NFTECHQ

Saturday, 24 October 2015

வங்கித் துறை விற்பனைக்கு!



 வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, மக்களுக்குச் சேவை செய்யத்தான்
வங்கித் துறையை எப்படியாவது முழுவதுமாகத் தனியார் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
கடந்த ஆகஸ்ட் 14 அன்று இந்திர தனுஷ்என்ற மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரு பெரிய வங்கிகளின் தலைமைப் பொறுப்புக்குத் தனியார் துறையிலிருந்து உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பேமெண்ட் வங்கிகள் என்ற பெயரில் 11 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி என்ற பெயரில் இரு புதிய தலைமுறை வங்கிகள் துவங்கப்பட்டுள்ளன. சிறிய நிதி வங்கிகள் என்ற பெயரில் 10 தனியார் வங்கிகள் களம் இறங்கியுள்ளன. முத்தாய்ப்பாக ஐடிபிஐ என்ற பொதுத் துறை வங்கியில் மத்திய அரசின் பங்கு 76%லிருந்து 49%ஆகக் குறைக்கப்பட்டு, தனியார்மயமாக்கப்படப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் மத்திய அரசின் பங்கு 52%ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் கூடவே வெளியாகியுள்ளது.
கிராம மக்களின் நிதிச் சேவையில் 40 ஆண்டுகளாகத் தலைசிறந்த பங்காற்றிவருகின்றன 56 கிராம வங்கிகள். 27 மாநிலங்களில் 639 மாவட்டங்களில் 19,000 கிளைகள் மூலமாக 80,000 அதிகாரிகளும், ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கிராமப்புற எளிய மக்களுக்கு சேவை அளிக்கின்றனர். 3 கோடி சாதாரண மக்களுக்கு 2 லட்சம் கோடிக் கடன் வழங்கியுள்ள இவ்வங்கிகளின் பங்குகளை 49% வரை தனியாருக்கு விற்க இவ்வாண்டு துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தனியார் மயத்தை நோக்கி
நிதியும், நீதியும் மறுக்கப்பட்ட விவசாயப் பெருங்குடியினருக்கு அரும்பணி செய்துவரும் 93,000 பிரதம வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் பணி முடக்கப்பட்டு, அவை மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வியாபார முகவர்களாகச் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு நபார்டு வங்கி மூலமாக. ஆக, இவை அனைத்தும் தனியார்மயத்தை நோக்கி ஒட்டுமொத்த வங்கித் துறையையும் வேகமாகத் தள்ளிவிடும் முயற்சிகள்.
பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சி எப்போதுமே பொதுத் துறைக்கு எதிராகத்தான் செயல்பட்டிருக்கிறது. பாஜகவின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கம் வங்கிகள் தேசிய மயத்தைக் கடுமையாக எதிர்த்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது 2000 டிசம்பரில் பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளை 33%ஆகக் குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்ட எதிர்ப்பாலும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பாலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
வரலாற்றின் இமாலயத் தவறு
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று 2008-ல் அறிக்கை சமர்ப்பித்த ரகுராம் ராஜன்தான் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர். வங்கிகள் தேசிய மயம் என்பதே வரலாற்றின் இமாலயத் தவறுஎன்று திருவாய் மலர்ந்தருளியுள்ள அர்விந்த் சுப்ரமணியன்தான் பிரதமர் மோடியின் முக்கியப் பொருளாதார ஆலோசகர். மத்திய அரசும், நிர்வாகத் துறையும் இணைந்து வங்கிகளை 1955க்கு முன்பிருந்தபடி முழுமையாகத் தனியார் கைகளில் சேர்க்க பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றன. “1969-ல் பெரிய வணிக வங்கிகள் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்னால் தனியார் வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைகளில் வைத்திருந்த வியாபார நிறுவனங்கள், வங்கிகளின் மிகப் பெரும் அளவிலான கடனைப் பெரிய, வளர்ந்த வியாபார நிறுவனங்களுக்கே வழங்கிவந்தனஎன்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.
சூறையாடப்பட்ட சேமிப்பு
1947-ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1969 வரை 557 தனியார் வங்கிகள் திவாலாகி, அவற்றில் போடப்பட்டிருந்த பொதுமக்களின் சேமிப்பு பெரும்பாலும் சூறையாடப்பட்டது. 1969-க்குப் பின்னரும் பேங்க் ஆஃப் தஞ்சாவூர், பேங்க் ஆஃப் தமிழ்நாடு, பேங்க் ஆஃப் கொச்சின், நெடுங்காடி பேங்க் உள்ளிட்ட 20 தனியார் வங்கிகள் திவாலாகின. ஒரு வித்தியாசம் - இவ்வங்கிகளெல்லாம் பொதுத் துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டதால் பொதுமக்களின் சேமிப்புக்குப் பங்கம் வரவில்லை. ஆனால், தனியார் வங்கிகளின் நஷ்டம் முழுவதையும் பொதுத் துறை வங்கிகளே ஏற்க நேரிட்டன. 1994-ல் துவங்கப்பட்ட புதிய தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் பேங்க்பத்தே ஆண்டுகளில், 2004-ல் ரூ.1,100 கோடி நஷ்டத்துடன் திவாலாகியது. பொதுத் துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்தான் இதனைச் சுமக்க நேரிட்டது.
1960-களின் மத்தியில் விவசாயத் துறை நாட்டின் மொத்த உற்பத்திக்கு 44% வரை பங்களித்து வந்தபோது, அத்துறைக்குத் தனியார் வங்கிகள் வழங்கிய கடன் மொத்தக் கடனில் 0.2% மட்டுமே. 1969-க்கு பிறகுதான் பொதுத் துறை வங்கிகள் வழங்கும் மொத்தக் கடனில் 40% ஏழை, எளிய மக்களுக்கான முன்னுரிமைக் கடனாக இருக்க வேண்டும்; அதில் 18% கட்டாயமாக விவசாயத் துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் நிகழ்ந்தன. அதுதான் நம் நாடு உணவுத் தன்னிறைவை எட்டுவதற்குக் கணிசமாகப் பங்காற்றியது.
மக்களுக்கான வங்கி
தேசிய முன்னுரிமைகளான விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி, வேலைவாய்ப்பின் பெருக்கம், புதிய தொழில்முனைவோருக்கு ஊக்கம், பின்தங்கிய பிரதேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு வங்கித் துறை சேவை புரிய வேண்டும்என்பதே வங்கித் துறை தேசியமயமாக்கப்பட்ட சட்டத்தின் முன்னுரையில் அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது. வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் - பெரும் பணக்காரர்களுக்கான வங்கிச் சேவை என்பதிலிருந்து மக்களுக்கான வங்கிச் சேவையாக மாற வேண்டும் என்பதே. அத்துடன் கிராம, சிறு நகர்ப்புறங்களில் ஏராளமான கிளைகள் திறந்து ஏழை மக்களுக்கான கடன் சேவையை அதிகரிப்பதுதான்என்கிறது ரிசர்வ் வங்கி அறிக்கை. மேலும், 2010 ரிசர்வ் வங்கி அறிக்கை “1993 முதலான 17 ஆண்டு காலம் தனியார் வங்கிகள் செயல்பட்டதன் அனுபவத்தைப் பரிசீலித்தால், ஒன்று அவை திவாலாகிவிட்டன அல்லது மற்ற வங்கிகளோடு இணைந்துவிட்டன அல்லது வளர்ச்சி குன்றிவிட்டனஎன்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் அந்த அறிக்கை தனியார் நிறுவனங்களை வங்கிகள் துவங்க அனுமதித்தால் அவை சுயநலத்தோடு பாரபட்சமாகச் செயல்படும். எனவே, உண்மையான கடன் தேவை உள்ள பகுதிகளுக்குக் கடன் கிடைக்காது; அவை வாடிக்கையாளர் தேவைகளைப் புறக்கணித்து தங்களது தேவைக்கு மட்டுமே செயல்படுமாதலால் முரண்பாடு உருவாகும். எனவே, தனியார் முதலாளிகளை வங்கிகள் துவங்குவதைத் தடுப்பதன் மூலமாக இத்தகைய முரண்பாடுகளைத் தவிர்ப்பதோடு, 1969க்கு முன்பு வரை வங்கிகள் சில தனிநபர்கள் கையில் ஏகபோகமாகக் குவிந்திருந்த நிலைமையையும் தவிர்க்கலாம்என்கிறது.
2008 செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு அந்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகின. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய அந்நெருக்கடியின் தாக்கம் இந்தியாவில் மட்டுப்பட்டிருந்ததற்குக் காரணம் 75%க்கும் மேற்பட்ட வங்கித் துறை வியாபாரம் பொதுத் துறை வங்கிகளின் கைகளில் இருந்ததால்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பேருண்மை.
கந்துவட்டிக்குக் கடன்
நம் நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்துக்குப் பிறகு, மொத்த வங்கிக் கிளைகளில் கிராமப்புற வங்கிக் கிளைகள் 1994-ல் 54%-ல் இருந்து 2014-ல் 33%ஆகக் குறைந்துள்ளது. இன்றளவில் 73% விவசாயிகளுக்கு வங்கிக்கடன் கிடைப்பதில்லை. 43% கிராமப்புறக் கடன் கந்துவட்டிக்காரர்களின் பிடியில்தான் உள்ளது. 5.77 கோடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 96% நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் மறுக்கப்பட்டுவருகிறது. மறுபுறம் ரூ. 1 கோடியும் அதற்கு மேலும் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பங்கு, மொத்த வாராக் கடனான சுமார் 3 லட்சம் கோடி ரூபாயில் 73% ஆகும்.
ஒரு நாட்டின் பொருளாதார திசை வழியைத் தீர்மானிக்கும் வண்டிக்கான ஸ்டீயரிங் போன்ற நிதித்துறை அரசு கையில் இல்லாமல், தனியார் கைகளுக்குப் போனால் நிலைமை என்னாகும்?
இந்து தமிழ்
தமிழ்

செய்திகள்
GPF
23.10.2015 மாலை 5 மணிக்கு மாநிலச் செயலரிடம் உறுதியளித்தபடி,
27.10.2015 அன்று GPF கிடைக்கும் என்பது வேலூர் இணயதளச் செய்தி. மகிழ்ச்சி.

தீபாவளி
தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை 10.11.2015 அன்று என உத்தரவிடப்படுள்ளது.

விடுப்பு கால சம்பளம்

ஓய்வு பெறுவோருக்கு விடுப்பு கால சம்பளம் தருவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. நமது மாநில, மத்திய சங்க்கங்களின் முயற்சியால் இனி, ஓய்வு பெறுவொருக்கு ஓய்வு பெறும் அந்த மாதத்திலேயே விடுப்புகால சம்பளம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள நமது கார்ப்பரேட் அலுவலக்ம் உத்தரவிட்டுள்ளது.

போராளிப் பெண்ணின்


துயரக் கதை

இது ஆந்திராவில் கடந்த எழுபது ஆண்டுகளாக இயங்கிவரும் இடதுசாரி இயக்கத்தின் வரலாறும் தொண்ணூறு வயது தாண்டிய ஒரு புரட்சியாளரின் சுயசரிதையாகவும் அமைந்த நூல். இருபதாம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசியல் வரலாறு இதில் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தீவிரமாக இயங்கி, கொடூரமாக ஒடுக்கப்பட்ட நக்ஸல் இயக்கத்தையும் நினைவுபடுத்துவது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கிட்டத்தட்ட எல்லாத் திசைகளிலும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இருந்தன. இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அதை மக்கள் யுத்தமாகக் கருதிய இடதுசாரிகள் யுத்தம் முடிந்த கையோடு அவர்கள் மக்கள் நல இயக்கம்என்று கருதிய பாதையில் சென்றனர். இதில் வன்முறையும் படுகொலைகளும் இருந்தன. இதில் வியப்பென்னவென்றால், இந்த இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவர்கள் படித்தவர்கள். சிலர் வசதி படைத்தவர்கள். இந்த சுயசரிதையின் நாயகி கோடேஸ்வரம்மா வசதி படைத்த ரெட்டி வம்சத்தைச் சார்ந்தவர். பால்ய விதவை. இவளுடைய பாலகக் கணவன் காசநோயில் இறக்கிறான். ஆயுள் முடியப்போகிறது என்று தெரிந்தவன் கோடேஸ்வரம்மா மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவித்ததோடு தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியையும் எழுதி வைக்கிறான். கோடேஸ்வரம்மா கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்று ஆவது மறுமணத்தினால்.
கணவன் சீதாராமைய்யாவும் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர். ரெட்டி சமூகத்திலேயே வேறு ஒரு பிரிவைச் சேந்தவர். இத்தகவல்கள் இந்தச் சுயசரிதையில் வரும்போது சாதி, சாதிக்குள் சாதி என்று எப்படி இந்தியச் சமூகம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் நாகரிகமாக அமைந்தது என்று வியக்கவைக்கிறது. கோடேஸ்வரம்மாவுக்கு முதலில் மகள். அதன் பிறகு மகன். அந்த நாளிலேயே இவர்களின் இடதுசாரிப் போக்கால் பலமுறை தலைமறைவாக வாழ வேண்டிவருகிறது.
ஒரு பெண் போராளி நோயுறுகிறாள். கட்சி ஆணைக்கு இணங்க சீதாராமையா அவளைத் தன் வீட்டில் கவனித்துக் காப்பாற்றுகிறார். வலிப்பு வந்து விழும் அவளைத் தன் இரு கைகளாலும் தூக்கிப் படுக்கையில் கிடத்த வேண்டியிருக்கிறது. சொந்தபந்தங்கள் வெவ்வேறு மாதிரிப் பேசுகின்றன. நோயாளிப் போராளியின் சொத்துக்கு ஆசைப்பட்டு அப்போராளியை அவர் வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்று கூடச் சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் கோடேஸ்வரம்மாவை அந்த வீட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன. கோடேஸ்வரம்மா ஆந்திர மகிள சபையில் பணிபுரியச் சென்றுவிடுகிறார்.
ஒரு முறை விரிசல் நேர்ந்த பிறகு கணவன் மனைவி சேர்ந்து வாழவில்லை. மகளின் திருமணத்துக்குக்கூட கோடேஸ்வரம்மாவுக்குக் கணவனிடமிருந்து முறையான அழைப்பு இல்லை.
ஒரு நாவலுக்குரிய நிகழ்ச்சிகளுக்கும் மனப் போராடங் களுக்கும் மத்தியில் இடதுசாரித் தோழர்களின் தீவிரம், கொள்கை முதலியன சொந்த வாழ்க்கையில் முழுக்கப் பிரதிபலிக்கவில்லை. திரும்பத் திரும்ப சாதி, ஒரு விதவையை மணந்து கொண்டதைத் திரும்பத் திரும்ப ஒரு வாதமாகக் கூறுவது இதெல்லாம் நிகழும்போது வருத்தமாக இருக்கிறது.
தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் கசப்பையும் மீறி, கொள்கைப் பற்றிலிருந்து கோடேஸ்வரம்மா சிறிதும் சமரசம் செய்துகொள்வதில்லை. இன்றுவரை ஒரு போராளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். மகன் காவல் துறையினரால் கொல்லப்படுகிறான். அவனும் அவன் சகோதரியும் யார் சிபாரிசும் இல்லாமல் மருத்துவம் படித்தவர்கள். மகளின் கணவனும் மருத்துவர். ஒரு நாள் காரணமே தெரியாமல் அவர் இறந்துவிடுகிறார். சில மாதங்கள் பொறுத்திருந்தாலும் துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறாள். கோடேஸ்வரம்மாவின் இழப்புகளுக்கு முடிவே இல்லை.
கௌரி கிருபானந்தன் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் சட்டத்துக்குப் புறம்பானது என்று நினைக்கப்படும் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்ட வீராங்கனைகள் உண்டு. கோடேஸ்வரம்மா புனைகதை, கவிதை, பாடல் முதலியன இயற்றும் ஆற்றல் பெற்றவர். நல்ல பாடகர். தன்னுடைய படைப்புகளுக்குப் பரிசுகளும் வாங்கியிருக்கிறார். இவ்வளவு ஆற்றல்கள், வாழ்க்கையின் மீது புரிதல் கொண்ட அவர், தன்னைப் போன்றே கொள்கைப் பிடிப்பு கொண்ட சீதாராமையாவுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. மனித இயல்பின் எதிர்பாராத வெளிப்பாடுகளை இந்தச் சுயசரிதை எடுத்துக் கூறுகிறது.
இது நூலில் வந்த ஒரு தகவல் அன்றே மிகவும் பேசப் பட்டது. முதல் இந்தியப் பொதுத் தேர்தலின்போது ஆந்திரத் தையும் உள்ளடக்கிய சென்னை மாநிலத்தில் காங்கி ரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, கம்யூனிஸ்டுகள் அரசே அமைக்கக் கூடிய அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பிரச்சாரம் செய்ய முடியாத ராவி நாராயண ரெட்டி ஜவாஹர்லால் நேரு பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெற்று வெற்றி பெறுகிறார்!
இந்த தொண்ணூறு வயது வீராங்கனையின் சுயசரிதை பிரமிக்க வைக்கிறது. எத்தனை இழப்புகள், ஏமாற்றங்கள்! ஆனால், தன் வாழ்க்கையைக் கசப்புணர்ச்சி, வெறுப்பு இல்லாமல் திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அசாதாரணப் பிறவியின் அசாதாரண சுயசரிதை இது.



Thursday, 22 October 2015

பூஜைக்கு வராத போனஸ்


கடந்த 5 ஆண்டுகளைப் போல்வே இந்த ஆண்டும் கானல் நீராய்ப் போனது போனஸ்.
இந்த ஆண்டு ஊழியர்கள் போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போனது.
போனஸ் பற்றிய வரலாறுகள் பற்றியே இனி பேசி,கட்டுரைகள் எழுதப் போகிறோமா?
போனஸ் என்ற வர்த்தையையே பறிகொடுத்து இன்செண்டிவ் ஆன கதையை ஆய்வுகள் அலசி, எழுதி,பேசப் போகிறோமா?
PLB (PRODUCTIVITY LINKED BONUS) ஒப்பந்தம் போடப்பட்ட போது தோழர் குப்தா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
PLI (PROFIT LINKED INCENTIVE- இலாபத்தின் அடிப்படையில் இன்செண்டிவ்) ஒப்பந்தம் உருவான போது தோழர் நம்பூதிரியைப் போற்றும் குரல் மேலோங்கி, அதை விமர்சிக்கும் குரல்கள் குன்றிப் போயின.
PLI கமிட்டி கூட்டத்தைக்  கூட  உரிய காலத்தில் கூட்ட வைக்க நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் கமிட்டி கூடியது. மீண்டும் கூடும் என்றார்கள்.
கலைந்த கூட்டம் மீண்டும் கூடவில்லை.
19.10.2015 அன்று தர்ணா அறிவிக்கப்பட்டது. மாதம் ஒரு தர்ணா என்ற அழைப்பால் மாவட்டச் சங்கங்கள் படும் கஷ்டத்தை யார் உணர்வார்?
போனஸ் அடிப்படை உரிமை, கொடுபடா ஊதியம் என்றெல்லாம் உரக்கக் கூவி விட்டு ஆர்ப்பாட்டம், தர்ணா மட்டுமே அரங்கேற்றி  பின்னர் அமைதி காக்கப் போகிறோமா?
16.10.2015 அன்று நேசனல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
ஊழிய்ரகள் போன்ஸ் பற்றி நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் மிஞ்சியது மீண்டும் ஏமாற்றமே.
எந்த ஒரு பிரசனைக்கும் தீர்க்கமான தீர்வின்றி முடிந்தது நேசனல் கவுன்சில்.
தலமட்டங்களில் போராட்டம். ஆனால் நேசனல் கவுன்சிலில் அது பிரதிபலிக்காதது வேதனையளிக்கிறது.
கண்டனத்தை தெரிவித்து ஒரு வெளிநடப்பு  செய்யக் கூட இயலாதது வருத்தமளிக்கிறது.
போனஸ் கதை சாரி.. இன்செண்டிவ் கதை இப்படியென்றால் GPF கதை அதை விட சோகமாகியுள்ளது.
ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் மாநாடுகள் நடத்தி  என்ன சாதிக்கப் போகிறோம்?
பதவிகளைத் தக்க வைக்கவா?
இத்தகைய உணர்வு அனேகமாக எல்லோருக்கும் இருக்கும்.
ஆனல் அதை வெளிப்படுத்தமுடியாத  சங்கடங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான்
இந்த செய்தி.

Tuesday, 20 October 2015

தர்ணா
19.10.2015 அன்று தர்ணா போராட்டம் NFTE  மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு தலைமைடயில் நடைபெற்றது.

தோழர்கள் பரமேஸ்வரன், (BSNLEU) பரமசிவம்(SNEA),குமர்(NFTE), தண்டபாணி,  (AIBSNLEA) தனுஷ்கோடி(AIBSNLOA),மோகன் (SNATTA) ஆகியோர் உரையாற்றினர்.
நல்ல முகூர்த்த நாள் என்ற போதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Friday, 16 October 2015

அறிந்ததும்

அறிய விரும்புவதும்

கடந்த வாரம் சென்னைத்தொலைபேசிக்கு உட்பட்ட முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் (SSA) STR பகுதியில் சில தோழர்களுக்கு TTA மற்றும் TM பதவிகளில் பணி நியமனத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவை வெளியிட்டவர் சென்னை தொலைபேசி மாநில தலைமைப் பொதுமேலாளர்.
எனவே இந்த தோழர்கள் நமது இயக்கத்தில் எங்கு உறுப்பினர்களாக இருக்க தகுதிபடைத்தவர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்.

அமைப்பு விதி ஆய்வாள்ர்களிடமிருந்து அறிய விரும்புகிறோம். 
நேசனல் கவுன்சில் கூட்டம்


16.10.2015 அன்று டெல்லியில் நேசனல் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
தர்ணா
போனஸ் வழங்க வலியுறுத்தி 19.10.2015 அன்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக நாடு தழுவிய தர்ணா நடத்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
19.10.2015 அன்று ஈரோடு பொதுமேலாளர் அலுவலகத்தில்
நடைபெற உள்ள தர்ணாவில் அனைவரும் பங்க்கேற்று வெற்றிகரமாகக் வேண்டுகிறோம்.

Thursday, 15 October 2015

திருத்தப்பட்ட விதிகள்
நமது மத்திய சங்கத்தின் முயற்சியால் JTO ஆளெடுப்பு விதிகள் திருத்தப்ப்ட்டு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
01.10.2015 முதல் 5.3 சதம் விலைவாசிப்படி உய்ர்வுக்கான உத்தரவை  BSNL  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு

TTA தேர்வில் வெற்றி பெற்ற்
தோழர்கள்
1.G.மௌனகுருசாமி-பவானி
2.K.கிட்டுசாமி-  தாமரைக்கரை-
 3.M.P.ராமலிங்கம்-எண்ணமங்க்லம்
4.முத்துசாமி-ஈரோடு
ஆகியோர் 28.10.2015 முதல் TTA
பயிற்சி வகுப்புக்குச் செல்ல உள்ளனர்.
தோழர்களுக்கு மாவட்டச் சங்க்கத்தின்
வாழ்த்துக்கள்

Monday, 12 October 2015

மனோரமா

மன்னார்குடியில் பிறந்து
பள்ளத்தூரில் வளர்ந்து
கோடிக்கணக்கான மக்களின்
உள்ளத்தூரில் வாழும்
மனோரமாவின் மறைவுக்கு
அஞ்சலி.

Saturday, 10 October 2015

சேமநலக்குழு

சேமநலக்குழுவின் (WELFARE BOARD) கூட்டம் 09.10.2015 அன்று நடைபெற்ற்து.
முடிவுகள்
தொலைக்காட்சிப்பெட்டி வாங்க ரூபாய் 20000 கடன்
வழங்கப்படும்

ஸ்மார்ட் போன் வாங்க ரூபாய் 10000 கடன்
வழங்கப்படும்

குளிர்சாதன எந்திரக் கடன் ரூபாய் 20000 என்பது
ரூபாய் 30000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

Thursday, 8 October 2015

வாழிய பல்லாண்டு
தோழியர் ஜமுனா ஈஸ்வரன் (SR TOA  வெள்ளகோவில்) அவர்கள் 07.10.2015 அன்று விருப்ப ப ஓய்வு அடிப்படையில் பணி ஓய்வு பெற்றார். தோழியர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

Tuesday, 6 October 2015

நல்ல முன்னேற்றம்
MNP நிலை செப்டம்பர் 2015

1.கோவை      +1111
2.கடலூர்       +185
3.குடந்தை     +128
4.தர்மபுரி       +902
5.ஈரோடு       +513
6.காரைக்குடி   -125
7.மதுரை        +150
8.நாகர்கோயில் +989
9.நீலகிரி        +65
10.புதுவை       +71
11.சேலம்        +465
12.தஞ்சை       +115
13.திருச்சி       +105
14. தூத்துக்குடி   +447
15.நெல்லை     +1270
16.விருதுநகர்   +55
17.வேலூர்      +414
தமிழகம்        +6660

Monday, 5 October 2015

அக்டோபர் 6 ஆர்ப்பாட்டம்

போனஸ் என்னும் நமது உரிமையைப் பெற 06.10.2015 அன்று அனைத்து சங்கங்களின் அறைகூவலை ஏற்று சிறப்புமிகு ஆர்ப்பாட்டத்தை கிளைகளில் நடத்திட வேண்டுகிறோம்.

Saturday, 3 October 2015

இதுவும் ஒரு பிழைப்பு?!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு லேப்டாப், இளம்பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தலித்களுக்கு டிவி, இலவச வேட்டி, சேலைகள் என ஏராளமான இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது.

இலவசங்கள் கொடுத்துத்தான் வெற்றிபெற வேண்டும் என்பது இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடாகி விட்டது. கொள்கையாவது கோட்பாடாவது.

அஹிம்சை
ஏவுகணை வானத்தில்
ஏவிகோள்கள் சுற்றவிட்டும்
காவுகொள்ளும் சாதிகளின்
கலவரங்கள் ஓயவில்லை !
 தொழிற்கூடம் பெருகிநாட்டில்
தொழில்வளர்ச்சி உயர்ந்தபோதும்
விழிசிந்தும் பசிவயற்றில்
வாடுவோர்கள் குறையவில்லை !
 ஆயிரமாம் கோடிகளில்
திட்டங்கள் செயல்பட்டும்
பாயிரமாம் பாட்டாளி
படுந்துயரோ மறையவில்லை !
 அறிவியலில் முன்னேற்றம்
அடுக்கடுக்காய் நாம்கண்டும்
நெறிபிறழ்ந்த அரசியலால்
நேர்மையாட்சி காணவில்லை !
 காந்திமகான் சாந்திவழி
கண்டளித்த சுதந்திரத்தை
ஏந்தியின்று வன்முறைக்கே
ஏலம்விட்டுக் கலங்குகிறோம் !
 அன்பென்னும் நல்வழியில்
அகிம்சையினை நெஞ்சிலேற்போம்
ஒன்றுபட்டுச் சுயநலத்தை
ஒதுக்கிநாட்டை உயர்த்திடுவோம் !

Thursday, 1 October 2015

பிறந்த நாள்
அக்டோபர் 1
பி.எஸ்.என். எல் நிறுவனத்துக்கு பிறந்த நாள்.
அரசியல், நிர்வாகச் சீர்கேடுகள் இவற்றைத் தாண்டி 15 வருடங்கள் வாழ்ந்திருக்கிறது.
சில ஆண்டுகள் லாபத்திலும், சில ஆண்டுகள் நட்டத்திலும் இயங்கியுள்ளது.
இதன் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள் காரணிகள் குறித்து திறந்த மனதுடன் சிந்திப்பது ஆரோக்கியமானது.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஆனதைச் செய்வோம்.

வளர்ச்சிக்குத் தடையாக உள்ளவற்றை அறிந்து அவற்றை அகற்ற செயல்படுவோம்

5.3

01.10.2015 முதல் அகவிலைப்படி 5.3 சதவிகிதம் உயர்கிறது.
01.10.2015 முதல் மொத்த அகவிலைப்படி 107.9 சதவிகிதம்


Wednesday, 30 September 2015

வாழிய பல்லாண்டு
இன்று 30.09.2015 பணி ஓய்வு பெறும்
தோழியர் M. தமிழரசி TM வெள்ளோடு
தோழர் C.முத்துசாமி  SRTOA ஈரோடு
தோழர் A.இக்னேசியஸ் TM ஈரோடு
தோழர் P.சின்னசாமி SDE பெருந்துறை

ஆகியோர் நலமுடனும், மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவ்ட்டச் சங்கம் சார்பில் உள்மார வாழ்த்துகிறோம்

Monday, 28 September 2015

கேட்டது

ஒரு பொருளாதார நிபுணர் ஒரு உரையாடலில் தெரிவித்த கருத்துக்கள்
இந்திய நாட்டு மக்கள் தேர்தலின் போது மட்டுமே ஜனநாயக உரிமை மற்றும் கடமை பற்றி சிந்திக்கின்றனர்.அதன் பிறகு அடுத்த தேர்தலின் போதுதான் அவர்களுக்கு அந்த நினைவு வருகிறது.
இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள்  அடிப்படை உரிமைகள் பறிபோவதைப் பற்றி சிந்திப்பதும்ல்லை. கவலைப்படுவதுமில்லை.
ஒரு சிலர் மட்டுமே குரல் எழுப்புகின்றனர். போராட்டங்களை நடத்துகின்றனர். அரசே எல்லாப் பணிகளையும் செய்துவிட முடியாது. அதற்காக தனியாரிடமே அனைத்த்கையும் கொடுத்து விடவும் கூடாது. அரசும், தனியாரும் இணந்துதான் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அரசுத் துறைகள் சேவையை மட்டுமே முதன்மைப்படுத்தி பணியாற்ற வேண்டும். லாபத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது.
தனியார் நிறுவனங்கள் சேவையைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவர்களின் நோக்கம் லாபம் மட்டும் அல்ல.
அரசின் சலுகைகளைப் பெற்று,
அரசையும் ஏமாற்றி,
மக்களைக் கொள்ளை அடிப்பதுதான்
தனியாரின் நோக்கம்.
1000 கோடி ரூபாய் முதலீடு செய்து 5000 கோடி ரூபாய் லாபம் சம்பாத்திவிட்டு கடையைக் கட்டுவதே தனியாரின் நோக்கம்.
அரசின் பிரச்னைகள் குறித்து மக்களுக்குத் தெரிவதில்லை.
மக்களின் பிரச்னைகள் குறித்து தெரிந்தாலும் அரசு அதைபற்றி அலட்டிக் கொள்வதிகல்லை.
பொதுத்துறை நிறுவனங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.
அவற்றை விற்று விடுவது என்ற   திட்டம் நாட்ட்டுக்கு கேடு விளைவிக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனியார்மயம் என்பதே சர்வரோக நிவாரணி என்று அரசு நினைப்பது கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் தலையை விடுவத்றகுச் சமம்


பகத்சிங் பிறந்த நாள்
இந்திய தேசத்தின் விடுதலைக்காக
இருபத்து நான்கு வயதில் இன்னுயிரை ஈந்தவன்.
அநீதி கண்டு வெகுண்டெழுந்து போரிட்ட வன்.
அவனது வாழ்வு ஒரு பாடம்.
இன்று செப்டம்பர் 27.
அவனது பிறந்த தினம்.

Saturday, 26 September 2015

குற்றம் கடிதல்


மனித மனம், பழிவாங்க மட்டுமல்ல; மன்னிக்கவும் தயாராக இருக்கும் என்னும் உண்மையைக் கவித்துவமாகக் கூறும் ஆரோக்கியமான படம் இது.

துயரம்

சவுதி அரேபியாவின் மெக்காவில் வியாழனன்று ஹஜ் பெருநாளின்போது எழுநூறுக்கும் அதிகமானோர் நெரிசலில் நசுங்கி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.


உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.