NFTECHQ

Sunday, 30 June 2013


பணி முடிந்து  பணி தொடர்கிறது. 

விதிகளின் கட்டுப்பாடுகள் தகர்ந்தன 
பணியில் இருந்த காலத்திலேயே! 
தடையில்லா வேகப் பயணம் தொடர்கிறது. 
ஆயீரத்திற்கும்  மேல் பிறைகள் காண வாழ்த்துக்கள்.

Saturday, 29 June 2013

நீடூ வாழ்க!

30.06.2013 அன்று பணி நிறைவு பெற்று விடை பெறும் 
அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்


திரு. C.பெரியசாமி, பொது மேலாளர், ஈரோடு
திரு.M.M.ஈஸ்வரன், தலைமை கணக்கு அதிகாரி (நிதி)
தோழர் A.நடராஜா TGM(O)
தோழர் K.R.குமார், SSS(O)
தோழர் S.அய்யாவு STS(O)
தோழர் சையத் மஹபூப் பாஷா TM

தோழர் R.ஜெயகுமார் TM

Tuesday, 25 June 2013

தகைமையாளர்!

“1966 நெய்வேலியில் (மந்தாரகுப்பம்) அன்றைய சேலம் கோட்ட மாநாடு நடைபெற்றது. ஒரு பிரிவினர் சார்பாளர்கள் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டுமென்ற பிற்போக்கு தனமான கோரிக்கையை வைத்தனர். முறையற்ற இக் கோரிக்கையினை இயல்பாகவே வரவேற்புக் குழு ஏற்கவில்லை. மாநாடு விவாதங்கள் துவங்குவதற்கு முன்பாக இதையே காரணமாகச் சொல்லி அந்த அணி அடாவடி செய்து வெளியேறியது. வரவேற்புக் குழு அளிக்கும் உணவை ஏற்கமாட்டோம் என்று வெளியே போனார்கள். சார்பாளர்களில் ஒரு பகுதியினர் சாப்பிடாததால் வரவேற்புக் குழுவும் கோட்ட சங்க நிர்வாகிகளும் தாமாக முன் வந்து உண்ணாநிலை மேற்கொண்டனர். அப்போது மாநிலச் செயலராக இருந்த தோழர் ஜெகன் தாமும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.”

-          தோழர் ஜெகன் நினைவு நாளில் கடலூர் தோழர் டி.ரகுநாதன் ஜனசக்தி
                         இதழில் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து.

25.06.2013 அன்று வேலூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் பங்கேற்ற தோழர்களில் சில உண்ணாமல்  இருந்த நிலையில் வரவேற்புக் குழு அளித்த அருசுவை உணவை ரசித்து அருந்தியவர்களுக்கு தோழர் ஜெகன் வாழ்க்கையோ அவரது வழிமுறையோ தெரியாமல் இருக்கலாம். அதை சுட்டிக்காட்டிய என்னை அவர்கள் மன்னிப்பார்கள் என்றே நம்புகிறேன். – மாலி.

Monday, 10 June 2013

நிறைவு

சென்ற ஆண்டு போட்ட ஒப்பந்தம் ஒரு ஆண்டிற்குப் பின் தொலைத் தொடர்பு துறை இன்று அளித்த ஒப்புதலால் அமுலுக்கு வருகிறது. ஒன்று பட்டு போராட தயாரான ஊழியர்கள், அதிகாரிகள் பாராட்டிற்குரியவர்கள். ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்துள்ளது.  இந்த ஒற்றுமை தொடர்வது நிறுவனம் காத்திட ஊழியர்களின் உரிமைகளைப் பெற்றிட.மிகவும் தேவையானது.  

Thursday, 6 June 2013

நெஞ்சம் மறப்பதில்லை

அவர் குடியிருந்த வீட்டில் ஒரு வீட்டின் முன்அறை வரவேற்பரையாக, தொழிற்சங்க அலுவலகமாக செயல்பட்டது. அன்று தோழர்களுடன் அவரை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். தொலைக்காட்சியில் கர்ணாடக இசை வழிந்தது. எங்களுடன் பேசியவாரே அவர் அதையும் வெகுவாக ரசித்தார். சொந்த குழந்தைகளுடன் பேசிட நேரமில்லாமிலிருக்கும் அவருக்கு  இசையில் அதுவும் கர்ணாடக இசையில் இவ்வளவு ஈடுபாடா? அவரிடமே கேட்டுவிடுவோமே என்று எனக்கு தோன்றியது. ஆமாம் கர்ணாடக இசையினை இவ்வளவு ஆர்வமாக ரசிக்கிறீர்களே உங்களுக்கு அந்த இசையில் அவவளவு ஈடுபாடா? இது நான். ஏன் இந்த கேள்வி? இது அவர். இல்லை இந்த பாட்டு எந்த ராகம் என்று சொல்வீர்களா? இது எனது கேள்வி. அவர் அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஒரு கேள்வி கேட்டார். உங்களில் யாருக்காவது இந்த பாட்டு என்ன ராகம் என்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அனைவரும் அப்பாவிகள் என்று ஒரு சேர சொன்னோம். அப்படியா! இந்த பாட்டு ’காபி’  ராகத்தில் அமைந்தது என்று சொன்னார். எங்கள் தலைவர் சகலகலா வல்லவர் என்ற பெருமிதம் எங்களுக்கு. உங்கள் இசை அறிவுக்கு பாரட்டுகள் என்றேன். அதெல்லாம் இல்லை எனக்கு ஒரு விசயம் முதலில் தெரிந்து விட்டது அதனால் எனக்கு பதில் சொல்வதில் சிக்கல் இல்லாமல் போய்விட்டது என்றார் அவர். அப்படி என்ன தெரிந்து கொண்டீர்கள் என நான் கேட்டேன். வழக்கமான அந்த மந்தகாசமான சிரிப்பு அறை முழுக்க பரவியது. சிரிப்பை நிறுத்தி விட்டு சொன்னார் ‘உங்களில் யாருக்கும் ராகம் பற்றிய ஞானம் ஏதுமில்லை என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிந்து கொண்டேன். எனவே நான் எந்த ராகம் பற்றி சொன்னாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே எனக்குத் தெரிந்த ஒரு ராகத்தின் பெயரைச் சென்னேன் அவ்வளவு தான்’ என்றார். கேள்விக்கு எதிர் கேள்வி போட்டு பதில் சொன்ன அவரது திறமை வியப்பாக இருந்தது.  இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.  அவர் மறைந்து விட வில்லை. அனைவரின் நெஞ்சங்களில் நினைவுள்ளவரை வாழ்வார். 

Monday, 3 June 2013

கிளை மாநாடு + பாராட்டு விழா.

03.06.2013 அன்று பவானி கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தோழர் பாரதி தலைமை தாங்கினார். பல கிளைச் செயலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்டச் செயலர் தோழர் குமார் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் சங்க  நிர்வாகிகள் தோழர்கள் ஜெயராமன், பங்காரு, குல்சார் அகமது, நல்லுசாமி, மெளனகுருசாமி ஆகியோர் பங்கேற்றனர். தோழர் செல்வராஜன், தோழர் மாலி பங்கேற்று வாழ்த்தினர்.
நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக இருந்தது. தோழர் குருமூர்த்தி தலைவராகவும், தோழர் நாகராஜன் செயலராகவும், தோழர் பாலசுப்ரமணியன் பொருளராகவும் தேர்வு பெற்றனர்.
நெடுங்காலம் நமது சங்கத்தில் உறுப்பினராக இருந்தவரும், பணி ஓய்வு பெற்ற தோழர் கிருஷ்ணன் குட்டி பாராட்டப்பட்டார். தோழர் முருகானந்தம் நன்றி நவின்றார்.

Friday, 31 May 2013

தோழர் RRB

R.R.பாலசுப்ராமணியன் அவர்களை தோழர் RRB என அழைப்பதுதான் அவருக்கு நாம் தரும் மரியாதை. துணைக் கோட்ட அதிகாரியாக பணியாற்றி பணி ஒய்வு பெறுகிறார்(31.05.2013). தோற்றத்தில் எப்படியோ அப்படியே பழகுவதிலும் இனிமை. சிறந்த ஊழியராக, அதிகாரியாக பணியாற்றியவர். 

NFPTE சங்கத்தில் விருதுநகர் கோட்டச் செயலராக தொழிற்சங்கப் பணியாற்றியவர். அவரது தொழிற்சங்கப்பணி அதிகாரிகள் சங்கத்தில் தொடர்கிறது. இந்திய நாட்டில் முதன் முறையாக ஒரு இணைய தளத்தை தொழிற்சங்கப் பணிக்காக துவங்கியது தமிழ் மாநிலச் சங்கம். அதை நிறுவிட, நிர்வகிக்க முழுமையாகப் பணியாற்றியவர். 2002 ஆம் ஆண்டு வெற்றி மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அவரை பாராட்டி மகிழ்ந்தோம்.  தமிழகத்தில் இணைய தளம் இருக்கும் வரையில் அவரது நினைவு நீங்காதிருக்கும்.


அவரது ஓய்வு காலம் பயனுள்ளதாக , நெடியதாக, இனியதாக, நலமுடன் அமைந்திட வாழ்த்துகிறோம்!   

இனி இனிய ஓய்வு!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பல்லாண்டு பணி ஆற்றி 31.05.2013 அன்று பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் பல்லாண்டு பயனுள்ள, நலமாக வாழ்க என வாழ்த்துகிறோம்!

                        1. B.பழனியப்பன் DGM (TR).
                        2. N.தீனதயாளன் SSS
                        3. P. கருணாநிதி   SSS
                        4. K.N.பொன்னுசாமி STS
                        5. K. மாசிலாமணி STS
                        6. R. முருகபூபதி TM
                        7. P. கிருஷ்ணன் குட்டி STS


Monday, 27 May 2013

அஞ்சலி

தோழர் BR மறைந்தார்

BR என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் தோழர் B.ரஜேந்திரன் இன்று அதிகாலை மறைந்தார். நமது சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். லைன்ஸ்டாப் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர் சங்கத்தில், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அன்னாரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. 
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

Thursday, 23 May 2013

வாழ்த்துவோம்!

திருமண அழைப்பிதழிலிருந்து

"எங்கு அன்பு உண்டோ அங்கு வாழ்க்கை உண்டு"
மணமக்கள் 
செல்வி Dr.K.சிந்துஜா     செல்வன் Dr.M.ராஜேஷ்
[தோழர் P.காமராஜ் - விஜயலட்சுமி
புதுச்சேரி ]

பல்லாண்டு வாழ்க! 

Tuesday, 21 May 2013

வாழ்த்துவோம்!


திருமண அழைப்பிதழ்களிலிருந்து. . . . . .

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முதுடைத்தாமம் நிறை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்
           n  ஆண்டாள் பாசுரம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
           n  தமிழ் மறை
பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரைவிட்டுப்
பிரிந்துவந்து பெருநோக்கில் கடையறம் ஆற
மற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றும்
பண்பாட்டின் அடிப்படையில் என்னப் பதியாய்க் கொண்டென்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நலநோக்கில் அன்போடு கருணை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மான்பு மிக்க என்றன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                     n  வேதாந்த மகரிசி
                மணவிழா காணும்
         செல்வன் நிர்மல்ராம்                            செல்வன் சதீஷ்குமார்
         செல்வி    ராதிகா                                 செல்வி    ஜனனி
         [தோழர் பட்டாபிராமன்-                     [தோழர் ராமகிருஷ்ணன்-
                       ஹேமலதா       ]                                            கலாவதி ]

                                         பல்லாண்டு வாழ்க!
                                               22,23.05.2013 





Tuesday, 30 April 2013

மே தின வாழ்த்துகள்

உலகில்  செல்வங்கள் 
உருவாக காரணமான 
பிரம்மாக்கள் கொண்டாடும் 
ஒரே  விழா. 
ஒரு நாள் 
நிச்சயம் விடியும்! 
உழைப்பவர் தலைமையில் 
அமையும் ஆட்சி! 
இல்லாமை, கல்லாமை 
இல்லாமல் போகும். 
வாழ்த்துகள்!!

Friday, 26 April 2013

புதிய வரலாறு

ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கத்திற்கு அங்கீகாரம் என்னும் புதிய வரலாறு துவங்கியுள்ளது. அதை வரவேற்ப்போம். ஊழியர் உரிமைகளைக் காத்திட, இழந்த உரிமைகளை மீட்டிட, நிறுவனம் காத்திட ஒன்றுபட்டு செயல்படுவோம். அரோக்கியமான போட்டியாக இருக்கட்டும். வாய்ப்பளித்த ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. 

Sunday, 21 April 2013

இது எப்படி இருக்கு?


தலைப்பு புதிதல்ல. ஆனால் செய்தி புதிது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் போட்டியிட்ட சங்கங்கள் பெற்ற வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. 18 சங்கங்கள் போட்டியிட்டன. தமிழகத்தில் சில மாவட்டங்களில் சில சங்கங்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. ஆனால் வித்தியாசமாக ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து சங்கங்களும் குறைந்தது ஒரு வாக்காவது பெற்றுள்ளது!  இதை ஒரு வகையான சோசலிசம் என்று சொல்லலாமா? 

Saturday, 20 April 2013

ஊர் கூடி


தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் ஊர் கூடி தேர் இழுப்பார்கள். அது ஒரு கூட்டு முயற்சி. பங்கேற்போர் தங்கள் சக்திக்கேற்ப இழுப்பார்கள். தேர் நிலை வந்து சேரும். இது நடைபெற்று முடிந்த தேர்தலுக்கும் பொருந்தும். தமிழகத்தில் நமது உறுப்பினர் எண்ணிக்கையை விட  கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இது ஊழியர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்.
கடலூர், காரைக்குடி, கும்பகோணம், சேலம், தஞ்சை, நெல்லை, திருச்சி, வேலூர், மாநில அலுவலக மாவட்டங்கள் வெற்றிக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்று தந்தன.(2126). கோவை, தருமபுரி, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், நீலகிரி, பாண்டி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றன. இவற்றில் BSNLEU சங்கம் கூடுதலாகப் பெற்ற வாக்குகள் 1382. [2126-1382 =744] மொத்தத்தில் அவரவர் சக்திக்கெற்ப பங்களித்துள்ளனர். நாடு முழுவதும் கோலி சங்கத்திற்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அதற்கு தமிழன் தான் காரணம் என்பது சரிதானா?  தமிழகத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துரோகிகளை தேடிக் கொண்டிருக்கவில்லை என்பதை கவனிப்பது நல்லது.
இது குறித்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம் ஏனெனில் உடனடியான அடுத்த பணி வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர் சேர்க்கும் பணி முன் நிற்கிறது.

Friday, 19 April 2013

தேர்தல் முடிவு?

புதிய அங்கீகார விதிகளின்படி இது முதல் தேர்தல். முதல் இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்துடன் செயல்பட ஊழியர்கள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களின் முடிவினை ஏற்போம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்பட உறுதியேற்போம். போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்த  பொதுத் தேர்தலில் 49(ஓ) என்ற வாய்ப்பு தரப்பட்டது. அதைப் போலவே இந்த தேர்தலில் எண் 14 பயன்பட்டுள்ளது. நாடு முழுமையும் அந்த எண்ணிற்கு வாக்களித்துள்ளனர். இது ஏன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அதை துரோகம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் காக்க, ஊழியர் நலன் காக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.

Thursday, 18 April 2013

ஒரு வரலாற்றின் முடிவு


டிசம்பர் 31 ஆண்டுதோறும் வரும் நிகழ்வு. பழையன கழிதல் இயல்பானது. கொண்டாட்டத்துடன் துவங்குகிறது புத்தாண்டு.
1954 நவம்பர் 24 ‘தேசிய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனம்’  ஒரே ஒரு சங்கமாக தபால் தந்தி துறையில் துவக்கப்பட்ட நாள். 1968 செப்டம்பர் வரை அது நீடித்தது. கருத்துக்கள் பல என்றாலும் சங்கம் ஒன்றே என்பதை அரசும் தொழிலாளரும் ஏற்று செயல்பட்டனர்.  அரசு தனது அதிகார பலத்தால் அதை உடைத்தது. கருத்துக்கொரு சங்கம் என்ற சகாப்தம் துவங்கியது. பொதுத்துறையான பிறகும் ஒரே சங்கம் என்பது தோழர் குப்தாவின் உண்ணத லட்சியமாக இருந்தது. அனால் அதைக் கொள்வார் இல்லாததால் வீணானது.
அவரது கொள்கைகளை ஏற்க மறுத்தவர்கள் கூட அவர் போட்ட பாதையை விடவில்லை. ஒரே ஒரு சங்கம் – அதற்கு மட்டுமே அங்கீகாரம் என்பது நீடித்தது.
6வது தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். ஒற்றை அங்கீகாரம் இன்றுடன் முடிவுக்கு வரும். ஆளும் கட்சி – எதிர்கட்சி என்ற நிலை முடிந்து விட்டது.
வரலாற்று தேவைகளை உணர்ந்து ஒன்றுபட்டு சிந்திப்பது, செயல்படுவது கட்டாய தேவையாகியுள்ளது.
காலத்தின் தேவையை உணர்ந்து செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு இது.
நல்ல துவக்கம்! நல்ல முடிவுகளைத் தரட்டும்!!

Monday, 15 April 2013

சிந்திப்பீர் வாக்களிப்பீர்!


அடுத்த மூன்றாண்டுகள் மட்டுமல்ல
நம் அனைவரின் வாழ்க்கையே
உங்கள் கையில்.
சிந்திப்பீர் வாக்களிப்பீர்
ஒன்பது கரங்களில்!

Sunday, 14 April 2013

தினம் ஒரு கேள்வி – 13.


முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. ராஜா 2G  அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் தோழர் நம்பூதிரி அன்று அமைச்சர் ராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அமைச்சர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கடிதத்தில் கையொப்பம் இட்டு கொடுத்தார். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் அமைச்சர் ராஜா எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என தெரிவித்தது. இது ஏன்? TEPU சங்கத்துடனான உறவுக்காகவா? அல்லது வெளியில் சொல்லமுடியாத ஏதாவது காரணத்திற்காகவா?
நன்றி: சென்னை இணைய தளம்.

தினம் ஒரு கேள்வி – 12.


தோழர் அபிமன்யூவும் அவரது தோழர்களும் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறமுடியாமல் இருப்பதற்கு NFTE மற்றும் பிற சங்கங்கள் தான்  காரணம் என் குறை கூறி வருகிறார்கள். இது முற்றிலும் உண்மை கலப்பில்லாத பொய். தவறான பிரச்சாரம். உண்மை என்ன? லாபத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களில் 78.2 அகவிலைப்படி இணைப்புடன் ஊதிய நிர்ணயம் மற்றும் 5 ஆண்டுகள் ஊதிய உடன்பாடு போட DPE வழிகாட்டுதல் இருந்தது. ஆனால் தோழர் நம்பூதிரி ஆணவமாய் தனித்து 2010 இல் ஊதிய உடன்பாட்டில் கையொப்பம் இட்டார். இது தெரிந்தே செய்த குற்றம். விளைவு ஊழியர்கள் இதுவரை 75 மாதங்களில் மொத்தமாக ரூ.6000 கோடி ஊதியத்தில் இழந்துள்ளனர். தனது குற்றத்தை, தனது சரணாகதியை மறைத்து NFTE  மீது அவதூறு செய்வது நேர்மை தானா?
நன்றி: சென்னை இணைய தளம்.