NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 10 October 2019


தரம் தாழ்ந்த பேச்சைத்
தவிர்ப்பது நல்லது
2002 முதல் 2016 வரை நடைபெற்ற ஏழு தேர்தல்களிலும் ஈரோடு மாவட்டத்தில் EU சங்கம் வெற்றி பெற்றது. அனைத்து தேர்தல்களிலும் ஊழியர்களின் தீர்ப்பை NFTE மாவட்டச் சங்க்ம் தலை வணங்கி ஏற்றது.

2019செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில்  ஈரோடு மாவட்டத்தில் NFTE  ஊழியர்களின் மகத்தான ஆதரவோடு 241 வாக்குகளைப் பெற்று முதன்மைச் சங்கமாக வெற்றி பெற்றது. EU சங்கம் 198 வாக்குகளைப் பெற்றது.

ஊழியர்களின் தீர்ப்பை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவமும், மாண்பும் இல்லாத EU சங்கத்தின் மாநிலச் சங்க நிர்வாகி தரம் தாழ்ந்த முறையில்  பேசியுள்ளார்.

"NFTE ஊழியர்களுக்குப் பண்ம் கொடுத்து வெற்பெற்றது" என்று வன்ம உண்ர்வோடு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
இப்படிப்பட்ட அசிங்கமான, அநாகரிகமான பேச்சை ஒரு மாநிலச் சங்க நிர்வாகி பேசியது அவருக்குத்தான் அவமானத்தை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.  

ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான தொழிற்சங்க செயல்பாட்டை NFTE  மாவட்டச் சங்கம் விரும்புகிறது.

No comments:

Post a Comment