NFTECHQ

Friday, 12 August 2016

"நான் வந்துட்டேண்டா"

ஆகஸ்ட் 15.
ஆண்டவர்களைத் துரத்திய நாள்.
ஆளும் உரிமை பெற்றிட்ட நாள்.

நமது தேசத்தின்
எழுபதாவது விடுதலைத் திருநாள்.

இந்த நாள்..
நமது BSNL நிறுவனம் "நான் வந்துட்டேண்டா" பாணியில் ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும்
சனிக்கிழமை இரவு 9 மணி முதல்
திங்கள் கிழமை காலை 7 மணி வரை
இந்தியா முழுவதும்
அனைத்து லேண்ட்லைன்
மற்றும் மொபைல் போன்களுக்கும்
(ALL PHONES OF ALL NETWORKS)
இலவசமாகப் பேசும் திட்டத்தை ஆறிமுகப்படுத்தியுள்ளது.

வாடகை செலுத்தி இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு
மட்டுமே இச் சலுகை பொருந்தும்.

வரவேற்கத்தக்க ஒரு நல்ல முடிவு.

சிந்தித்தவர்..
செயலாக்கம் செய்தவர்
யாரெனினும்
பாராட்டுதலுக்குரியவர்.

கிராமத்தில் ஒரு பழமொழியைக்
 கேட்டதுண்டா?

"ஆடுகளை அவுத்து உட்டுட்டு பட்டிக்கு பூட்டு போடரானாம்"  

இது நமக்கும் பொருந்தும்.

காலம் முடிந்து போய் விடவில்லை.
முயற்சி செய்தால்
சரண்டரைத் தடுக்கலாம்.
இணைப்பு கேட்போரைத்
துரத்தியடிக்காமல்
இணைப்பு தரலாம்.

நம்பிக்கையே வாழ்க்கை.


வாழ்க்கையே நம்பிக்கை

No comments:

Post a Comment