NFTECHQ

Saturday, 5 January 2019


அழைப்பு துண்டிப்பு

நிறுவனங்களுக்கு அபராதம்

அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க் பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினையான அழைப்பு துண்டிப்புக்குத் தீர்வு காணும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதை மீறும் நிறுவனங்களுக்குக் குறிப்பிடத்தகுந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வாறாக, அரசின் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ .58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4ஆம் தேதி மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மனோஜ் சின்ஹா அளித்துள்ள பதிலில், “ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அழைப்பு துண்டிப்பு விதிமுறையை மீறியதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐடியா நிறுவனத்துக்கு ரூ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ 3 லட்சமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ 10.5 லட்சமும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ 22.5 லட்சமும், டெலினார் நிறுவனத்துக்கு ரூ 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதுஎன்று தெரிவித்தார்.
அழைப்பு துண்டிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, வாடிக்கையாளர்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டறிய .வி.ஆர்.எஸ். என்ற குரல் பதிவு அமைப்பும் அரசு தரப்பிலிருந்து நிறுவப்பட்டு, குறைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், இந்த அமைப்பில் 2.5 கோடிப் பேர் இணைந்துள்ளதாகவும் மனோஜ் சின்ஹா கூறினார்.
இது செய்தி.
நமது கேள்வி
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள்
அரசின் செல்லப்பிள்ளைகளா?

Thursday, 3 January 2019


வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல்!


விஜயா ங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், வங்கிகள் இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நேற்று (ஜனவரி 2) டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் முதன்முறையாக மூன்று வங்கிகள் இணைப்பு நடைபெறவுள்ளது. விஜயா மற்றும் தேனா வங்கி ஊழியர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். இதனால், வங்கி ஊழியர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறியுள்ளார்.
தேனா வங்கியில் உள்ள பங்குதாரர்களுக்கு 110 பங்குகள் வழங்கப்படும் என்று பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. அது போன்று, விஜயா வங்கி பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்துள்ள ஒவ்வொரு 1,000 ஷேர்களுக்கும் 402 பங்குகள் வழங்கப்படும். இந்த இணைப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்ககங்க்களை மதிக்காத அரசின் ஆணவப் போக்கு இது.

Tuesday, 1 January 2019


2019 புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாற்றங்கள் வரும் ஆண்டாக
ஏற்றங்கள் தரும் ஆண்டாக 2019 அமைய வாழ்த்துக்கள்.

உலக அமைதிக்கு ஊறு நேராத ஆண்டாக 2019 அமையட்டும்.
நமது தேசத்தில் 2019ல் மக்கள் துயர் தீர்க்கும் ஆட்சி   உருவாகட்டும்.
இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத ஆண்டாக 2019 அமையட்டும்.
இயற்கை இன்னல் தராத ஆண்டாக 2019 அமையட்டும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் துயர் நீங்கி விடியல் பெறும் ஆண்டாக 2019 அமையட்டும்.
உழைக்கும் மக்கள் அனைவரும் உயர்வு பெறும் ஆண்டாக 2019 அமையட்டும்.
BSNL ஊழியர்கள் ஊதிய  உயர்வு பெறும் ஆண்டாக 2019 அமையட்டும்.
BSNL ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வந்தவுடன் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வரும் ஆண்டாக 2019 அமையட்டும்.
அனைவருக்கும் மீண்டும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



வாழிய  பல்லாண்டு
31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற
தோழியர் P.சரோஜா SDE
தோழர் N.ராமசாமி  JE
தோழர் R. தங்கவேலு  OS
தோழர் R. பாலசுப்ரமணியன்  OS
தோழர் G.செல்வன் TT
தோழர் M.ராமசாமி TT
தோழர் E. தர்மன் TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி
01.01.2019 முதல் விலைவாசிப்படி 3.2 சதவிகிதம் உயரும். மொத்த விலைவாசிப்படி 138.8 சதவிகிதமாக இருக்கும்.

Tuesday, 25 December 2018



இனிய
கிருஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள்

Monday, 24 December 2018


பெரியார்
ஜாதிகளும், மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது; பெண்களை அடிமைப்படுத்துகிறது, எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார். 45 ஆண்டுகளுக்கு முன்பு (1973) இதே நாளில்தான் (டிசம்பர் 24) பெரியார் இந்த உலகை விட்டு மறைந்தார்.

Monday, 17 December 2018



மாவட்டச் செயற்குழு
நாள்    : 18.12.2018
காலம்   : காலை 10 மணி
இடம்    : டெலிபோன்பவன், ஈரோடு

ஆய்படு பொருள்

ஒத்திவைக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தம்
மாவட்ட அளவிலான பிரச்னைகள்

அனைவரும் வருக.
உரிய நேரத்தில் வருக

வாழ்த்துக்களுசன்
N. பழனிவேலு
மாவட்டச்செயலர்

Tuesday, 11 December 2018


மகாகவி  பிறந்த தினம்- டிசம்பர் 11
தமிழ் மொழியை பாமரனும் உணரும் வண்ணம் பாருக்குக் கொடுத்த மகாகவி பாரதி பிறந்ததினம் இன்று.
புரட்சி என்ற வார்த்தையை முதல் முதலாக தமிழ் மொழியில் சொன்ன கவிஞன்.
பாப்பா பாட்டு முதல் தேசிய அரசியல், உலக அரசியல் வரை தமிழ் மொழியில் பாடிய அந்த மகாகவியின் புகழ் வாழும்.

Thursday, 6 December 2018


டிசம்பர் 6
அம்பேத்கார் நினைவு தினம்
போராளியாய் வாழ்ந்தவ்ர்.
போராட்டம் மூலமே விடியலை அடைய முடியும் என்று உறுதிபடச் சொன்ன மாபெரும் போராளி அன்ணல் அம்பேத்கார் நினைவு தினம் இன்று.

Tuesday, 4 December 2018


JTO தேர்வு காலியிடங்கள்
ஜனவ்ரி 2019ல் 2016-17ஆம் ஆண்டுக்கான JTO தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

OC/MBC - 176
SC           -     56
ST           -     55

Sunday, 2 December 2018


ஒத்திவைக்கப்பட்டது.
காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றும் இன்றும்  நடைபெற்றது பேச்சுவார்த்தை.
BSNL நிறுவனத்தின் CMD மற்றும் DOT செயலருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
சில கோரிக்கைகளில் முன்னேற்றம்.
ஊதிய மாற்றம் என்னும் முக்கியமான கோரிக்கையில் முன்னேற்றம் இல்லை.
அமைச்சருடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும்.
அமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 10.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என BSNL நிறுவனத்தின்  தலைமை அதிகாரிக்கு (CMD) எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைநிறுத்தம் வெற்றி பெற வேண்டும்
03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றி பெற்ச் செய்ய வேண்டியது நமது கடமை.
இந்த வேலைநிறுத்தம் நம் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஒன்று.
01.01.2017 முதல் தர வேண்டிய ஊதிய மாற்றத்தை இரண்டு ஆண்டுகள் கடந்த் பின்னும் இழுத்தடிக்கும் அரசின் போக்கை மாற்றிட பல்வேறு இயக்கங்கள் நடத்திய பின்னும் அலட்சியப் பார்வை காட்டும் அரசின் மீது நாம் தொடுத்துள்ள கடைசி ஆய்த்மே இந்த வேலைநிறுத்தம். இனியும் போராடாமல் இருப்பது தவறான வரலாற்றை உருவாக்கி விடும்.

பணி ஓய்வு பெறுபவர்கள் போராடலாமா
என்ற கேள்வி வழக்கம் போல் எழுந்திள்ளது. ஓய்வூதியப் பலன்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் எழும் கேள்வி இது. 2000 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் போராடி அரசு ஓய்வூதியத்தை நாம் பெற்றோம்.  
ஓய்வூதிய விதி சொல்வது என்ன?
ஒருவர் பணி ஓய்வு பெறும் மாதத்தில் அவர் பெறும் அடிப்படைச் சம்பளமே ஓய்வூதியப் பலங்களுக்கான அடிப்படை. ஆகவே போராட்டத்தில் பங்கேற்பதின் காரணமாக ஓய்வூதியப் பலன்களில் எந்த் ஒரு பாதிப்பும் வராது.
மேலும்இந்த்ப் போராட்டம் காரணமாக ஊதிய மாற்றம் பெறும்போது ஓய்வூதியப் பலன்களும் கணிசமாக உயரும்.
4கி அலைக்கற்றையை நமது நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் நடைபெறும் வேலைநிறுத்தம் இது. இதனால் நிறுவனம்  வளர்ச்சி பெறும். அதனால் நமக்கும் முன்னேற்றம் கிடைக்கும்.
நமது நிறுபவனம் 4ஜி சேவை கொடுத்தால் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியும் லாபமும் தடைபட்டு விடும் என்ற நோக்கத்துடன் அரசு தாமதிக்கிறது. அரசின் இந்த் போக்கை மாற்றி 4ஜி சேவையை நமது நிறுவனமும் வழங்குவதற்காகவும் இந்த போராட்டம்.

போராட்டங்களே நம்மை முன்னேற்றியிருக்கின்றன. இதுவே சரித்திரம் சொல்லும் பாடம்.

நாளை (03.12.2018) முதல் துவங்கும் வேலைநிறுத்தத்தில் உறுதியுடன் போராடுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.
இறுதியில் வெற்றி நமக்கே.

வாழ்த்துக்கள்