NFTECHQ

Saturday, 21 February 2015

மனசு

இன்று நள்ளிரவு தாண்டிய பின் அந்த நிகழ்சி நிறைவு பெற்றது. குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி. இறுதியில் ஆறு குழந்தைகள் பங்கேற்றன. அதில் முதல் மூன்று குழுந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் புதிது என்ன எனக் கேட்கத் தோன்றுகிறதா? ஆம் இதில் புதுமை ஏதுமில்லை. இரண்டாம் பரிசு பெற்ற பெண் குழந்தை பெயர் ஜெசிக்கா ஜூட். கனடா வாழ் இலங்கை தமிழர். அந்த குழந்தைக்கான பரிசு ஒரு கிலோ தங்கம். அதை பெற்றுக் கொண்ட பின் அந்த குழந்தையின் தந்தை ஒரு அறிவிப்பினை உடனடியாக அறிவித்தார். அது தான் புதிது. நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாங்கள் ஒரு முடிவு செய்தோம் அதை முழு மனதுடன்  எங்கள் குழந்தை ஜெசிக்கா ஜூட் ஏற்றுக் கொண்டாள் என்று அவர் தங்கள் முடிவினை அறிவித்தார். பரிசு என்ன கிடைத்தாலும் அதில் பாதியை சென்னையில் ஜெசிக்கா ஜூட் அடிக்கடி சென்று வரும் அனாதை குழந்தைகள் இல்லத்திற்கும் மீதியை இலங்கையில் உள்ள அனாதை குழந்தை இல்லத்திற்கும் வழங்க முடிவு செய்ததாக அறிவித்தார். கிராம் ரூ.2500 என கணக்கிட்டால் ரூபாய் இருபத்தைந்து லட்சம் பரிசு தொகை. அது முழுவதும் குழந்தைகளுக்காக வழங்கப்படுகிறது. கேட்டதும் நெஞ்சு நெகிழ்து போனது.கனடாவிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் வெறும் கையுடன் சென்னை வந்தார்கள். திரும்பிச் செல்கையில் மீண்டும் வெறும் கையுடன் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் போது இந்திய மக்களின் சென்னை குழந்தைகள், இலங்கை குழந்தைகளின் அன்பை, பாசத்தை, வாழ்த்துக்களை சுமந்து செல்வார்கள் அது ஜெசிக்கா ஜூட் குடும்பத்தினருடன் அவர்கள் வாழ்நாள் முழுக்க நீடிக்கும். நாமும் வாழ்த்துவோம் அவர்களின் பரந்து விரிந்த மனதை

Thursday, 19 February 2015

ஸ்பெக்ட்ரம் ஏலம்

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத்துக்கு 8 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 20,435 கோடியாகும்.
ஏலம் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் அதிகபட்ச காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளது.
மொத்தம் 8 நிறுவனங்களும் செலுத்திய தொகை ரூ. 20,435 கோடி என தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ரூ. 4,500 கோடி, பார்தி ஏர்டெல ரூ. 4,336 கோடி, ஐடியா செல்லுலர் ரூ. 4,000 கோடி, வோடபோன் ரூ. 3,700 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ. 1,500 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 1,175 கோடி, டெலிவிங்ஸ் (யுனிநார்) ரூ. 724 கோடி, ஏர்செல் ரூ. 500 கோடி செலுத்தியுள்ளன.
ஏல விற்பனை மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் லைசென்ஸ் 2015-16-ல் முடிகிறது.
ஐடியா செல்லுலர் 9 வட்டாரம், ஏர்டெல் 6, ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் தலா 7 வட்டாரங்களுக்கான தொலைத் தொடர்பு சேவைக்கு மறு விண்ணப்பம் செய்துள்ளன. ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகியன 3 ஜி சேவையை 22 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் அளிக்கின்றன. ஐடியா செல்லுலர் நிறுவனம் 11 வட்டாரங்களில் அளிக்கிறது. வோடவோன் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் 9 வட்டாரங்களில் அளிக்கிறது.
3ஜி சேவை இல்லாத பகுதிகளில் தங்களுடைய சேவையை விரிவுபடுத்துவதற்காக ஏலத்தில் இந்நிறுவனங்கள் பங்கு பெறும். இதன் மூலம் இந்தியா முழுவதற்குமான சேவையை அளிக்க முடியும்.

Wednesday, 18 February 2015

விளையும் நிலம் வீணாவதோ


 தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்படும். காவிரி டெல்டா பகுதியில் சுமார் 20 லட்சம் ஏக்கர் விவசாயம் அழியும் நிலை ஏற்படும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள்.
பூமியில் 2 ஆயிரம் அடி துளை போட்டு ரசாயனத்தை செலுத்தி பாறைகளை வெடிக்க வைத்து மீத்தேன் எடுக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு அடையும். எனவேதான் மேற்கத்திய நாடுகள் இத்திட்டத்தை நிறுத்திவிட்டன.

-      மேதா பட்கர்

TTA தேர்வு



TTA  தேர்வு 07.06.2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் மாநில அலுவலகம் இது குறித்து அறிவிப்பு வெளிடயிடும்.

Tuesday, 17 February 2015

கோபி கிளை மாநாடு

14.02.2015 அன்று கோபி கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மாநாட்டுத் துவக்கவுரையாற்றினார்.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் வாழ்த்துரை வழங்கினார். AITUC மாவட்டச் செயலர் தோழர் செல்வராஜன், தோழர் மாலி ஆகியோர் மாநாட்டுச் சிறப்புரையாற்றினர். தோழர்கள் ஆறுமுகம் (TSO), முருகசாமி(TM), கார்த்திகேயன் (TM) ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளர் பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பணி ஓய்வு பெற்ற தோழர் R.முத்துசாமி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாநாட்டுச் செய்தி

மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும்.

Saturday, 14 February 2015

அன்பு

இரண்டு தோழர்கள் அன்பு மற்றும் காதல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இருவருமே  அன்புதான் முதன்மையானது என்பதில் ஒன்றுபட்ட கருத்துடன் பேசினர். அப்போது ஒரு தோழர் “அன்புதான் பெரியது. அன்புதான் பொதுவானது” என்றார்.

அந்த இரண்டு தோழர்களில் ஒருவர் கேட்டார். “அப்படியென்றால் அன்பின அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்குக்கள்” என்றார். அப்போது வேறொரு தோப்ழர் சொன்னார்.
“அன்பின் அடிப்படையில்தானே அதிகாரத்தையே கொடுத்தோம். அதிகாரத்தை ப் பெற்றவர்கள் அன்பைக் காட்டுவத்ற்கு மாறாக அராஜகத்தை காட்டுகிறார்கள்” என்றார். “அன்பு பொதுவானது: என்று சொன்ன தோழர் சொன்னார் “அராஜகத்தைக் காட்டுகிறவர்களிடமும்
அன்பைக் காட்டுபவனே 
னிதன்” என்றார்

Thursday, 12 February 2015

ஒரு குரல்

“நாங்கள் சித்தாந்த அரசியலுக்குள் அடைபட மறுப்பவர்கள், அதற்கு அப்பாற்பட்டவர்கள்  
என்று ஒரு குரல்   (ஆஆக) ஒலித்தூளது.
சித்தாந்த அரசியல் நிலைக்குமா?

சித்தாந்தம் இல்லாத அரசியல் நிலைக்குமா?

என்பதை காலமும் மக்களும் நிர்ணயிக்கும் சூழ்நிலை உருவாகும்.

Wednesday, 11 February 2015

பிப்ரவரி 11

சிந்தனைச் சிற்பி என்று போற்றப்படும் ம.சிங்காரவேலர் மறைந்த தினம் இன்று. 1860 பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, வக்கீல் அங்கியை எரித்து, தன் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். இந்தியாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய முதல் தலைவர் சிங்காரவேலர். சென்னை தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை முதன் முதலில் இந்தியாவில் ஏற்படுத்தினார். 1925 ஆம் ஆண்டு சென்னை மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். சிங்கார வேலரின் விருப்பப்படி அவரின் 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் வழங்கப்பட்டது.

*****************
பிப்ரவரி 11,1990 சிறையிலிருந்து மண்டேலா விடுதலை


தென்னாபிப்ரிக்காவின் காந்தி என்று போற்றப்படும் நெல்சன் மண்டேலா, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள் இன்று. 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொறுப்புக்கு வந்தார். இவரது போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட ஆங்கிலேய அரசு மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியது. இதனால் 1964 ஆம் ஆண்டு ஜூன் 12ல் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இவரின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால் அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெ க்ளார்க் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மண்டேலாவின் விடுதலையை அறிவித்தார். அதற்கடுத்த நாளே சிறையிலிருந்து மண்டேலா விடுவிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 71.

மாநிலச் செயற்குழுவில் நடந்தது என்ன ??

10-02-2015 அன்று 
தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழுவில் 
பொறுப்பின்மையோடும், சகிப்புத்தன்மையின்மையோடும் 
மாநிலச் செயலர் நடந்து கொண்டதால் நடந்த 

நிகழ்வுகளை அறிய ...
..கிளிக் செய்யவும்

ERP- விடுப்பு விண்ணப்பிப்பது எப்படி?



என்ற இணையதள்த்துக்குச் செல்லவும்.
User Id என்ற இடத்தில் HRMS எண்ணின் முதல் எண்ணைத் தவிர்த்து மீதி எட்டு எண்களை டைப் செய்யவும்.
(உதாரணம் 197600000 என்பதில் 97600000 என டைப் செய்ய வேண்டும்.
ரகசிய எண்ணை (Password) டைப் செய்யவும்.  
பிறகு ஒரு திரை வரும்.
அதில்  இடது பக்கத்தில் welcome என்ற இடத்தில் உங்கள் பெயர் வரும். அதற்குக் கீழ் உள்ள Employee Self Service என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் வலது பக்கத்தில் “Working time”  என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் இடது பக்கத்தில் “Leave Request”
என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் name of leave என்பதில் என்ன விடுப்பு  தேவை என்பதைத் தேர்வு செய்யவும்.
(Casual laeave, EL,Commuted Leave, RH)
அதன் பிறகு வலது பக்கத்தில் From என்பதில் தேதியை தேர்வு செய்யவும். பிறகு To  என்பதில் தேதியை தேர்வு செய்யவும்.
பிறகு Reason to leave என்பதில் Personal, Illness என தேவைக்கேற்றவாறு டைப் செய்யவும்.
பிறகு கீழே உள்ள Check என்ற பட்டனை கிளிக் செய்யவும். விடுப்பை அனுமதிக்கும் உரிய அதிகாரியின் பெயர், பதவி திரையில் வரும். அதன் பிறகு send என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் வேண்டுகோள் உரிய அதிகாரிக்குச் சென்று விடும்.
* குறியிட்ட இயடங்கள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
பாஸ்வோர்டை மிகவும் கவனமாக கையாள வேண்டுகிறோம்.
பிறகு தவறாமல் திரையின் வலது பக்கத்தில் உள்ள LOGOFF என்ற பட்டனை கிளிக் செய்யவும். பிறகு வரும் திரையில் yes என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


Tuesday, 10 February 2015

நிகழாத நிகழ்வு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில்

ஆம் ஆத்மி  மொத்த்ம் 70 தொகுகளில் 67 தொதிலகளில்வெற்றி பெற்று

சுத்ந்திர இந்தியாவில் இதுவரை நிகழாத ஒரு நிகழ்வை வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்தாமல் “நானே சர்வ வல்லமை படைத்த சக்தி” என்ற எண்னத்துடன் நடப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதே ஜனநாயகத்தின் மாண்பு.

வெற்றிக்கான காரணங்கள் என்ன?

கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை நடத்தியது. முதலில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெரிந்தாலும், வாக்குகள் வித்தியாசம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எதிர்மறை வாக்குகள் ஆம் ஆத்மி சார்பாக விழுந்துள்ளதாகக் கூற வாய்ப்பில்லை. 
இத்தகைய வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். குறிப்பாக டெல்லியில் உள்ள பெரும்பான்மை மக்கள், குறிப்பாக சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்கள் ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாட்கள் ஆட்சி தங்களுக்கு நல்லது செய்ததாக உணர்ந்தனர். குறிப்பாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் சில்லறை லஞ்சம் ஒழிக்கப்பட்டது. மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மக்களுக்கான முறையில் அமல் செய்யப்பட்டது. நல்லதைச் செய்யும் கட்சி என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. 

இரண்டாவது மிக முக்கிய காரணம், லோக்சபா தேர்தல் முடிவுகளால் அந்தக் கட்சி ஒன்றும் ஆடிப்போய்விடவில்லை. அதன் பிறகு கட்சியை ஒருங்கிணைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்ட தொகைகளில் திட்டங்களை நடைமுறைப் படுத்தினர். இதனால் தொண்டர்களின் செயல்பாடுகள் புது உத்வேகம் பெற்றன. இதனால்  சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினர்களுடன் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.  பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஆம் ஆத்மியின் அரசியல் செயல்முறை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே. இதில் பயனடைந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களே. வாக்களிப்பது என்பது தங்களது அன்றாட வாழ்வை  மாற்றியமைக்கும் ஒரு விஷயம் என்பதை ஆம் ஆத்மியின் செயல்பாட்டு அரசியல் எடுத்துரைத்துள்ளது..
ஆம் ஆத்மி பேசிய வர்க்க அரசியல் மொழி நடுத்தர வர்க்கத்தினரை அச்சுறுத்துவதாக இல்லை. தங்களது நிலைக்கு ஆபத்து வராத நிலையில் ஏழைகளுக்கான அரசியலை அவர்கள் ஆதரிக்கவே செய்தனர். அதாவது செய்து முடிப்பது என்ற இந்த நடைமுறை பல்வேறு வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டியுள்ளது.

Saturday, 7 February 2015

தோழர் மதி

08.02.2015 அன்று
இரவு 0 மணிக்கு
ஜெயா தொலைக்காட்சியில்
தோழர் C.K.மதிவாணன்
பங்கு பெறும்
“விவாத மேடை”
நிகழ்வைக்

காண்போம். 

நக்கலும் நாகரீகமும்



ERP அமலாகக்ம் காரணாமாக ஊழியர்களுக்கு  ஏற்பட்ட பிரச்ணைகள் குறித்தும், அதனால்  ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவரவர்க்குத் தெரிந்த மொழியில் சொல்கிறோம். அறிவும் அதை வெளிப்படுத்தும் முறையும் அனைவருக்கும் ஒரே மாதிரி அமையும் என எதிர்பார்க்க முடியாது. நாம் இணைய
தளத்தில் வெளியிட்ட கருத்துக்களும், காரைக்குடி இணையதளத்தின் செய்திக்கு நாம் சொன்ன கமெண்டும்
நிர்வாகத்தைப் பற்றியது. எந்த ஒரு தொழிற்சங்க அமைப்பையோ அல்லது தொழிற்சங்கத்
தலைவரையோ நக்கல் செய்வதற்காக அல்ல. அதை நக்கல் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பும் அல்ல.

அறிக்கை எண் 85ண் கடைசிப் பத்தி எந்தவித் அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் எழுதப்பட்டுள்ளதே. இது பற்றியும்,இன்ன பிற கருத்துக்களையும் இப்படியே பகிர்ந்து கொள்ளலாமா என்பது தோழமையுடன் கூடிய வேண்டுகோள். இதுதான் அரசியல் நாகரீகமா?

இரங்கல்



திருச்சி NFTE மாவட்டத் தலைவர்
தோழர் S.சுந்தரவேல் 06-02-2015 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
NFTE
இயக்கத்தின் முன்னணித் தோழன் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரனங்கலைக்
காணிக்கையாக்குகிறோம்.

Thursday, 5 February 2015

உடன்பாடும் உபத்திரவங்களும்



2003ம் ஆண்டு இறுதியில்  நமது நிறுவனத்தின் கணக்கில் நாற்பதாயிரம் கோடி ரூபாய் இருந்தது. அப்போது தோழர் குப்தா ஒரு  கோரிக்கை வைத்தார். ஊழியர்களுக்கு தனிநபர் (பர்சனல்) லோன், வாகனக் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன் போப்றவற்றை நிர்வாகமே வழங்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானமாகக் கிடைக்கும். பணமும் நம்மிடம் பத்திரமாக இருக்கும். பணத்தைக் கணக்கில் வைத்திருந்தால்அது சிலரின் கண்ணை உறுத்தும் இதுவே கோரிக்கை.
NFTE அங்கீகாரத்தை  இழந்தது. காலம் மாறியது.
விளைவு அலங்க்கோலமானது.
வங்கிகளில்தான் ஊழியர்கள் அனைத்துக் கடன்களையும் பெற வேண்டும் என்று முடிவானது. பல வங்கிகளுடான் மாறி மாறி உடன்பாடு உருவாக்கப்படது.
ஊழியர்களும் கடன் பெற்றனர்.
உபத்திரவங்களும் உருவாகின. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வங்கிக் கடனுக்காக பிடிக்கப்பட்ட தொகை வங்கிகளுக்கு உரிய காலத்தில் செல்லவில்லை. விளைவு அபராத வட்டிக்கு ஆளாகின்றனர் ஊழியர்கள். டிசம்பர் 2014 சம்பளத்தில் பிடித்த்ம் செய்யப்பட்ட தொகை 31.01.2015 வரை வங்கிக்குச் செல்லவில்லை.
வங்கியிலிருந்து கடன் திருப்பிச் செலுத்தப்பட்வில்லை என்று எஸ் எம் எஸ் வருகிறது.
கடன் முழுமையும் செலுத்தப்பட்ட பின்னும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதும் நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்தைக் கைகாட்டுகிறது.
இந்தத் தவறுகள் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். அதுதான் நாணயத்தின் அடையாளம்.

TTA தேர்வு



2014ம் ஆண்டுக்கான TTA காலியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என BSNL தலைமை அலுவலகம் 04.02.2015 அன்று அறிவித்துள்ளது.
காலியிடங்கள், தேர்வுக்கான தேதி குறித்து மாநில அலுவலகம் அறிவிப்பு வெளியிடும்.

Tuesday, 3 February 2015

ஒன்றாக இணைந்தால் ஒளிரும் வாழ்வு

NFPTE 
பல்வேறு உணர்வுகள் சிந்தனைகள் கருத்துக்கள்
விமர்சனங்க்ள என வாழ்ந்த அந்தக் கால நீங்காத நினைவுகள்.

அந்நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க்கியுள்ள தருணம் இது.

சகிப்புத்தன்மை என்ற ஒரு கருவியே பல சாதனைகளுக்கு வித்திடும்.

ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் நமது பலம், போராட்டங்கள், வெற்றிகள், அனுபவங்களை  அசை போட்டுப் பார்க்கும் தருணம் இது.

இன்றுள்ள புறச் சூழ்நிலையைப் அறிந்து, புரிந்து  கொண்டால் ஒன்றுபடுவது மட்டுமே இறுதியான முடிவாக இருக்கும்.

அந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும்.

ஒன்றுபட்ட செயல்பாடு என்பதைத் தாண்டி, ஒன்றாக இணைவது மேலும் உயர்ந்தது.

அந்த திசை வழியில் சிந்திப்போம்.

ஒன்றாக இணைந்தால்

ஒளிரும் வாழ்வு

அண்ணா

“There is no sentence ending with because because  because is a conjunction.”
      -சி.என்.அண்ணாதுரை
பிப்ரவரி 3 அண்ணா நினைவு தினம்.
அமெரிக்காவின் யேல் பல்லைக்கழகம் அண்ணா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவத்ற்காக அவரை அழைத்தது. அப்போது அங்கு சென்ற
அண்ணா அவர்களின் உருவத்தைப் பார்த்த ஒருவருக்கு

இவருக்கா டாக்டர் பட்டம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் அண்ணா அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “because” என்ற வார்த்தையுடன்முடியும் ஒரு வாக்கியத்தை உங்களால் கூற முடியுமா என்றூ கேட்டார். அதற்கு அண்ணா சொன்ன பதில்தான் இது. அவையோர் வியந்தனர்.