NFTECHQ

Saturday, 24 January 2015

சி.பி.முத்தம்மா

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண், முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா  பிறந்த தினம் இன்று (ஜனவரி 24). அவரைப் பற்றி..
கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தவர். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்தபோது இவருக்கு வயது 9. தான் கஷ்டப்பட்டாலும் 4 குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் அம்மா..
மடிகேரியில் பள்ளிப் படிப்பு, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 3 முறை தங்கப் பதக்கம் வென்றார்.
வெளியுறவுத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது இவரது விருப்பம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற நாட்டின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இவரைப் பணியில் சேரவிடாமல் தடுக்க பல முயற்சிகள் நடந்தன. இவரது திறமைக்கு முன்பு எதுவும் எடுபடவில்லை. நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரியாக 1949-ல் பணியில் சேர்ந்தார். அளவுகடந்த ஆர்வம், துடிப்போடு பணியைத் தொடங்கினார்.
ஆண் பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் இருந்தன. திருமணம் செய்துகொள்ள அரசிடம் முன்அனுமதி பெறவேண்டும். குடும்பப் பொறுப்பு பணித் திறனை பாதிக்கும் நிலை ஏற்பட்டால், பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாது என்ற விதியும் இருந்தது.
இதுபோன்ற சட்டங்கள் பெண்ணுரிமை, சமத்துவம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.
வழக்கை விசாரித்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர். இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்த நீதிபதி, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு, ஆணாதிக்க கருத்து கொண்ட விதிகளைத் திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பர்மா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவில் தூதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் இவர்தான். 32 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982-ல் ஓய்வு பெற்றார்.
ஆதரவற்றோர் இல்லம் கட்ட டெல்லியில் இருந்த தனது சொந்த நிலத்தில் 15 ஏக்கரை அன்னை தெரசாவுக்கு வழங்கியவர்.
இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளின் சமத்துவத்துக்காகப் போராடி அவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தந்த சி.பி.முத்தம்மா, 2009-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தமது 85 வயதில் மறைந்தார்



Friday, 23 January 2015

“மதி” நிறைந்த மதியின் பேச்சு

22.01.2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்படப் பேசு என்னும் ஒரு விவாத நிகழ்வு.
BSNL நிறுவனத்தின் சேவையை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது பற்றியது விவாதப் பொருள்.
இந்த விவாதத்தில் நமது தோழர் C.K.மதிவாண் ன் பங்கேற்றார்.
அவர் தனக்கே உரிய அசாத்தியத் திறமையைப் பயன்படுத்தி ஆழமான கருத்துக்களை அறிவுபூர்வமாக எடுத்து வைத்தார்.

இதற்காக அவர் பணியில் இருந்தபோதே போராட்டங்கள் நடத்தியவர். அதற்காக பழிவாங்கப்பட்டவர்.  
இது போன்ற செயல்களைச்
செய்யும் துணிச்சல் மதிக்கு மட்டுமே உண்டு.
மதி மதிதான்.

பாதிப்புக்குள்ளாகிறதா பாரம்பரியம்?



22.01.2015 அன்று GPF  கிடைக்கும் என நமது தமிழ் மாநிலச் சங்கம் மாவட்டச் செயலர்களுக்கு SMS அனுப்ப, அதை நம்பி மாவட்டச் செயலர்கள் கிளைச் செயலர்களுக்கு SMS அனுப்ப,
கிளைச் செயலர்கள் தகவல் பலகையில் எழுதிப் போட,
ஊழியர்களிடம் எதிர்பார்ப்புகள் ஏராளமானது.
ஏமாற்றமோ அதை விட ஏராளமானது.
நமது தமிழ் மாநிலச் சங்கம் எதையும் சரியாகச் செய்யும், சரியாகச் சொல்லும் என்ற பாரம்பரியம் மிக்கது.
இந்த பாரம்பரியம் சீர்குலைகிறதோ என்ற எண்ணம் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மாநிலச் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
பொய்யான,தவறான SMS செய்திகள் உலா வரும் காலம் இது என்பதையும் கவனத்தில் கொள்ள் வேண்டிய அவசியம் உள்ளது.

Wednesday, 21 January 2015

சந்தை நிலவரம்

போட்டிகள் நிறைந்த ஒரு துறையில் ஒரு நிறுவனம் குறைந்த பட்சம் 30 சதவிகிதத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தால் அது ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என்பது வணிக விதி.
உதாரணமாக தொலைத்தொடர்புச் சேவையில்  மொத்தம் 100 இணைப்புகள் இருந்தால் ஒரு நிறுவனம் 30 இணைப்புகளைத் தனது கணக்கில் வைத்திருந்தால் அது
ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகக் கருதப்படும்.
நமது நாட்டில்   எந்த ஒரு நிறுவனமும் 30.12.2014 அன்றைய தேதியில் அந்த நிலையில் இல்லை.
அதன் விபரம்
1.ஏர்கடெல்  22.68%
2.வோடாபோன் 18.37%
3.ஐடியா          15.37
4.ரிலையண்ஸ்  11.12%
5.பி.எஸ்.என்.எல் 10.34%
6.ஏர்செல்   8.06%
7.டாட்டா இண்டிகாம்  6.96%
8.யுனினார்  4.40%
9. ஷியாம் 0.94%
10.எம்.டி.என்.எல்  0.72%
11.  வீடியோகான் 0.65%
12.குவாடரண்ட்    0.28%
13. லூப் மொபைல் 0.14

நமது நாட்டில் 96 கோடியே 49  லட்சம் தொலைபேசி இணைப்புகள்  (லேண்ட்லைன் மற்றும் மொபைல்) 30.12.2014 அன்று இயங்குவதாக தகவல்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 63.03 சதவிகித லேண்ட்லைன் இணைப்புகளையும், 10.27 சதவிகித மொபைல் இணைப்புகளையும் கொண்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 27.44 சதவிகித மொபல் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

வோடாபோன் நிறுவனம் 22.56 சதவிகித மொபல் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

ரிலையண்ஸ் 48.02 சதவிகித  வில் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளது.

டாட்டா இண்டிகாம் 43 .01 சதவிகித வில் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளது.

லேண்ட்லைன் சேவையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் முதலிடத்தை 15 ஆண்டுகளாகத் தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இது பலமா பலகீனமா என்பது ஆய்வுக்குரியது.

பி.எஸ்.என்.எல் சரிவுக்கு காரணங்க்கள்

வில்  தொழில்நுட்பத்தில்  அக்கறை காட்டாதது.

மொபைல் சேவையில் வளர்ச்சியடைய் முடியாத அளவுக்கு திட்டமிடப்பட்ட ஏராளமான தடைகள் தடங்க்கல்கள்

வாடிக்கையாளர் குறைகளைக் களைவதில் கடுமையான சுணக்கம்,

வாடிக்கையாளர் சேவை மையங்க்களின்   சிறந்த செயல்பாட்டில் போதிய அக்கறையின்மை

போதுமான மார்க்கெட்டிங்க் இல்லாமை.

திட்டமிடுவதில் வேகமின்மை
திட்டங்க்களைச் செயல்படுத்துவதிலும் வேகமின்மை

மனித வள மேம்பாடு என்றால் அது எங்கே விற்கிறது என்று கேட்கும் நிலை.

Sunday, 18 January 2015

தோழர் ஜீவா

ஜனவரி 18
தோழர் ஜீவா நினைவு தினம்
அவரைப் பற்றி அறிய முயன்ற போது கிடைத்த அவரது இரண்டு வாக்கியங்க்கள்.
1.கம்யூணிஸ்ட் என்பவன் மனிதர்களிலேயே சிறந்தவன்.
2. கம்யூணிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆகிவிட்டதாலேயே ஒரு மனிதன் தன்னை கம்யூணிஸ்ட் என்று நினைத்தால் அது அறிவுபூர்மானதல்ல.
 
"A communist is the best 
among men," Jeeva used to 
say. "It is stupid for a man 
to think that he is a 
communist because he has 
acquired a party 
membership card,"


Friday, 16 January 2015

புதிய தலைமை

BSNL  நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு
திரு அனுபம் ஸ்ரீவ்த்சவா 
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
CMD-CHAIRMAN CUM MANAGING DIRECTOR என்ற அந்தப் பொறுப்பை 15.01.2015 அன்று அவர் ஏற்றார்.
போட்டியும் சவாலும் நிறைந்த சூழ்நிலையைச் சந்திக்க வேண்டிய தருணத்தில் அவர் பொறுப்பேற்றுள்ளார்.
அதிவேக வளர்ச்சியைச்
சந்தித்து வரும் தொழில்நுட்பம்;
வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிய அரசின் ஆதரவில்லாம ல் அல்லலுக்கு ஆளாகியிருக்கும் நிதிநிலை,
அரசின் மறைமுக ஆதரவோடு இயங்கும் தனியார் நிறுவனங்க்களின் போட்டி,
நிர்வாகச் சிக்கல்கள்,
தேசத்தின் ந்லன் மற்றும் நிறுவனத்தின் நலன் இவற்றிற்காக களம் கண்டுள்ள தொழிற்சங்கங்கள்

இவற்றைச் சந்திக்க வேண்டிய நிலை.


இப்பணிகளை அவர் வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துவோம்.


Wednesday, 14 January 2015

Monday, 12 January 2015

விவேகானந்தர்



சிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரான சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தத்துவம், ஐரோப்பிய நாடுகளின் வரலாறு ஆகியவற்றைப் பயின்ற இவர், இறை உணர்வு குறித்து அறிந்து கொள்வதற்காக 1881ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து அவரது சீடர் ஆனார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இந்து மதத்தின் புகழை உலகம் முழுவதும் நிலை நிறுத்தினார். 1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமயங்கள் மாநாட்டில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு உலகப் புகழ் பெற்றது. அவரது கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தன. அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகளை அமைத்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளான ஜனவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

திருப்பூர் குமரன்



ன்" என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் பிறந்தது 1904 அக்டோபர் மாதம். தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பம் குமாரசாமியினுடையது.

சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார். இப்படி ஓர் ஐந்து ஆண்டுகள் இவர் ஓட்டினார். இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள். பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார் இவர் நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்று நடவடிக்கைகளில் ஈடுபடலானார். மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிரஸ் தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.

1932
இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது. ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார். இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை போலீஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை

நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.

அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை. வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!

அடுத்து என்ன?



தர்ணா போராட்டத்தைச்சிறப்பாக நடத்தி முடித்து விட்டோம்.
இனி, மார்ச் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதே நமது இலட்சியம். இதற்கான ஆயத்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்திடுவோம்.

Saturday, 10 January 2015

இலங்கை



இலங்கை அதிபருக்கான தேர்தல் முடிவுற்றுள்ளது. மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மதம், ஜாதி, இனம், மொழி கடந்து உலகம் முழுமையும் மக்களின் மனநிலை ஒரே மாதிரிதான் உள்ளது.
அதாவது,
யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் தோற்கடிக்கப்பட  வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அகங்காரம், அராஜகம், இனவெறி, மனித உரிமை மீறல், குடும்பத்தின் ஆட்சி, இனப் படுகொலை இவையே மாற்றத்திற்குக் காரணமாகி ராஜபக்சே  தோற்று சிறிமானே வெற்றி பெறக் காரணமாக அமைந்தது.

பெற்றோரை இழந்த் பிள்ளைகள் பெற்றோருக்கு அஞ்சலி கூட செலுத்த முடியாமலும், பிள்ளைகளை இழந்த பெரற்றோர் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையுமானள கொடுமையான கோர அவலங்க்கள் நிகழ்ந்திருக்கின்றன.
நிகழ்ந்த மாற்றம் என்ன மாற்றங்களை நிகழ்த்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, 7 January 2015

தோழர் D.ஞானையா 95

இன்று ஜனவரி 7 . தோழர் ஞானையா பிறந்த நாள். வயது 95. ஞானத்தந்தை என பெருமையோடு அழைக்கப்படும் தோழர். மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்கிய தோழர். உள்வாங்கிய மார்க்சியத்தின் வழியில் வாழ்பவர். ஆயிரக்கணக்கான தோழர்களின் இதயத்தில் மார்க்சியத்தை விதைத்த தோழர்.
NFPTE பேரியக்கத்தின்
பொதுச் செயலராக சிறப்புடன் பணியாற்றிய தலைவர். இயக்கத்தை ஒற்றுமைப்  பாதையில் வழி
நடத்திய தோழ்ர்.

அவருக்கு ந்மது பிறந்த நாள் வாழ்த்து சொல்வோம். அவரிடம் வாழ்த்து பெறூவோம். அவர் வழி வாழ்வோம்.

சிறப்பான தர்ணா



06.01.2015 அன்று ஈரோட்டில் ஒன்றுபட்ட தர்ணா சிறப்பாக நடைபெற்றது.
07.01.2015 அன்றூ கோபியிலும்,
08.01.2015 அன்று தாராபுரத்திலும்
தர்ணா நடைபெறூம்.

Monday, 5 January 2015

O.P.GUPTA

OUTSTANDING LEADERSHIP

POSITIVE APPROACH
GUIDE TO TRADE UNIONS
UNITES ALL FOR STRUGGLE
PROTECTS THE WORKERS
TOLERANCE OF ALL VIEWS
ARCHITECT OF UPTW, NFPTE & NFTE
போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பு
நேர்மறைச் சிந்தனை
தொழிற்சங்க வழிகாட்டி
அனைவரையும் ஒன்றுபடுத்தி போராட வைத்தல்
தொழிலாளிகளைப் பாதுகாத்தல்
சகிப்புத்தன்மை
தபால் தந்தி தொலைபேசி இயக்கத்தின் பிதாமகன்
இவ்வாறு பன்முகத்தன்மை கொண்டவர் அருமைத் தோழர் குப்தா.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வியக்கத்தக்க தலைவனாய் வாழ்ந்த தோழர்.
என்றைக்கும் தேவைப்படும்
பல்வேறு வழிகாட்டுதல்களைத்
தந்திட்ட தலைவன்.
அவர்து வழியில் சிந்திப்போம்.
போராடுவோம்.

வெல்வோம்.

மனிதத்தின் உருவாய்

ஜனவரி 6
ஒப்பற்ற தோழன்
ஒப்பில்லாத தலைவன்
குப்தாவின்
நினைவு தினம்


வாழ்த்துகிறோம்

தோழர் குப்தாவின் இரண்டாவது நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலை திறப்பு விழா. சென்னைத் தொலைபேசியின் விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற வாழ்த்துகிறோம். இணையில்லா புகழ் பெற்ற தலைவனுக்கு இப்படி ஒரு விழா எடுக்கும் சென்னைத் தொலைபேசிக்கும், தோழர் மதி அவர்களுக்கும் நமது பாரட்டுக்கள்.

செயற்குழு முடிவுகள்

ஜனவரி 6,7,8 தேதிகளில் தர்ணாவைச் சிறப்பாக நடத்த் வேண்டும். காலவரையற்ற வேலைநிறுத்தத்தை திட்டமிட்டு சிறப்புடன் நடத்த வேண்டும். கையெழுத்து இயக்கத்த இலக்கை எட்டும் வகையில் நடத்தி முடிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் டிசம்பர்2014 சம்பளம் 31.12.2014ல் கிடைத்தது. இதற்கு உழைத்திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ERP பணியில் சிறப்பாகச் செயல்பட்ட தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ERP அமலாக்கத்தில் உள்ள சில குறைகள் தெரிவிக்கப்பட்டன. “supplementary bill” தயாரிக்க வழிவகை காண வேண்டும். அமைப்பு நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகளும் கிளைச்செயலர்களும் தங்கள் கருத்துக்களை முழுமையாகவும் மனம் விட்டும் பேசினர். காலவரையறை எதுவும் நிர்ணயம் செய்யாத்தால் அவர்கள் தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. போராட்டங்கள் பலன் தரும் வகையில் இருக்க வேண்டும். 30 அம்சக் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட தீர்க்கவில்லை என்ற ஆதங்கம் தெரிந்தது. உடன்பாட்டோடு போராட்டங்கள் முடிக்கப்பட்ட பழைய வரலாறுகள் போல் தலைவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. ERP அமலாக்கத்தின் காரணமாக ஊழியர்கள் செக்ஷன் மாற்றல் குறித்து தொழிற்சங்கத்தைக் கலந்து பேசி நிர்வாகம் முடிவு காணவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 1960 முதல் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் குறித்தும் இன்றைய போராட்டத்தின் அவசியம் குறித்தும் தோழர் மாலி ஒரு எழுச்சி மிக்க உரையாற்றினார். மாவட்டச் செயலர் வரும் கால் சிறப்பான செயல்பாட்டுக்கு பல திட்டங்க்களை அறிவித்து அவை செயல்வடிவம் பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஒரு நிறைவான பயனுள்ள செயற்குழுவாக அமைந்தது.

Sunday, 4 January 2015

ஒற்றுமை ஆண்டா 2015

மக்கள் பொதுவாக மதம், ஜாதி, இனம், மொழி கடந்து ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் சில சக்திகள் மக்களை அவ்வாறு வாழ விடுவதில்லை. இடதுசாரி கட்சிகள் இணைய வேண்டும் என்று பெரும்பான்மையான இடதுசாரிகள் விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் போக்கு அது நிறைவேற தடையாக உள்ளது. தொழிற்சங்க இணைப்பு அல்லது ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம் என்பதற்கு நிகழ்காலமும் நிகழ்கால நிகழ்வுகளும் சத்தியமான சான்றுகளாக விளங்குகின்றன. 27.12.2014க்குள் ஈரோடு மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தைத் துவக்குவது என்ற ஒருமித்த முடிவின் செயலாக்கத்தில் போதுமான அக்கறை காட்டாமல் இருந்தனர். இது ஒன்றுபட்டிருப்பதை வேண்டா வெறுப்புடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையா? 2015 ஒற்றுமை ஆண்டாக இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவிப்போர் எழுத்தளவில் இல்லாமல் செயல் அளவில் வாழ்ந்து காட்ட முயற்சி செய்ய வேண்டும். செய்வார்களா? விடை கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. காதலர் தினத்திற்கு முன்பே ஒற்றுமையின் மீதுள்ள காதல் தெரிந்தி விடும்.

30-3=27

01.01.2007 முதல் BSNL நிறுவனத்தில் பணியில் இணைந்தவர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை சரிசெய்ய 01.01.2007 முதல் நிலவையுடன் ஒரு இங்க்ரிமெண்ட வழங்கப்படும் என தககவல் வந்துள்ளது. 30 சதம் ஊதிய உயர்வு அனைவரும் பெற்ற போது இந்த தோழர்களுக்கு ஊதியத்தில் இழப்பு ஏற்பட்ட கொடுமை நிகழ்ந்தது. நானே எல்லாம் என்ற இறுமாப்பில் போட்ட உடன்பாட்டைப் போட்டதால் விளைந்த அநீதி இது. தற்போது 30 சதவிகித இழப்பு என்பது 27 சதமாகக் குறையும். அநீதியின் அளவு குறையும்.ஆனால அநீதி அழியாது.

வீரப் பெருமக்களின் வரலாறு

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஜனவரி 3.. பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். 30 வயதில் பாளை யக்காரராகப் பொறுப்பேற் றார். வீரபாண்டியன், கட்ட பொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்று பல பெயர் களால் அழைக்கப்பட்டார்.l
 பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக் கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியவில்லை.
 1797-ல் கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் வந்தார் ஆலன். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பிறகு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார். ஆனால் குறிப் பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்தார் கட்டபொம்மன்.
 இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார்.
 ‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.
 இவரை ஒழிக்க ஆங்கிலேய அரசு முடிவுகட்டியது. 1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் இந்த பகுதியை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டது.
கடுமையாக நடந்த போரில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார். ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன்’ என்று கம்பீரத்துடன் முழங்கினார். 1799-ல் கயத்தாறில் 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
இதே ஜனவ்ரி 3ஆம் நாளில்தான் சிவகங்கையின் வீரமங்கை வேலு நாச்சியார் பிறறந்தார் என்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
ஒரு பெண் மின்னல் வேகத்தில் வாள் சுழற்றிப் போரிட்டு சிவகங்கையை
எதிரிகளிடமிருந்து மீட்டெடுதத வரலாறு அது.
இப்படிப்பட்ட வீரப் பெருமக்களின் வரலாறு என்ற்வ்ன்றும்
நிலைத்து நிற்கும்.

நாட்டின் முக்கிய பொத்துதுறை நிறுவனமான BSNL ஐப் பாதுகாக்க, அதை மேம்படுத்த போராட வேண்டியது நமது கடமை.
அதற்காக நம்மை யரும் தூக்கிலிடப் போவதில்லை.
BSNL ஐப் பாதுகாக்க நாம் போராடவில்லை என்று வரலாறு நமமைச்  சாடிவிடக் கூடாது.

ஊழியர்கள் போராடும்போது தலைவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டவும் நமக்கு உரிமை உண்டு.

Friday, 2 January 2015

மாவட்டச் செயற்குழு



03.01.2015 அன்று மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வு செய்யப்படும்.
2014 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரை மாவட்டச் சங்கத்தின் செயல்பாடு,
நிறைகள், குறைகள், உறுப்பினர் எண்ணிக்கையில் கூடுதல் குறைதல், வரவு செலவின் நிலை,
போராட்டங்கள் அவை தந்த படிப்பினைகள்
பற்றி ஆய்வு செய்யப்படும்.
02.09.2014 அன்று மாநிலம் தழுவிய பணிக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு/பயிலரங்கம் ஒன்றை மாநிலச் செயலரின் வேண்டுகோளை ஏற்று நடத்தினோம்.
அதற்கு ரூபாய் 50,000 செலவானது. அதன் விளைவு என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்வோம்.
ERP அமலாக்கம் அதன் நிறைகள் குறைகள் குறித்து ஆய்வு செய்வோம்.

பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருப்பது யதார்த்தம்.
குப்தாவின் காலம் போல் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது.
சவால்கள் ஏராளமாக உள்ளன.
சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையுடன்தொடர்ந்து பயணிப்போம்.
இந்த நம்பிக்கைதான் நமது பலம்.

சரியாகும்



2014 டிசம்பர் மாத சம்பளம் வராது என்றார்கள். சம்பளம் வந்தது.
சம்பளப் பட்டியலைப் பார்க்க முடியாது என்றார்கள். அதையும் பார்த்தோம்.
இதற்காக அல்லும் பகலும் உழைத்திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.
இதில் சில தவறுகள தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு மென்பொருளிலும் ஆரம்ப அமலாக்கத்தில் தவறுகள் நேர்வது இயல்பே.
அவற்றை மிகச் சரியாக விளக்கி சரிசெய்ய வலியுறுத்துவோம். சரிசெய்வோம்.