NFTECHQ

Thursday, 31 October 2019


அஞ்சலி
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான AITUC அனைப்பின் பொதுச்செயலராகவும், 25 ஆண்டுகள் சிறந்த நாடாளுமன்றஉறுப்பினராகவும்  வாழ்ந்து தொழிலாளி வர்க்கத்திற்கு வழிகாட்டிய
தோழர் குருதாஸ் தாஸ் குப்தா
இயற்க்கை எய்தினார்.
NFTEBSNL ஈரோடு மாவட்டச் சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலி.

Saturday, 26 October 2019


இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்


மூன்றாவது ஊதிய மாற்றம்?
25.10.2019 அன்று தலைவர்கள் DOT செயலரைச் சந்தித்தனர். புத்தாக்க முடிவுக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி செலுத்தினர்.
"உச்சபட்ச அரசியல் முடிவால் மட்டுமே புத்தாக்க முடிவு நிறைவேறியதாக DOT செயலர் தெரிவித்துள்ளார்.
அரசின் புத்தாக்க முடிவுகள் குறித்து செயலர் விளக்கியுள்ளார்.
மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த தலைவர்கள் வேண்டினர்.
"BSNL நிறுவனத்தின்சந்தைப் பங்கு தற்போது 10 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அது குறைந்தபட்சம் 17 தவிகிதமாக
உயர்ந்தால் மட்டுமே சம்பள மாற்றம் சாத்தியம். அப்போதும் கூட ஊதிய மாற்றம் என்பது செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்" என்று DOTசெயலர் தெரிவித்தார்.
ஓப்வூதிய   மாற்றத்தை அமல்படுத்த தலைவர்கள் வேண்டினர்.
"ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அமலாகாமல் ஓய்வூதிய மாற்றம் சாத்தியம் இல்லை" என்றார் செயலர்.
ஓய்வூதிய மாறறத்தை  ஊதிய மாற்றத்திலிருந்து வில்லக்களித்து (DELINK) ஓய்வூதிய மாற்றத்தை அமலாக்க தலைவர்கள் வேண்டினர்.
இது குறித்து ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பேசுமாறு DOT செயலர் தெரிவித்தார்.
ஓய்வூதியப் பங்களிப்புக்காக BSNL நிறுவனம் அதிகமாகச் செலுத்திய 2500 கோடி ரூபாயை திருப்பித் தர வேண்டினர் தலைவர்கள். விதிகளின் படி ஊழியர் ஓய்வு பெறும்போது பெறும் அடிப்படைச் சம்பளத்தின் படி ஓய்வூதியபங்கீடு செலுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வேண்டினர்.
"நிதி மற்றும் செலவினம் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் இது குறித்து விவாதித்து விட்டோம். இந்த கோரிக்கைகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்த செய்திகள் பல்வேறு சங்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்டவை.
சரிபார்ப்புத் தேர்தல் நடத்தாவிட்டால் அரசும் நிர்வாகமும் தான் நினைத்ததையெல்லாம் செய்யும். அதைத் தடுக்கவே தேர்தல் என்றார்கள்.
தேர்தல் முடிந்து விட்டது.   சங்கங்களை மதிக்காமல், சங்கங்களின் கருத்தைக் கேட்காமல் அனைத்தும் நடக்கிறது.
அரசு தான் நினைத்ததையே செய்கிறது. நிர்வாகம் அதற்கு பொழிப்புரை தருகிறது.
பொழிப்புரை கேட்டு தலைவர்கள் ஏன் பொங்கி எழவில்லை. ஒரு வேளை கலந்தாலோசித்த பின் வினையாற்றுவார்களோ!  

Thursday, 24 October 2019


உள்ளது உள்ளபடி
23.10.2019 அன்று BSNL மற்றும் MTNL நிறுவனங்களைப் புத்தாக்கம் செய்வது குறித்து மத்திய அமைச்சரவை சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன் விபரங்கள் என்ன?
1. BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 4Jஜி சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கப்படும். இதற்காக 20140 கோடி ரூபாய் அரசு இரண்டு நிறுவனகளுக்குள்ளும் உட்செலுத்தும்.
இதற்கான ஜிஎஸ்டி தொகையான 3674 கோடி ரூபாயை அரசே ஏற்கும்.
2. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய பத்திரங்க்கள் மூலம்  
15000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளலாம்.. இதன் மூலம் இரண்டு நிறுவனங்களும் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தவும், மூலதனச் செலவுக்கும் (CAPX) அன்றாட நிர்வாக மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கும் (OPEX) பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. 50 வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத்திட்டம் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் அமசங்களை அந்த நிறுவனங்க்களே இறுதி செய்யும். இந்த விருப்ப ஓய்வுத்திட்டத்துக்காக ரூபாய் 17169 கோடி செலவாகும். இச்செலவை அரசே ஏற்கும். மேலும் ஓய்வூதியப் பலன்களுக்கான செலவை (ஓய்வூதியம், பணிக்கொடை(கிராஜுவிட்டி, மற்றும் ஓய்வூதிய கமுட்டேஷன்)
அரசே ஏற்கும்.
(விடுப்ப்பைக் காசாக்கும் LEAVE ENCASHMENT நிறுவனங்க்கள் ஏற்க வேண்டியதிருக்கும்). நிர்வாகச் செலவுகளைக்க்வே இத்திட்டம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் சம்பளத்துக்கு ஆகும் செலவைக் குறைத்தல்
4. BSNL மற்றும் MTNL தங்களின் அசையாச் சொத்துக்களைவிற்று பணமாக்கிக் கொள்ளலாம். வளர்ச்சிப்பணிகள், அன்றாட நிர்வாக மற்றும் பராமரிப்புச் செலவுகள், ஓய்வூதிய காலச்செலவுகள் ஆகியவற்றிற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. BSNL மற்றும் MTNL நிறுவனங்க்களை இணைத்து ஒரே நிறுவனமாக அமைப்பது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் குறித்து சில சந்தேகங்கள் வஎழுகின்றன.விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை பிறகு பகிர்வோம்.  

Thursday, 17 October 2019


விலக்கிக் கொள்ளப்பட்டது 
உண்ணாவிரதப் போராட்டம்

18.10.2019 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வில்லக்கிக் கொள்ளப்பட்டது.
காரணம் என்ன?

* நிர்வாகத்துடன் 17.10.2019 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.
*நிரந்தர  ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதச் சம்பளம் 23.10.2019 அன்று பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
* ஒரு வாரத்தில் BSNL  புத்தாக்கம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
* அதன் பின் மற்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு: உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கும் அதற்கான காரணங்களுக்கும் தோழர் குப்தாவொக்கும் தொடர்பு இல்லை.

Wednesday, 16 October 2019



சம்பளம்
BSNL ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் சம்பளம் வழங்கப்படும். நிறுவனத்தின் சொந்த நிதி ஆதாரத்திலிருந்தே சம்பளம் வழங்கப்படும் என்று BSNL நிறுவனத்தின் தலைவர் (CMD) தெரிவித்துள்ளார் என இன்றைய எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


கோரச் சிரிப்பு
ஐயா முகேஷ் அம்பானி, இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா?
நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக உங்கள் தம்பியின் நலத்தை அறியவே ஆவலாக இருக்கிறேன். அவர் தான் அனில் அம்பானிஎப்படி இருக்கிறார்?
அனில் அம்பானியின் டெலிகாம் தொழில் சரிவர போகவில்லையே இப்போது எப்படி இருக்கிறது?
மிகப்பெரிய நஷ்டத்தில் அவர் இருந்தபோது காப்பாற்ற நீங்கள்  வந்தீர்கள். அவர் ஜெயிலுக்குச் செல்லாமல் இருக்க மட்டும் தேவையான பணத்தைக் கொடுத்து உதவியதுடன், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் டவர்களை வாங்கிக்கொண்டு உங்கள் தொழிலை விஸ்தரிக்கத் தொடங்கினீர்கள். இப்படித்தான் உங்களது ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளிலேயே இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக மாறியது
2019ஆம் ஆண்டின் உங்களது டிஜிட்டல் டெலிகாம் தொழிலின் லாபத்தொகை மட்டும் 2,964 கோடிகள். 2018ஆம் ஆண்டு கிடைத்த 723 கோடியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம் கிடைத்தாலும், 2019ஆம் ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் கிடைத்த லாபம் உங்களை சற்று ஆட்டிப்பார்த்திருக்கிறது.
2019ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உங்களது லாபத்தொகை 831 கோடிகள். நான்காம் காலாண்டில் 840 கோடிகள். வெறும் 9 கோடிகள் மட்டுமே உயர்ந்திருக்கிறது. ‘வெறும்எனக் குறிப்பிட்டிருப்பதற்கு காரணம், 2018ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில்  மட்டும் 510 கோடிகள் லாபம் பார்த்த நீங்கள், 2019இன்  மூன்று மடங்கு லாபக் கணக்குப்படி 1500 கோடிகளையாவது 2019இன் கடைசி காலாண்டில் கடந்திருக்க வேண்டும். அது முடியாமல் போனதால், இலவச இண்டர்நெட் என நம்பி வந்த மக்களின் தலையிலேயே கையை வைத்திருக்கிறீர்களே இது நியாயமா
பிசினஸ் என்று வந்தபிறகு நியாயம்-அநியாயம் பார்க்க முடியாது என நீங்கள் சொல்லலாம். அதை அப்படி நேரடியாக சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், டிராய் விலையை குறைத்ததால் வேறு வழியில்லாமல் ஒரு நிமிடத்துக்கு ‘6 பைசாஎன வேறு நெட்வொர்க்கில் உள்ள நம்(ண்)பர்களை தொடர்பு கொள்ள சார்ஜ் செய்யப்போவதாக போலிக் கண்ணீர் வடிக்கிறீர்களே, இது தகுமா?
நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?
வெவ்வேறு நெட்வொர்க்கில் உள்ள எண்களுக்கு என் வாடிக்கையாளர்கள் போன் செய்வதால், அவர்களது நெட்வொர்க்கை நான் பயன்படுத்த நேரிடுகிறது. இதற்காக செலவிடும் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால், வாடிக்கையாளர்களும் இந்த சுமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்எனக் கேட்டிருக்கிறீர்கள்
அப்படி மற்ற நெட்வொர்க்குகளை பயன்படுத்தியதற்கான நீங்கள் கடந்த மூன்று வருடத்தில் ஏர்டெல் நிறுவனத்துக்கும், வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கும் கட்டியிருக்கும் தொகை 13,500 கோடிகள். ஒரு வருடத்துக்கு 4500 கோடிகள் எனக் கொடுத்திருக்கிறீர்கள். அதேசமயம், ஒவ்வொரு வருடமும் லாபம் பார்த்து, அதிக வாடிக்கையாளர்களை மற்ற நெட்வொர்க்குகளிடமிருந்து மாற்றி. இன்று 30.67 கோடி வாடிக்கையாளர்களுடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறீர்கள்
இன்று உங்கள் நிறுவனம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து ஜியோவுக்கு வந்த வாடிக்கையாளர்கள் கொடுத்ததல்லவா? அவர்களுக்கு சிம் கார்டையும், அதற்கான மொபைல் போனையும் கொடுத்துவிட்டு அதில் பல நிறுவனங்களின் விளம்பரங்களையும் இடம்பெற வைத்தீர்கள் அல்லவா? 30 கோடி பேருக்கு ஒரே சமயத்தில் ஒரு தகவலை அனுப்பிவிடக்கூடிய சக்தியை பணமாக மாற்றினீர்கள் அல்லவா? அதற்காகவாவது அந்த 6 பைசாவை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாமே!
ஒரு நெட்வொர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு போன் செய்ய 14 பைசா என்றிருந்த விலையை 6 பைசா என டிராய் அறிவித்தது. அதேநேரம், 2020இன் முடிவில் இந்த 6 பைசாவும் இருக்காது என்றும் அறிவித்தது. ஒரு வருடம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த 6 பைசாவை வாங்கி உங்கள் நிறுவனத்தை முதலிடத்திலிருந்து எங்கே கொண்டு செல்லப்போகிறீர்கள்?
மற்ற நெட்வொர்க்கிலிருந்து பேசினால் தான் 6 பைசா கொடுக்கவேண்டும். ஜியோ-டூ-ஜியோ ப்ரீ என்று சொல்லிவிட்டு, ‘இலவச சேவையைப் பெற உங்கள் மற்ற நண்பர்களையும் ஜியோ குடும்பத்துக்கு அழைத்து வாருங்கள்என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர்களை நாங்கள் ஏன் அழைத்து வரவேண்டும். நீங்கள் நினைத்தாலே முடியுமே! நாட்டின் பிரதமரையே உங்களது நிறுவன விளம்பரத்தில் இடம்பெறச் செய்த உங்களுக்கு, ஆதார் கார்டுடன் ஜியோ எண்ணை இணைத்தால் தான் போன் செய்ய முடியும் என்று ஒரு ஆர்டரைப் போட்டுவிட்டால் மொத்த 133 கோடி இந்தியர்களும் ஜியோவுக்குள் வந்துவிடப்போகிறார்கள். அதை விட்டுவிட்டு எங்களிடம் போய் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே
எப்படி பெட்ரோலியத் துறையில் புகுந்து  ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி, மக்கள் நலனை கவனிக்காமல் அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான லாப விலையில் பெட்ரோலை விற்கும் சூழலை உருவாக்கினீர்களோ, அதேபோல இப்போது டெலிகாம் துறையையும் மாற்றிவிடலாம். கடந்த 14 வருடங்களில் முதல் முறையாக தனது நஷ்டக் கணக்கை வெளியிடும் நிலைக்கு ஏர்டெல் நிறுவனத்தை தள்ளிவிட்டீர்கள். இப்போது, வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் இணைக்கபட்டுவிட்டன. எதிரே நிற்பவர்கள் மூவரிலிருந்து இரண்டாக மாறிவிட்டனர். இது தான் சரியான தருணம். இலவசம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய பலமே இதுதான். மக்களின் பலவீனமும் இதுதான். இப்போது இருக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் பெரிய நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டால் போட்டிக்கு ஆளே இருக்கமாட்டார்கள். அப்போது, இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசாங்கங்களும் வேண்டுமென்றால் தனி டெலிகாம் நிறுவனங்களை அரசு சார்பில் உருவாக்கமுடியும். ஆனால், அப்போதும் நீங்கள் தான் மேலே இருப்பீர்கள். காரணம், பிரதமரே உங்கள் நிறுவன விளம்பரத்தில் இடம்பெறுவார் அல்லவா?
30 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதால், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு 13,500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதிருந்தது. இந்த நிலை மாறி எப்போது நீங்கள் மற்ற நிறுவனங்களுடன் பரஸ்பர ஒப்பந்தத்துக்குள் சென்று, ஒரே மாதிரியான விலையை டெலிகாம் துறைக்குள் கொண்டுவருகிறீர்களோ, அப்போதே உங்கள் ஜியோவின் கதை தெரிந்துவிடும். அதுவரை, இதழோரத்தில் நீங்கள் உதிர்க்கும் கோர சிரிப்பு தொடரட்டும்
நன்றி-ஸ்பிளாக்கர்.