NFTECHQ

Monday, 24 August 2015

பொதுவேலை நிறுத்தம்

செப்டம்பர் 2
பொதுவேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள்
1.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடு. 
2.வேலைகளைஉருவாக்கி வேலையின்மையைப் போக்கு.
3.நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை கறாராக அமல்படுத்து. தொழிலாளர் நலச் சட்டங்க்களை மீறும் செயல்களை அனுமதிக்காதே.
4.அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு உரிமையை வழங்கு.
5.ரூபாய் 15000/- என்பதை குறைந்த பட்ச
சம்பளமாக நிர்ணயம் செய்.
6.குறைந்த பட்ச மாத ஓய்வூதியம்
ரூபாய் 3000 என்பதை உறுதிப்படுத்து
7. பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து.
8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியப் பணியை அமலாக்காதே
9.போனஸ், வைப்புந்தி, பணிக்கொடை- இவற்றிற்கானஉச்ச வரம்பை உயர்த்து. 
10. தொழிற்சங்களின் பதிவு செய்யும் கோரிக்கையை, விண்ணப்பித்த  45 நாட்களுக்குள்  பதிவு செய்.
11. தொழிலாளர் விரோத சட்டங்க்களை அமல்படுத்துவதை கைவிடு.
12.ரயில்வே, இராணுவம், காப்பீடு போன்ர துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டத்தைக் கைவிடு.
மத்திய தொழிற்சங்கங்க்கள் அனைத்தும் இணைந்து இந்திய தேசத்தையும்,
இந்திய தேசத்து மக்களையும்,
தொழிலாளிகளையும் பாதுகாக்க இந்த வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன.
ஒரு இந்தியன் என்ற உணர்வோடும்,

தேசபக்த உணர்வோடும்  இந்த் வேலைநிறுத்தத்தில் பங்க்கேற்க வேண்டுகிறோம்.

Saturday, 22 August 2015

சிறப்புக் கூட்டம்



செப்டம்பர் 2
பொதுவேலை நிறுத்த்த்திற்கான கோரிக்கை விளக்கக் கூட்டம் 24.08.2015 அன்று
மாலை 4 மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெறும்.
NFTE சார்பாக
மாநில உதவிச் செயல்ர்
தோழர் L.சுப்பராயன்

பங்கேற்று உரையாற்றுவார்.
அனைவரும் பங்க்க்ற்போம்

போனஸ்



புதிய போனஸ் திட்டத்தை (PLI)
உருவாக்குவதற்கான கூட்டம்  31.08.2015 அன்று நடைபெறவுள்ளது.
NFTE சார்பாக தோழர் இஸ்லாம் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
BSNL நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்பர்.
01.09.2015 போனஸ் பற்றிய நல்ல செய்தியுடன் புலரும் என நம்புவோம்.

Friday, 21 August 2015

CUG



நமது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஊறுப்பினர்கள் பயன்படுத்த “BSNL ENPLOYEES FAMILY CUG” என்ற திட்டத்தை
வருமானம் தரும் வகையிலும்,
ஊழியர் நலன் கருதியும்,
அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு ஆலோசனையைத் தெரிவித்தோம்.
முன்னாள் தலைமைப் பொதுமேலாளரும் இதை  வழங்கலாம் என தெரிவித்தார்.
இது குறித்து “பணிக்குழு” மற்றும் “லோக்கல் கவுன்சில்” கூட்டங்க்களில் தொடர்ந்து விவாத்திதோம்.
இன்று 21.08.2015 மாநில அலுவலகத்திலிருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன.
விரைவில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும்
என தெரிவிக்கப்பட்டது.

தோழன் ஜீவா




காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக்குக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா தோழா
என்ற வரிகளுக்குச் சொந்த்க்காரராய்,
போராளியாய்,
தோழனாய்
வாழ்ந்த தோழன்
ஜீவா பிறந்த நாள் இன்று


(21 ஆகஸ்ட்)
 தோழர் ஜீவா வாழ்க்கை குறித்து இரண்டு வீடியோ காட்சிகள் காண கீழே இரண்டு கிளிக்குகள் செய்யவும்
  
தோழர் ஜீவா வாழ்க்கை குறித்து திரு குமரி அனந்தன்


தோழர் ஜீவா வாழ்க்கை – சிவகங்க்கை கலை இலக்கியப் பெருமன்றம்

Thursday, 20 August 2015

மாவட்டச் செயற்குழு

25.08.2015

அன்று

மாவட்டச் செயற்குழு

மற்றும்

ஈரோடு ரூரல் கிளை மாநாடு

நடைபெறும்
தோழர் மாலி,

தோழர் செல்வராஜன்
             செப்டம்பர் 2

வேலைநிறுத்தம்

குறித்து

விளக்கவுரையாற்றுவர்.

மாநில உதவிச் செயலர்
தோழர் யாசின்

நிகழ்வுகளைத்

துவக்கி வைப்பார்



வாழ்த்துக்களுடன்
N.பழனிவேலு
மாவட்டச் செயலர்

Sunday, 16 August 2015

பொதுத்துறை வங்கிகளில் தனியார் வங்கி அதிகாரிகள் நியமனம்



தனியார் வங்கி அதிகாரிகளை பொதுத்துறை வங்கித் தலைவர்களாக நியமிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வங்கி ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கித் துறையில் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் சில சீர்த்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாக மத்திய நிதியைமச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் துறை வங்கிகளில் தலைமை பதவி வகித்தவர்களை பொதுத்துறை வங்கிகளில் மேலாண்மை இயக்குனர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். பொதுத்துறை வங்கிகள் பொதுமக்களுடைய சேமிப்பை நிர்வகிக்கும் மிகப் பெரிய நிதி அமைப்பாகும். பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்களுடைய வைப்புத் தொகை ரூ.66 லட்சம் கோடி உள்ளது.
மேலும், பொதுத்துறை வங்கிகள் லாபத்தை ஈட்டுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படவில்லை. மாறாக, சமூக நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைமை பதவிகளுக்கு தனியார் வங்கிகளில் இருந்து அதிகாரிகளை நியமிக்கும் போது பொதுத்துறை வங்கிகள் தனது குறிக்கோளுடன் செயல்பட முடியாது. அத்துடன், பொதுத்துறை வங்கிகளிலேயே அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்படும்.
கடந்த மார்ச் 31-ம் தேதி நிலலவரப்படி, வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.97 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதைத் தவிர, 530 கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் தொகை ரூ.4.03 லட்சம் கோடியாக உள்ளது. இதில், பொதுத்துறை வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் மூலம் பெறப்பட்ட வாராக் கடன் அளவு ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுகளைக் கண்டித்து விரைவில் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன" என்று வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
முன்னதாக, ஏழு அம்ச திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். வங்கி தலைவர்களை நியமிப்பது, வங்கி வாரிய தலைமையிடம் (Bank Board Bureau), நிதி, கடன் நெருக்கடியைக் குறைப்பது, அதிகாரம், செயல்பாடுகளைக் கணக்கிடுதல் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மிஷன் இந்திர தனுஷ் (Indradhanush) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஐந்து பொதுத்துறை வங்கிகளுக்கான தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா இதனை அறிவித்தார். பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் தலைவராக மைக்ரோசாப்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் ஆறு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
ஐந்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை தவிர இரண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு தலைமைச் செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. முதல் முறையாக தனியார் வங்கிகளில் பணிபுரிந்தவர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 14 August 2015

சுதந்திர தின வாழ்த்துக்கள்




         சுதந்திர தினம் 69.
       நம்மை மனிதனாக்கி,

       நம்மை போராளியாக்கி,

       நாடு, சமூகம், மக்கள்,       வர்க்கம், என சிந்திக்க  வைத்த,

  நம்மை வாழ வைத்த        இயக்கதின் நலன் காக்க,

நாம் எடுத்த சபதம் முடிக்க,

ஒற்றுமை என்னும் சக்தியை            வலுப்படுத்தி

முன்னேற சபதம் ஏற்போம்.

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்.

உளமார வாழ்த்துகிறோம்

JTO தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு பெற்ற
1.தோழியர் சுமதி
2.தோழர் கண்ணன்
3.தோழர் சையத் மதார்
4.தோழர் முருகேசன்
5.தோழர் செந்தில்குமார்
6.தோழர் சுந்தரமூர்த்தி
7.தோழர் பத்மனாப கணேசன்
8.தோழர் சிவக்குமார்
9.தோழர் துரைசாமி
10.தோழர் பிரபு
11.தோழர் விஜயசேகர்
12.தோழியர் கீதா
13.தோழர் திருமலைசாமி
14.தோழர் தர்மலிங்கம்
ஆகியோருக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இந்த தேர்வு முடிவுகள் வெளியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது NFTE இயக்கத்தின் மாநில, மத்திய சங்கங்களுக்கு  ந்மது  பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

திருச்சி மாவட்ட மாநாடு
13.08.2015 அன்று மிகச் சிறப்பாக
நடைபெற்றது
தோழர் பழனியப்பன் மீண்டும் ஒரு மனதாக மாவட்டச் செயலராக தேர்வு செயப்யப்பட்டார்.
தோழர் சுந்தரம் மாவட்டத் தலைவராகவும்
தோழர் ஆண்டிசாமி மாவட்டப் பொருளராகவும் ஒரும்னதாகத் தேர்வு செய்யப்பட்ட்னர்.
அனைத்து நிர்வாகிகளின் தேர்வும் ஒரு மனதாக நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.



Wednesday, 12 August 2015

முடிவுகள்




நமது NFTE இயக்கத்தின் மாநிலச் செயலர்கள் கூட்டம் டெல்லியில் 10.08.2015 மற்றும் 11.08.2015 தேதிகளில் நடைபெற்றது.

டவர் கார்ப்பரேசன் அமைக்கும் திட்டம் அதன் விளைவுகள்,  ப்ராட்பேண்ட் சேவையை அவுட்சோர்சிங் விடும் திட்டம் அதன் விளைவுகள்,
இந்த ஆண்டு போனஸ் பெறுதல்
டிலாய்ட் கமிட்டி முடிவுகள் அமலாக்கம்
குறித்து விவாதிக்கப்பட்டது.
மற்ற சங்கங்க்களுடன் இணைந்து தீர்வுக்காக போராடுவது என முடிவெடுக்கப்பட்டது.

சீனியர் TOA கேடர் பெயர் மாற்றத்தில் உள்ள  ஊழியர் மன நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சீனியர் TOA கேடரில் உள்ளவர்களுக்கு ASSISTANT SUPERINDENTENT எனவும், NE10 சம்பள விகிதத்தில் உள்ள SR TOAக்களுக்கு  DEPUTY SUPERINDENTENT
எனவும் பெயர் மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தீர்வு

தமிழகத்தில் சில் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற
JTO தேர்வு முடிவுகள் வெளியிடுவது நீதி மன்ற வழக்கால் தாமதம் ஏற்பட்டது.
நமது மத்திய சங்கம், மாநிலச்சங்கம்
மற்றும் SNATTA மத்திய சங்கம் ஆகியவற்றின் தொடர் முயற்சியால் தீர்வு கிடைத்துள்ளது.
காலியிடங் கள் மறு கணக்கீடு, கோளப்பட்டது.அதன் விபரங்கள்  நமது தமிழ் மாநிலச் சங்க்கத்தின் முயற்சியால் பெறப்பட்டது.

தற்போது மறு கணக்கிட்டு அடிப்படையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று கார்ப்பரேட் அலுவலகம் நமது மாநில அலுவலகத்துக் வழிகாட்டியுள்ளது.

இதன் மூலம் பயன் அடைய உள்ள தோழர்களுக்கு நமது நெஞ்ச்சு நிறைந்த வாழ்த்துக்கள்
கார்ப்பரேட் அலுவலக உத்தரவுக்கு இங்கு கிளிக் செய்யவும்

பாகுபாடும் நெருடலும்

சென்னை தொலைபேசி மாநில மாநாட்டுக்கு
நமது தமிழ் மாநிலச்செயலர் 
அருமைத்தோழர் பட்டாபி அவர்கள் 
மட்டுமே  அழைக்கப்படவில்லை..
அவர் மட்டுமே பங்கேற்கவில்லை..
என்று மனம் நெருடல்
கொள்ள அருமைத் தோழர் மாரிக்கு
உரிமை உண்டு.
ஆனால்..
நமது சொந்த தமிழ் மாநிலத்தில் சேலம் மாவட்ட மாநாட்டிற்கு சம்மேளனச் செயலர் அருமைத் தோழர் ஜெயராமனைக் கூட பாகுபாட்டு வளையத்துக்குள் தள்ளி பக்கா பாடுபாடு காட்டி யாரையும் அழைக்கவில்லையே..
அது அவர்கள் உரிமையோ அல்லது அவர்களுக்கு அப்படி ஆணையோ நாம் அறியோம்.
அந்த உரிமையிலும், ஆணையிலும் நாம் தலையிட முடியுமா என்ன?
கோவையிலும், நெல்லையிலும் பாகுபாடு இன்றி தலைவர்கள் அழைப்பு.. பங்க்கேற்பு..
தோழர் பட்டாபியின்  வார்த்தைகளான 
“யாரையும் ஒதுக்காமல்,
யாரும் ஒதுங்க விடாமல்”
ஒரு மனதான நிர்வாகிகள் தேர்வு..
ஆனால் சேலத்தில் ஒரு பகுதியினர் ஓரம் கட்டப்பட்டனர்.
சேலம் நிகழ்வுகள் கவளங்க்களில் கற்களாயின.
அங்கு பங்கேற்ற  யாருக்கும் நெருடலே
இல்லையா?
“மதி”  கூடாது..
“மதி” நிறைந்த கூட்டத்தில்
கூட மாட்டோம்”
என்று இருப்பவர்கள்
மதி அழைக்கவில்லையே என மனம் நெருடல் கொள்ளலாமா?
மனங்களைப் பிரிக்காமல்
மனங்களை  இணைக்கும்
பணியை மனதாரச் செய்து
வசந்த காலம் படைப்போம்.

Monday, 10 August 2015

மனிதாபிமானம் வாழ்கிறது.


இத்தனை ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் செயல்பட்டுள்ளோம். “மனிதாபிமானத்துடன்” செயல்படவேண்டும் என்று தோழர் மாலி அடிக்கடி அறிவுரை கூறுவார்.

அனுபவத்தில் சில சமயங்களில் சிலரது செயல்கள்

மனிதாபிமானம்-மனிதநேயம் இவை மரித்துப்போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றும் நிகழ்வுகளைச் சந்தித்துள்ளோம். ஆனால் முகம் தெரியாத ஒருவர் செய்த உதவியைப் படித்தபின் மனம் மகிழ்ந்தது.


அச்செய்தியைப் படிக்க கிளிக் செய்யவும்

Sunday, 9 August 2015

மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்



13.08.2015   அன்று
திருச்சி மாவாட்ட மாநாடு.
தோழர்கள் மதிவாணன்,
ஜெயராமன், பட்டாபி, அசோகராகன்,,
நடராஜன், சுந்தரம், மாரி என நமது தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

Friday, 7 August 2015

தொடரும் பயணம்

தொண்டால் பொழுதளக்கும் தோழன் மதி மீண்டும் சென்னை தொலைபேசி மாநிலச் செயலராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவரது பணியும் போராட்டமும் தொடர வாழ்த்துகிறோம்

Wednesday, 5 August 2015

வாழ்த்துகிறோம்

மிகச் சிறப்பான ஏற்பாடுகளுடன் இன்று துவங்கும் சென்னை தொலைபேசி  மாநில மாநாடு வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்.