NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Sunday, 14 August 2016

சுதந்திர தினம்-70




அகிம்சையோடும்,
கத்தியோடும்,
இரத்தத்தோடும்,
சுதந்திர தேவி
பிறந்த நாள்
ஆகஸ்ட் 15.

காவிகளுக்கும்
கார்ப்பரேட்டுகளுக்கும்
பூர்ண சுதந்திரம்
பூத்துக் குலுங்குகிறது.

வறுமைக்கு இங்கே
கோடுண்டு.
வயிற்றுப் பசியால்
 வாடுவோரும் உண்டு.

ஆயிரம் ஜாதிகள் இங்குண்டு.
ஜாதியின் பெயரால்
சாவோரும் உண்டு.
சாகடிப்பவரும் உண்டு.

ஆனாலும்...
நம் நாடு பெருமை மிக்கது.
சுதந்திரக் காற்றை

சுகமாகச்
சுவாசிக்கும் உரிமை உண்டு.

விடுதலை தந்த
தியாகிகளை வனங்குவோம்.
நாட்டை நேசிப்போம்.
மக்களை நேசிப்போம்.
தாய் மண்னை வனங்குவோம்.
அனைவருக்கும்
இனிய சுதந்திரத்
 திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment