NFTECHQ

Sunday, 31 December 2017

2018
அனைவருக்கும் இனிய ஆங்கில்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதுவரை கேட்கப்பட்ட பல கேள்விகளில் சிலவ்ற்றிற்கேனும் விடை தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.

இதுவரை உருவான அல்லது உருவாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு  தீர்வு தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.

நம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வோம்.

தன்னம்பிக்கையுடன் தளராத உள்ளத்தோடு பயணிப்போம்.


அனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  

Saturday, 30 December 2017

வாழிய பல்லாண்டு
31.12.2017 அன்று பணி ஓய்வு பெறும்
தோழர் C.துரைசாமி OS
தோழர் P.M.ராஜன் TT

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
ஒரு கணக்கு
BSNL நிறுவனத்தின் வருமானம் 2016-17 நிதியாண்டில்
ரூ 31533 கோடி.
2015-16 நிதியாண்டைக் காட்டிலும் வருமானம் ரூ 878 கோடி குறைந்துள்ளது.

தொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் 2016-17ல் வருமானம் கணிடமாகக்  குறைந்துள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைத்து தொழில்களையும் எவ்வளவு பாதித்தது  என்பது குறிப்பிடத்தக்கது.


BSNL நிறுபவனத்தின் சொத்து  மதிப்பு ரூ 1.15 லட்சம் கோடி  என மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2.6
01.01.2018 முதல் விலைவாசிப்படி 2.6 சதம் உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வுக்குப்பின்  
விலைவாசிப்படி 126.9 சதமாக

Wednesday, 27 December 2017

விழா சிறக்க வாழ்த்துக்கள்

NFTE தமிழமாநிலச் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும்,
NFTCL தமிழ்மாநில அமைப்பின் உதவித் தலைவருமான 
தோழர் 
N. அன்பழகன்
அவர்களுக்கு கடலூரில் 28.12.2017 அன்று நடைபெறும் பணிநிறவு பாராட்டுவிழா சீரோடும் சிறப்போடும் அமைய ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Monday, 25 December 2017

இனிய
கிருஸ்துமஸ்

நல்வாழ்த்துக்கள்

Sunday, 24 December 2017

பெரியார் நினைவு தினம்
டிசம்பர் 24
"உணவில்லாவிட்டாலும் தன்மானத்தை இழக்காதே.

உயிரே போனாலும் சுயமரியாதையை இழக்காதே"-பெரியார்

Saturday, 23 December 2017

கக்கன் நினைவுதினம்
டிசம்பர் 23


அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை

Friday, 22 December 2017

JE தேர்வு

தோழர்களின் கவனத்திற்கு

JE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.01.2018 என 16.10.2017 தேதியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது.

ஆனால் 20.12.2017 தேதியிட்ட உத்தரவு JE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைநாள் 15.12.2017 என்பது  03.01.2018 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழப்பத்திலிருந்து விடுபட ஒரே வழி  நேரம் பார்க்காமல், நாள் பார்க்காமல் உடனடியாக விண்ணப்பிக்க் வேண்டுகிறோறோம்.


இரண்டு உத்தரவுகளும் இங்கே தரப்பட்டுள்ளது



Saturday, 16 December 2017

உணர்வுகள் மதிக்கப்படுமா?
ஒரு போராட்டம் நடைபெற்றால் அது தீர்வைத் தருவதாக இருக்கும் என்பதே நமது வரலாறு.

சமீபத்திய இரு நாள் வேலைநிறுத்தம் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தப்படவில்லை.

DOT மற்றும் BSNL  நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து தலைவர்கள் உடனடியாக வினையாற்ற   

வேண்டும்.

Thursday, 14 December 2017

90 சதவிகிதம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.

இதில் 90 சதவிகிதம் பேர் 13.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளை விட இரண்டாம் நாளில் எட்டு பேர் அதிகமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Tuesday, 12 December 2017

ஒரு வரலாற்று நிகழ்வு

இந்திய நாடு சுதந்திரம் பெறும் முன்பே 1920ஆம் ஆண்டில் (31.10.1920) துவக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் AITUC.

விடுதலைப் போராட்டத்தில் AITUC அமைப்பின் தலைவர்கள் சீரிய பங்காற்றினர்.

உழைக்கும் மக்களின் உரிமைக்கும், வாழ்வுக்கும், தேசத்தின் நலன் காக்கவும் உன்னதமான இலட்சியங்களோடு  இயங்கும்
AITUC இயக்கத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் 9.12.2017 முதல்  11.12.2017 வரை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.

தோழியர் அமர்ஜித் கெளர்
 AITUC  அமைப்பின் தேசிய பொதுச்செயலராக ஒருமனதாக தேர்வு 11.12.2017 அன்று செய்யப்பட்டார்.




இந்திய நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு தோழியர் மத்திய சங்கம்  ஒன்றிற்கு பொதுச்செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.


மிகச்சிறந்த அறிவாற்றலும், கொள்கைப்பிடிப்பும் மிக்க தோழியர் அமர்ஜித் கெள்ர் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
89 சதவிகிதம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.

இதில் 89 சதவிகிதம்  பேர் 12.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
வாழ்த்துக்கள்
வேலைநிறுத்தத்தைத்
துவக்கியுள்ள
தோழியர்கள்,
தோழர்கள்
 அனைவருக்கும்

வாழ்த்துக்கள்

Monday, 11 December 2017

பாரதி பிறந்த நாள்


டிசம்பர் 11

அச்சம் தவிர்
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கொடுமையை எதிர்த்து நில்.
சிதையா நெஞ்சு கொள்.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்

டிசம்பர் 12-13
பாரதியின் வரிகளை மனதில் நிறுத்தி
அக்னிக் குஞ்சுகளாய்
களம் காண்போம்.
வேலைநிறுத்தமும்
வேலைநிறுத்த கோரிக்கைகளும் வெற்றிபெற

வாழ்த்துக்கள்

Saturday, 9 December 2017

வேலைநிறுத்தம்
தவிர்க்க முடியாததே

ஊதிய மாற்றத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதா? எதற்கு வேலைநிறுத்தம்?

பேச்சு  வார்த்தைக்கு சில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்கவில்லை.CMD கனிவோடு இருக்கிறார். அமைச்சர் ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எந்த ஒரு துவக்கமும் இல்லாமல் இருப்பது ஏன்?

அரசு எந்த உதவியும் செய்யாது என கை விரித்து விட்டது.
அத்தோடு "நிறுவனத்தின் கொடுக்கும் திறன், கொடுத்தபின் செலவைத் தாங்கும் திறன்" என்ற அம்சங்க்களோடு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமைச்சரும் CMDயும் மாற்ற முடியுமா?

BSNL நிறுவனம் ஊதிய மாற்றத்துக்கான செலவைச் சமாளித்துக் கொள்ளும் என CMD எழுத்து பூர்வமாக்ச் சொன்ன பின்னரும் DOT அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறது.

வேலைநிறுத்தம் என அறிவிப்பு கொடுத்த பிறகும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண மறுப்பது ஏன்?

ஆகவே சம்பள மாற்றத்துக்கான வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது. அனைத்து அமைப்புகளும் ஒன்றாக உறுதியுடன் போராடினால் மட்டுமே ஊதிய மாற்றம் என்ற கனவு நனவாகும்.

CMD செலவை BSNL சமாளித்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டதால் பிரச்னை தீராதா?

ஊதிய மாற்றம் என்பதில் CMD அவர்களின் அதிகார எல்லை அவ்வளவே. ஏனெனில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் சம்பந்தப்பட்ட  அமைச்சகத்திடம் அனுமதி பெற்றே தீர வேண்டும். இது வழக்கமானது என்பதோடு மத்திய அமைச்சரவையின் முடிவும் அதுதான். நம்மைப் பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி தர வேண்டும்.

போராடினால் நிச்சயம் பிரச்னை தீர்ந்து விடுமா?

இன்று பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடித்தான்  பெற்றிருக்கிறோம். யாருடைய கருணையிலும் பெறவில்லை.

பெற்றுவரும் சம்பள்ம், பஞ்ச்சப்படி போறன்றவற்றிற்குப் பின்னால் சிலர் இன்னுயிரை இழந்துள்ளனர்என்பதை மறக்கக் கூடாது. பல தலைவர்களின் தியாக வாழ்வும் பின்னணியில் உள்ளது. முன்னேற்றம் என்பது தானாக வராது.

கடுமையான சூழ்நிலையில் ஒரு மாற்றத்துக்கான போராட்டம் இது என்ற உணர்வோடு களம் காண்போம்.


அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இதுவும் நமது நியாயமும் வெற்றியைப் பெற்றுத் தரும்.
வேலை நிறுத்தம்
சில கேள்விகளும் பதில்களும்

டிசம்பர் 12,13 வேலை நிறுத்தம் முக்கியமானது ஏன்?

01.01.2017 முதல் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள மாற்றம் நடைபெற வேண்டும். இன்று பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 2020 க்குள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே சம்பள மாற்றம் மிக மிக அவசியம். ஒருவேளை சம்பள மாற்றம் ஏற்படாவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்று வரும் சம்பள விகிதமே தொடரும். விளைவாக ஓய்வூதியம் பாதிக்கப்படும். எனவே சம்பள மாற்றத்தை பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சம்பள மாற்றம் செய்திட BSNL நிறுவனம் விரும்பினாலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. அரசு அனுமதி தருமா? தராது என்றால் வேலை நிறுத்தம் அவசியமானது. வேறு வழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வழியில்லை.

BSNL நிறுவனம் ஏதும் செய்ய முடியாதா?

BSNL நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும்  ஒரு பொதுத் துறை நிறுவனம். மத்திய அரசின் கொள்கை நிலைபாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. விளைவாக கால்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியில் ஓட வேண்டியுள்ளது. உண்மையில் கடினமான முயற்சி காரணமாக போட்டியில் BSNL நிறுவனம் நிலைபெற்று நிற்கிறது. எனினும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கட்டணங்களை மத்திய அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை. விளைவாக லாபத்துடன் இயங்கி வந்த நிறுவனம் நஷ்டதில் தள்ளப்பட்டது. லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் காட்டி சம்பளம் மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசில் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பள மாற்றம் மறுக்கப்படவில்லை. எனவே மிக முக்கிய்மான கொள்கை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாப நஷ்ட கணக்கு பார்ப்பது அனுமதிக்கப்பட்டால் வருங்காலத்தில் சம்பள மாற்றமே நடைபெறாது. இந்த பின்னணியில் இந்த போராட்டம் அதி முக்கியமானது. அதில் பங்கேற்பது அவசியமானது.

BSNL நிறுவனத்திலிருந்து தொலைத் தொடர்பு கோபுரங்களை பிரித்து தனி அமைப்பு ஏற்படுத்துவதை ஏன் எதிர்க்க வேண்டும்? அது எப்படி ஊழியர்களைப் பாதிக்கும்?

BSNL நிறுவனத்திற்கு என  65000 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே தனியாருக்கு அவர்களின் கருவிகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்வே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் இல்லை. அந்த அமைப்பை BSNL நிறுவன ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் அதற்காக ஊழியர்கள் புதிய அமைப்பிற்கு மாற்றப்படுவார்கள். இட மாற்றம் என்பதைவிட ஊழியர்களின் சேவை விதிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கப்படவில்லை. குறிப்பாக இன்று BSNL ஊழியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் முதலியவை தொடருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களுடன் பேசி தீர்வு காணவேண்டும்.

போராட்டம் வெற்றி பெறுமா?


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கான நம்பிக்கையே அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன என்பதுதான். வங்கி உட்பட பல நிறுவனகங்களில் அனைவரும் ஒன்றுபட்டு போராடி சம்பள மாற்றத்தைப் பெற்றுள்ளன. அதே வழியில் ஒன்றுபட்டு போராடி வெற்றியை ஈட்டுவோம்.

Friday, 8 December 2017

சுற்றுப்பயணம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்து மாவட்டம் முழுமையும் உள்ள ஊழியர்களைச் சந்தித்து வருகின்றனர்.

NFTE, BSNLEU, AIBSNLEA, SNEA, ,AIBSNLOA, AIGETOA, TEPU, SEWA, FNTO, BSNLAU என அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் திட்டமிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளியும், ஊழியர்களையும் சந்தித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
"ஒற்றுமை மட்டுமே விடியலுக்கு வழி வகுக்கும்"
என்ற அடிப்படையில் செயல்படும் ஈரோடு மாவட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.


"வாழ்வா சாவா என்பதற்க்கானபோராட்டம் அல்ல இது. வாழும் வழி காண போறாட்டம்.
சிறப்பான கூட்டம்
07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடு டெலொபோன் பவன் வளாகத்தில் வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 400 பேர் பங்கேற்றனர். தோழியர்கள் அதிக அளவில் பங்கேற்றது மேலும் சிறப்பு.

அனைத்து அமைப்பின் தலைவர்களும் கோரிக்கைகள்குறித்தும் வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்.

ஆற்ப்பாட்டம்,
,மனிதச் சங்கிலி இயக்கம்,
கோரிக்கை விளக்கக் கூட்டம் அ
னைத்தும் சிறப்பாக முடிவுற்றது.


வேலைநிறுத்தத்தில் அமைவரும் பங்கேற்க வேண்டும். அதுவே ந்மது வெற்றிக்கான கதவைத் திறக்கும்.

Wednesday, 6 December 2017

07.12.2017 அன்று
மாலை 4.30 மணிக்கு
அனைத்து தொழிற்சங்க
அமைப்புகளின் தலைவர்கள்
பங்க்கேற்று உரையாற்றும்
வேலைநிறுத்த கோரிக்கைகள்
விளக்கக் கூட்டம்.

அனைவரும் பங்க்கேற்பீர்

வெற்றிகரமாக்குவீர்

வேலைநிறுத்தத்தை
அம்பேத்கர் நினைவு தினம்

டிசம்பர் 6
அண்ணல்  அம்பேத்கர் நினைவு தினம்.

அடித்தட்டு மக்களின் அவலம் நீங்க அயராது போராடியவர்.

உலகிலேயே மிகச் சிறந்த
அரசியல் சட்டம் உருவாகக் காரணியாக அமைந்தவர்.


இன்று ஆளுவோர் அம்பேத்கரை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தத் துடிக்கின்றனர்.

Sunday, 3 December 2017

2.4
01.01.2018 முதல்
விலைவாசிப்படி

2.4 சதம் உயர வாய்ப்புள்ளது.