
வங்கி துறையில்
ஊழியர்களின் ஊதியங்கள் நிர்வாகத்துடன் நேரடி பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்யப்படுகின்றன.
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண்பது
அங்கு வழக்கம். ஒன்பதாவது உடன்பாடு 01.11.2007 முதல் 31.12.2012 வரை ஐந்தாண்டுகள் அமுலில் இருந்தது. பத்தாவது உடன்பாடிற்கான பேச்சு வார்த்தை
22.02.13 அன்று அதிகார பூர்வமாக துவங்கி விட்டது. விரைவில் பேசி முடிக்க சங்கங்கள்
முடிவு செய்துள்ளன.
2002 இல்
நமது நிறுவனத்தில் முதல் சம்பள உடன்பாட்டிற்கான பேச்சு வார்த்தை தோழர் குப்தாவின் முன்
முயற்சியால் அனைத்து சங்கங்கள் இணைந்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நான்கே
மாதங்களில் உடன்பாடு காணப்பட்டது. நல்ல ஊதிய உயர்வு, ஐந்தாண்டு காலத்திற்கானது. அது
ஒற்றுமையின் வெற்றி.
இரண்டாவது
ஊதிய உடன்பாடு 01.01.2007 முதல் அமுலாக வேண்டியது. நிர்வாகம் பலமுறை வற்புறுத்தி கேட்ட
பிறகே ஊதிய கோரிக்கை பட்டியலை தோழர் நம்பூதிரி தந்தார். அவ்வளவு பொறுமை! அவர் மட்டுமே தனியாக உடன்பாட்டில் கையொப்பம் இடுவேன்
என அடம்பிடித்தார். ஊதிய கோரிக்கை குறித்த சரியான, தெளிவான கொள்கை ஏதும் இல்லாததால்
காலம் வீணானது. ஒரு கட்டத்தில் நிர்வாகம் என்ன தருவதாக சொன்னதோ அதையே காலம் தாழ்ந்து
2010 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டு உடன்பாடு கண்டார் நம்பூதிரி. ஒன்றுபடாமல் தனித்து தடுமாறியதன்
விளைவு
-
கால
தாமதம்
-
78.2
சத அகவிலை இணைப்பிற்கு பதிலாக 68.8 சத இணைப்பு
-
ஐந்து
ஆண்டுகளுக்கான உடன்பாடு என்பதற்கு பதிலாக பத்து ஆண்டுகளுக்கான ஊதிய மாற்றம்.
இவை தான் இங்கே அபிமன்யூ, நம்பூதிரி
சாதனை.
போதுமடா சாமி!
No comments:
Post a Comment