NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 16 February 2017

இப்படியும்
ஒரு அதிகாரி

காரைக்குடியில் நடைபெற்ற NFTCL மாநில மாநாட்டில் EPF மண்டல அதிகாரி
உயர்திரு சங்கரலிங்கம் அவர்கள் பங்கேற்றார்.

EPF திட்டம் குறித்து விரிவாகவும் தெளிவாகவும்
ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எளிதில் புரியும்படி
தாய்மொழியாம் தமிழ் மொழியில் எடுத்துரைத்தார்.

அதுமட்டுமல்லாது "நான் EPF விதிகள் குறித்து கூறினேன். சந்தேகங்கள், கேள்விகள் கேளுங்கள்" என தெரிவித்தார்.

ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பல் தோழர்கள் கேள்விகள் கேட்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக,விளக்கமாக பதில் அளித்தார்.

அத்தோடு "EPF பிரச்னை சம்பந்தமாக என்னை எப்போதும் சந்திக்கலாம். நான் ப்ரச்னைகளைத் தீர்த்துத் தருகிறேன்" என்று கூறி தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் அறிவித்து "நேரில் வர இயலாதவர்கள் "என்னை இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம"  எனவும் தெரிவித்தார்.


இப்படியும் ஒரு அதிகாரி இருக்கிறார் என்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.

No comments:

Post a Comment