NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 4 August 2016

இரங்கல்
தோழர் வீரமுத்து டெலிகாம் மெக்கானிக் 03.08.2016 அன்று காலமானார் என அறிந்து வருந்துகிறோம்.

ஒரு விபத்தில் காயமுற்று ஏறத்தாழ ஒன்றரை மாதம் நமது நிறுவனத்தால் அங்கீகரிக்காப்பட்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தோழர் வீரமுத்து அவர்களின் மறைவிற்கு அஞ்சலியையும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்க்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் காயமுற்ரார்.
காயம் பட்ட பகுதியோ தலையில்.
நினைவற்ற நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் "பணம் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை. இதுவே உடன்பாடு" என்றது மருத்துவமனி நிர்வாகம்.
நிர்வாகமோ அதையே வழி மொழிந்தது.
எத்தனை லடசங்க்கள் செலவானது என்பது இனிதான் தெரியும். கருணை மனுக்களால் கனிவும் காசும் கிடைக்குமா என்பதை காலம்தான்
சொல்லும்
"உசிருக்கு ஆபத்துன்னா ஊட்டோட சாகனும்" இதுதான் விதியோ?


நிர்வாகம் போட்ட மாற்றல் உத்தரவை மதித்து 2014ல்  கோபியிலிடருந்து மலைப்பகுதியான எரஹனஹள்ளிக்கு மாற்றலில் சென்றார். 2016ல் கோபிக்கு திரும்ப மாற்றலில் வருவதற்காக வெளியிடப்பட்ட உத்தரவைப் பார்க்காமலேயே மண்ணோடு கலந்தார் தோழர் வீரமுத்து

No comments:

Post a Comment