NFTECHQ

Saturday, 4 January 2020


தன்னிகரில்லா தலைவர் குப்தா
2020 ஜனவரி 6 தோழர் குப்தாவின் எட்டாவது நினைவுதினம்.
தன்னிகரில்லா தலைவன் என்னும் சொல்லுக்கு முழுமையான சொந்தக்காரர் குப்தா. அவரைப்போல் ஒரு தலைவர் இருந்ததுமில்லை.  
இனி உருவாகவும் வாய்ப்பில்லை.
தொலைநோக்குப்பார்வையோடு ஆழாமாகச் சிந்திக்கும் ஆற்றல் படைத்த அதிசயத் தலைவர் குப்தா.
எந்த ஒரு பிரச்னையிலும்  தனது கருத்தை ஒளிவு மறைவின்றி  உரைத்திடும் அரிய குணம் கொண்ட உன்னத தலைவர் குப்தா.
ஊழியர்களின் மனநிலை, அவர்களின் பிரச்னைகள்  குறித்து ஆழமாக அறிந்த தலைவர் குப்தா.
ஊழியர்களின் பிரச்னைகளில் எந்த வித சமரசமும் இல்லாமல் சமர் புரியும் போராளி குப்தா.
எந்த ஒரு போராட்டத்தையும் பழிவாங்குதல் இன்றி உடன்பாட்டோடும், உத்தரவுகளோடும்
முடிக்கும் பேராற்றல் பெற்ற தலைவர் குப்தா.
மாற்றுக் கருத்துகளை மதிக்கும் மாண்பு படைத்தவர் குப்தா.
மாற்றுக் கருத்து கொண்டோரையும் தோழமையோடு அரவணைக்கும் மிகச் சிறந்த மனிதாபிமானம் மிக்க தலைவர் குப்தா.
ஒருவேளை குப்தா போன்ற ஒரு தலைவர் இல்லாமல் இருந்திருந்தால் கேசுவல் லேபர் இன்னும் கேசுவல் லேபராகவே இருந்திருப்பர். அவர்கள் இன்று JE,TT, ATT என்ற நிலைகளை அடைந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
அது போலத்தான் RTP நிரந்தரமும்.
குப்தாவைப் போல் விமர்சனங்களை எதிர்கொண்ட தொழிற்சங்கத் தலைவர் இல்லை. ஆனால் அப்படி விமர்சனம் செய்தவர்களே இன்று அவர் இல்லையே என்று ஏங்கும் நிலைடயில் உள்ளனர். இதுவே குதாவின் பெருமை.
நமது துறையை பொதுதுறையாக மாற்றக் கூடாது என்னும் நிலைபாட்டை எடுத்தவர் குப்தா.
ஆனால் அது தவிர்க்க முடியாமல் BSNL உருவான போது  ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம் நடத்தி ஊழியர் உரிமை காத்திட்ட ஒப்பற்ற தலவர் குப்தா. அரசுதுறை, மற்றும் பொதுத்துறை என இரண்டிலும் பணியாற்றிய மொத்த சேவைக்க்காலத்தையும் கணக்கில் கொண்டு அரசே அரசு நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கும் என்ற     ஒரு புதிய வரலாற்றுச் சாதனையின் சொந்தக்காரர் குப்தா.
இன்றைய சூழலில் குப்தா இல்லையே என்ற ஏக்கமும் தவிப்பும் ஊழியர் மனங்களில் உள்ளது.
குப்தா பெற்றுத்தந்த பல உரிமைகளை அவரது நினைவு நாளில் மட்டுமல்ல நமது நினைவிருக்கும் வரை போற்றுவோம்.  


No comments:

Post a Comment