NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 5 November 2019


அமைச்சருடன் சந்திப்பு...
04.11.2019 அன்று அமைச்சர்
திரு.இரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் அனைத்து சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. BSNL நிறுவனத்திற்கு புத்தாக்கத் திட்டம்
அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
BSNL விரைவிலேயே தனது அசையாச்சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கிட்டும் பணம் முழுக்க முழுக்க BSNL வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
புத்தாக்கத்திட்டத்தின் முக்கிய அம்சமாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டம் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
.
புத்தாக்கத்திட்டத்தின் வெற்றி விருப்ப ஓய்வுத்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில்தான் அடங்கியுள்ளது.
களத்தில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டம் முழுமையாக விளக்கப்பட வேண்டும். ஊழியர் மனங்களில் உள்ள சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படவேண்டும்.
புத்தாக்கத்திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சங்கங்கள் எழுப்பிய கோரிக்கை...
விருப்ப ஓய்வு என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது. ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 58ஆகக் குறைக்கப்படும் என்ற சந்தேகத்தை
அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
விருப்ப ஓய்வுக்காக கொடுக்கப்படும் பணப்பலன் மீது வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இதுவரை BSNL அளித்து வரும் கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பை DOT
திருப்பி அளிக்க வேண்டும்.
நாடுமுழுக்க 4G உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதால் BSNLக்கு உடனடியாக 4G அலைக்கற்றை வசதியை வழங்க வேண்டும்.
BSNL குடியிருப்பில் உள்ள ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றாலும் தொடர்ந்து குடியிருப்பில் வசிக்க அனுமதிக்க வேண்டும்.
01.01.2017 அன்று 119.5 சத IDAவை அடிப்படைச்சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.
3வது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும்.
சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் புத்தாக்கத்திட்டம் மற்றும் விருப்ப ஓய்வுத்திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட பின் ஊழியர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.



No comments:

Post a Comment