NFTECHQ

Wednesday, 12 August 2015

பாகுபாடும் நெருடலும்

சென்னை தொலைபேசி மாநில மாநாட்டுக்கு
நமது தமிழ் மாநிலச்செயலர் 
அருமைத்தோழர் பட்டாபி அவர்கள் 
மட்டுமே  அழைக்கப்படவில்லை..
அவர் மட்டுமே பங்கேற்கவில்லை..
என்று மனம் நெருடல்
கொள்ள அருமைத் தோழர் மாரிக்கு
உரிமை உண்டு.
ஆனால்..
நமது சொந்த தமிழ் மாநிலத்தில் சேலம் மாவட்ட மாநாட்டிற்கு சம்மேளனச் செயலர் அருமைத் தோழர் ஜெயராமனைக் கூட பாகுபாட்டு வளையத்துக்குள் தள்ளி பக்கா பாடுபாடு காட்டி யாரையும் அழைக்கவில்லையே..
அது அவர்கள் உரிமையோ அல்லது அவர்களுக்கு அப்படி ஆணையோ நாம் அறியோம்.
அந்த உரிமையிலும், ஆணையிலும் நாம் தலையிட முடியுமா என்ன?
கோவையிலும், நெல்லையிலும் பாகுபாடு இன்றி தலைவர்கள் அழைப்பு.. பங்க்கேற்பு..
தோழர் பட்டாபியின்  வார்த்தைகளான 
“யாரையும் ஒதுக்காமல்,
யாரும் ஒதுங்க விடாமல்”
ஒரு மனதான நிர்வாகிகள் தேர்வு..
ஆனால் சேலத்தில் ஒரு பகுதியினர் ஓரம் கட்டப்பட்டனர்.
சேலம் நிகழ்வுகள் கவளங்க்களில் கற்களாயின.
அங்கு பங்கேற்ற  யாருக்கும் நெருடலே
இல்லையா?
“மதி”  கூடாது..
“மதி” நிறைந்த கூட்டத்தில்
கூட மாட்டோம்”
என்று இருப்பவர்கள்
மதி அழைக்கவில்லையே என மனம் நெருடல் கொள்ளலாமா?
மனங்களைப் பிரிக்காமல்
மனங்களை  இணைக்கும்
பணியை மனதாரச் செய்து
வசந்த காலம் படைப்போம்.

No comments:

Post a Comment