NFTECHQ

Wednesday, 20 April 2016

NFTE BSNL   TEPU   SEWA BSNL
ஈரோடு மாவட்டம்

தலைவர்கள் உரையாற்றும்
தேர்தல் சிறப்புக் கூட்டம்


நாள் 27.04.2016
காலை 0930 மணி

ஈரோடு எக்ஸ்டர்னல் அலுவலகம்

மதியம் 1 மணி

ஈரோடு பொதுமேலாளர் அலுவலகம்

மாலை 3.30 மணி

பவானி தொலைபேசி நிலையம்


சிறப்புரை

தோழர் சுப்புராமன்
அகில இந்திய பொதுச் செயலர் TEPU

தோழர் முத்துகிருஷ்ணன்
மாநிலச் செயலர் SEWA BSNL

தோழர் கிருஷ்ணன்
மாநிலச் செயலர் TEPU

தோழர் அசோகராஜன்
மாநிலப் பொருளர் NFTE 

தோழர் பட்டாபி
மாநிலச் செயலர் NFTE


அனைவரும் வருக
நாகரீகமற்ற  அறிக்கை
SEWA BSNL அமைப்பைப் பற்றி ஒரு கிளைச் செயலரின் பக்குவம் கூட இல்லாத அளவுக்கு ஒரு அமைப்பின் அகில இந்திய இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

பதவி வரும்போது
பணிவு வர வேண்டும்  
துணிவும் வர வேண்டும் தோழா

பாதை மாறாமல்
பண்பு குறையாமல்
பழகிவர வேண்டும் தோழா

பாதையும் மாறி,
பயணமும் மாறி
பண்பும் மாறி
அநாகரீகத்தின் உச்சியில்
எழுதப்பட்ட அறிக்கை அது.

துணிவைக் காட்ட வேண்டிய இடத்தில் பணிவையும்
பணிவைக் காட்ட வேண்டிய இடத்தில் துணிவையும்
காட்டும் குணம் புரிகிறது

அந்த அறிக்கையின் விபரம் குறித்து  எழுதி நமது இணையதளத்தின் தரமான பண்பாட்டையும் நாகரீகத்தையும் குறைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை.

NFTE இயக்கத்தின் மீது அவதூறு கணைகள் ஆயிரக் கணக்கில் பாய்ந்துள்ளன.

SEWA BSNL மீது ஏன் இந்த கோபம்.
"கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை." என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இப்படிப்பட்ட அநாகரீக அறிக்கையா?

இப்படிப்பட்ட அநாகரீக அறிக்கையின்
விளைவுதான் அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் வி9ழா புறக்கணிப்போ?

12.06.2016க்குப் பின் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு 
செயல்படுவதே புத்திசாலித்தனம்.
கை விரலில் மை

16.05.2016 தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல்.
அத் தேர்தலில் இடது கையின்
ஆட்காட்டி விரலில் மை வைப்பார்கள்.

10.05.2016 அன்று
நமது  இயக்கம் களம் காணும்
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்.
இந்தத் தேர்தலில்
இடது கையின் நடு விரலில்
மை வைக்கப்படும்.
 நடு விரல் இல்லாதோருக்கு
இடது கை பெரு விரலில்
மை வைக்கப்படும்.

எந்தக் கையில்
எந்த விரலில்
மை வைத்தாலும்
2016 ஆம் அண்டு
மே மாதம் 10 ஆம் நாள்
நமது  நம்பிக்கையின்
இணைந்த கரங்க்களில்
வாக்களிப்போம்.

நமது எதிர்காலம்
உரிமைகளும் சலுகைகளும்
உதிராத காலமாக அமைய
இணைந்த கரங்க்களால்
மட்டுமே முடியும்.

Tuesday, 19 April 2016

மாற்றியதும் BSNLEU
ஏமாற்றியதும் BSNLEU

1979 முதல் உற்பத்தியுடன் இணைந்த
போனஸ் பெற்று  வந்தோம்.

BSNLEU இழைத்த மாபெரும் வரலாற்றுப் பிழையால் போனஸ் இலாபத்துடன் இணைக்கப்பட்டது.

இதன் விளைவாகவே கடந்த ஏழு ஆண்டுகளாக போனஸை பூஜ்ஜியம் ஆக்கியது BSNLEU.

10000 உறுதி என்று
பசப்பு வார்த்தைகளைக் கூறி
அதில் 1 என்ற எண்ணை எடுத்து விட்டு
0 என்று மாற்றியது BSNLEU

பூஜ்ஜியமான போனஸோடு
ராஜ்ஜியத்தை நடத்திவிட்டு
பின்னாலிருந்த பூஜ்ஜியத்தை  
முன்னால் கொண்டு வந்து
ஊழியர்களை வஞ்சித்தது BSNLEU.

"உங்க தகுதிக்கும்
நீங்க செய்யர வேலைக்கும்
வாங்கர சம்பள்மே அதிகம்.
இதுல போனஸ் வேற வேணுமா?
அடுத்த மாசம் சம்பளம்
வருதா பாருங்க"ன்னு
மகாபாரத அர்ஜுனனின்
மகன் பெயர் கொண்டவர்
மேடையில் முழங்கியது

நினைவில்லையா?

இதை மூடி மறைத்து
ஊழியர்களை ஏமாற்றி
வாக்குகளைப் பெற
நமது  NFTE இயக்கத்தைப் பற்றி
அவதூறு செய்ய
தகுதியற்ற இயக்கம் BSNLEU.

அனைத்தையும் மாற்றி
அனைவரையும் ஏமாற்றிய
BSNLEU இயக்கத்துக்கு 
இனியும் வாக்களிக்கலாமா?

சிந்திப்பீர் 


இனியும் ஏமாறாமல் இருக்க
இணைந்த கரங்களில்
வாக்களிப்போம்.






Sunday, 17 April 2016

தேர்தல் சிறப்புக் கூட்டம்

இடம்

கோபி தொலைபேசி நிலையம்


நாள்

18.04.2016

காலம் 
மாலை 5 மணி

தலைமை
தோழர் ஆறுமுகம்

வரபேற்புரை
தோழர் முருகசாமி

சிறப்புரை

தோழர் சுப்பராயன்

மாநில உதவிச் செயலர் NFTE

தோழர் காசிராஜன்

இயக்க முன்னோடி TEPU

தோழர் சதாசிவம்

மாவட்டச் செயலர்  SEWA BSNL


அனைவரும் வருக
இப்படியும் ஒரு திருட்டு

கேள்வி
உங்கள் பெயர் என்ன?

பதில் தரப்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தேர்தலில் (மே 16) ஓட்டு போடப் போகிறீர்கள்?

பதில் ஐந்து பேர்.

உங்கள் வங்கிக் கணக்கு எஎன ?
எந்த  வங்கியில் கண்க்கு உள்ளது?

பதில் எதற்காக இந்தக் கேள்வி?

ஒரு ஓட்டுக்கு ரூபாய் 3000 வீதம் மொத்தம் 15000 ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் போடுவத்ற்காகத்தான் கேட்கிறோம் என்று பதில் வருகிறது.

ஆர்வத்தோடு வங்கிக் கணக்கு விபரங்களை தருகிறார்.

உடனே ஒரு கேள்வி.

உங்கள் ஏடிஎம்  கார்டின் ரகசிய எண் என்ன?

அது எதற்கு எங்கிறார் அவர்.

அப்போதுதான் பணம் போட முடியும் என்பது பதில்.

ஏடிஎம் ரகசிய எண்னையும் கொடுத்து விடுகிறார் அவர்.

பத்து நிமிடத்தில் பணம் போடப்பட்டு விடும் என்று சொல்லப்படுகிறது.

15 நிமிடம் கழித்து அவர் ஏடிம் கார்டைப் பயன்படுத்தி 150000 ரூபாயை எடுத்து விடலாம் என  முயற்சி செய்கிறார்.

அதிர்ச்சியால் உறைந்து போகிறார்.

ஏனெனில் அவர் கனக்கில் ஏற்கெனவே இருந்த 18000 ரூபாயைக்  கானோம்.

போடப்பட்டுவதாகச் சொன்ன 15000 ரூபாயும் இல்லை.

ஏமாறுபவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

எந்த ஒரு தேர்தலிலும் பொய் சொல்பவர்களை நம்பாதீர்கள். 

Saturday, 16 April 2016

அண்ணல் அம்பேத்கார்

 பிறந்த தின விழா


இந்திய அரசியல் சட்டத்தின் பிதாமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின விழா  ஈரோடு பொதுமேலாலர் அலுவலகத்தில்
சிறப்புடன் நடைபெற்றது.

sEWA BSNL ஈரோடு மாவட்டத்தலைவர் தோழர் பழனிசாமி தலைமையேற்றார்.

பொதுமேலாளர் நல்லதொரு சிறப்புரையாற்றினார்.

துணைப்பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர் (நிர்வாகம்), AIBSNLEA    அமைப்பின் தோழர்கள் தண்டபாணி, பெரியசாமி, AIBSNLOA அமைப்பின் தோழர் தனுஷ்கோடி, SNEA அமைப்பின் தோழர் ராஜு, TEPU  இயக்கத்தின் தோழர் காசிராஜன், BSNLAU  அமைப்பின் தோழர் சுந்தர் நமது இயக்கத்தின் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

sEWA BSNL அமைப்பின் மாவட்டச் செயலர்
மாவட்டச் செயலர் தோழர்
சதாசிவம் நல்லதொரு நிறைவுரையாற்றினார்.

சிறப்பான ஏற்பாடுகளுடன் விழாவை நடத்திட்ட SEWA BSNL தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
வராமலே போன
வாரத்தில் ஐந்து நாள்

வேலை

நாங்கள் வெற்றி பெற்றால் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பதை வரமாகப்
பெற்றுத் தருவோம் என்றது BSNLEU.


இது மிகவும் நல்லதாயிற்றேஎன்ற நமபிக்கையிலும், எதிர்பார்ப்பிலும்  ஊழியர்களும் வாக்களித்தனர்.

2004 முதல் 2016 வரை 12 ஆண்டுகள் முடிந்தன.

ஊழியர்களும் நபிக்கையுடன்
தொடர்ந்து வாக்களித்தனர்.

ஆனால்,
வாரம் ஏழு நாட்கள் என்ற அடிப்படை மாறவில்லை.
வாரத்தில் ஐந்து நாள் வேலையும் வரவில்லை.

கார்ப்பரேட் அலுவலக்த்தில் பணிபுரிவோருக்கு மட்டும் வாரத்தில் 5 நாள் வேலை. மற்றவர்களுக்கு ஏன் கிடையாது? என்று ஒரு   கிடுக்கிப்பிடியைப் போட்டது BSNLEU.

தற்போது கார்ப்பரேட் அலுவலகம் சஞ்சார் பவன் எனப்படும் DOT  அலுவலத்தில் செயல்பட்டு வருகிறது.  அந்தப் பகுதி பாதுகாப்பான பகுதி என்பதால்அது 5 நாள் இயங்குகிறது.
விரைவில் கார்ப்பரேட் அலுவலக்ம் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்படும்.
அதன்பின்  வாரத்தில் 6 நாள் வேலை அமலாக்கப்படும் என்று நிர்வாகம் கூறியது.

நீண்ட நாள் கழித்து நான்காம் சனிக்கிழமையாவது விடுமுறை தாருங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் மறுக்கப்பட்டது.

இதற்காக் எவ்விதமான இயக்கமும் நடத்தாமல் அமைதியாக் இருந்தது BSNLEU.  

வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளனர்.

போராட்டம் இன்றி யாராட்டமும் செல்லாது என்பது வெற்று முழக்கம் மட்டும்தான்.

சாதனைகள் பல படைத்தோம் என்று சொல்லும் BSNLEU ஐந்து நாள் வேலை என்று சொன்ன வாக்குறூதி பற்றி வாய் திறப்பதே இல்லை.

இது மட்டுமல்ல இப்படி காணாமல் போன வாக்குறுதிகள் பட்டியல் தொடரும்.

Friday, 15 April 2016

அண்ணல் அம்பேத்கர்

ஏப்ரல் 14.

அண்ணல் அம்பேத்கர்

அவர்களின் 125வது பிறந்த தினம்.

அவர் இந்த நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

நமது நாட்டின் அரசியல் சட்டத்தின் பிதாமகன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு ஓயாது 
உழைத்த   தலைவர்.

ஜனநாயக தீபம் ஒளிர்வதற்குக் காரணியாக  அமைந்த தலைவர்.

அவரது கனவுகள் அனைத்தும் நனவாக உழைத்திடுவோம்.

உயர்ந்திடுவோம். 
அனைவருக்கும்

இனிய

தமிழ்ப் புத்தாண்டு


வாழ்த்துக்கள்

Wednesday, 13 April 2016

எதற்கு

ஒத்துழையாமை இயக்கம்?

நிர்வாகத்துக்கு வழங்கி  வந்த ஒத்துழைப்பை 08.04.2016 முதல் வாபஸ் பெற்றுக் கொள்வதாக BSNLEU  அறிவித்துள்ளது.
எதற்கு இந்த அறிவிப்பு?

புன்முறுவலுடன் பணியாற்றுவது வாபஸா?

ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஈடுபடும் முயற்சி வாபஸா?

நிர்வாகம் நடத்தும் தேர்தலைப் புறக்கணித்து ஒத்துழையாமை இயக்கமா?

எத்தனையோ ஒத்துழையாமை இயக்கங்கள்  பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம்.

சிலவற்றில் நாமும் பங்கு பெற்றிருக்கிறோம்.

ஆனால் BSNLEU சங்கத்தின் அறிவிப்பு புரியாத புதிர்.
JTO  தேர்வு பறி ஒரு செடய்தி



 2007ம் ஆண்டு  TTA ஆளெடுப்பில் 
பணி நியமனம் பெற்ற அனைவரையும்   
22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு
 தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும்பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும் 
தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Monday, 11 April 2016

NFTE BSNL மற்றும் SEWA BSNL



10.04.2016 அன்று டெல்லியில்
NFTE BSNL மற்றும் SEWA BSNL 

அமைப்புகளுக்கிடையே

உடன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில்
SWEA BSNL தனது ஆதரவை
NFTE இயக்கத்துக்கு வழங்கும்.

மகிழ்வு தரும் உடன்பாடு.

மன நிறைவு தரும் உடன்பாடு.

Saturday, 9 April 2016

Friday, 8 April 2016

வெற்றிப பயணம்
வெல்லும் பயணம்
09.04.2016 முதல்
மாவட்டம் முழுமையும் 
உள்ள தோழர்களையும்
தோழியர்களையும் சந்தித்து 
NFTE இயக்கத்திற்கு
வாக்களிக்க வேண்டுகோள்
விடுக்கும் பணி
துவங்குகிறது.

கூட்டணி சங்கத்தலைவர்களுடன்
பணி துவங்குகிறது.

NFTE இயக்கத்தின் மீது
பற்றுள்ள தோழர்களே
வாழ்த்துங்கள்.

உங்கள்  வாழ்த்துக்களோடு
எங்கள்  பணியை
சிறப்புடன் முடித்திடுவோம்.



என்னதான் சொல்கிறது

அந்தக் கடிதம்

அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளது.
அதன் தமிழாக்கம் வருமாறு
கடித எண்
NO BSNL/7-2/SR/2016 தேதி 06.04.2016

பெறுதல்

பொதுச் செயலர்
BSNLEU
புதுடெல்லி

பொருள்: போராட்ட அறிவிப்பு சம்பந்தமாக

தங்களின்  04.04.2016 தேதியிட்ட கடிதம் சம்பந்தமாக இந்தக் கடிதம் தரப்படுகிறது.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அறிவிக்கப்படு 10.05.2016 அன்று நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள முதன்மைச் சங்கம் இலாபத்துடன் கூடிய இன்செண்டிவ்
பிரச்னைக்காக தர்ணா போராட்டம் என அறிவிப்பு கொடுத்துள்ளது.

இப்பிரச்னை குறித்து நிர்வாகம் பலமுறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எனவே இந்த தருணத்தில் இந்தப் பிரச்னைக்காக போராட்டம் என்பது முழுவதும் அர்த்தமற்றது.
விதிகளுக்கு முரணானது. தேவையற்றது.

04.04.2016 தேதியிட்ட தங்களின் கடிதத்தில் நிறுவனத்தின் தலைவரும் (CMD) NFTE சங்கமும் இரண்டு இலக்கத் தொகையை இன்செண்டிவ் ஆக வழங்க ரகசிய உடன்பாடு போட்டு விட்டதாக தெரிவித்துள்ளீர்கள். இவ்வாறு கூறுவது அபத்தமானது மட்டுமல்ல முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
நிர்வாகம் இப்படிப்பட்ட தங்களின் கடிதத்தை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை சரியில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்த்தித் தரும் நடவடிக்கைகளில்  ஈடுபடக் கூடாது என உங்க்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.

மேலும் நிர்வாகம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காத உங்கள் BSNLEU சங்கம் இரண்டு இலக்க இன்செண்டிவ் முடிவு என்பதை எவ்வாறு கூறமுடியும்?

இது உண்மைக்குப் புறம்பான கூற்று மட்டும்ல்லாது இந்த் பொய்ச் செய்திக்கு பெருத்த விளம்பரம் கொடுத்து அமைப்பின்  பெருமைக்கு சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

இது போண்ற பொய்யான தவல்களை அனைவரும் பயன்படுத்தும் இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் மீண்டும் உங்க்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.

இன்செண்டிவ் குறித்து  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் தங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்கும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் இச் சூழ்நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றது என்பது தங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நிறுவனத்தின் பொதுவான நலனைக் கருத்தில் கொண்டும், உடறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை சுமுகமாக நடத்திட நிர்வாகத்துடன் ஒத்துழக்குமாறு வேண்டுகிறோம்.


ஊர் முழுதும் பொய்கள் ஊர்வலம் வரும் வேளையில் உண்மையை உணரவே இந்த்க் கடிதம் வெளியிடப்படுகிறது.
அன்பை விதைத்த

அருமைத் தோழன்


தோழர் குப்தாவுக்கு இன்று 95வது பிறந்த தினம்.
அளப்பரிய சாதனைகள் படைத்த தலைவன்.

ஆளுமை நிறைந்த தலைவன்.

இன்னல்களை இல்லையென்றாக்கிய தலைவன்.

ஈன்ற தாயினும் அன்பைப் பொழிந்த தோஈழன்.


உள்ளங்களில்  உவகையை உருவாக்கிய தலைவன்.

ஊசலாட்டம் இல்லாத தலைவன்.

எள்ளி நகையாடியோர் நெஞ்சிலும் நிறைந்த தோழன்.  

ஏற்றங்கள் பல படைத்து ஊழியர்கள் வாழ்வில் மலர்ச்சியை உருவாக்கிய தலைவன்.

ஐயங்கள் இல்லாத அறிவு கொண்ட தலைவன்.

ஒப்பந்தங்கள் பல கண்டு உத்தரவுகளை உருவாக்கிய தலைவன்.

ஓயாது உழைதிட்ட ஒப்பற்ற தலைவன்

அந்தத் தலைவன் வளர்த்த இயக்கம்
10.04.2016 அனறு
வெற்றிபெற
சபதமேற்று உழைத்திடுவோம்.




Thursday, 7 April 2016

உண்மை ஒளியாது

உண்மை ஒழியாது

உலகம் வெப்ப மயமாகலாம்.
உள்ளமும் உணர்வுகளும்  வெப்ப மயமாகக் கூடாது.

உணர்வுகளால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டவும் கூடாது.

பல்லாண்டு காலம் தொழிற்சங்க அனுபவம் மிக்க தோழர் அபிமன்யூ


தேர்தல் நேரத்தில் முற்றிலும் தவறான், உண்மையற்ற செய்திகளை எழுத்தால் வடித்துள்ளார்.

போனசோ இன்செண்டிவோ எதுவாக இருப்பினும் NFTE இயக்கம் குறித்து சற்றும் உண்மையில்லாத இரண்டு இலக்கத் தொலையப் பெற NFTE நிர்வாகத்துடன் ரகசிய உடன்பாடு போட்டு விட்டதாக
நிர்வாகத்துக்கு 04.04.2016 அன்று கடிதம் கொடுத்துள்ளார்.

இதற்கு நிர்வாகம் 06.04.2016 அன்று தோழர் அபிமன்யூ அவர்களுக்கு ஒரு கடிதம்
கொடுத்துள்ளது.

அக்கடிதத்தில் வார்த்தகள் கடுமையாக் உள்ளன.

பல போராட்டங்க்கள், வேலைந்றுதங்க்கள், சிறைவாசம், பணி நீக்கம் உள்ளிட்ட பல் தண்டனைகள் அளித்து நிர்வாகம் உததரவுகளை அளித்துள்ளது.

ஆனால் இப்படி
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி
காட்டமான கடிதம்  கொடுத்த வரலாறு புத்து.

இப்படி ஒரு கறுப்பு வரலாறு இனியும் உருவாகாமல் பார்த்துக் கொள்வது தோழர் அபிமன்டயூ அவர்களுக்கும் நல்லது.

தொழிற்சங்கங்க்களுக்கும் நல்லது.

இது அறிவுரை அல்ல. அன்பு வேண்டுகோள்.