NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Saturday, 17 September 2016

ஈரோட்டில் பிறந்து
இமயமென உயர்ந்த
பெரியார் பிறந்த நாள்

செப்டம்பர் 17

பெரியார் பேசுகிறார்
"நான் மனிதனே! 
நான் சாதாரணமானவன்,
என் மனத்தில் பட்டதை
எடுத்துச் சொல்லி யிருக்கிறேன்.
இதுதான் உறுதி
இதை நீங்கள் நம்பித்தான்
ஆகவேண்டும் என்று சொல்லவில்லை.
ஏற்கக்கூடிய கருத்துக்களை
உங்கள் அறிவைக் கொண்டு
 நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்,
மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும்
மனிதத் தன்மைக்கு மீறிய
எந்தக் குணத்தையும்
என்மீது சுமத்தி விடாதீர்கள்.
 நான் தெய்வத்தன்மை
பொருந்தியவனாகக்
கருதப்பட்டுவிட்டால்
மக்கள் என் வார்த்தைகளை
ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்
"நான் சொல்லுவதை
நீங்கள் நம்புங்கள்,
நான் சொல்லுவது
வேதவாக்கு, நம்பாவிட்டால்
நரகம் வரும் நாத்திகர்கள்
ஆகிவிடுவீர்கள்"
என்று வேதம்,
சாத்திரம், புராணம் கூறுவது
போலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது
உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி
அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால்
தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த
கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை
உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது
என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."
******************************************************
மதவெறியால் மரணங்களும்
சாதி வெறியால் சாவுகளும்
நித்த்ம் நித்தம்
நிகழும் அவலம் இங்கே
மனிதம் என்பதே
மரித்துப் போகுமோ?
ஆயிரம் பெரியார்கள்
அவசரமாகத் தேவைப்படும்

சூழல் இங்கே

No comments:

Post a Comment