NFTECHQ

Friday, 25 December 2020

இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அன்பு, இரக்கம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை இவற்றைப் போத்தித இயேசுபிரான்ன் பிறந்த தினம் இன்று.

 

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


Saturday, 14 November 2020

இனிய

தீபாவளி

வாழ்த்துக்கள்


Monday, 2 November 2020

வாழிய பல்லாண்டு

31.10.2020 அன்று பணிநிறைவு பெற்ற

தோழர் M.கல்யாணகுமார்

டெலிகாம் டெக்னிசியன் அவ்ர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

 

குறிப்பு  **  ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எவரும் பணிநிறைவு பெறவில்லை.


Saturday, 10 October 2020

அஞ்சலி

NFTE  ஈரோடு மாவட்டச் சங்க நிர்வாகியும், JE கேடரில் பணிபுரிபவருமான அன்புத் தோழர் செங்கோட்டையன் அவர்களின் அன்புத் துணைவியார் 09.10.2020 அன்று இரவு உடல்நலக் குறைவால் (மாரடைப்பு)  இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவுக்கு அஞ்சலி. துணையை இழந்திருக்கும் தோழருக்கு ஆழ்ந்த இரங்கல்.


Friday, 14 August 2020

 

விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இதயம் நிறைந்த

விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்.

கொரோனா கொடுமையிலிருந்து விரைவில் விடுதலை பெறுவோம்.

வுற்கத் துடிக்கும் விற்பனையாளர்களிடமிருந்து விடுதலை பெறுவோம்.

 

இனியய வாழ்த்துக்கள்

 

இனிய தோழன் மறைவுக்கு அஞ்சலி

சத்தியமங்கலம் தோழர் நடராஜன் 13.08.2020 காலை உடல்நலக்

குறைவால் இயற்கை எய்தினார்.

சத்தியமங்கலம் NFTE கிளைச்Sசெயலராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோழர்.அப்பகுதியில் மிகக்குறைவான எண்ணிகையோடு செயல்பட்ட நமது இயக்கத்தை வளர்த்தெடுத்து மொத்த ஊழியர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை நமது இயக்கத்தில் இணைத்து இயக்கத்தை வளர்த்தார்.   "கேப்டன்|" என அன்[போடு தோழர்கள் அவரை அழைப்பதுண்டு. பணி ஓய்விற்குப் பிறகும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.அவரது மறைவுக்கு இதயபூர்வமான அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

Saturday, 1 August 2020

வாழிய பல்லாண்டு

 

31.07.2020 அன்று பணிநிறைவு பெற்ற

 

தோழியர் ஜெயம்மாள்  

லமுடனும்  

மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ

வாழ்த்துகிறோம்.


இனிய  நண்பர்களுக்கு

மனம் நிறைந்த

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.


Tuesday, 21 July 2020


இனி என்று காண்போம்
இனிய தோழனின் இன்முகத்தை

பாசக்கார  தோழன் பங்காரே
பழகுவதற்கு இனிய தோழன் பங்காரே
பற்றின் ஊற்றுக்கண் தோழன் பங்காரே
கட்டுப்பாட்டின் களஞ்சியமாம் தோழன் பங்காரே
விசுவாசத்தின் விளைநிலமாம் தோழன் பங்காரே
கொள்கையின் இமயமாம் தோழன் பங்காரே
அலுவலகப் பணியானாலும்
இயக்கங்களின்  பணியானாலும்
அர்ப்பணிப்போடு ஆற்றி முடிக்கும் அருமைத் தோழன் பங்காரே
கொல்லிமலை வாசத்தை ஏற்ற உன்னை
கொல்லிமலை மண் உன்னை
தனக்குள் இவ்வளவு அவசரமாக
தாங்கிக் கொள்ள விரும்பய்து ஏண்
அந்த மண்ணின் மீது உனக்கு அவ்வளவு பாசமா
அந்த மண்ணுக்கு உன் மீது அவ்வளவு பாசமா
மறையும் வயதை நீ அடைய வில்லையே
மரணம் இயற்கைதான்
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய வயதல்லாவா தோழன் பங்காரே
உன் பாசவலைக்குள் விழுந்த எங்களை இறுதியாக ஒரு முறை உன் இன்முகத்தை காண முடியாத சூழ்லில் மறைந்த தோழன் பங்காரே
இது ஒன்று மட்டுமே நீ அறியாமல் செய்த தவறு.
அந்தத் தவறு கூட இயற்கையின் தவறுதான்.
அன்புத்தோழனே
உன் மறைவுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக செவ்வணக்கத்துடன் கூடிய அஞ்சலி.
தோழன் பங்காருவின் குடும்பத்தாருக்கு அழ்ந்த இரங்கல்..

Monday, 6 July 2020


உரியவர்களின் கனிவான கவனத்திற்கு

ஈரோடு நகரப்பகுதியில் தொடர்வண்டி நிலையத்திற்கு (RAILWAY JUNCTION)  தெற்கில் உள்ள பகுதிகளில் BSNL நிறுவனத்தின் FTTH சேவை மட்டுமே நன்றாக கிடைப்பதாக கேள்விப்பட்டோம். தனியார் நிறுவனங்களின் FTTH சேவை திருப்திகரமாக இல்லை என்பதும் தக்வல்.  இந்த சூழ்நிலையில் உயர்மட்ட அதிகாரிகள் அப்பகுதி கேபிள் அபரேட்டர்களிடம்  இது குறித்து தெரிவித்து நமது BSNL FTTH சேவையை விரிவாக்க வலியுறுத்த வேண்டும் என்பது வேண்டுகோள்.
கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் கனிவாக நடந்து கொள்வதை BSNL நிர்வாகம் உறுயதி செய்வது மிகவும் அவசியமானது.
ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேபண்டும்.

Friday, 3 July 2020


வாழிய பல்லாண்டு
30.06.2020 அன்று பணி நிறைவு பெற்ற
தோழர்  S.மணி TT
தோழர்  M.மோகனன் TT
தோழர்  N.நடராஜன் TT
தோழர்  M.செல்வராஜன் TT
ஆகியோர் நலமுடனும்
 மகிழ்வுடனும்
 பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி
01.07.2020 முதல் விலைவாசிப்படி 0.8 சதவிகிதம் குறையும்.
01.07.2020 முதல் 159.9 விலைவாசிப்படி சதவிகிதம் ஆக இருக்கும்.

Monday, 1 June 2020


கொடியும் கட்டுவார்
கொள்கை முடிவும்  எடுப்பார்
அன்பெனும் வலைக்குள் அகப்படும்
ஆருயிர்த் தோழர் அவர்.
இதயம் முழுமையும் மனிதாபிமானம்  நிறைந்தவர் அவர்.
ஈன்ற பொழுதினும்  இன்றும் என்றும் தன்  தாயை மகிழச் செய்பவர் அவர்.
உழைப்பென்னும் சொல்ல்ன் இலக்கணம் அவர்.உழைப்பை மட்டுமே மூலதனமாகக்        கொண்ட வாழ்வு அவருடையது.
ஊழியர்களுக்கு உதவும் உற்ற தோழன் அவர்.
எந்நாளும் நன்றி மறவாதவர் அவர்.
ஏற்றம் பெற உதவிட்ட மானுடர்களையும்,பாதையையும்
       எந்நாளும் மறவாதவர் அவர்.
ஒழுக்க வாழ்வை உயிரென மதிப்பவர் அவர்.
ஓங்கு புகழ் சங்கத்துக்குவிசுவாசமானவர் அவர்.
அவர்தான் தோழர் யாசின்.
31.05.2020ல் அப்பழுக்கற்ற இலாகாப் பணியை நிறைவு செய்துள்ளார்.
பணிநிறைவுக்காலம் நலமுடனும் மகிழ்வுடனும் அமைய வாழ்த்துவோம்.


வாழிய பல்லாண்டு
31.05.2020 அன்று
1.தோழர் R .மாரிமுத்து   TT
2.தோழர் R சண்முகம் R TT
3.தோழர் V .சண்முகம் TT
4.தோழர் A தில்லைவேல் TT
இவர்களோடு
தோழர் யாசினலிகான்
அவர்களும் பணி நிறைபவு பெற்றார்.
அனைவரும்
நலமுடனும்.
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Monday, 25 May 2020


இனிய
ஈகைத்திருநாள்
வாழ்த்துக்கள்

Friday, 1 May 2020


மேதின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
சாதி, மத பேதமின்றி  உலகெங்கிலும் உள்ள உழைப்பவருக்கான உன்னதத் திருநாள் மே 1.
உழைப்போரின் வரலாற்று முன்னோர்கள் நடத்திய போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் செய்த தியாகத்தாலும்
16 மணி நேர வேலை எட்டு மணி நேர மேலையானது.
 நாங்கள் இயந்திரங்களா பெரும் பணக்காரர்களின் சொகுசு வாழ்க்கைக்கு,
எங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையை உழைப்பால் செலுத்த நாங்கள் என்ன அடிமைகளா ? நாங்கள் தொழிலாளர்கள். எங்களின் வேலை நேரம் எட்டு மணி நேரமாக வேண்டும். எங்களுக்கு எட்டு மணி நேர உறக்கம் வேண்டும். எட்டு மணி நேர வாழ்க்கை வேண்டும்!” என உலகத் தொழிலாளர் வர்க்கம் வீறுகொண்டு எழுந்து முழங்கியது.
உழைக்கும் கூட்டம் என்றென்றைக்கும் அடங்கிக்கிடக்கும் என்ற மிதப்பில் கொட்டமடித்த சுரண்டல் கூட்டம், உழைப்போரின் உரிமைப் போரை நசுக்காமல் இருக்குமா என்ன?
மானுட விடியலுக்கு ரத்தத்தாலும் தியாகத்தாலும் அடித்தளம் இடுவதற்கான அறைகூவல் என அடுத்தடுத்து வந்த நாட்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்றளவும் மின்னுகின்றன
அமெரிக்கத் தொழிலாளர்களின் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் பிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோரை தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கப்படுகிறார்கள்.
இவர்களின் மரணமே 8 மணி நேர வேலைக்கு விதையிட்டு உரமிட்டு இன்று பலன் தருகிறது.
நாம் பெற்ற அனைத்து உரிமைகளுக்குப் பின்னாலும் பல தியாக வரலாறுகள் உள்ளன.
தியாகிகளை நினைவில் கொள்வோம்.
நம்பிக்கையுடன் நடைபோடுவோம். முன்னேறுவோம்.

வாழிய பல்லாண்டு
30.04.2020 அன்று பணி நிறைவு பெற்ற
1.தோழர் M.P.ராமலிங்கம் JE
2.தோழியர் அனுராதாரங்கராஜன் OS
3.தோழியர் T.பாக்கியம் OS
4.தோழர் P.பாலசுப்ரமணியன் OS
5.தோழியர் கலாவதி சுப்ரமணியன் OS
6.தோழர் K.S.கார்த்திகேயன் TT
7.தோழர் R.காளிமுத்து TT
8.தோழர் K.K.செல்வராஜு TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.

Thursday, 2 April 2020


வாழிய பல்லாண்டு

31.03.2020 அன்று பணி ஓய்வு பெற்ற
1.தோழர் N.சகாதேவன் OS
2.தோழர் M.மாணிக்கம் TT
3.தோழர் S.ராஜி TT

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடன்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி உயர்வு

01.04.2020 முதல் விலைவசிப்படி
3.4 சதவிகிதம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
01.04.2020ல் மொத்த விலைவாசிப்படி 160.7 சதவிகிதமாக இருக்கும்.

Sunday, 8 March 2020


இனிய
மகளிர் தின
வாழ்த்துக்கள்