ்கல முயற்சிகளும் முடிந்தன. ஆனால் வாங்க யாரும் முன்வரவில்லை. எனவே ஏர் இண்டியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட ரூ 2000 கோடிக்கான கடன் பெற விண்ணப்பித்துள்ளது.

Thursday, 7 June 2018


வாழும் தலைவன்
ஜூன் 7
தோழர் ஜெகன் நினைவு தினம்.

வாழும்போதும்
வாழ்ந்து முடித்த பின்னும்
வாழ்க்கை ஒரு  அர்த்தமுள்ளதாக இரூக்க வேண்டும் என்பதன் இலக்கணமாய் வாழ்ந்திட்ட தோழர் ஜெகனை என்றும் நினைவில் கொள்வோம்.


ஊழியர்களுக்கு ப்ரிபெய்டு இணைப்பு

BSNL     நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு புதிய திட்டத்தின் கீழ் ப்ரிபெய்டு இணைப்பு வழங்க கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மாதம் தோறும் ரூபாய் 200க்கு ரீசார்ஜ் செய்யும் முறைக்கு மாற்றாக இந்த இணைப்பு வழங்கப்படும்.

சிம்கார்டு விலை      ரூ 600
காலக்கெடு             90 நாட்கள்
டேட்டா பயன்பாடு    நாள் தோறும் 1 GB

குரல் அழைப்புகள்

லவசமான எல்லையற்ற அளவில் நாடு முழுமையும் (ரோமிங்கிலும்டெல்லி மற்றும் மும்பை உட்பட)

எஸ் எம்   எஸ் ஒரு நாளைக்கு 100 இலவசம்


மாற்றல் கொள்கை அமலாக்கம்
2018ஆம் ஆண்டிற்கான மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

சுமுகமான அடிப்படையில் நிறைவேறும் என நம்புகிறோம்.

Wednesday, 6 June 2018


அஞ்சலி
தோழர் G.டதார் மறைந்தார். டெல்லி மத்திய அரசு தலைமை செயலக ஊழியர் சங்க பொதுச் செயலராக பல் லாண்டுகள் பணியாற்றி பல அரும் பெரும் போராட்டங்களின் மூலம் அவர்களுக்கு பல உரிமைகளைப்பெற்றுத் தந்தவர்.

1968 மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஒரு பெரும் உந்து சக்தியாக டெல்லியில் செயல்பட்டவர். காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போதும் அஞ்சாமல் எதிர்கொண்டு போராட்டம் நடத்திய பெரும் போராளி.
A| TUC மத்திய தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் தேசீய செயலர்களில் ஒருவராக கடைசி வரை செயல்பட்டவர்.
NFTE இயக்கத்தின் அகில இந்திய மாநாடுகள் மற்றும் செயற்குழுக் கூட்டங்களில்  பங்கேற்று வழிகாட்டி உரையாற்றிய தோழர்.

அவர் மறைவு இந்திய தொழிலாளி வர்கத்திற்கும்  AITUC அமைப்பிற்கும் பேரிழப்பாகும்.நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

Tuesday, 5 June 2018


வாழ்த்துக்கள்
அன்புத் தோழர் மதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அரசியல் மற்றும் தொழிற்சங்க அரங்கில்  ஆழ்ந்த அறிவு பெற்ற ஒரு மிகச்சிறந்த போராளியான தோழர் மதி மேலும் பல ஆண்டுகள் வாழவும் அவரது பணி மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

Thursday, 31 May 2018


வாழிய பல்லாண்டு
31.05.2018  அன்று பணி நிறைவு பெறும்

1.தோழர் S.ராஜமாணிக்கம் DGM (F)
2.தோழர் S.E. மணியன் SDE
3.திரு.P.S.ராமசாமி JTO சத்தி
4.தோழர் P. தங்கவேல் OS  தாராபுரம்
5.தோழர் R.முருகசாமி TT கோபி
6.தோழர் G.சம்பத்குமார் TT கோபி
7.தோழர் M.பொன்னுசாமி TT ஈரோடு
8.தோழியர் M. பழனியம்மாள் TT ஈரோடு
9.தோழியர் N. புஷ்பா ATT ஈரோடு
10.தோழர் V. ரவி TT ஈரோடு
11.தோழர் M மணி TT கொடுமுடி
12.தோழர் K.K.அர்ஜுணன் TT  ஹாசனூர்
13.தோழர் P. மாரிமுத்து TT அவல்பூந்துறை
14.தோழர் K. நாகராஜன் TT பவானி
15.தோழர் K.சுப்ரமணியன்  TT கொடுமுடி
16.தோழர் N. ஈஸ்வரன் TT பவானி
17.தோழர் R. குப்புசாமி  TT ஈரோடு
18.தோழர் V. ராமசாமி TT பெருந்துறை
19.தோழர் குணசேகரன் ATT தாராபுரம்
ஆகியோர்
நலமுடனும்
 மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Wednesday, 30 May 2018


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் (மே 30,31) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மொத்த ஊதியத்தில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் முதல் புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாராக் கடனைக் காரணம் காட்டி, 2 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதனை வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 5ஆம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது, வாராக் கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பணிச்சுமைகளைக் குறைக்க புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மே 11ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனவே, திட்டமிட்டபடி மே 30, 31 ஆகிய 2 நாள்கள் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
 இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 21 பொதுத் துறை வங்கிகளில் இருந்து சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.