Saturday, 5 September 2015
Thursday, 3 September 2015
Wednesday, 2 September 2015
நன்று ஒன்று
செய்தோருக்கு
நன்றியும் பாராட்டும்
02.09.2015 பொதுவேலைநிறுத்தத்தில் தேச
நலனுக்காக,
தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின்
நலனுக்காக, உண்ர்வுடனும், ஈடுபாட்ட்டுடனும்
பங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறோம்.
அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத
நடவடிக்கைகள் அடங்கும் வரை இது போன்ற போராட்டங்கள்
தொடரும்.
பங்கேர்றோருக்கு மீண்டும் நன்றியும்
பாராட்டுக்களும்.
Tuesday, 1 September 2015
Monday, 31 August 2015
Sunday, 30 August 2015
Thursday, 27 August 2015
மீளும் BSNL
கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி
வரும் BSNL நிறுவனம் மீளத் துவங்கியுள்ளது.
“இரவு நேர இலவச அழைப்புகள்”
திட்டம் லேண்ட்லைன் சரண்டரைக்
குறைத்துள்ளது.
“ரோமிங்கில் இலவச இன்கமிங் அழைப்புகள்”
திட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை.
ஜூலை
2015ல் 16 லட்சம்
மொபைல் இணைப்புகளை BSNL நிறுவனம் புதிதாகக்
கொடுத்துள்ளது.
இதே ஜூலை 2015ல் ஏர்டெல் 11.9 லட்சம்
இணைப்புகளையும், ஐடியா 10.25 லட்சம் இணைப்புகளையும் கொடுத்துள்ளன.
BSNL நிறுவனத்திலிருந்து MNP மூலம் வெளியே
செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, MNP மூலம் BSNL நிறுவனத்துக்கு உள்ளே வருவோர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது நிச்சயம் மீண்டு எழுவதற்கான பாதையின்
துவக்கமே.
இது போன்று வளர்ச்சிக்கான திட்டங்களை
அறிவித்து தேவையான உபகரணங்க்களையும்,
சிம் கார்டுகளையும் தர வேண்டியது நிர்வாகத்தின் கடமை.
சூழ்நிலையறிந்து பணியாற்ற வேண்டியது
ஊழியர்கள் கடமை
பேசப் பேச “க்ட்”
மொபைல் போன் மூலம் பேசும் போது
அடிக்கடி இணைப்பு தூண்டிக்கபடும் நிலையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கவலை
தரக்கூடியதாக உள்ளது என்று தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் தெர்வித்தார்.
வோடாபோன் நிறுவனத்தின் தலைவர் “இது
அமைச்சரின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்து அல்ல” என்று தெரிவித்தார்.
(எங்ப்பன் குதிருக்குல் இல்லை என்பது
போல்)
தற்போது பிரதம அமைச்சரின் அலுவலகக்
குறிப்பும் அழைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
பயனுள்ள மாவட்டச் செயற்குழு
25.08.2015 அன்று மாவட்டச் செயற்குழு பயனுள்ள முறையில்
சிறப்பாக நடைபெற்ரது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் செயற்குழுவைத் துவக்கி
வைத்து பயனுள்ள உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி
உரையாற்றினார்.
AITUC ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் செல்வராஜன் செப்டம்பர் 2
பொதுவேலை நிறுத்தத்துக்கான் கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையாற்றினார்.
முடிவுகள்
செப்டம்பர் 2 பொது
வேலைநிறுத்த்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டது.
மாவட்டம் முழுதும் ஊழியர்களைச் சந்தித்து வேலைநிறுத்த்த்தை
வெற்றியாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.
உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பாக உதவி
வழங்கும் விழாவை உறுப்பினர்கள் பங்க்களிப்போடு
சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
15.09.2015 அன்று நடைபெறவுள்ள லோக்கல் கவுன்சில்
கூட்டத்துக்கான பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டன.
GM அலுவலகக் கிளை மாநாட்டை அக்டோபர் மாதம் நடத்திட வேண்டும்
எக்ஸ்டர்னல் கிளை மாநாட்டை நவம்பர் மாதம் நடத்திட வேண்டும்
மாவட்டச் சங்கத்தின் நிதி நிலை குறித்து மாவட்டப் பொருளர்
தோழர் ராஜேந்திரன் எடுத்துக் கூறி வரும் காலச் செயல்பாட்டுக்காக ஒவ்வொரு
உறுப்பினரிடமும் குறைந்த பட்சம் ரூபாய் 500/- நன்கொடை கேட்கலாம் என் தெரிவித்தார்.
இதை மாவட்டச் செயற்குழு ஏற்றது. இப்பணியை அக்டோபர் மாதத்துக்குள் செய்து முடிப்பது
என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட அளவில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பிரச்னைகள்
இல்லை.
தெரிவிக்கப்பட்ட ஒரு சில பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு
காண முடியும்.
வரும் காலச் செயல்பாட்டுக்கு நல்ல வழிகாட்டிய பயனுள்ள
செயற்குழுவாக் அமைந்தது.
ஈரோடு ரூரல்
கிளை மாநாடு
25.08.2015 அன்று ஈரோடு ரூரல்
கிளையின் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
தோழர் K.மாதேஸ்வரன் TTA (அரச்சலூர்) கிளைத்தலைவராகவும்,
தோழர் K.பால்ராஜ் TM (மொடக்குறிச்சி)
கிளைச் செயலராகவும்,
தோழர் P.தங்க்கராஜ் TM (எழுமாத்தூர்)
கிளைப் பொருளராகவும் ஒரு மனதாகத் தேர்வு
செய்யபாட்டனர்.
தேர்வு செய்யப்ப்பட்ட கிளை நிர்வாகிகள்
செயல்பாடு சிறக்க மாவட்டச சங்கத்தின் வாழ்த்துக்கள்
சொஸைட்டி வட்டிப் பிரச்னையும் BSNLEUவின் கபட நாடகமும்:
சென்ற முறை, சொஸைட்டி BSNLEUவின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சாதாரண கடனுக்கான வட்டி விகிதம் 16.5 சதம். அப்போது, வட்டியை குறைக்க வேண்டும் என்று நமது சங்க ஆதரவு டைரக்டர்கள் மற்றும் RGB உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, "
ஐயோ அது சாத்தியமில்லை ! வட்டியை குறைத்தால் சொஸைட்டி திவாலாகிவிடும் ! " என்று பேசியவர்தான் முன்னாள் இயக்குனர்( BSNLEU) அன்புமணி. சென்ற RGB
தேர்தலுக்கு பிறகு காட்சிகள் மாறின.
BSNLEU கூட்டணி சொஸைட்டி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. நமது கூட்டணியின் வசம் சொஸைட்டி நிர்வாகம் வந்தது. ஒவ்வொரு சதமாக, இருமுறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் வட்டி விகிதம் 14.5 சதமாக ஆனது. உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.சென்ற ஆண்டு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். நல்ல காலம் பிறக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.ஆனால், நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, நமது சொசைட்டி உறுப்பினர்களுக்கும் நல்ல காலம் பிறப்பதற்கு பதிலாக கெட்ட காலம் பிறந்தது. இதுநாள் வரை விவசாயிகளுக்கு வழங்கிய சலுகை வட்டியிலேயே வங்கிகள் நம்மை போன்ற ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கும் கடன் வழங்கி வந்தது. அந்த முறையை அடியோடு மாற்றி, சலுகை வட்டி தரக் கூடாது என்று உத்திரவு பிறப்பித்தது மோடி அரசு. அதன் காரணமாக நமது கூட்டுறவு சங்கமும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு அதிக வட்டி தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. தவிர்க்க முடியாமல் உறுப்பினர்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்ததுபோல, தோல்வியில் துவண்டு போயிருந்த அன்புமணி கம்பெனி உயிர்த்தெழுந்தது.ஆகா ! வட்டி உயர்வு அநியாயம் !! ஏற்க மாட்டோம் !! என்று நீட்டி முழக்கி தமிழக சொஸைட்டி உறுப்பினர்களிடம் மட்டுமல்லாது, உறுப்பினர் அல்லாதவர்களிடமும் தங்களது வழக்கமான கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் மோடிதான் காரணம் என்று மேடை தோறும் பிரசங்கம் செய்பவர்கள், இந்த வட்டி உயர்வு பிரச்னையில் மட்டும் மோடி அரசின் மோசடித்தனத்தை தோலுரிக்காமல், அன்புமணி தலைமையில் தற்போதைய இயக்குனர் குழுவை சந்தித்து கையெழுத்து படிவத்தை கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பது ஏன் ?வட்டி குறைப்பில் இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது, மோடி அரசை எதிர்த்து அல்லவா ? அதை விட்டுவிட்டு, பொறுப்பேற்றவுடன் வட்டியை குறைத்த இயக்குனர் குழு மீது பாய்வது ஏன் !!வெள்ளானூர் நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு என்பது சென்ற இயக்குனர் குழு காலத்திலேயே முடிவாகிவிட்டதோடு, சென்ற தேர்தலில் ஆகப் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட, இனி மாற்ற முடியாத முடிவு.... சோழியன் குடுமி சும்மா ஆடுமா ! இவர்களது உள்நோக்கம் அடுத்த அங்கீகாரத் தேர்தல் !இந்தியாவெங்கும் பொய்ப்பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் பெற்றாலும் தமிழகத்தில இவர்களது பாச்சா இது நாள் வரை பலிக்கவில்லை !
BSNLEUவின் பன்னிரெண்டாண்டு அங்கீகார காலத்தில் சொல்லிக்
கொள்ள சாதனை ஏதுமில்லை...போனஸ் இல்லை, ஊதிய
மாற்றத்தில் குளறுபடிகள் என்ற வேதனைகளே தொடர்கதையாகி வருகிறது. இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஜெயிக்க
வேண்டும் என்ற நப்பாசையில்தான் இந்த வட்டி குறைப்பு
ஆர்ப்பாட்டம் எனும் கபட நாடகம் !
BSNLEUவின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம் !!
உண்மையை எடுத்துரைப்போம்!
தமிழகத்தில் NFTE-BSNL சங்க வெற்றிக்கு அயராது பாடுபடுவோம்
Monday, 24 August 2015
வாழ்த்துக்கள்
TTA தேர்வில் வெற்றி பெற்ற்
தோழர்கள்
1.G.மௌனகுருசாமி-பவானி
2.K.கிட்டுசாமி- தாமரைக்கரை
3.M.P.ராமலிங்கம்-எண்ணமங்க்லம்
4.R.லோகனாதன்-பவானிசாகர்
5.முத்துசாமி-ஈரோடு
6.S.அர்ஜுணன்-சென்னிமலை
ஆகியோருக்கு
மாவட்டச் சங்க்கத்தின்
வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)
