NFTECHQ

Tuesday, 6 March 2018


மருத்துவப்படி உச்சவரம்பு
BSNL நிதிநிலையைக் காரணம் காட்டி தற்போதுள்ள மருத்துவப்படி அளவைக் குறைப்பதற்கு BSNL நிர்வாகம் உத்தேசித்துள்ளது. 01/03/2018 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் 15 நாட்களுக்குள் இதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நிர்வாக முடிவு

தற்போதுள்ள வெளிப்புறச்சிகிச்சைக்கான மருத்துவப்படி ஈடுகட்டுதலை ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பள அளவிற்கு குறைப்பது. அதேநேரம் பெருவியாதிகளுக்கான உச்சவரம்பின்மை எப்போதும் போல தொடரும்.
CGHS மருத்துவமனை உள்ள இடங்களில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படியை ரத்து செய்வது.
புதிய சம்பள மாற்றம் வருமுன்னே நிர்வாகம் அதனைக் கணக்கில் கொண்டு உச்சவரம்பைக் குறைக்க முயலுவதாகத் தெரிகிறது.
வெளிப்புற சிகிச்சைக்கான ஆண்டு உச்சவரம்பு 12 நாட்கள் என்று குறைக்கப்படுவதற்கு நமது சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்தான் CGHS மருத்துவமனைகள் உள்ளன. எனவே அங்கே வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படலாம்.
இந்தியா முழுவதும் 37 இடங்களில் CGHS மருத்துவமனைகள் உள்ளன. அங்கே வசிப்பவர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படும்.
மேலும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதந்தோறும் ரூ.1000/= மருத்துவப்படியாக தங்களது ஓய்வூதியத்துடன் சேர்த்துப் பெற்றுவருகின்றார்கள். அவர்களுக்கும் கூட CGHS மருத்துவமனைகள் உள்ள இடங்களில் மருத்துவப்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனையொட்டியே நமது நிர்வாகமும் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Monday, 5 March 2018



சபாஷ் ஈரோடு
மற்ற மொபைல் நிறுவனங்களிலிருந்து 14672 வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்திடம் MNP மூலம் ஈர்த்து தமிழகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ஈரோடு மாவட்டம்.
2018 பிப்ரவரி மாதத்தில் இந்த் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

இந்த அரிய பணியில் தங்களை  அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி செயலாற்றிய வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் மற்றும் பிற பகுதி ஊழியர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

இப்பணியில் துணைநின்ற அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.

இந்தப் பணி மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நம்மை நாடி வந்தோர் திருப்தி அடையும் வகையில் சேவை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மாநில நிர்வாகமும் அதற்கு உதவ வேண்டும். இதுவே ந்மது வேண்டுகோள்.


Friday, 2 March 2018


           
MNP  நிலை பிப்ரவரி 2018

மாவட்டம்
BSNL க்கு
உள்ளே
BSNL க்கு
வெளியே
நிகரம்
+/-
கோவை
9848
2501
7347
கடலூர்
1374
860
514
குடந்தை
790
627
163
தர்மபுரி
3892
1179
2713
ஈரோடு
14672
1149
13523
காரைக்குடி
643
583
60
மதுரை
3309
1224
2085
நாகர்கோவில்
6616
937
5679
நீகைரி
555
267
288
புதுவை
376
499
-123
சேலம்
7939
1869
6070
தஞ்சை
738
419
319
திருச்சி
3636
1040
2596
தூத்துக்குடி
1907
607
1300
நெல்லை
10573
1136
9437
விருதுநகர்
1864
632
1232
வேலூர்
1794
1402
392
மொத்தம்
70526
16931
53595

Thursday, 1 March 2018


போராட்டம் ஒத்திவைப்பு
அமைச்சருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தை, அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு காலவரையற்ற விதிப்படி வேலைநிறுத்தம் 30.04.2018 வரை ஒத்திவைய்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை எழுத்து மூலமாக தொலைத்தொடர்புத்துறையின் செயலருக்கு BSNL அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, 28 February 2018



வாழிய பல்லாண்டு
இன்று (28.02.2018) பணி ஓய்வு பெறும்

திரு A.தங்கவேல் JTO
தோழர் P.நல்லசாமி TT
தோழர் P.குணசேகரன் TT
தோழர் K.கழுகாசலம் ATT

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday, 27 February 2018


இப்படியும் ஒரு இளைஞன்
ஆர்டிஐ ஆர்வலர் கிருஷ்ணா முராரி யாதவ்  
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இளைஞர் ஒருவர் சேவை செய்து வருகிறார்.

உத்தரப்பிரேதசம் கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி யாதவ்(வயது29) என்கிற இளைஞர்தான் இந்த சேவையைச் செய்து வருகிறார்.

 தனக்கு சொந்தமாக அலுவலகம்கூட வைத்துக் கொள்ளாமல், ஒரு தேநீர் கடையில் அலுவலகத்தை நடத்தி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். இப்பகுதி மக்கள் இவரை கே.எம்.பாய் என்று உரிமையுடன் அழைக்கிறார்கள்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் இருந்த கே.எம்.யாதவுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வலிமையும், கூர்மையும் தெரியத் தொடங்கியது. இதனால், தான்பார்த்த வேலையை உதறி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புறப்பட்டுவிட்டார்.
இந்த சேவைக்காக, பொம்மிதளா கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சார்பில் ஸ்பூர்த்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கே.எம்.யாதவ் பெற்று உள்ளார்.

இது குறித்து கே.எம்.யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
"இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சமையல் சிலிண்டர் இணைப்பு கொடுக்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் பிரிவில் பணியில் இருந்தேன். அப்போது, ஏராளமான மக்கள் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது ஏன் என நாள்தோறும் கேட்டு வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஒருநாள், பொது தகவல் அதிகாரிக்கு ஒரு மனு அனுப்பினேன். அதில், எத்தனை பேரின் சமையல் கேஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது, ஏற்கப்பட்டுள்ளது என்று கேட்டேன். ஆனால் எனக்கு பதில் இல்லை. அதன்பின் 2-வது முறையாக மேல்முறையீடு செய்ததில், பொது மேலாளர் எனக்கு பதில் அளித்தார்.
அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து, ஒப்பந்ததாரரை போய் சந்தித்து கேளுங்கள் எனக் கூறி, விண்ணப்பங்கள் அனைத்தையும் ஏற்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதுதான் எனக்கு கிடைத்த முதல் வெற்றி.
அதன்பின் கடந்த 2013ம் ஆண்டு வேலையை உதறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயக்கமாக நடத்த தொடங்கினேன். ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கூறுகள், பயன்கள், விவரங்களை ஒரு துண்டுபிரசுரங்களாக அச்சடித்து விநியோகம் செய்தேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்கூட, 95 சதவீத மக்களுக்கு ஆர்டிஐ குறித்து ஏதும் தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு அது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது கிராமங்களில் நான் பயணம் மேற்கொண்டபோது தெரிய வந்தது.
இதையடுத்து, மக்கள் என்னை சந்திப்பதற்காக கான்பூரில் உள்ள ஒரு தேநீர் கடையைத் தேர்வு செய்து அங்கு சந்தித்து வந்தேன். இதனால், அந்த தேநீர் கடையின் 70 வயது முதலாளி ரமேஷ் சந்திர குப்தாவும் எனக்கு சிறந்த நண்பராகிவிட்டார்.
இதனால், காலப்போக்கில் அந்த தேநீர்கடைக்கும், ஆர்டிஐ டீக்கடை என்று பெயர் மாறும் அளவுக்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர்.
இந்த தேநீர் கடையை எனது அலுவலகமாக மாற்றினேன். மக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் புகார் மனுக்களைப் பெற்று, ஆர்டிஐ மூலம் தகவல்களை பெற்றுத் தந்தேன். ரேஷன் கடை, சமையஸ் கேஸ் இணைப்பு, நிலப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆர்டிஐ மூலம் தகவல் பெற்று உதவினேன்.
நான் பெரிய மனிதர் அல்ல. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எப்படி தீர்வு கான்பது என்பதை சரியாகச் செய்யும் எளிமையான மனிதன் நான்.
எனக்கு நண்பர்களைத் தவிர வேறுசொத்துக்கள் ஏதும் இல்லை. ஆர்டிஐ சட்டத்தில் பிரிவு 6(1)ன் கீழ் எந்த இந்திய குடிமகனும் மனுத்தாக்கல் செய்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை, அரசு அலுவலகத்தில் இருந்து பெறலாம்"
இவ்வாறு யாதவ் தெரிவித்தார்.

யாதவ் குறித்து இதுவரை உள்ளூர் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் ஏராளமாக வந்துஇருக்கிறது, . பிபிசி இந்தி சேனலும் நேர்காணல் நடத்தி ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அகில இந்திய மாநாடு
சிறப்பு சிறுவிடுப்பு

மார்ச் 14,15,16 தேதிகளில் அமிர்தசரசில் நடைபெறவுள்ள நமது அகில இந்திய மாநாட்டிற்கு சிறப்பு சிறுவிடுப்பு
பெறுவதற்கான உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Sunday, 25 February 2018


ஒப்பில்லா சிறப்புடன்
ஓய்வூதியர் சங்க பொதுக்குழு

24.02.2018 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் அருமைத்தோழர்  D.மாணிக்கம் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகள் தீர்வு குறித்து பொதுச் செயலர் தோழர் S.ராஜசேகரன் விளக்கமாக எடுத்துரைத்தனர். நிதிநிலை குறித்து பொருளர் தோழர் C. ராமசாமி எடுத்துரைத்தார்.

"ஓய்வூதியர் வழிகாட்டி" என்னும் அற்புதமான பயன்மிகு தகவல்களுடன் கூடிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலை 20  ரூபாய்க்குக் கொடுத்தது சேவைச் சிந்தனையின் எடுத்துக்காட்டு.
இந்த நூல் குறித்த அறினமுக உரையை  தோழர் மாலி எடுத்துரைத்தார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அமைப்பின் செயலர் தோழர் சின்னசாமி நூலை வெளியிட   மூத்த தோழர் மு.வரதராஜன் பெற்றுக் கொண்டார்.

80வயதுக்கும் மேற்பட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

தோழர்கள் ஜெகதீசன், ராஜமாணிக்கம், செல்கவராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர் சண்முகம்  நன்றி கூறினார்.

750 உறுப்பினர்களில் சுமார் 400 தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்.

சிறப்பான செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக்த் திகழும் இந்த அமைப்பு மேலும் வளரவும் செயல் சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

Saturday, 24 February 2018


அமைச்சருடன்
சந்திப்பு -24.02.2018

BSNL நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரை இன்று சந்தித்தனர்.

BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.


DOT செயலர் DPE- அணுகி கொடுக்கும் திறன் (affordability) என்ற நிபந்தனையில் இருந்து BSNLக்கு விலக்கு பெறவேண்டும் என்றும், அதன் பின் தான் அதற்கான மத்திய அமைசச்சரவையின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.


அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய மாற்றக்குழுவை DPE வழிகாட்டல்படி BSNL உடனடியாக அமைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


பென்ஷன் பங்களிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ளது போலவே (கடசியாக பெறும் அடிப்படை ஊதியத்தில்) BSNL ஊழியர்களுக்கும் பென்ஷன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அதற்காக தான் அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் : DOT செயலரிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு  அமைச்சர் கூறினார்.


டவர் கார்ப்பரேஷன் : தனியார் மயமாக்கவோ, பங்கு விற்பனைக்கோ அரசு முயற்சிக்காது எனறு அமைச்சர் கூறினார்.

BSNLல் பனிபுரிவோரின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆகக் குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
தனிடவர்கம்பெனி குறித்து விவாதம் நடைபெற்றது. ஆனால் அமைச்சர் இது குறித்து  சாதகமான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஒற்றுமை காத்து
ஓரணியில் நின்று
இமைசோரா விழிப்புடன் செயலாற்றி

சாதனை படைப்போம்