NFTECHQ

Saturday, 7 November 2015

நவம்பர்-7

நவம்பர்7--1917 இந்த பூஉலகில் முதன் முதலாக பாட்டாளிகளின் ஆட்சி உருவான நாள்.மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் முதலாளித்துவ கொடுமைகளுக்கு சாவு மணி அடித்த நாள்!மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்பத்தையும், புதியசமுக அமைப்பையும் நவம்பர் புரட்சி ஏற்படுத்தியது
.சிறுபான்மையேயான சுரண்டல் கும்பலிடம் இருந்து ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை புரட்சியின் மூலம் வென்ற வீர வரலாறே நவம்பர் புரட்சி!உண்மையான ஜனநாயகத்தையும்-அசலான சுதந்திரத்தையும்-சமதர்ம சமூகத்தையும் மக்களுக்க வழங்கியது நவம்பர்புரட்சி!ஏற்ற இறக்கங்களும் வளைவு சுழிவும் கொண்ட திருகுசூழல் பாதையின் ஊடே மனிதகுல குல வரலாறு நகர்கிறது.பின்னடைவுகள் ஏற்ப்பட்டாலும் நவம்பர் புரட்சி வெளிச்சமே மக்கள் முன் உள்ள ஒரே பதை!தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற கொடும் பூதங்களை ஆட்சியாளர்கள் ஏவி விட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வருகின்றனர்.கனிமவளம்-மலைவளம்-நீர்வளம்-வனவளம்-எனஅனைத்தும் கார்ப்பரேட் முதலைகளின் லாபவெறிக்கு தீனி யாக்கபட்டுவிட்டது.பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை என்ற பெயரால் தரைவார்க்க படுகிறது.மதவெறி பாசிசம் கருத்துத்துரிமைக்கு வேட்டுவைக்கிறது.சாதி தீண்டாமை தலைவிரித்தாடுகிறது..
நவம்பர் புரட்சி ஒளியில் இந்தியாவில் சமதர்ம விடியலை காண போராடுவோம்!



Friday, 6 November 2015

போனஸ்
வலியுறுத்தி

கடிதம்

போராட்டம்

நமது சமத்திய சங்கம் தீபாவளிக்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும்  என வலியுறுத்தியும்,  ஊழியர்களின் உணர்வுகளையும், கோபத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் நிர்வாகத்துக்கு கடிதம் டுத்துள்லது. 

தீபாவளிக்குள் போனஸ் வழங்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் எனும் அறவழிப் போராட்டம் நடத்துவோம் என்ற அவுரங்காபாத் மத்திய செயற்குழு தீர்மானத்தையும் நிர்வாகத்துக்கு மத்திய சங்கம்  தெரிவித்துள்ளது.



Tuesday, 3 November 2015

தோழர் மதியின் 
முகநூலிலிருந்து


Yesterday (02-11-15) I spoke at the National Executive meeting at Aurangabad in the evening session.In an hour long speech i touched upon the following points.
1.Bonus issue must be settled immediately.For this if need be NFTE may organise independent struggle.As NFTCL got the bonus order for contract Labourers with the intervention of CLC in Tamilnadu we may also approach the CLC since BSNL has Rs.800 crore more revenue in the last financial year and already DPE confirmed in 2011 itself that no linkage of profit for payment of PLI in CPSUs.
2.Organisational problems in West Bengal,Kerala,Tamilnadu should be resolved immediately to face the next verification in May 2016.
3.To bolster our vote bank the support of like minded unions and associations such as SEWA and TEPU may be sought on a common understanding well before the Seventh Verification.
4. The problems of newly recruited employees (after 01-10-2000) including terminal benefits be solved without any further delay.
5.Ensure Councils at all levels are functioning as per schedule.Almost all councils throughout the country did not meet thrice during the last three years .
6.As two unions are recognised now the management must be approached to ensure agenda points for the council meetings be sent under the signatures of both leader and secretary of the staff side since in many places the leaders of BSNLEU acts as censor board and misuse their position as secretary of the staff side and refuse to forward the inconvenient agenda points given by NFTE .
7.Recognition to Branch unions must be secured as they are the roots of the Union tree.Further the district unions of Metro circles like Chennai and Kolkata needs to be recognised as in the case of Territorial circles.
8.Seperate subsidiary Tower company must be opposed and stopped at any cost as the said formation will do immense damage to the financial position of BSNL

MNP நிலை அக்டோபர் 2015


1.கோவை      +1131
2.கடலூர்       +153
3.குடந்தை     +137
4.தர்மபுரி       +610
5.ஈரோடு       +510
6.காரைக்குடி   --94
7.மதுரை        -75
8.நாகர்கோயில் +1072
9.நீலகிரி        +145
10.புதுவை       +155
11.சேலம்        +98
12.தஞ்சை       -+47
13.திருச்சி       --25
14. தூத்துக்குடி   +61
15.நெல்லை     +1373
16.விருதுநகர்   +23
17.வேலூர்      +177
தமிழகம்        +5489

Monday, 2 November 2015

                 உளமார வாழ்த்துகிறோம்





 




JTO தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு பெற்ற
1.தோழியர் சுமதி 
2.தோழர் கண்ணன்
3.தோழர் சையத் மதார்
4.தோழர் முருகேசன்
5.தோழர் செந்தில்குமார்
6.தோழர் சுந்தரமூர்த்தி
7.தோழர் பத்மனாப கணேசன்
8.தோழர் சிவக்குமார்
9.தோழர் துரைசாமி
10.தோழர் பிரபு
11.தோழர் விஜயசேகர்
12.தோழியர் கீதா
13.தோழர் திருமலைசாமி
14.தோழர் தர்மலிங்கம்



02.11.2015 அன்று JTO பயிற்சியைத் துவக்குகின்றனர்.
அவர்களை உளமார வாழ்த்துகிறோம்.



துவங்கியது மத்திய் செயற்குழு







நன்றி: தோழர் மதி
o]J� �U`�� J�g:p>

Saturday, 31 October 2015

பாராட்டும்

நன்றியும்

ஈரோடு நகரில் பணிபுரிவோர் 20 சதம் வீட்டு வாடகைப்படியும், ஏப்ரல் 2015 முதல் நிலுவைத் தொகையும் அக்டோபர் 2015 சம்பளத்தில்
பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற 21 நகரங்களில் 5 நகரங்க்களில் பணியாற்றுவோருக்கு மட்டுமே இது கிடைத்துள்ளது.
அந்த ஐந்தில் ஈரோடும் ஒன்று.

இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கணக்கியல் அதிகாரி (DRAWAL)

திரு V. சுப்ரமணியம்

அவர்களுக்கும், அவருக்கு துணை புரிந்தோருக்கும் மாவட்டச் சங்க்கத்தின் நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

வாழிய பல்லாண்டு
31.10.2015 அன்று பணி ஓய்வு பெறும்

திரு v.சுந்தரராம்ன் SDE சத்தி
தோழர் K.சுப்ரமணியம் SR TOA பவானி

ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும் பல்லாண்டு
வாழ வாழ்த்துகிறோம்


நல்ல செய்தி

பணி ஓய்வு பெறுவோருக்கு
பணி ஓய்வு பெறும் அந்த மாதத்திலேயே
விடுப்புக்கான பணம் கிடைக்கும்
என்ற உத்தரவு அக்டோப்ர் 2015 முதல்
அமலாகியுள்ளது.
இதற்கு முயற்சி செய்த
நமது சங்கத்தின் தலைவர்களுக்கு
பாராட்டுக்கள்.
மத்திய செயற்குழு

நமது அகில இந்திய சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 01.11.2015 முதல் 03.11.2015 வரை
மகராஷ்டிர மாநிலம் 
அவுரங்க்காபாத்தில் நடைபெறவுள்ளது.

நமது அமைப்பைப் பற்றியும்,
ஊழியர் பிரச்னைகள் குறித்தும்,
நமது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும்
மத்திய செயற்குழு
விரிவாக விவாதித்து
நல்ல பல முடிவுகளை எடுக்கும்.

Friday, 30 October 2015

10,000 ஜீரோ

லாபமோ-நட்டமோ குறைந்த பட்சம் 10000 ரூபாய் போனஸ் உறுதி. இது ஒரு இமாலய சாதனை.இது ஒரு வரலாறு. இப்படியெல்லாம் படித்தோம். பேச கேட்டோம்.
BSNLEU மட்டுமே அங்கீகாரத்தில்  இருந்த் போது நடந்த்து இது.
அதிகமான  சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டோம் போன்ஸ் எதற்கு? இப்படியும் குரல்கள் ஒலித்தன.

தோழர் குபதா உருவாக்கிய பல ஒப்பந்தக்களையும், உத்தரவுகளையும் விமர்சித்து, கேலி செய்து, கிண்டல் செய்து ஏன் அவற்றை எரித்து சாம்பலாக்கிய நிகழ்வுகளும் நடந்தனவே.
NFTE  அங்கீகாரம் பெற்ற பின்பு போனஸ் பெற்றுத் தர எடுத்த முயற்சிகளைக் கெடுத்தொழித்த நிகழ்வுகளும் நெஞ்சில்  நிழலாடுகிறதே.

ஒற்றுமையை விரும்பாதோர் யார்? ஆனால் ஒற்றுமையின் 
பெயரால் உண்மைகள் ஒளிந்து போகக்கூடாது அல்லவா? 

இது போன்ற ஒலிகள் கதிராக வீசவில்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.